Monday, July 9, 2012

சூழ் நிலைக் கைதிகள்


பிறப்பிடமும் இருப்பிடமும்
சேறுதான் சகதிதான் ஆயினும்
அவைகளுடன் எவ்வித சம்பந்தமுமின்றி
புனித நெருப்பாய்
வான் நோக்கியே
நாளும் தவமிருக்கிறது
குளத்தங்கரைத் தாமரை

தர்ம நியாயங்களை
வலிமையே தீர்மானிக்கிற
ஆரண்யங்களில்
வலிமை மிக்கதாக இருப்பினும் கூட
சைவமாகவே  நாளும் வாழ்ந்து
ஆச்சரியப்படுத்துகிறது
காட்டு யானை

தன் இருப்பும் பிழைப்பும்
நோயுடனும் நோயாளியுடனும் தான் ஆயினும்
அவைகளின் நிழல் தன் மீது படராது
ஆரோக்கியத்தின் சின்னமாய்
நம்பிக்கையூட்டும் புன்னகையுமாய்
நாளும்வல்ம் வருகிறார்
நாமறிந்த மருத்துவர்

அழகும் இளமையும்
செல்வமும் செழிப்பும்
சுற்றிச் சுற்றி வந்து
பாதத்தில் வீழ்ந்த போதும்
அறிவுத் துடுப்பை வலித்து
உடற்படகின் துணையோடு
உன்னதக் கரைசேர்வதில்தான்
கருத்தாய் இருக்கிறான்
நிஜமான யோகி

நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்களும்
நூலறுந்தபட்டமாய்
உணர்வுக்காற்றின் வழியோடும்
சராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி
தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள்  


78 comments:

பால கணேஷ் said...

சூழல் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பது நிஜம்தான். தன்னளவில் உறுதியாய் இருப்பவர்கள் மட்டுமே தன் சூழலைத் தாண்டியும் வெல்கிறார்கள். அவர்களின் சதவீதம் குறைவே. அருமையான கருத்தைச் சொன்ன பதிவு. (2)

சசிகலா said...

உள்ளத்தே உறுதியும்
எண்ணத்தே தெளிவுமிருப்பின்
சூழலையும் சுருக்குப்பையில்
அடைத்துவிடலாம் .

நன்றி ஐயா.

சீனு said...

ஆமா பல வேளைகளில் சூழ்நிலைக் கைதியை இருந்ததுண்டு. உடைத்தெறியும் திறன் இருந்தால் போராடலாம். தாமரையும் காடு யானையையும் போல..நலம் கொடுக்கும் வைத்தியனைப் போல

படித்துப் பாருங்கள்

தலைவன் இருக்கிறான்

http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html

சீனு said...

த ம 4

ஆத்மா said...

ஆரண்யங்களில்...........???

புதிய சொல்லாக இருக்கிறது எனக்கு

நல்ல கவி .........5

குறையொன்றுமில்லை. said...

மிகவும் அழகான கவிதை வாழ்த்துகள்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா..

MARI The Great said...

வழக்கம் போல் அருமை ஐயா (TM-7)

Admin said...

சூழலைப் பொறுத்தே வாழ்க்கை மறுக்க முடியாது..அதைத் தாண்டியும் வாழ்க்கையுண்டு அதையும் மறுத்துவிடமுடியாது.மனம் கவர்ந்த கவிதை.

Unknown said...

வாழ்வின் யதார்த்த நிலையை உரித்துக் காட்டியுள்ளது..இப்பதிவு! நன்று..வாழ்த்துக்கள்!

Murugeswari Rajavel said...

உணர்வுக் காற்றின் வழியோடும்,சராசரியாய் நான்!வான் நோக்கி நாளும் தவமிருக்கும் தாமரையாய் வாழ விருப்பமிருப்பினும் உணர்வே மேலோங்கி சூழ்நிலைக் கைதியாகவே வாழவைக்கிறது.

Unknown said...

SUPER

செய்தாலி said...

நிஜம் சார்
எவ்வளவு அழகா ஆழமா சொல்லிடீங்க

Avargal Unmaigal said...

மிக அருமையான கருத்தாழமிக்க கவிதை மிகவும் ரசித்து படித்தேன்

Seeni said...

sariyaaka arumaiyaaka sonneenga ayya!

Anonymous said...

யதார்த்தம் ரமணி சார்...வாழ்த்துக்கள்..

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

/வலிமை மிக்கதாக இருப்பினும் கூட
சைவமாகவே நாளும் வாழ்ந்து
ஆச்சரியப்படுத்துகிறது
காட்டு யானை/

அருமை.

சென்னை பித்தன் said...

சூழ்நிலைக்கைதி ஆகாமல்,அதைக் காரணம் சொல்லாமல்,வென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் கவிதை!நன்று

சென்னை பித்தன் said...

த.ம.13

Unknown said...

//புனித நெருப்பாய்
வான் நோக்கியே
நாளும் தவமிருக்கிறது
குளத்தங்கரைத் தாமரை//

பூத்த தாமரையின் நிறத்திற்கு ஏற்ப புனித
நெருப்பை உவமை ஆக்கியது மிகவும் அருமை!

த ம ஓ 14 சா இராமாநுசம்

G.M Balasubramaniam said...

நீங்கள் உவமானம் காட்டியவற்றின் சராசரி குண்மே போற்றத்தக்கது.அந்த சராசரிகள் வேறு இவை வேறு. தாமரை பற்றிக் கூறியது அருமை. பாராட்டுக்கள்.

வேர்கள் said...

ரமணி சார்
எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை தங்களை பாராட்ட

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்!

யுவராணி தமிழரசன் said...

அருமையான வரிகள் சார்! பலர் இப்படி தான் இருக்கிறார்கள்! மீள்வதும் இல்லை மீளத்துணிவதும் இல்லை!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை. த.ம. 15

bandhu said...

A Gem!

கே. பி. ஜனா... said...

சத்தான கவிதை சார்!

மகேந்திரன் said...

தலைப்புக்கே ஒரு வந்தனம் செய்துவிட்டுதான் வந்தேன்...
எத்தனை பொருள்பொதிந்த தலைப்பு...
உணர்வுகளின் முரண்பாட்டுக்கு
அடிமைகளைப் போன நாம் சூழ்நிலைக் கைதிகள்
என்று சொல்வது நிதர்சனம்...

கொண்ட விளங்கினை அறுத்தெறிந்து
சாதிப்பவர்கள் எல்லாம்
சூழ்நிலைகளை தகர்த்தெறிந்தவர்கள்
என்பது உண்மையிலும் உண்மை....

கோவி.கண்ணன் said...

அருமையாக இருக்கின்றது எடுத்துக்காட்டுகள்

சின்னப்பயல் said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கை ஊட்டும் நல்ல கவிதை சார்... வாழ்த்துக்கள்... நன்றி... (த.ம.18)

தி.தமிழ் இளங்கோ said...

தாமரை, காட்டு யானை, மருத்துவர், நிஜமான யோகி ஆகியோருடன் சராசரி மனிதனின் சலன புத்தியையும் ஒப்பிட்டு ஒரு கவிதை! உண்மைதான்!

Anonymous said...

''..உணர்வுக்காற்றின் வழியோடும்
சராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி
தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள் ..''
ஆக நம்பிக்கை துணிவே துடுப்பானால் வாழ்வில் வெல்லலாம். மிக சிறந்த கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளது. பணி தொடர நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

நிரஞ்சனா said...

அருமையான கருத்துக்களை எளிமையாக எடுததுச் சொல்லியிருக்கீங்க ஸார். சூப்பர்.

Athisaya said...

உண்மைதான் ஐயா!
எத்துணை யதார்த்ம்.வாழ்த்துக்கள்.!
முதல்முதலாய் முடிவாய்!!!! ..!!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தாமரை,யானை,மருத்துவர்,யோகி,நல்லவற்றிற்கு அருமையான உவமைகள்.
நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்கள்
சராசரிக்கு நல சவுக்கடி.
த.ம. 20

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

அருமையான கருத்தைச் சொன்ன பதிவு//.

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திர்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

உள்ளத்தே உறுதியும்
எண்ணத்தே தெளிவுமிருப்பின்
சூழலையும் சுருக்குப்பையில்
அடைத்துவிடலாம் . //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
வித்தியாசமான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சீனு //

ஆமா பல வேளைகளில் சூழ்நிலைக் கைதியை இருந்ததுண்டு. உடைத்தெறியும் திறன் இருந்தால் போராடலாம். தாமரையும் காடு யானையையும் போல..நலம் கொடுக்கும் வைத்தியனைப் போல //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

மிகவும் அழகான கவிதை வாழ்த்துகள்.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி//
.
சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //
..
வழக்கம் போல் அருமை ஐயா//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி////

சூழலைப் பொறுத்தே வாழ்க்கை மறுக்க முடியாது..அதைத் தாண்டியும் வாழ்க்கையுண்டு அதையும் மறுத்துவிடமுடியாது.மனம் கவர்ந்த கவிதை//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி//

வாழ்வின் யதார்த்த நிலையை உரித்துக் காட்டியுள்ளது..இப்பதிவு! நன்று..வாழ்த்துக்கள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //

உணர்வுக் காற்றின் வழியோடும்,சராசரியாய் நான்!வான்நோக்கி நாளும் தவமிருக்கும் தாமரையாய் வாழ விருப்பமிருப்பினும் உணர்வே மேலோங்கி சூழ்நிலைக் கைதியாகவே வாழவைக்கிறது.//

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரியாஸ் அஹமது //

SUPER//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி//
.
நிஜம் சார்
எவ்வளவு அழகா ஆழமா சொல்லிடீங்க//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

மிக அருமையான கருத்தாழமிக்க கவிதை மிகவும் ரசித்து படித்தேன்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

sariyaaka arumaiyaaka sonneenga ayya!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

யதார்த்தம் ரமணி சார்...வாழ்த்துக்கள்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //
.
நல்ல கவிதை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன்//

சூழ்நிலைக்கைதி ஆகாமல்,அதைக் காரணம் சொல்லாமல்,வென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் கவிதை!நன்று//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

பூத்த தாமரையின் நிறத்திற்கு ஏற்ப புனித
நெருப்பை உவமை ஆக்கியது மிகவும் அருமை//!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

நீங்கள் உவமானம் காட்டியவற்றின் சராசரி குண்மே போற்றத்தக்கது.அந்த சராசரிகள் வேறு இவை வேறு. தாமரை பற்றிக் கூறியது அருமை. பாராட்டுக்கள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

வேர்கள் //
.
ரமணி சார்
எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை தங்களை பாராட்ட//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

s suresh //

அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்!//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன்//
.
அருமையான வரிகள் சார்! பலர் இப்படி தான் இருக்கிறார்கள்! மீள்வதும் இல்லை மீளத்துணிவதும் இல்லை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //
.
சிறப்பான கவிதை//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

bandhu //

A Gem!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //
.
சத்தான கவிதை சார்!//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் .
தலைப்புக்கே ஒரு வந்தனம் செய்துவிட்டுதான் வந்தேன்...
எத்தனை பொருள்பொதிந்த தலைப்பு...
உணர்வுகளின் முரண்பாட்டுக்கு
அடிமைகளைப் போன நாம் சூழ்நிலைக் கைதிகள்
என்று சொல்வது நிதர்சனம்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவி.கண்ணன் //

அருமையாக இருக்கின்றது எடுத்துக்காட்டுகள்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சின்னப்பயல்//

தங்கள் வரவுக்கும்
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //
.
தாமரை, காட்டு யானை, மருத்துவர், நிஜமான யோகி ஆகியோருடன் சராசரி மனிதனின் சலன புத்தியையும் ஒப்பிட்டு ஒரு கவிதை! உண்மைதான்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

ஆக நம்பிக்கை துணிவே துடுப்பானால் வாழ்வில் வெல்லலாம். மிக சிறந்த கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளது//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

நிரஞ்சனா //

அருமையான கருத்துக்களை எளிமையாக எடுததுச் சொல்லியிருக்கீங்க ஸார். சூப்பர்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Athisaya //

உண்மைதான் ஐயா!
எத்துணை யதார்த்ம்.வாழ்த்துக்கள்.!//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

தாமரை,யானை,மருத்துவர்,யோகி,நல்லவற்றிற்கு அருமையான உவமைகள்.
நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்கள்
சராசரிக்கு நல சவுக்கடி.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கோமதி அரசு said...

தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள் //

வாழ்க்கையை துணிவுடன் சந்திக்காமல் தினம் நொந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் வீண்டிப்பதை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
எளிமையாய் எல்லோருக்கும் புரியும் வண்ணம்.
நன்றி.

அருணா செல்வம் said...

அருமைங்க ரமணி ஐயா....

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

வாழ்க்கையை துணிவுடன் சந்திக்காமல் தினம் நொந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் வீண்டிப்பதை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
எளிமையாய் எல்லோருக்கும் புரியும் வண்ணம்.
நன்றி.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

அருமைங்க ரமணி ஐயா....//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

//நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்களும்
நூலறுந்தபட்டமாய்
உணர்வுக்காற்றின் வழியோடும்
சராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி
தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள்//
நிஜமான உண்மை!
மிகவும் அருமை ரமணி அய்யா.

Yaathoramani.blogspot.com said...

kari kalan //

மிகவும் அருமை ரமணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

நெற்கொழுதாசன் said...

சூழ் நிலைகளைக் காரணம்காட்டி
தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள்

சாட்டையடி
தத்துவங்களும் சடங்குகளும்
சம்பிரதாயங்களையும் காரணம் காட்டி
தான் அழிவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும்
தடைசெய்யும் சமூக பாத்தீனியங்களுக்கு

Yaathoramani.blogspot.com said...

நெற்கொழுவான் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment