Tuesday, July 24, 2012

பிர சவ சங்கல்பங்கள்


த ன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது
ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்
கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்
அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை
'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

65 comments:

வெங்கட் நாகராஜ் said...

//கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்//

சரியான வார்த்தைகள். நல்ல கவிதை....

த.ம. 2

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை வரிகள் அருமை ! நன்றி (த.ம. 3)

Admin said...

அருமையாகச் சொன்னீர்கள்..

"ஆனாலும் என்ன
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன"

எந்த கவிஞனும் இதை மறுக்க மாட்டான்..
வாசித்தேன்..வாக்கிட்டேன்..நன்றி..

பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு

Unknown said...

//கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்//

பல படைப்பாளிகளின் நிலை இதுதான்! படைப்பாளிகளின் குணநலன்கள் கூட, அவனது பாத்திர படைப்புகளின் மூலம், வாசகர்களால் முடிவு செய்யப்பட்டு விடுகின்றன.

அருமையான கருத்துக்கள்!

அருணா செல்வம் said...

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?“

கவிஞனுக்குக் கற்பனைத் திறத்தைக்
கடவுள் கொடுத்திருக்கலாம். ஆனால்
காணும் உலகின் காட்சித் திறத்தை
மிகைப்படுத்தியோ மிகச்சுறுக்கியோ
கொட்டிவிட வேண்டிய
கட்டாயம் அவனுக்கு...
வேதனைகளையும் வெம்பல்களையும்
வெளிப்படுத்தும் போது தாக்கங்கள்
அதிகமாகத்தான் வெளிவந்துவிடுகிறது.
அதனாலேயே
சில நேரங்களில்
முழுமதி கூட
முக்காடிட்டு
முகம் மறைத்து
முணங்க வேண்டியுள்ளது..

பிரசவ சங்கல்பங்கள் - பிறந்த பின்னும்
வலி காணும் தாயார்களே கவிஞர்கள்
உங்களின் படைப்பு அருமைங்க ரமணி ஐயா.

இராஜராஜேஸ்வரி said...

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

MARI The Great said...

அருமையான கவிதை (TM 7)

Anonymous said...

''.....படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?...''

நாங்கள் உண்மையையும, கற்பனையும் கலந்த கலவையாகத்தான் எழுதுகிறோம். படைப்பினால் படைப்பாளியை அறிய முடியாது. இது என் கருத்து.
வேதா. இலங்காதிலகம்.

செய்தாலி said...

ரெம்ப சரியா சொன்னீர்கள் ஐயா
கிரேட் சல்யூட்

ஸ்ரீராம். said...

பொதுவாகவே பழசையே நினைத்துக் கொண்டிருப்பதும் தவறு, எழுதுவதில் எல்லாம் எழுதப் படுபவனின் சொந்த/நொந்த அனுபவங்கள் என்று எண்ணுவதும் தவறு இல்லையா?!!

Avargal Unmaigal said...

///கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்
அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை///

நண்பன் இளையராஜாதானே? அந்த கவிஞன் வைரமுத்துவா?

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

கவிஞனுக்குக் கற்பனைத் திறத்தைக்
கடவுள் கொடுத்திருக்கலாம். ஆனால்
காணும் உலகின் காட்சித் திறத்தை
மிகைப்படுத்தியோ மிகச்சுறுக்கியோ
கொட்டிவிட வேண்டிய
கட்டாயம் அவனுக்கு...
வேதனைகளையும் வெம்பல்களையும்
வெளிப்படுத்தும் போது தாக்கங்கள்
அதிகமாகத்தான் வெளிவந்துவிடுகிறது.
அதனாலேயே
சில நேரங்களில்
முழுமதி கூட
முக்காடிட்டு
முகம் மறைத்து
முணங்க வேண்டியுள்ளது..

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

சரியான வார்த்தைகள். நல்ல கவிதை....
//
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
.
கவிதை வரிகள் அருமை //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

அருமையாகச் சொன்னீர்கள்..
எந்த கவிஞனும் இதை மறுக்க மாட்டான்..
வாசித்தேன்..வாக்கிட்டேன்..நன்றி..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Vijayakumar //

பல படைப்பாளிகளின் நிலை இதுதான்! படைப்பாளிகளின் குணநலன்கள் கூட, அவனது பாத்திர படைப்புகளின் மூலம், வாசகர்களால் முடிவு செய்யப்பட்டு விடுகின்றன.
அருமையான கருத்துக்கள்!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //


அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //

அருமையான கவிதை //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

நாங்கள் உண்மையையும, கற்பனையும் கலந்த கலவையாகத்தான் எழுதுகிறோம். படைப்பினால் படைப்பாளியை அறிய முடியாது. இது என் கருத்து.//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

ரெம்ப சரியா சொன்னீர்கள் ஐயா
கிரேட் சல்யூட்//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

பொதுவாகவே பழசையே நினைத்துக் கொண்டிருப்பதும் தவறு, எழுதுவதில் எல்லாம் எழுதப் படுபவனின் சொந்த/நொந்த அனுபவங்கள் என்று எண்ணுவதும் தவறு இல்லையா?!!

அதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

நண்பன் இளையராஜாதானே? அந்த கவிஞன் வைரமுத்துவா?//

அப்படி எண்ணவும் வழி இருக்கிறதா என்ன ?
தங்கள் வரவுக்கும் சிந்திக்கவைத்துப் போன
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பழனி.கந்தசாமி //
.
ரசித்தேன்.//

தங்கள் உடன்வரவுக்கும்
வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

காயங்களே கவிதைகள்!
கவிதைகளால் மேலும் காயங்கள்!
தனக்கு மருந்திட்டு மற்றவரை குத்தும் முட்கள்!
ஆனால் வலியோ அனைவருக்கும்!
மேலும் கவிதைகள்!

கவி(தை)யின்றி அமையா உலகு!

நன்று..வாழ்த்துக்கள்!

sathishsangkavi.blogspot.com said...

மிக ரசித்தேன் உங்கள் கவிதைகளை...

சீனு said...

//கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்
// முற்றிலும் உண்மையே... ஆனால் அந்த தங்க முட்டை உடைந்து விடக் கூடாது என்பதால் தான் நானேன்ல்லம் கவிதைடே எழுதுவதில்லை :-)

குறையொன்றுமில்லை. said...

ஆனாலும் என்ன
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

ரொம்ப சரியான வார்த்தைகளில் சொல்லி இருக்கீங்க.

ஸாதிகா said...

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்//அருமையான வரிகள்.

பால கணேஷ் said...

அனைத்து வரிகளும் உண்மையில் தோய்ந்து வெளிப்பட்டிருக்கின்றன. அருமை ஐயா.

சிவகுமாரன் said...

அருமை அருமை உண்மை உண்மை. அப்படியே என்னைச் சொல்வது போல் இருக்கிறது. என்கவிதைகளால் நிறைய ஒட்டியிருக்கிறேன் - வெட்டியும் இருக்கிறேன் விவரம் புரியாமல்.
மனம் கவர்ந்த கவிதை

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். அருமை.

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆம்.....கவிதைகள் பிறந்துகொண்டுதான் இருக்கிறது. அருமையான வரிகள்

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

காயங்களே கவிதைகள்!
கவிதைகளால் மேலும் காயங்கள்!
தனக்கு மருந்திட்டு மற்றவரை குத்தும் முட்கள்!
ஆனால் வலியோ அனைவருக்கும்!
மேலும் கவிதைகள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
கவித்துவமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சங்கவி //

மிக ரசித்தேன் உங்கள் கவிதைகளை..//

தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

/சீனு //


முற்றிலும் உண்மையே... ஆனால் அந்த தங்க முட்டை உடைந்து விடக் கூடாது என்பதால் தான் நானேன்ல்லம் கவிதைடே எழுதுவதில்லை :-)/

தங்கள் வரவுக்கும் வித்தியாசமான
சிந்திக்கத் தூண்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

ரொம்ப சரியான வார்த்தைகளில் சொல்லி இருக்கீங்க.//


தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

//அருமையான வரிகள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ்//
.
அனைத்து வரிகளும் உண்மையில் தோய்ந்து வெளிப்பட்டிருக்கின்றன. அருமை ஐயா./

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

அருமை அருமை உண்மை உண்மை. அப்படியே என்னைச் சொல்வது போல் இருக்கிறது. என்கவிதைகளால் நிறைய ஒட்டியிருக்கிறேன் - வெட்டியும் இருக்கிறேன் விவரம் புரியாமல்.
மனம் கவர்ந்த கவிதை//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

உண்மைதான். அருமை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரஹீம் கஸாலி //

ஆம்.....கவிதைகள் பிறந்துகொண்டுதான் இருக்கிறது. அருமையான வரிகள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?//

ஆஹா சமத்தான கேள்வியின் வரிகளின் சுகந்தம் சூப்பர் வாவ்.......!!!

குருவின் வரிகளோ வரிகள் மிகவும் ரசித்தேன்...!

G.M Balasubramaniam said...

கற்பனைகள் உண்மைபோல் இருப்பதாக எண்ணுவதால்தான்
இம்மாதிரி தொல்லைகள். அதுவே எழுதுபவனின் பெருமையும் கூட.கற்பனையில் உண்மையின்சாயல் இருக்கலாம். அப்பட்டமான உண்மை பிறரை நேராகக் குறிப்பதுபோல் இருக்கக் கூடாது. இதுவரை அம்மாதிரி பிரசவ வைராக்கியங்கள் எனக்கேற்பட்டதில்லை.

Unknown said...

Prasava sangalpangal....thalaippe our kavithai sir.

Unknown said...

Prasava sangalpangal....thalaippe our kavithai sir.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வித்தியாசமான
சிந்திக்கத் தூண்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Suresh Kumar //

Prasava sangalpangal....thalaippe our kavithai sir.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

ஆஹா சமத்தான கேள்வியின் வரிகளின் சுகந்தம் சூப்பர் வாவ்.......!!!
குருவின் வரிகளோ வரிகள் மிகவும் ரசித்தேன்...!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

கவிஞனுக்கே இந்த நிலைமை என்றால் பெண் கவிக்கு என்ன நிலைமை?

vanathy said...

வழக்கம் போலவே அசத்தல். தொடர வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ s//id...
கவிஞனுக்கே இந்த நிலைமை என்றால் பெண் கவிக்கு என்ன நிலைமை?//

தங்கள் வரவுக்கும்
சிந்திக்கத் தூண்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

வழக்கம் போலவே அசத்தல்.
தொடர வாழ்த்துக்கள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

//ஆனாலும் என்ன
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன///
சத்தியம் சொன்னது அழகு அருமை ...
நீங்கள் தொடருங்கள் இன்று போல் என்றும்
வாக்களித்து பெருமை கொள்கிறோம் நாங்கள்

Unknown said...

tamil manam 14

ஹேமா said...

கவித்தாயாராய் பிரசவத்தின் அனுபவம்.அருமை !

அம்பாளடியாள் said...

கவிஞனுக்கும் நடிகனுக்கும் நிறையவே ஒரு
ஒற்றுமை இருக்கு ஐயா ஒரு நடிகன் எந்தப் பாத்திரத்தைக்
கொடுத்தாலும் அதே போன்று நடிக்க வேண்டும் .
கவிஞனும் கவிதை எழுதும்போது தன்னை மறந்து
எழுத வேண்டும் இதற்காக ஆளாளுக்கு அனுதாபங்களையோ
மகிழ்ச்சியையோ அனுப்ப முடியுமா?.......:) ஒன்றைப்பற்றி
எழுத வேண்டும் என்று நினைத்த கணமே அவன் அவானாக
இருப்பதில்லை .ஒரு கவிதை அது எங்க எப்படி எந்த இடத்தில்
வரும் என்று கூட உண்மையான கவிஞன் அறிய மாட்டான்
எனக்கும் ஒரு சின்ன அனுபவம் ஒரு நாள் நட்ட நடு ராத்திரி
தூக்கக் கலக்கத்தில் நான் எழுதிய பாடல் இது
வடபழனி அம்மன் ஆலயம்
அங்கு வந்தாரை வாழவைப்பாள்
ஒருமுறைதான் சென்றேன் அங்கே
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
மனம் தொழுதே தினம் தொழுதே....
அவள் மகிமைகளைச் சொல்லிடவா...
இறைவனில்லை இறைவனில்லை
என்றவரும் தொழுதனரே ...............

சத்தியமா நான் இந்தக் கோவிலை என்
நிஜக் கண்களால் காணவில்லை அப்படி ஒரு கோவில்
இருக்கிறதா?.. என இன்றுவரை என் விசாரணை முடியவில்லை
இது எழுதப்பட்ட நேரம் 03 .24 pm !..........

அருமையான தலைப்போடு உருவெடுத்த
நீதி சொல்லும் கவிதைக்கு வாழ்த்துக்களும்
பாராட்டுகளும் ஐயா ...

Athisaya said...

வணக்கம் ஐயா.அவனான அதுவாக அவளாகவே மாறுகிறான் கவிஞன்.அருமையான ஒர படைப்பு ஐயா..!எங்கிருந்து இத்தனை கரு?இத்துணை வேகம்.வாழ்த்துக்கள் ஐயா .சந்திப்பொம்.

Seeni said...

suu......perungayyaaa!

Yaathoramani.blogspot.com said...

ரியாஸ் அஹமது //

சத்தியம் சொன்னது அழகு அருமை ...
நீங்கள் தொடருங்கள் இன்று போல் என்றும்
வாக்களித்து பெருமை கொள்கிறோம் நாங்கள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Athisaya //
வணக்கம் ஐயா.அவனான அதுவாக அவளாகவே மாறுகிறான் கவிஞன்.அருமையான ஒர படைப்பு ஐயா..!எங்கிருந்து இத்தனை கரு?இத்துணை வேகம்.வாழ்த்துக்கள் ஐயா .சந்திப்பொம்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

அருமையான தலைப்போடு உருவெடுத்த
நீதி சொல்லும் கவிதைக்கு வாழ்த்துக்களும்
பாராட்டுகளும் ஐயா ...//

அருமையான உண்மை நிகழ்வோடு
பொருத்திக்காட்டி ஒரு அற்புதமான விரிவானபின்னூட்டமிட்டு
படைப்புக்கு பெருமை சேர்த்த தங்களுக்கு
என் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா//

கவித்தாயாராய் பிரசவத்தின் அனுபவம்.அருமை //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

யுவராணி தமிழரசன் said...

மிகவும் சரியே Sir! நானும் அனுபவித்திருக்கிறேன்! என் பதிவு ஒன்றை படித்துவிட்டு தோழி ஒருவள் கேட்டதை நினைவு படுத்தியது தங்கள் பதிவு!

Post a Comment