Sunday, March 4, 2012

குஞ்சென்றும் மூப்பென்றும். ......

தீபஜோதியின் மையத்து இருளாய்
மெல்லக் கிளம்பிய வெறுமை
ஆழ்கடலின் வெற்றிடமாய் விஸ்ரூபமெடுத்து
அவனை எங்கெங்கோ
அலையவைத்து போகிறது
அவன் உடையத் துவங்குகிறான்

வறண்ட நினைவுகள் மட்டுமே
உள்ளமெங்கு ம் கடைபரப்பித் தொலைக்க
தப்பிக்க வழியின்றி
தலைதெறிக்க ஓடுகிறான்
பாதம் படும் இடமெல்லாம
பாலையாகவே விரிந்து எரிக்கிறது

கண்படும் இடமெல்லாம்
நயவஞ்சகம் நம்பிக்கைத் துரோகம்
கை படுமிடமெல்லாம்
பொய் பித்தலாட்டம் வன்மம்
ஆறுதல் தேடிப் போகும் இடத்தும்
இருள் அரவம் போலித்தனம் பாசாங்கு
தப்பிப் பிழைக்க கண்மூடி
திசைகளறியாது ஓடுகிறான்

மரண தாகத்திற்குக் கிடைத்த சொட்டு நீரும்
விஷமாகிச சிரிக்க
அதலபாதாள நடுவில் கிடைத்த சிறுபிடியும்
நச்சரமாய்ப் மாறி நெளிய
பதுங்கல் ஒளிதல் ஏதும்
இனி பயனற்றது என அஞ்சி
 முழுமையான விடுதலை மட்டுமே
தனக்கு இனி விடிவு என
விளிம்பிற்கே ஓடுகிறான
 " வாரியணைத்துக் கொள்கிறேன் வா "என
ஒரு பெரும் பூதம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது

தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட
குஞ்சென்றும் மூப்பென்றுமில்லை என்பதனை
இறுதிவரை
பாவம் அவன்
அறிந்து தொலைக்கவே இல்லை


66 comments:

ananthu said...

வயது வித்தியாசமில்லாமல் வாழ்கையெனும் பூதத்தோடு எல்லோரும் போராடிக்கொண்டிருப்பதை கவிதையில் அழகாக சொல்லியுள்ளீர்கள் . , அருமை !

K said...

தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட
குஞ்சென்றும் மூப்பென்றுமில்லை என்பதனை
இறுதிவரை
பாவம் அவன்
அறிந்து தொலைக்கவே இல்லை ///////

அடடா, என்ன ஒரு அழகிய கருத்து! நாம் கூட இதுவரைக்கும் இப்படிச் சிந்தித்தது கெடையாது! மனச்சோர்வின் வீரியம் பற்றி, நீண்ட நேரமாகச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்! நல்லதொரு சிந்தனையைத் தூண்டிவிட்டீர்கள் அண்ணா!

முத்தரசு said...

மனசோர்வா......? விடியல் இல்லை

அழகாக சொன்னிர்கள் வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! வறண்ட நினைவுகளால் வழி தவறி விளிம்பு வரை ஓடி வந்தவனுக்கு தழல் தந்த விடுதலை! சில சமயம், சித்தர் பாடல்களைப் போல, கருப்பொருள் புரிந்தும், புரியாமலும் உருவாகும் கவிதை வேகம்.

துரைடேனியல் said...

Arumai Sir!

பால கணேஷ் said...

அரியதொரு பொருளை எளிதான வரிகளில் விளக்கியிருக்கிறீர்கள். பிரமித்தேன் ஐயா! (த.ம.5)

துரைடேனியல் said...

Manam thotta kavithai.

துரைடேனியல் said...

Tha ma 6.

vimalanperali said...

தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லாத மனச்சோர்வு அப்படித்தான் இருக்கும்.அள்ளிகலைய வேண்டிய ஒன்று.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.... மனச்சோர்வினைப் பற்றிய உங்கள் கவிதை அருமை.... நிச்சயம் தூர எறிய வேண்டிய ஒன்று தான் இச்சோர்வு.....

Yaathoramani.blogspot.com said...

ananthu //


தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW //.

இதுவரைக்கும் இப்படிச் சிந்தித்தது கெடையாது! மனச்சோர்வின் வீரியம் பற்றி, நீண்ட நேரமாகச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்! நல்லதொரு சிந்தனையைத் தூண்டிவிட்டீர்கள் அண்ணா!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி //...

மனசோர்வா......? விடியல் இல்லை
அழகாக சொன்னிர்கள் வாழ்த்துக்கள் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

சில சமயம், சித்தர் பாடல்களைப் போல, கருப்பொருள் புரிந்தும், புரியாமலும் உருவாகும் கவிதை வேகம்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

Manam thotta kavithai.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

மனச்சோர்வு அப்படித்தான் இருக்கும்.அள்ளிகலைய வேண்டிய ஒன்று.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //
.
அருமை.... மனச்சோர்வினைப் பற்றிய உங்கள் கவிதை அருமை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட
குஞ்சென்றும் மூப்பென்றுமில்லை என்பதனை
இறுதிவரை
பாவம் அவன்
அறிந்து தொலைக்கவே இல்லை//

ஆஹா அருமையா சொல்லிட்டீங்க குரு...!!!

கூடல் பாலா said...

சிறந்ததொரு மன ஊக்கத்தை அளிக்கும் பதிவு!

Seeni said...

unmai ayya!

puthu puthu vaarthakalai-
ungalidam katru kollalaam!

nalla oru pathivu!

குறையொன்றுமில்லை. said...

தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட
குஞ்சென்றும் மூப்பென்றுமில்லை என்பதனை
இறுதிவரை
பாவம் அவன்
அறிந்து தொலைக்கவே இல்லை

ஆமா மிகவும் நல்ல கருத்து.

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

ஆஹா அருமையா சொல்லிட்டீங்க குரு..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

koodal bala..//

சிறந்ததொரு மன ஊக்கத்தை அளிக்கும் பதிவு!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

unmai ayya!
puthu puthu vaarthakalai-
ungalidam katru kollalaam!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

மிகவும் நல்ல கருத்து.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

மிகவும் தக்கத் தருணத்தில் முன்வைக்கப்பட்ட நல்லதொரு கருத்து ரமணி சார். ஆரம்பப்புள்ளியிலேயே அசட்டை செய்யப்பட்டு விலக்கிவிடப்பட்டுவிட்ட மனச்சோர்வு எட்ட நின்றபடி எதிர்பார்த்திருக்கிறது இன்னொருகாலம் என்னைப் பீடிக்க. இனி நெருங்கவிடமாட்டேன் என்ற உறுதியுடன் நான். உங்கள் கவிதை படித்தமாத்திரத்தில் நெஞ்சுரம் துளிர்விட்டுக் கிளைக்கும் அதிசயம் காண்கிறேன். அதற்காக என் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

உங்கள் கவிதை படித்தமாத்திரத்தில் நெஞ்சுரம் துளிர்விட்டுக் கிளைக்கும் அதிசயம் காண்கிறேன். அதற்காக என் மனமார்ந்த நன்றி ரமணி சார்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

சத்ரியன் said...

சிறப்பான கவிதை ரமணி ஐயா.

Unknown said...

அண்ணே வாழ்க்கை எவ்வளவு ஆச்சர்யமானது!

தமிழ் உதயம் said...

மனச்சோர்வையையும் அழகான கவிதையாக வடித்துள்ளீர்கள். அருமை.

கே. பி. ஜனா... said...

//தீபஜோதியின் மையத்து இருளாய்
மெல்லக் கிளம்பிய வெறுமை//
ரசித்த வரி!

தனிமரம் said...

மனச்சோர்வை நீக்கி மனதில் தெளிவைத் தருகின்றது கவிதை வாழ்த்துக்கள் ஐயா.வித்தியாசமான கற்பனை சித்தர்களின் மனநிலையில் ஏழுதியதுபோல உணர்த்திச் செல்லுது .தீபஜோதியின் தொடக்கமே!

Sankar Gurusamy said...

சிறப்பான கவிதை.. புரிந்துகொள்ளத்தான் சற்று சிரமமாக இருந்தது.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

துரைடேனியல் said...

அற்புதமான சொல்லாடல். உலகம் போலியானது. அதனிடத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுமீல்லை. நாம் நாமாக இருந்தால் அது நம் காலடியில். அருமையான கவிதை சார். வாழ்த்துக்கள்! தொடருங்கள்.

சசிகலா said...

பதுங்கல் ஒளிதல் ஏதும்
இனி பயனற்றது என அஞ்சி
முழுமையான விடுதலை மட்டுமே
தனக்கு இனி விடிவு என
விளிம்பிற்கே ஓடுகிறான
அருமையான வரிகள் ஐயா .

சசிகுமார் said...

super...........

ADHI VENKAT said...

அருமையான வரிகள்.
த.ம- 13

Unknown said...

நிதர்சனமான வரிகள்! நல்ல உளவியல் கவிதை! மிக்க நன்று!

Marc said...

தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட
குஞ்சென்றும் மூப்பென்றுமில்லை என்பதனை

அருமையான வரிகள் அருமையான கவிதை வாழ்த்துகள்

அருணா செல்வம் said...

மனச் சோர்வுக்கு மருந்திட்டு இருக்கிறீர்கள்!
பரிசாக மௌனத்தைத் தரலாமா?
வணக்கத்துடன் வாழ்த்துக்கள் ஐயா!

முனைவர் இரா.குணசீலன் said...

நன்று.

ஸ்ரீராம். said...

கருவை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? அருமை. இந்தக் கவிதை உங்கள் படைப்புகளில் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாய் வேறு தளத்தில் இருக்கிறது என்று தோன்றுகிறது.

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //
..
சிறப்பான கவிதை ரமணி ஐயா.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

சென்னை பித்தன் said...

brilliant.பிரமிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

மனச்சோர்வையையும் அழகான கவிதையாக வடித்துள்ளீர்கள். அருமை.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா..
. //
//தீபஜோதியின் மையத்து இருளாய்
மெல்லக் கிளம்பிய வெறுமை//
ரசித்த வரி!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தனிமரம் //

மனச்சோர்வை நீக்கி மனதில் தெளிவைத் தருகின்றது கவிதை வாழ்த்துக்கள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sankar Gurusamy //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

அருமையான கவிதை சார். வாழ்த்துக்கள்! தொடருங்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் /


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

kowsy said...

எப்படி சார் உங்களால் இப்படி எழுத முடிகின்றது. நீண்ட நாள் இணையத் தொல்லைக்குப் பின் இன்றுதான் உங்கள் பக்கம் நுழைந்தேன். அற்புதமான கவிதை. அழகான உருவகங்கள் . வரிக்கு வரி ரசித்தேன். ஆழமாகச் சிந்தித்து வரிகோர்ப்பு இன்றி கருக் கோர்த்து எழுதிய கவிதை பிடித்திருக்கின்றது. இதைப் படிக்கும் போது ஆவீன மழை பொழிய அடிமை சாக என்னும் பாடல் வரிகளே ஞாபகத்திற்கு வந்தது வாழ்த்துக்கள்

vanathy said...

சூப்பரா சொல்லிட்டீங்க. தொடர வாழ்த்துக்கள்.

Suji... said...

yosikkavum, yeluthavum katrutharum eluthu ungaludaiyathu sir, thanks for sharing :)

G.M Balasubramaniam said...

மனப் பொந்தில் வைக்கப் பட்ட அக்னிக் குஞ்சோ மனச் சோர்வு.?

ஹேமா said...

எப்போதும்போல சொல்லியிருக்கீங்க.நீங்க சொன்னபிறகு நினைச்சுப் பார்த்தால் அட...உண்மைதானேன்னு இருக்கு !

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

இன்றுதான் உங்கள் பக்கம் நுழைந்தேன். அற்புதமான கவிதை. அழகான உருவகங்கள் . வரிக்கு வரி ரசித்தேன். ஆழமாகச் சிந்தித்து வரிகோர்ப்பு இன்றி கருக் கோர்த்து எழுதிய கவிதை பிடித்திருக்கின்றது//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

சூப்பரா சொல்லிட்டீங்க. தொடர வாழ்த்துக்கள்.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Puppykutty :) //

yosikkavum, yeluthavum katrutharum eluthu ungaludaiyathu sir, thanks for sharing :)


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

பி.அமல்ராஜ் said...

தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட
குஞ்சென்றும் மூப்பென்றுமில்லை என்பதனை
இறுதிவரை
பாவம் அவன்
அறிந்து தொலைக்கவே இல்லை
///

அருமையிலும் அருமை ரமணி அண்ணா... சொல்ல வார்த்தைகள் இல்லை.

Yaathoramani.blogspot.com said...

பி.அமல்ராஜ் //

அருமையிலும் அருமை ரமணி அண்ணா... சொல்ல வார்த்தைகள் இல்லை.


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

மகேந்திரன் said...

உருவகச் சிற்பி என்றே உங்களை சொல்லலாம் நண்பரே..
கருக்களின் கையாள்தல் மிக அருமை...

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //...

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment