என்னுடைய இளம் வயதில் என் நெருங்கிய
நண்பர்களில் சிலர் அதிக சமூக உணர்வுள்ளவர்களாகவும்சமூக இயக்கங்களில் அன்றாடம் பங்கு கொள்கிறவர்களாகவும் சமகாலஇலக்கியம் குறித்து அதிகம் பேசுபவர்களாகவும் படைப்பாளிகளாகவும் வழிகாட்டிகளாகவும் இருந்ததால் எனக்கும் அதிகம் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உண்டானது அதன் காரணமாக கல்லூரிக் காலங்களிலேயே முற்போக்கு மாத இதழ்களில்எழுதுகிற ஆர்வமும் எனது கவிதைகள்பிரசுரமாகிற சந்தர்ப்பமும் பல இலக்கிய ஆர்வலர்களுடன் நெருங்கியதொடர்பும் ஏற்பட்டது அந்த இளமைப் பருவத்திலேயே பல முன்னணி எழுத்தாளர்களுக்கிணையாக கவிஞர்,ந பிச்சமூர்த்தி அவர்களுடன் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்கிற பாக்கியம் பெற்றதை இன்றும் பெருமையுடன் நினைத்துக் கொள்கிறேன் அதன் தொடர்ச்சியாக நாடக இயக்கங்களிலும் பங்கு கொண்டு நிஜ நாடகத்தின் சார்பாக சில தெரு நாடகங்களில் நடித்தும் சங்கீத நாடக அகாடமியின் நாடக விழாக்களில் பங்குபெற்றும் தென் மண்டலத்தில் சிறந்த நாடகமாகத்தேர்ந்தெடுக்கப் பட்டு டெல்லியில்நிகழ்த்திக்காட்டப் நாடகத்தில் பங்கு பெற்றதையும் இன்றும் மகிழ்வுடன் நினைவுகூறுகிறேன் அதிக அலைச்சலும் பொறுப்பும் உள்ள பணியில்இருந்தபோதும் ரசிப்புத் திறன் மழுங்காது கவனமாய் இருந்ததால் இப்போது ஓய்வுபெற்ற பின் எனது அனுபவங்களைகருத்துக்களை கவிதையாகவும் இல்லாமல் கட்டுரையாகவும் இல்லாமல் கதையாகவும் இல்லாமல் ஒருபுது மாதிரியாக எழுத முயன்று கொண்டிருக்கிறேன் பதிவுலகில் நுழைந்த இரண்டு வருட காலத்தில் 190க்கு மேற்பட்ட பதிவுகள் கொடுத்து 81 நாடுகளில் 269 பதிவுலக நண்பர்களைப் பெற்றதும் ஒரு லட்சம் நெருங்கிய பக்கப் பார்வை பெற்றதும் 12000 க்கு மேற்பட்ட பின்னுட்டங்கள் பெற்றதும் உங்களுடைய தொடர்ந்த ஆதரவால்தான் முடிந்தது என்பதை என்னுரையில் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன் தங்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி |
Sunday, July 15, 2012
என்னைப்பற்றி
Subscribe to:
Post Comments (Atom)
74 comments:
எனக்கு தங்களைப் பற்றிய அறிமுகத்தில் சிறந்த எழுத்தாளர் என்பது மட்டுமே தெரியும் சிறந்த நாடக கலைஞர் என்பது இப்போது தெரிந்து கொண்டேன் தங்கள் அறிமுகம் எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன்.
உங்களை பற்றிய அறிமுகம் தெரிந்து கொண்டேன்..
//இரண்டு வருட காலத்தில்
190க்கு மேற்பட்ட பதிவுகள் கொடுத்து 81 நாடுகளில்
269 பதிவுலக நண்பர்களை//
வாழ்த்துக்கள்
தொடருங்கள் தொடர்கிறேன்
சுய அறிமுகம்
உங்களின் சில முகங்களையும்
அறிய முடிந்ததில் மகிழ்ச்சி சார்
இன்னும் சிறப்புடன் எழுத பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார்
190-க்கும் மேற்பட்ட பதிவுகள்...
81 நாடுகளில் 269 பதிவுலக நண்பர்கள்...
1 லட்சம் பக்கப் பார்வைகள்...
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 3)
Reader-இல் உங்களைப்பற்றி தகவல்கள் வருகிறது. உங்கள் தளத்தில் URL :(http://yaathoramani.blogspot.in/2012/07/1.html) இவ்வாறு "Sorry, the page you were looking for in this blog does not exist." - வருகிறது... சரி பார்க்கவும்.
ம்... உங்களின் எழுததுக்கும் சிந்தனைகளுக்கும் நீங்கள் பெற வேண்டிய ஏற்றங்கள் இன்னும் நிறையக் காத்திருக்கின்றன. உங்களுக்கு என்னுடைய இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே...
அறிந்ததில் மகிழ்ச்சி (TM 5)
மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். தங்களின் இத்தகைய இலக்கியப்பயணம் மேலும் மிகச்சிறப்பாகத் தொடரட்டும். அன்புடன் vgk
தங்களைப் பற்றி அறியத் தந்தது பகிர்வு.
தொடருங்கள்.
உங்களைப்பற்றி இன்னொரு செய்தியையும் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..தொடர்ந்து வலையுலகில் வலம் வர வாழ்த்துகள்..
உங்களின் ஓய்வு காலத்தையும் பயனுடன் கழிப்பது மிகவும் நல்லது வாழ்த்துகள்.
உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தந்தமைக்கு நன்றி.
தங்களைப் பற்றி கொஞ்சமாக அறிந்ததிலும் மகிழ்கிறேன் ரமணி ஐயா.
ந.பிச்சமூர்த்தியுடனான சந்திப்பும், நிஜ நாடக இயக்கத்துடனான தொடர்பும் உங்களின் வெளிக்காட்டாத இன்னொரு முகத்தைக் காட்டி இன்னும் நெருக்கத்தை உண்டாக்கியது ரமணியண்ணா.
நிஜநாடக இயக்கம் மு.ராமசாமி அவர்களின் அழைப்பின் பேரில் 80களின் இறுதியில் மதுரையில் நடந்த நாடகவிழாவில் கல்ந்துகொண்டிருக்கையில் உங்களையும் சந்தித்திருக்கக் கூடுமோ என நினைவின் அடுக்குகளைத் துழாவுகிறேன். அப்போது துர்க்கிரன் அவலம் மிகவும் ப்ரபலம். மு.ரா.வின் மனைவி செண்பகமும் மிக அருமையான நாடகக் கலைஞர்.
பல நினைவுகளைக் கீறிவிட்டது உங்கள் அறிமுகம்.
சுந்தர்ஜி //
மிக்க சந்தோஷம்.அந்த நாடக விழா நாட்களில்
நான் நிஜ நாடக இயக்கத்தின் பொருளாளராகவும்
இருந்தேன்.நிச்சயமாக உங்களைச் சந்தித்திருக்கக் கூடும்
அந்த நாடக விழாவில் கோமல் சுவாமினாதன்,
ஞானி,முத்துச்சாமி, ருத்ரன் மற்றும் தமிழகத்தைச் சார்ந்த
நாடகத் துறை சம்பத்தப்பட்ட வல்லுனர்கள்பெரும்பாலோர்
கலந்து கொண்டதும்முனைவர் மு.ராமசாமி அவர்களின்
சீரிய முயற்சியால்நடைபெற்ற அந்த நாடக விழாவிற்குப்பின் மதுரையில்இன்னமும் அப்படி ஒரு நாடக விழாநடத்த முடியவில்லைஎன்பதுதான்
அந்த விழாவிற்கான கூடுதல் சிறப்பு
வருகிற மாதம் நடைபெற உள்ள பதிவர் சந்திப்பில்
கலந்து கொள்ள எண்ணியுள்ளேன்.தங்களைச்
சந்திக்கக் கூடுமாயின் மிக்க மகிழ்வேன்
சந்தோசம் சார். தொடருங்கள்
என்னுடைய இடுகை ஒன்றில் பல பதிவர்களது திறமைகளைப் பாராட்டி எழுதி இவர்களுடன் I ALSO RUN
என்று எழுதி இருந்தேன்.எவ்வளவு உண்மை.! உங்களைப் பற்றி எழுதியதால் உங்கள் கீர்த்தி பற்றி தெரிய முடிந்தது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
please check your spam box to release my comments
தங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி Sir!
///அதிக அலைச்சலும் பொறுப்பும் உள்ள
பணியில்இருந்தபோதும் ரசிப்புத் திறன்
மழுங்காது கவனமாய் இருந்ததால்////
இதன் சுவாரஸ்யத்தையும் அறிந்தேன்!
வாழ்த்துக்கள் Sir!
பகிர்வுக்கு நன்றி!
சிறந்த கவிஞர் என்பதற்கப்பால் தங்களைப்பற்றிய கூடுதல் விபரங்கள் மிகுந்த சுவாரஸ்யம்! தங்களின் கவிதைப்பயணம் மேன்மேலும் சிறப்பாகத் தொடர மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!
உங்கள் பதிவுகளில் மிகவும் கருத்தாழமிக்க தகவல்களை சொல்லி வார்த்தைகளில் விளையாடும் ஜால வித்தைகாரர் என்றுமட்டும் தெரிந்த எங்களுக்கு நாடக நடிகர் என்பது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது. என்னைப்பற்றி என்ற பதிவில் நீங்கள் சொல்ல மறந்தது ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா? மனிதநேயம்மிக்க ஒரு பண்பாளர் என்பதை சொல்ல மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்....
உங்கள் பதிவுகள் எல்லாம் அருமையாக இருந்தாலும் என்றும் என் மனதில் நிற்பது நீங்கள் ரயிலில் வேலைக்கு சென்ற போது அந்த ரயிலில் வந்த ஏழைப் பெண்ணை எல்லாரும் கேலி செய்த போது நீங்கள் அந்த பெண்ணிற்கு உங்கள் மதிய உணவை தந்து பசியாற்றிய உங்கள் செயலும் அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அதே பெண் தன் மகளுக்கு உங்களை மாமா என்று அறிமுகப்படுத்திய சம்பவம்தான் உங்களை நான் நினைக்கும் போதெல்லாம் என் மனதில் நிலழாடுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சாதம் பதம் என்று சொல்வது போல உங்களின் இந்த ஒரு செயலே நீங்கள் எப்படிபட்டவர் என்பதை எல்லோருக்கும் சொல்லாமல் சொல்லி செல்கிறது.
என்னைப் பொறுத்தவரை நீங்கள் உயர்ந்த மனிதர்...
வாழ்த்துக்கள்...உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவருக்கும். அனைவரும் வாழ்க வளமுடன்
இன்னும் இன்னும் எழுதி எங்களை போன்ற சிஷ்யர்களை மகிழ்விக்கவும், ஆலோசனைகள் கூறவும் நீங்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறேன் குரு...!
கவிதையும் இல்லாமல் கட்டுரையும் இல்லாமல் புது மாதிரியாக எழுத முயற்சிக்கும் உங்கள் நடை நன்றாக இருக்கிறது. தங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
உங்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி ரமணி சார்.எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான எழுத்து உங்களுடையது.உயரிய சிந்தனை உங்களுடையது.தொடர்க உங்கள் பணி!
எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள்..
வலைதளத்தை மிகவும் சரியாக பயன்படுத்தும் சிலரில் நீங்கள் முக்கியமானவர்.சிந்தனையை தூண்டும் உங்கள் பதிவிற்கு வாசகர் ஆதரவு எவ்வளவு என்பது உங்களுக்கு வரும் பின்னூடங்களை வைத்தே சொல்லலாம்.பிரதிபலன் எதிர்பார்க்காமல் நீங்கள் செய்யும் இத்தொண்டு மிகவும் போற்றத்தக்கது.
நன்றி ரமணி அவர்களே!
அன்பரே! என்னுடை வாக்குப் (த ம ஒ 9) பதிவாகியுள்ளது. மறுமொழி காணவில்லை! சென்ற பதிவு பலமுறை முயன்றும் திறக்கவில்லை இந்த பதிவும் காலை முதல் மாலை வரை முயன்றதில் ஒருவழியாக்கிடைத்தது. மறுமொழி பதிவாகவில்லை.
இப்பதிவின் மூலம் தங்கள் பன்முக ஆற்றலை அறிந்தேன். உளங்கனிந்த பாராட்டு
கள் உரித்தாகுக!
சா இராமாநுசம்
mikka makizhchi!
ayya!
thodarnthu ezhuthungal!
pin thodarkiren ayya!
அன்பு சகோதரே ...வாழ்த்துக்கள் ...நீங்கள் என் பதிவுகளை படித்து வாக்களித்து பாராட்டி ஒரு முறை வலைசரத்தில் என்னை அறிமுகம் செய்தது எல்லாம் நினைக்க நினைக்க மிகவும் சந்தோசமாக இருக்கு. உங்கள் இலக்கிய பயணம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் சகோ . தொடரட்டும் உங்கள் சேவை
இன்னும் பல பதிவுகள் எழுதி எங்களனைவரையும் மகிழ்விக்க வேண்டுகிறேன்.
த.ம. 11
நேரம் கிடைக்கையில் தங்கள் புளொக் எட்டிப் போகும் எனக்கு இன்று தான் தங்கள் ஆரம்ப காலம் தெரிந்தது...
தங்களது சமூகத்துக்கான சேவை என்றும் தொடர வேண்டும்...
என்னடா வழக்கம் போல பதிவுகள் போடாமல் என்னைப்பற்றி என்று நீங்கள் போட்டபதிவை கண்டதும் எனக்கு ஆச்சிரியம். இருந்த போதிலும் அதற்கு கருத்து தெரிவித்து சென்றேன். ஆனால் தற்செயலாக தமிழ்மணத்தில் நுழைந்த போதுதான் நீங்கள் அங்கு நட்சத்திரமாக முகப்பில் ஜொலித்து கொண்டிருப்பதை கண்டேன்...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்கு என்
மனம் நிறைந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !
இந்த சின்னவனுக்கு உங்கள் அறிமுகம் கிடைத்தது பெறுமை..:)
தமிழ்மணத்தில் கொடி கட்டி பறக்கிறீங்களாமே...
உள்ளுக்குள்ள தகவல்....
வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்கள் !! அண்ணா .
தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் .
உங்களைப் பற்றிய அறிமுகங்கள் சிறப்பு.
தமிழ்மணம் நட்சத்திரமாக எழுதுவதற்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்
Sasi Kala //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனசாட்சி™//.
வாழ்த்துக்கள்
தொடருங்கள் தொடர்கிறேன்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
செய்தாலி//
இன்னும் சிறப்புடன் எழுத பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார்//
நிச்சயமாக முயற்சிக்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன்//
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பால கணேஷ் //
..
ம்... உங்களின் எழுததுக்கும் சிந்தனைகளுக்கும் நீங்கள் பெற வேண்டிய ஏற்றங்கள் இன்னும் நிறையக் காத்திருக்கின்றன. உங்களுக்கு என்னுடைய இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே...//
தங்களின் உளங்கனிந்த பாராட்டும் வாழ்த்தும்
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
வரலாற்று சுவடுகள்//
.
அறிந்ததில் மகிழ்ச்சி//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
.
மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். தங்களின் இத்தகைய இலக்கியப்பயணம் மேலும் மிகச்சிறப்பாகத் தொடரட்டும்//
தங்களின் உளங்கனிந்த பாராட்டும் வாழ்த்தும்
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
ராமலக்ஷ்மி //
தங்களைப் பற்றி அறியத் தந்தது பகிர்வு.//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மதுமதி//
..தொடர்ந்து வலையுலகில் வலம் வர வாழ்த்துகள்..//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
உங்களின் ஓய்வு காலத்தையும் பயனுடன் கழிப்பது மிகவும் நல்லது வாழ்த்துகள்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME //
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
உங்களைப் பற்றி எழுதியதால் உங்கள் கீர்த்தி பற்றி தெரிய முடிந்தது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
யுவராணி தமிழரசன் //
தங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி Sir!//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
! தங்களின் கவிதைப்பயணம் மேன்மேலும் சிறப்பாகத் தொடர மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
வாழ்த்துக்கள்...உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவருக்கும். அனைவரும் வாழ்க வளமுடன்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
(கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையார் பதிவிற்கான
கரு கூட உங்கள் பின்னூட்டத்தைப் படித்துக் கொண்டிருக்கும்
போதுதான் உருவானது எனச் சொல்லிக் கொள்வதில்
பெருமை கொள்கிறேன்)
MANO நாஞ்சில் மனோ //
நீங்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறேன் //
தாங்கள்தொடர்ந்து தரும் ஊக்கமே எனக்கு
எழுத பக்க பலமாய் துணையாய் உள்ளது
தங்க்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
கவிதையும் இல்லாமல் கட்டுரையும் இல்லாமல் புது மாதிரியாக எழுத முயற்சிக்கும் உங்கள் நடை நன்றாக இருக்கிறது//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Murugeswari Rajavel //
எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான எழுத்து உங்களுடையது.உயரிய சிந்தனை உங்களுடையது.தொடர்க உங்கள் பணி!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவி//.
எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள்..//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ganpat //
பிரதிபலன் எதிர்பார்க்காமல் நீங்கள் செய்யும் இத்தொண்டு மிகவும் போற்றத்தக்கது.
நன்றி ரமணி அவர்களே!//
தங்களின் உளங்கனிந்த பாராட்டும் வாழ்த்தும்
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம் //
இப்பதிவின் மூலம் தங்கள் பன்முக ஆற்றலை அறிந்தேன். உளங்கனிந்த பாராட்டு
கள் உரித்தாகுக!//
தங்களின் உளங்கனிந்த
பாராட்டும் வாழ்த்தும்
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
Seeni //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.ரியாஸ் அஹமது //
உங்கள் இலக்கிய பயணம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் சகோ . தொடரட்டும் உங்கள் சேவை//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ்/
/.
இன்னும் பல பதிவுகள் எழுதி எங்களனைவரையும் மகிழ்விக்க வேண்டுகிறேன். //
தங்களின் உளங்கனிந்த
பாராட்டும் வாழ்த்தும்
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
♔ம.தி.சுதா♔ //
தங்களது சமூகத்துக்கான சேவை என்றும் தொடர வேண்டும்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
தமிழ் மணத்தில் ஏற்கெனவே
தேதி சொல்லியிருந்தாலும் லிங்க்
கிடைக்கவில்லை.ஏதாவது தொழிற் நுட்ப
காரணங்கள் இருக்கும் அதற்காக
நம்முடைய பதிவை நிறுத்த வேண்டாம்
என பதிவைப் போட்டுவிட்டேன்
வேறு காரணமில்லை
தங்கள் அன்புக்கு நன்றி
ஸ்ரவாணி //
பாராட்டை விட தாங்கள் தொடர்ந்து
பதிவிட்டால் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
சிட்டுக்குருவி//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
angelin //
வாழ்த்துக்கள் !! அண்ணா .
தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் //
.
தங்களின் உளங்கனிந்த
பாராட்டும் வாழ்த்தும்
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
கோவி.கண்ணன் //
உங்களைப் பற்றிய அறிமுகங்கள் சிறப்பு.
தமிழ்மணம் நட்சத்திரமாக எழுதுவதற்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்//
தங்களால் பாராட்டப்படுவதையும்
தங்கள் வாழ்த்துப் பெறுதலையும்
உயரிய விருதாகக் கருதுகிறேன்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி1..நட்பைப் போற்றும் உமது பாங்கு நான் அனுபவித்தது.. ! இன்னும் பல பெருமைகள் தங்களை வந்தடைய வாழ்த்துக்கள்!
ரமேஷ் வெங்கடபதி //
.
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி1இன்னும் பல பெருமைகள் தங்களை வந்தடைய வாழ்த்துக்கள்!//
.
தங்களின் உளங்கனிந்த
பாராட்டும் வாழ்த்தும்
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
..
உங்களைப்பற்றிய அறிமுகம் கூட அற்புதமானதுதான். மேலும் சிறக்க வாழ்த்தும் வயது எனக்கில்லையென்றாலும் பிரார்த்திக்கிறேன்
Gobinath //
தங்களின் உளங்கனிந்த பாராட்டு
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
உங்களை பற்றிய அருமையான அறிமுகம்.
வாழ்த்துக்கள்.
மேலும் , மேலும் சிறப்பான பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.
கோமதி அரசு//
தங்களின் உளங்கனிந்த பாராட்டு
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி
Post a Comment