Wednesday, July 18, 2012

கற்றுக் கொண்டவை-துணைப் பதிவு 2(1)

பழ நி  முருகனும் நானும்

எதிர்பார்ப்புகள்எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

அதைப் போலவே
வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
எனக்கும்
பழநி முருகனுக்கும்
பழக்கம் ரொம்ப நெருக்கம்

திருவிழா நாட்களில் அவன்
எப்போதும் கோவிலில் இருப்பதில்லை
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்
நடை  சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

இன்றும் அப்படித்தான்
மயிலினை உலாவவிட்டு
என் எதிரில்தான் அமர்ந்துகொண்டான்

தக்க சமயம் இதுதானென
மெதுவாக காரணம் கேட்டேன்
சிரித்த முகத்துடன்தான்
என்னோடு பேசத் துவங்கினான்

"உண்மையில் எனக்கு
ஆத்திகர்களை விட
நாத்திகர்களைத்தான்
ரொம்பப் பிடிக்கும் "என்றான்
நான் அதிர்ந்து போனேன்
அவனேதான் தொடர்ந்து பேசினான்

"ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.
 காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்  வைத்து என்னை
இம்சை படுத்துவதில்லை " என்றான்

நான் பணிந்து வணங்கிச் சொன்னேன்
" நீ கொடுப்பவன் என நம்பித்தான்
உன் கோவில் தேடி வருகிறார்கள்
வருகிறவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்
தகுதியானவர்களாகப் பார்த்து நீ
கொஞ்சம் தயை செய்யலாமே" என்றேன்

முருகனின் முகத்தில் லேசான
மாறுதல் தெரிந்தது

"இந்த மனிதர்களுக்கு நான்
எதை கொடுக்காது இருக்கிறேன்
பஞ்ச பூதங்களைப்
படைத்துக் கொடுத்துள்ளேன்
அதை அடக்கி ஆளும்
அறிவினைக் கொடுத்துள்ளேன்
சக்தியைக் கொடுத்துள்ளேன்
சிந்திக்கும் திறனும் கொடுத்துள்ளேன்
இன்னும் போதாது போதாது என
என் வாசல் வந்து நின்றால்
நான் என்ன செய்யக்கூடும்
நிலம் கொடுத்து
விதை கொடுத்து
நீரும் கொடுத்து
சக்தி கொடுத்து
பயிரிடும் அறிவும் கொடுத்து
பிழைத்துகொள் என அருளினால்
மீண்டும் என்னிடமே வந்து
அடிவயிற்றில் பசி
அனலாய் எரிகிறது
எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாக
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்

நான் கொஞ்சம் பழக்கத்தை
கெடுத்துக் கொண்டேனோ என
பயந்துதான் போனேன்.

பின் தீர்க்கமான குரலில்
சண்முகனே பேசினான்
"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்

திருமுருகன் முகத்தில் தாண்டவமாடுவது
கோபமா கவலையா
என்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை

அதற்குள்
சன்னதியின் மணியோசைச் சப்தமும்
பக்தர்களின் அரோகரா சப்தமும்
குன்றெங்கும் பட்டுத் தெறித்தது
நானும் விழிமூடித் தியானித்து
லேசாக விழி திறந்தேன்
பழநி முருகன் எதிரில் இல்லை
அவன் இருந்து போனதன்
அடையாளமாகவோ என்னவோ
எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது

48 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்த மீள் பதிவு மிகவும் அருமையாகவே உள்ளது.
ஏற்கனவே நான் மிகவும் ரஸித்துக் கருத்து எழுதியுள்ளேன். மீண்டும் படித்ததில் மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

/என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்/

உண்மை. நல்ல பதிவு.

நட்சத்திர வாழ்த்துகள்!

Admin said...

மீள் பதிவா..ஆனாலும் பாருங்கள் இப்போதுதான் வாசித்தேன்.மிகவும் ரசித்தேன்..

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் வரிகள் சார் !

பகிர்வுக்கு நன்றி...வாழ்த்துக்கள்...(த.ம. 5)


"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் நல்லதொரு கவிதை வரிகள்!

Unknown said...

உண்மைகள் பகிர்ந்து கொள்ளும்போது அழகாய் இருக்கிறது ..அருமை சகோ
மீள் பதிவு மீண்டும் மீண்டும் மனதில் பதிய வேண்டிய வரிகள் எனவே இன்னும் பலமுறை
பதிவு செய்யுங்கள்

மகேந்திரன் said...

மற்றொரு...
கடவுளும் கந்தசாமியும் போல உள்ளது...

உடனிருந்து அளவளாவி
பின்னர் இருந்த இடத்தில்
சித்திரத்தானின் அடிச்சுவடை
தேடியதில் சந்தன வாசமே மிச்சம்
எனச் சொன்னது ரசிக்க வைத்தது நண்பரே...

பால கணேஷ் said...

ஆஹா... எதிர்பார்ப்புகள் கோரிக்கைகள் எதுவுமற்று இறைவனை அணுகினால் அவன் வசப்படுவான் என்ற அருமையான கருத்தும் உள்ளூடாக இருக்கிறதே... பிரமாதம். சண்முகன் சொன்ன உண்மைகளும் அருமை.

R.Punitha said...

Hi Sir ,

WWWoWWW !!!

Great Ramani Sir..

I too Lord Muruga's Devotee :))

Very nice Conversation :))

Really enjoyed and it open my eyes :))

அருணா செல்வம் said...

நல்ல பதிவுங்க ரமணி ஐயா.

sathishsangkavi.blogspot.com said...

.."என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்...

அருமை... படிக்க படிக்க ஆர்வம்...

சசிகலா said...

அவரவரும் உணர வேண்டிய வரிகள் அருமை ஐயா.

MARI The Great said...

அருமை (TM 7)

arasan said...

எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாக
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்//

என்ன பண்ணுவது சார் எல்லாமே இப்படியாகி போச்சு ...
சிறந்த படைப்பாக்கம் சார் ...

மாதேவி said...

"காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்" இதுதானே நடந்துகொண்டிருக்கின்றது.
சிந்திக்கவைக்கும் பகிர்வு.

சி.பி.செந்தில்குமார் said...

எதிர்பார்ப்புகள்எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்
>>>>
இப்பேற்பட்ட உயர்ந்த குணம் எல்லாருக்கும் வாய்த்துவிட்டால்?! உலகப் பந்து சண்டைச் சச்சரவின்றி அமைதியாய் சுழலுமே. அந்நாள் விரைவில் வர பழனி முருகனை வேண்டிவோம் ஐயா. நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி ஐயா.

Anonymous said...

மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி...ரசித்தேன் ரமணி சார்...

சி.பி.செந்தில்குமார் said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!
கோபமா கவலையா இல்லை நகையா?

Murugeswari Rajavel said...

பழனி முருகனும்,நீங்களும் உரையாடிய உரையாடல் அருமை சார்.உங்கள் சிந்தனையும்,அதை வெளிப்படுத்த நீங்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளும் உயரியது.

குறையொன்றுமில்லை. said...

கற்பனை நல்லாதான் இருக்கு யோசிச்சு பாத்தா அதானே உண்மைன்னும் தோனுது

Anonymous said...

ரசனைப் பதிவு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

இந்த மீள் பதிவு மிகவும் அருமையாகவே உள்ளது.
ஏற்கனவே நான் மிகவும் ரஸித்துக் கருத்து எழுதியுள்ளேன். மீண்டும் படித்ததில் மேலும் மகிழ்ச்சியாக உள்ளது./

/தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
(நட்சத்திரப் பதிவராக அறிமுகம்
செய்யப்பட்டுள்ளதால் பல
புதிய பதிவர்கள் பதிவுக்குள் வருகிறார்கள்
அவர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில்
துணைப்பதிவுகளாக நித்தம்
இரண்டு பழைய பதிவுகளையும்
இணைத்துக் கொண்டுள்ளேன்)

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

உண்மை. நல்ல பதிவு.
நட்சத்திர வாழ்த்துகள்!//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

இப்போதுதான் வாசித்தேன்.மிகவும் ரசித்தேன்.//.


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
.
ரசிக்க வைக்கும் வரிகள் சார் !
பகிர்வுக்கு நன்றி...வாழ்த்துக்கள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

மிகவும் நல்லதொரு கவிதை வரிகள்!/

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரியாஸ் அஹமது//

உண்மைகள் பகிர்ந்து கொள்ளும்போது அழகாய் இருக்கிறது//

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

//வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்//

சரியான நோக்கு.... அவனுக்குத் தெரியாதா நமக்கு என்ன தரவேண்டுமென...

இனிய கருத்து கொண்ட நற்பகிர்வு... தொடர்ந்து தமிழ்மண நட்சத்திர வாரத்தில் அசத்துங்க ஜி!

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

உடனிருந்து அளவளாவி
பின்னர் இருந்த இடத்தில்
சித்திரத்தானின் அடிச்சுவடை
தேடியதில் சந்தன வாசமே மிச்சம்
எனச் சொன்னது ரசிக்க வைத்தது நண்பரே.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும்
கவித்துவமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

ஆஹா... எதிர்பார்ப்புகள் கோரிக்கைகள் எதுவுமற்று இறைவனை அணுகினால் அவன் வசப்படுவான் என்ற அருமையான கருத்தும் உள்ளூடாக இருக்கிறதே... பிரமாதம். சண்முகன் சொன்ன உண்மைகளும் அருமை

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

R.Punitha//

Great Ramani Sir..
I too Lord Muruga's Devotee :))
Very nice Conversation :))
Really enjoyed and it open my eyes :))//


/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //
.
நல்ல பதிவுங்க ரமணி //

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சங்கவி //


அருமை... படிக்க படிக்க ஆர்வம்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

அவரவரும் உணர வேண்டிய வரிகள் அருமை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள்//
.
அருமை//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அரசன் சே//.

சிறந்த படைப்பாக்கம் சார் ..//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

"காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்" இதுதானே நடந்துகொண்டிருக்கின்றது.
சிந்திக்கவைக்கும் பகிர்வு.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

>சி.பி.செந்தில்குமார்//

இப்பேற்பட்ட உயர்ந்த குணம் எல்லாருக்கும் வாய்த்துவிட்டால்?! உலகப் பந்து சண்டைச் சச்சரவின்றி அமைதியாய் சுழலுமே. அந்நாள் விரைவில் வர பழனி முருகனை வேண்டிவோம் ஐயா. நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி ஐயா//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஉற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

நட்சத்திர வாழ்த்துக்கள்!
கோபமா கவலையா இல்லை நகையா?//

(மிகச் சரியாக தங்கள் பின்னூட்டத்தின்
பொருள் விளங்கவில்லை)

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //

பழனி முருகனும்,நீங்களும் உரையாடிய உரையாடல் அருமை சார்.உங்கள் சிந்தனையும்,அதை வெளிப்படுத்த நீங்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளும் உயரியது//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஉற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Lakshmi s//

கற்பனை நல்லாதான் இருக்கு யோசிச்சு பாத்தா அதானே உண்மைன்னும் தோனுது//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஉற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //
.
ரசனைப் பதிவு நல்வாழ்த்து.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

சரியான நோக்கு.... அவனுக்குத் தெரியாதா நமக்கு என்ன தரவேண்டுமென...
இனிய கருத்து கொண்ட நற்பகிர்வு... தொடர்ந்து தமிழ்மண நட்சத்திர வாரத்தில் அசத்துங்க ஜி!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஉற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி.

கோமதி அரசு said...

கொடுத்ததற்கு நன்றி சொல்ல வரும் கூட்டம் தான் அது. என்று சொல்வது தானே சார்.
என்றும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லவா!

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //.

அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த பின்னூட்டம்
கேட்காது கொடுத்ததற்கு
நன்றி சொல்லவரும் கூட்டம் அதிகமானால்
ஒருவேளை ஆண்டவன் கூட நேரடியாகத்
தோன்றினாலும் தோன்றிவிடுவார் என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் சிந்திக்கும்படியான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

அவன் என்ன கொடுக்க.? நாம்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் சிந்திக்கும்படியான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment