தெளிவடைந்தவர்கள் யாரும்
அலட்டிக்கொள்வதில்லை எதற்கும்
அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் கொடுப்பதெல்லாம்
இங்கிருந்து எடுத்ததுதான்
முடியுமானால் எடுத்ததை
செழுமைப்படுத்திக் கொடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
எடுத்ததை விட
கூடுதலாக்கிக் கொடுப்பதிலும் மட்டுமே
கூடுதல் கவனம் கொள்கிறார்கள்
முதிர்சியடைந்தவர்கள் எவரும்
அகங்காரம் கொள்வதில்லை எதற்கும்
அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் எடுத்ததெல்லாம்
அவர்கள வரும் முன்பே
இங்கிருந்ததுதான்
முடியுமானால் எடுப்பதை
போதுமான அளவில் எடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
குறைந்த அளவில் எடுப்பதிலும் மட்டுமே
அதிக ஆர்வம் கொள்கிறார்கள்
ஞானமடைந்தவர்கள் எவரும்
மயக்கம் கொள்வதில்லை எதற்கும்
அவர்களுக்குத் தெரியும்
அவர்களின் இருப்பு அநித்தியமானது என்பதும்
அவர்கள் வரும் முன்பே இருந்தது
அவர்கள் இல்லையெனினும் இருக்குமென்பதுவும்
முடியுமானால் அவர்களின் இருப்பை
பயனுள்ளதாக்கப் பார்க்கிறார்கள்
இன்னும் முடியுமானால்
நல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே
அதிக அக்கறை கொள்கிறார்கள்
அலட்டிக்கொள்வதில்லை எதற்கும்
அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் கொடுப்பதெல்லாம்
இங்கிருந்து எடுத்ததுதான்
முடியுமானால் எடுத்ததை
செழுமைப்படுத்திக் கொடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
எடுத்ததை விட
கூடுதலாக்கிக் கொடுப்பதிலும் மட்டுமே
கூடுதல் கவனம் கொள்கிறார்கள்
முதிர்சியடைந்தவர்கள் எவரும்
அகங்காரம் கொள்வதில்லை எதற்கும்
அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் எடுத்ததெல்லாம்
அவர்கள வரும் முன்பே
இங்கிருந்ததுதான்
முடியுமானால் எடுப்பதை
போதுமான அளவில் எடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
குறைந்த அளவில் எடுப்பதிலும் மட்டுமே
அதிக ஆர்வம் கொள்கிறார்கள்
ஞானமடைந்தவர்கள் எவரும்
மயக்கம் கொள்வதில்லை எதற்கும்
அவர்களுக்குத் தெரியும்
அவர்களின் இருப்பு அநித்தியமானது என்பதும்
அவர்கள் வரும் முன்பே இருந்தது
அவர்கள் இல்லையெனினும் இருக்குமென்பதுவும்
முடியுமானால் அவர்களின் இருப்பை
பயனுள்ளதாக்கப் பார்க்கிறார்கள்
இன்னும் முடியுமானால்
நல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே
அதிக அக்கறை கொள்கிறார்கள்
34 comments:
வணக்கம்
ஐயா
ஞானமடைந்தவர்கள் எவரும்
மயக்கம் கொள்வதில்லை எதற்கும்
அருமையான விழிப்புணர்வுக்கவிதை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முதியோரைப் பற்றி இதைவிட வேறென்ன சொல்லிட முடியும்.
அவர்களின் புரிந்துணர்வுகளை அவர்களின் எண்ணங்களைச், செயல்களை அருமையாகப் படம்பிடித்துக் காட்டினீர்கள் ஐயா!
மிகவும் ரசித்தேன்! வாழ்த்துக்கள் ஐயா!
என்வலைப்பூவிற்கும் உங்கள் வருகையை வேண்டுகிறேன் ஐயா!
த ம.2
பகவத் கீதை போலவே சொல்லியுள்ளீர்கள்.
அதில் ஏன் அழுகிறாய்? எதை இழந்தாய்?
எதை நீ கொண்டுவந்தாய் ...... இழப்பதற்கு?
இன்று உன்னுடையது என்பது, நாளை வேறொருவனுடையது, அதற்குப்பிறகு மற்றொருவனுடையது என்று ஆகிக்கொண்டே இருக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கும்.
2008rupan said...//
அருமையான விழிப்புணர்வுக்கவிதை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்ஐயா
தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இளமதி said...//
அவர்களின் புரிந்துணர்வுகளை அவர்களின் எண்ணங்களைச், செயல்களை அருமையாகப் படம்பிடித்துக் காட்டினீர்கள் ஐயா!
மிகவும் ரசித்தேன்! வாழ்த்துக்கள் ஐயா!
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said..//.
பகவத் கீதை போலவே சொல்லியுள்ளீர்கள்.இன்று உன்னுடையது என்பது, நாளை வேறொருவனுடையது, அதற்குப்பிறகு மற்றொருவனுடையது என்று ஆகிக்கொண்டே இருக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கும்.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இவர்கள் மூவரையும் தாண்டி இருக்கிற ஒரு கேரக்டர் நாம் நடப்புகளில் தினசரி ஒருமுறையாவது பார்க்க நேர்ந்து விடுகிற அரை வேக்காட்டு மனிதம்.அவர்களின் ஆதிக்கம்தான் இங்கு நிறைந்து காணப்படுவதாய்/
அருமையான ஓர் விஷயத்தை இத்தனை கச்சிதமாக, ஏன், அற்புதமாக சொல்ல உங்களால் மட்டுமே முடியும்!
aahaa...!
nallaakave sollideenga....
பகவத்கீதை மாதிரி, இதை 'இரமணிகீதை' என்று அழைத்தால் என்ன என்று தோன்றுகிறது.
சரியாகவே சொன்னீர்கள்.
''...நல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே
அதிக அக்கறைக் கொள்கிறார்கள்...''
சிறப்புச் சிந்தனைகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நல்லதொரு பதிவு. பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்
///முதிர்சியடைந்தவர்கள் எவரும்
அகங்காரம் கொள்வதில்லை///
முதிர்ச்சியடைந்த யாவரும் நமக்கு தலைவர்களாக இல்லை
tha.ma 6
ஆகையால் தெளிவடைந்து இருக்கவே முயற்சிப்போம்
Typed with Panini Keypad
தெளிவு
முதிர்ச்சி
ஞானம்
அருமையான பதிவு ஐயா
நன்றி
#நல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே
அதிக அக்கறைக் கொள்கிறார்கள்#
வலைஞர்களுக்கு நீங்கள் செய்வதைப் போல!
த.ம 8
ஞானமடைந்தவர்கள் எவரும்
மயக்கம் கொள்வதில்லை எதற்கும்
நிறைவான வரிகள்..!
அருமையாக சிறப்பாக சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...
சார்..உங்களால் மட்டுமே இப்படிக்கவிதை எழுத இயலும்!
ஞானமடைந்தவர்கள்- நல்ல விளக்கம்...!
அறிவின் முதிர்ச்சியில் அனைத்தும் தோன்றும்!
அதில் ஐயமில்லை!
அநித்தியமானது என்பதும்
அவர்கள் வரும் முன்பே இருந்தது
அவர்கள் இல்லையெனினும் இருக்குமென்பதுவும்//
அர்த்தமுள்ள யோசிக்க வேண்டிய வரிகள் குரு....!
மிக அருமை ரமணி ஐயா! எவ்வளவு அழகாக வாழ்வையும் உலகையும் பற்றிச் சொல்லிவிட்டீர்கள்..இந்தப் புரிதலும் தெளிதலும் இருந்தால் பிரச்சினை ஏது ஐயா? பகிர்விற்கு நன்றி!
த.ம.12
ரமணியின் முத்திரை ஒவ்வொரு கவிதையிலும் தெரிகிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
சிந்திக்க வைக்கும் கவிதை. கருத்துள்ள கவிதை. அதை எளிமையாக சொல்வது உங்களுக்கு கைவந்த கலை
th.ma. 13
நல்ல சிந்தனைகள். வாழ்த்துகள்.
மிகச் சிறப்பான கவிதை!
வணங்குகிறேன் இரமணி ஐயா.
தெளிவடைந்தவர், முதிர்ச்சியடைந்தவர், ஞானமடைந்தவர் – என்பதெல்லாம் ஒருவரே. தமிழ் இலக்கணத்தில் “ ஒரு பொருள் குறித்த பலசொறகள் “ என்பார்கள்.
தி.தமிழ் இளங்கோ //
.மிக அருமையாகச் சொன்னீர்கள்
ஆனால் நான் இப்படிப் பொருள் கொண்டேன்
குழம்பித் தெளிவது தெளிதல்
அனுபவத்தால் பெறுவது முதிர்ச்சி
அஞ்ஞானம் கடத்தல் ஞானம்
மூன்றும் ஒன்றுபோல் தெரியினும்
மூன்றும் வேறு வேறு முறைகளால்
பெறப்படுவதாக நினைக்கிறேன்
குழம்பித் தெளிவது கற்றல் மூலம்
அனுபவம் காலம் கற்பிக்கும் பாடம்
ஞானம் அருளக் கிடைப்பது
தங்கள் பின்னூட்டம் மூலம் இன்னும்
ஆழமாகச் சிந்தித்து சரியாகச் சொல்லி இருக்கலாம்
என உணர்ந்து கொண்டேன்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருமையான விளக்கம்! பகிர்விற்கு நன்றி ஐயா!
ஞானமடைந்தவர்கள் எவரும்
மயக்கம் கொள்வதில்லை எதற்கும்..
அனுபவ வரிகள் பல விடயங்களை சிந்திக்க வைக்கிறது.
//ஞானமடைந்தவர்கள் எவரும்
மயக்கம் கொள்வதில்லை எதற்கும்//
அருமையாகச் சொன்னீர்கள்.......
குழம்பித் தெளிவது கற்றல் மூலம்
அனுபவம் காலம் கற்பிக்கும் பாடம்
ஞானம் அருளக் கிடைப்பது
அனைத்தும் உண்மை தான் முதிர்ச்சி யடைந்தவர்கள் வழிகாட்டி யாக தான் இருக்க வேண்டும். நீங்களும் அதை தானே செய்கிறீர்கள்.
நாளும் நல்ல விடயங்களை எடுத்து வருகிறீர்கள் வழிகாட்டியாக.
நன்றி ஐயா ...! தொடர வாழ்த்துக்கள் ....!
முடியுமானால் அவர்களின் இருப்பை
பயனுள்ளதாக்கப் பார்க்கிறார்கள்
இன்னும் முடியுமானால்
நல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே
அதிக அக்கறை கொள்கிறார்கள்//
உண்மைதான் நீங்கள் சொல்வது.
அருமையாக சொன்னீர்கள்.
Post a Comment