சீர்மிகு கவிகள் யாக்க
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்
உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்
மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்
தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக க் கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்
மீள்பதிவு
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்
உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்
மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்
தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக க் கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்
மீள்பதிவு
40 comments:
தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல//
ஆஹா.. மிக எளிய நடையில் அழகிய கவிதை. வாழ்த்துகள்
கருத்துள்ள கவிதை. பிடித்த வரிகள்...
/// தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும் ///
நன்றி சார்...
(த.ம. 3)
கவிதை பிடிச்சிருக்கு
///நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்///
அப்ப நானும் கவிதை எழுதலாம் என்று சொல்கிறிர்களா?
சார் நீங்கள் மரபு கவிதை கூட எழுதவீர்கள் போல தெரியுதே
அழகான கவிதை நல்லா இருக்கு
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக க் கவிதை ஆகும்///அருமையான வரிகள்.
// நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும் //
அருமை என்பதை விட வேறு என்ன வார்த்தைப் பொருந்தும்
கவிதை அழகுங்க...
(TM 6)
உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்///////
அர்த்தமுள்ள வரிகள் சார்...
த.ம.7
புரியுது. நவயுகக் கவிதை புனைய எனக்கும ஆர்வம் வந்து விட்டது. (படிக்கறவங்கதான் பாவம்) அருமையான கவருத்து சொன்ன கவிதைக்கு நன்றி.
தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக க் கவிதை ஆகும்.
உண்மை தான் ஐயா.
கவிதை எழுத கற்றுக்கொடுத்த கவிதை அருமை! அருமையான முயற்சி! நன்றி!
இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in
கருவுள்ள கவிதை ஐயா உங்கள் கவிதை...
என்போன்றோர் கருவைத் தேடித் தேடிதான் வார்த்தையால் சுற்றி சுற்றி வளைத்துத் தேடுகிறோம்.
நன்றிங்க ரமணி ஐயா.
ரசித்து பின் ருசித்து அதன் வழி நடக்கச் செய்யும் கவிதை
சின்னப்பயல் //
தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல//
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //
ஆஹா.. மிக எளிய நடையில் அழகிய கவிதை. வாழ்த்துகள்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
கருத்துள்ள கவிதை. பிடித்த வரிகள்...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனசாட்சி™ //
கவிதை பிடிச்சிருக்கு//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மோகன் குமார் //
சார் நீங்கள் மரபு கவிதை கூட எழுதவீர்கள் போல தெரியுதே/
மரபு அறிந்து மரபு மீறலே
நல்ல படைப்புக்கு வழிவகுக்கும் என்பதால்
மர்பு வழியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறேன்
தங்க்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
அப்ப நானும் கவிதை எழுதலாம் என்று சொல்கிறிர்களா?/
நிச்சயமாக
கவித்துவமாக கட்டுரைகள் எழுதும் தங்களுக்கு
கவிதை எழுதுவது கடினமா என்ன ?
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
அழகான கவிதை நல்லா இருக்கு//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக க் கவிதை ஆகும்///அருமையான வரிகள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சீனு ..//
அருமை என்பதை விட வேறு என்ன வார்த்தைப் பொருந்தும்/
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சங்கவி //
கவிதை அழகுங்க..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிட்டுக்குருவி //
அர்த்தமுள்ள வரிகள் சார்...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பால கணேஷ்//
அருமையான கருத்து சொன்ன கவிதைக்கு நன்றி//.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sasi Kala //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh//
கவிதை எழுத கற்றுக்கொடுத்த கவிதை அருமை! அருமையான முயற்சி! நன்றி!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
AROUNA SELVAME//
கருவுள்ள கவிதை ஐயா உங்கள் கவிதை...//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
thamilselvi //
ரசித்து பின் ருசித்து அதன் வழி நடக்கச் செய்யும் கவிதை//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நாம் விளைவிக்கும் எழுத்துக்கள் பதராயில்லாது, விளைநெல்லாய் வளர்ந்து வாசக மனங்களில் செழிக்க வழிசொல்லும் அருமையான கவிதை. பாராட்டுகள் ரமணி சார்.
கீதமஞ்சரி //
நாம் விளைவிக்கும் எழுத்துக்கள் பதராயில்லாது, விளைநெல்லாய் வளர்ந்து வாசக மனங்களில் செழிக்க வழிசொல்லும் அருமையான கவிதை.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக க் கவிதை ஆகும்//
அருமை.... த.ம. 10
வெங்கட் நாகராஜ்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மிக எளிமையான கவிதை. எளிதாக அனைவருக்கும் புரியும். பராட்டுகள் நல்வாழ்த்துடன்.
இதுவும் எனது ஒரு வகை. படித்துப் பாருங்கள் நேரமிருந்தால். நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/2010/11/12/155-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81/
kovaikkavi //
மிக எளிமையான கவிதை. எளிதாக அனைவருக்கும் புரியும். பராட்டுகள் நல்வாழ்த்துடன்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment