Wednesday, April 17, 2013

உள்ளும் புறமும் ( 8 )


வீட்டிற்கு  வந்து வெகு நேரம் ஆயினும்
எம்பார்மெண்ட் பிச்சையின் எச்சரிக்கை ஒரு
பயமுறுத்தலாய் என்னை அரித்துக் கொண்டே
இருந்தது

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் இருப்பது
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை.
இனியும் எதையும் மனைவியிடமும் குழந்தைகளிடமும்
மறைப்பது அர்த்தமற்றது என உணர்ந்து
நான் பார்த்த பாண்டிச்சேரி ஏரியா குறித்தும்
அங்கு சிலைக்குக் காவலிருந்தவன்
சொல்லிய தகவல்களையும் போலீஸ் ஸ்டேசனில்
பிச்சை செய்த எச்சரிக்கை
அனைத்தையும் ஒன்று விடாமல் விளக்கினேன்.

உண்மையில் அது வரை எனது மனைவி
கொண்டிருந்த தைரியம் கூட அசட்டுத் தைரியம்தான்
என்னை பலவீனப்படுத்தக் கூடாது என்பதற்காக
அவள் நடித்ததுதான் என்பது அவள் முக பாவத்தில்
இருந்தே தெளிவாகப் புரிந்தது.குழந்தைகளும்
அதிகம் குழம்பிப் போனார்கள்

நானே ஒரு முடிவோடு அவர்களுக்கு இனி
செய்ய வேண்டியது குறித்து விளக்கினேன்

"எப்படியோ சொந்த வீடு ஆசையில் அதிகம்
விசாரிக்காமல் இங்கே வீடு கட்டிவிட்டோம்
சரியாக விசாரித்திருந்தால் இங்கு கட்டாமல்
நம் வசம் உள்ள வேறு இடத்தில் கூட
கட்டி இருக்கலாம்
இந்த இடம்  டவுனுக்கு பக்கமாக இருப்பதால்
நிச்சயம் பிற்காலத்தில் நல்ல விலை போகும்
அதுவரை இந்த பாஸ்போர்ட் வேலை முடியும் வரை
இங்கு இருப்போம்.விசாரணை முடிந்து பாஸ்போர்ட்
இந்த விலாசத்திற்குத்தான் வரும் வந்தவுடன்
வாடகைக்கு விட்டுவிட்டு வீடு மாறி விடுவோம் "
என்றேன்

என் மனைவியும்  "அதுதான் சரி  ஆனாலும்
அதுவரை ஒரு மாதமோ இரண்டு மாதமோ
நீங்களும் இருக்கிற லீவைப் போட்டு
வீட்டிலேயே இருங்கள்
எனக்கும் கொஞ்சம் தைரியமாக இருக்கும் "
என்றாள்

எனக்கும் அது சரியெனப்பட்டது

அலுவலகத்தில் என் நிலையை விளக்கிச் சொல்லி
ஒரு ஐம்பது நாள் மெடிகல் லீவு போட்டேன்
காலையில்  குழந்தைகளை கல்லூரி பஸ்ஸில்
ஏற்றி விட்டு வருவது மாலையில் கூட்டி வருவது
பகல் நேரத்தில் தோட்ட வேலை செய்வது
மாலையில் வாசலில்  சேர் போட்டு அமர்ந்தபடி
என்னையும் என் குடும்பத்தாரையும் தைரியமாக
இருக்கும்படியான சூழலை உருவாக்கிக்
கொண்டிருந்தேன்

என் மனைவியும் அவள் பங்கிற்கு மஞ்சள் துணியில்
நூற்றியொரு ரூபாயை முடிந்து வைத்து எந்த
பிரச்சனையும்  இல்லாமல் வீடு மாறிப் போனால்
குடும்பத்தோடு  திருப்பதி வருவதாக
வேண்டிக் கொண்டு அவளுக்கும் எனக்கும்
குழந்தைகளுக்கும் தைரியமும்
நம்பிக்கையும் ஊட்டிக் கொண்டிருந்தாள்

ஒரு இருபது நாள் வரை  எந்தப் பிரச்சனையுமில்லை

ஒரு ஞாயிறு காலை ஐந்து மணி அளவில்
வாசல் பக்கம் "ஓடறாங்க  பாருஅவங்களை விடாதீங்கடா
 கண்டந்த் துண்டமா வெட்டுங்கடா "என்கிற சபதமும்
அதைத் தொடர்ந்து மிகப் பெரிய கலவர சப்தமும்
அலறல் ஒலியும் தொடர்ந்து கேட்க மெதுவாக
வாசல் லேசாகத் கதவைத் திறந்து பார்த்தேன்

என் வீட்டிற்கு கிழக்கே ஒரு கும்பல்
தலை தெறிக்க  ஓட ஒரு கும்பல்
அரிவாள் கத்தி கம்புகளுடன்
கொலை வெறியுடன்  துரத்திக் கொண்டு இருந்தது
அதைப்போலவே புது நகர் பாலத்தின் பக்கமும்
கம்பு அரிவாள்களுடன் ஒரு வெறி பிடித்த கும்பல்
தெற்கு திசை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது
என்ன நடக்கிறது என எனக்குப் புரியவே இல்லை
பாதித் தூக்கத்தில் விழித்து எழுந்து வந்த
மனைவியின் முகம் பயத்தில் வெளிறி இருந்தது

சரி நன்றாக விடியட்டும் என கதவை மூடிவிட்டு
வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொண்டோம்.
வீட்டிற்குள் அம்ர்ந்திருப்பது ஏதோ
 அக்னி குண்டத்தின் இடையில்
அமர்ந்திருப்பது போலி இருந்தது

விடிந்து மெள்ள மெள்ள வெளிச்சம் பரவ
வாசலில் லாரிகள்  ஓடும் சப்தம் கேட்கத் துவங்க
கொஞ்சம் தைரியம் வர மெதுவாகக்
கதவைத் திறந்தேன்

தூரே கிழக்கே பாலத்தின் பக்கம் இருந்து ஒரு
போலீஸ் லாரி எங்கள் வீடு வாசலில் வந்து நின்றது

அதிலிருந்து இறங்கிய போலீஸ்காரர்
"ஒரு பக்கெட்டில் தண்ணீர் கொடுங்கள் " என்றபடி
லாரியில் இருந்து தலையிலிருந்து இரத்தம்
வடிந்து கொண்டிருந்த  ஒருவரை கைத்தாங்கலாக
கீழே இறக்கி எங்கள் வீட்டுப் படியில்
உட்கார வைத்தார்.பின் வாளித் தண்ணீரில்
அவர் இரத்தம் படிந்த  சட்டையை அலசச் சொல்லி
முகம் மற்றும் உடல்களை கழுவச் சொல்லி
மீண்டும் வண்டியில் உட்காரவைத்து
என்னையும் என் வீட்டையும் ஒரு முறை ஏற
இறங்கப் பார்த்துவிட்டு "இங்கேயா குடியிருக்கீங்க "
என்றார்

அவர் பார்வையில் இருந்தது ஏளனமா அல்லது
ஆச்சரியமா என எனக்குச் சரியாக விளங்கவில்லை
நான் அதனைக் கண்டு கொள்ளாத பாவனையில்
"என்ன சார் பிரச்சனை காலையில் இருந்து
இங்கே ஒரே ரகளையாக இருக்கிறது "என்றேன்

அவர் சிரித்தபடி "நிஜமாகவே ஒன்றும் தெரியாதா "
எனக் கேட்டு விட்டு சொல்ல ஆரம்பித்தார்

முதல் நாள் இரவில் யாரோ அந்தக் காலனியில்
 இருந்த அந்தத் தலைவரின் சிலையை
 உடைத்துவிட்டதையும் இரவு முதலே
 ஜாதிக் கலவரம்  பரவிதமிழ் நாடே
ஸ்தம்பித்துப் போயிருப்பதாகவும் சொல்லி
 இப்போது அந்தப் பகுதி முழுவதும்
துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்
கலவரத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்
 கண்டதும் சுடஉத்திரவிடப்பட்டிருப்பதாகவும் விளக்கி
இரண்டு மூன்று நாள் அதிகம் அனாவசியமாக
வெளிச் செல்லவேண்டாம் எனவும்
விளக்கிப் போனார்.

நாங்கள் உண்மையில் ஒட்டுமொத்தமாக
ஓய்ந்து போனோம் இனியும் பாஸ்போர்ட்
அது இது வென்று இங்கு இருப்பது
நிச்சயம் நல்லதற்கில்லை என முடிவு செய்து
அடுத்தவாரமே வீட்டைக் காய் செய்வது என
முடிவெடுத்தோம்

அதுவரை எந்தத் தீங்கும் வராமல் இருக்க
ஆண்டவனை நம்புவதைத் தவிர
வேறு வழியில்லை எனக் கருதி மீண்டும்
ஒருமுறை வெங்கடாஜலபதியை
குடும்பத்தோடு வேண்டி கொண்டோம்

அவர் எப்போதும் போலவே சிரித்தபடி
அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
அவர் சிரிப்பின் உள்ளார்ந்த அர்த்தம் புரிய
எங்களுக்கு ஒரு வார காலம்
காத்திருக்கவேண்டியதாக இருந்தது

(தொடரும் )


20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எழுமலையான் அதிகம் சோதனை செய்து விட்டார் என்று நினைக்கிறேன்...

அடுத்த பகிர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைத்து (+1) விட்டேன்... நன்றி...

கவியாழி said...

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் இருப்பது
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை.//விறுவிறுப்பாய் இருக்கிறது

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை நல்ல விறுவிறுப்பாகவே செல்கிறது. எனக்கென்னவோ நீங்க அந்த வீட்டை விட்டு காலி செய்ய மாட்டீங்க எனத் தோன்றுகிறது.

//அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் இருப்பது
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை.//

அதெல்லாம் ப்ழகி விடும். வெங்கடாசலபதி உங்களை அங்கேயே நீடித்து இருக்க அருள் புரிவார் எனத்தொன்றுகிற்து. பார்ப்போம். தொடருங்கள்.

பாராட்டுக்கள்..

Avargal Unmaigal said...

சுவராஸ்யமாக செல்கிறது..அடுத்து என்ன என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் said...

ஏழுலையானின் சிரிப்பின் அர்த்தம் காண காத்திருக்கிறேன்

Seeni said...

athu sari...!

viru viruppu....

கீதமஞ்சரி said...

பைத்தியக்கார மனிதர்கள் மத்தியிலாவது வாழ்ந்துவிடலாம். மத, இன, மொழி வெறி பிடித்த மனிதர்கள் மத்தியில் வாழ்வது மிகவும் கொடுமை. எத்தனை திகிலான அனுபவம் உங்களுடையது. ஒருவார காலத்துக்குப் பின் என்ன நடந்தது? நிகழ்வையும் எண்ணவோட்டங்களையும் வாசகர்களும் உணர்ந்து அனுபவிக்கும் வண்ணம் தீர்க்கமான எழுத்து. பாராட்டுகள் ரமணி சார். அடுத்தப் பகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

உஷா அன்பரசு said...

எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. இன்னமும் அதே வீட்டில்தான் இருப்பீர்கள் என்று! ஒரு வார காலத்தில் குட்டி பாண்டிச்சேரி அப்புறப்படுத்தி விட்டதா? அடுத்து என்ன என்று ஆவலாக இருக்கிறது.

G.M Balasubramaniam said...


பதிவுக்குப் பதிவு சஸ்பென்ஸ் ....! வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அட இப்படி ஒரு கஷ்டமா ஏற்பட்டது உங்களுக்கு? தொடர்கிறேன்!

மாதேவி said...

"அவர் சிரிப்பின் உள்ளார்ந்த அர்த்தம் புரிய
எங்களுக்கு ஒரு வார காலம்..." என்று முடித்துள்ளீர்கள்.
அதே வீட்டில்தான் என்று நானும் நினைக்கின்றேன்.

வெங்கட் நாகராஜ் said...

அடடா.... என்னன்ன சோதனைகள்..... காத்திருக்கிறேன்

கோமதி அரசு said...

அவர் எப்போதும் போலவே சிரித்தபடி
அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
அவர் சிரிப்பின் உள்ளார்ந்த அர்த்தம் புரிய
எங்களுக்கு ஒரு வார காலம்
காத்திருக்கவேண்டியதாக இருந்தது//

ஒரு வார காலத்தில் என்ன நடந்தது என்று அறிய ஆவல்.
வெங்கடாஜலபதி என்ன வழி காட்டினார்?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒவ்வொரு பகுதியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறீர்கள்
//அவர் சிரிப்பின் உள்ளார்ந்த அர்த்தம் புரிய
எங்களுக்கு ஒரு வார காலம்
காத்திருக்கவேண்டியதாக இருந்தது//
எங்களால் ஒரு வாரம் காத்திருக்க முடியாது உடனே சொல்லி விடுங்கள்.
த..ம. 7

Unknown said...

என்னதான் ஆயிற்று? உடன் எழுதுங்கள்! படு பயங்கரம்!

சேக்கனா M. நிஜாம் said...

தொடர் வழக்கம் போல் விறுவிறுப்பு !

வாழ்த்துகள்...

ShankarG said...

'உள்ளும் புறமும்' மிக விறுவிறுப்பாகச் செல்கிறது. தொடர வாழ்த்துகிறேன்.

அருணா செல்வம் said...

அடுத்தப் பதிவை ஆவலுடன் காத்திருக்கிறேன் இரமணி ஐயா.

Ranjani Narayanan said...

ஏழுமலையானின் சிரிப்புக்கு அர்த்தம் என்னவோ?

Post a Comment