Saturday, November 2, 2013

போதையும் திருவிழாவும்

முற்றியப்  போதை தெளிந்த பின்
குடிகாரன் பார்வையில் படும்   சூழலாய்
விரிந்து கிடக்கிறது
திரு விழா முடிந்த மறுநாள்

நட்புக்காகத் எனத் துவங்கி
சகமரியாதைக்கு எனத் தொடர்ந்து
போதையின்  பிடியில் நகரும் இரவாய்

சம்பிரதாயம் எனத் துவங்கி
தனக்கானக்   கௌரவம் எனத் தொடர்ந்து
விளம்பரங்களுக்கிடையில்  சிக்கிய  போதையில்
தத்தளித்துக்   கிடந்த நடுத்தரக் குடும்பம்

கட்டுப்பாட்டை  முழுதும் இழக்க 
கடந்து   சென்ற   இரு நாட்கள்
லேசாய்  நினைவுக்கு வர
தலை உலுக்கி
 ஒரு சராசரி நாளை எதிர்கொள்ள
வழக்கம்போல்  தயாராகிறது மீண்டும்

அளவை  மீறியச் செலவு
அலங்கோலமாய்  கிடக்கும் இருக்கைகள்
காலி பாட்டில்கள்அலங்கோலம்போல்

எல்லை மீறியச்  செலவுகளும்
வரும் மாதத் தேவைகளும்
லேசாக  மனத்தைக்  கலக்கிப்போக

அடுத்தமுறையேனும்
தேவையற்றதை தவிர்க்கணும்  
செலவினை  வரவிற்குள் அடக்கணும் எனும்
பிரசவ   சங்கல்பமெடுக்கிறது அது
வழக்கம்போல் எடுக்கும்
பல வருடாந்திரத் தீர்மானங்கள் போலவே

 இனியேனும்
குடிப்பதை   அடியோடு நிறுத்தனும்
குடித்தாலும்  அளவோடு குடிக்கணும் என
நாற்பட்ட குடிகாரன்   எடுக்கும்
அன்றாடத்  தீர்மானம் போலவே
என்றும்   நிறைவேறாது போகும்
அந்த அதிசயத் தீர்மானங்கள் போலவே

43 comments:

ஸ்ரீராம். said...

தீபாவளிக்குச் செய்யும் செலவுகளால் திண்டாடும் நடுத்தரக் குடும்பம் பற்றிச் சொல்ல வருகிறீர்களோ? அல்லது என் புரிதல் தவறோ?

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி வரவுககும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன் றீ

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//சம்பிரதாயம் எனத் துவங்கி
தனக்கானக் கௌரவம் எனத் தொடர்ந்து
விளம்பரங்களுக்கிடையில் சிக்கிய போதையில்
தத்தளித்துக் கிடந்த நடுத்தரக் குடும்பம் //
திருவிழாவை அளவிற்கு மீறி செலவு செய்துக் கொண்டாடிவிட்டுப் பின்னர் ஐயோ கடன் இருக்கிறதே, அந்தச் செலவு இருக்கிறதே என்று தவிக்கும் பலரின் நிலை சொல்லும் அழகுக்கவிதை! பகிர்விற்கு நன்றி ரமணி ஐயா!

த.ம.3

Anonymous said...

அனைத்துமே வாழ்வில் ஒரு போதை தான் ரமணி சார் !
இந்த வலைப்பூக்கள் உட்பட .....

Anonymous said...

அதிசயத் தீர்மானங்கள் போலவே போதையும் திருவிழாவும் ......
உண்மையே!....
இங்கு வெளிநாட்டிற்கு வந்தால் இதுவும் சாதாரண ஓரு நாள் எனும் உணர்வு வரும்!......
வேதா. இலங்காதிலகம்.

சாய்ரோஸ் said...

போதையையும், திருவிழாவையும் ஒப்பிட்டு செலவையும், தொடர்ந்த மனதின் எண்ணங்களையும் மிக அழகாக கவிதை ஆக்கியுள்ளீர்கள்...
ஒவ்வொரு உவமையும் மிக அழகான வார்த்தைக்கோர்ப்புகளுடன் அர்த்தம் பொதிந்தவையாய் கவிதையை ரசிக்க வைத்தது...

திண்டுக்கல் தனபாலன் said...

சால்ஜாப்பு...!@

RajalakshmiParamasivam said...

ஆடம்பரக் கொண்டாட்டங்களும் ஒரு வித போதை தான் என்பதை உதாரணத்தோடு கவிதையாக்கியிருப்பது அருமையாய் இருக்கிறது.

vimalanperali said...

அதிசய தீர்மானங்கள்,,,,,,,,,,???நீங்கள் குடியை சொல்கிறீர்கள்.நான் டீயைச்சொல்கிறேன்.ஒரு சிலருக்கு ஒன்று /

vimalanperali said...

tha,ma 6

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆங்காங்கே நிகழும் அன்றாட அவலங்கள் தான் இவை. இருப்பினும் சொன்னது சுவை.

பாராட்டுக்கள்.

மனோ சாமிநாதன் said...

கெளரவம், சம்பிராதயம் என்ற போர்வைகளில் நடுத்தரக்குடும்பங்களின் அளவுக்கு மீறிய செலவினங்களை, அவர்களின் அதற்குப்பின்னான இன்னல்களை அருமையான கவிதையில் தந்திருக்கிறீர்கள்!!

அப்பாதுரை said...

சாடற்சுவை.

அப்பாதுரை said...

brilliant ஸ்ரவாணி !

kowsy said...

போதையால் போகும்வாழ்வு. போகும் மரியாதை. அனைத்தும் தெரிந்தும் போதை தேவை சிலமனிதர்களுக்கு.தெரிந்தும் வீழ்கின்றார் . இதுவே உலக இன்பமோ

G.M Balasubramaniam said...

பண்டிகைக் கொண்டாட்டச் செலவுகளும் சம்பிரதாயம் கௌரவம், விளம்பரம் எல்லாவற்றின் பாதிப்பால் கட்டுக்கு மீறிப்போவது அழகாக சொல்லப் பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

நகைச்சுவைக்காக சொல்வார்கள்
எப்பவுமே ப்ளான் செய்து வேலை செய்யனும்னு..
இங்கே உங்க கவிதையில் அது
பட்டவர்த்தனமாக விளங்குகிறது ஐயா..
திட்டமிடல்.. அதன்படி நடத்தல்

கவியாழி said...

இரண்டு நாள் மகிழ்ச்சிக்கு இன்னும் சிலநாளேனும் அதற்காய் உழைக்கனும்

Anonymous said...

வணக்கம்
ஐயா
நல்ல விழிப்புணர்வுக்கருத்துள்ள கவிதை அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரிஷபன் said...

அளவோடு செய்யப்படும் எந்த பண்டிகை கொண்டாட்டமும் சரியே.. நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ள அதுவும் ஒரு வழி.. (நான் நியாயமான செலவுகளை மட்டும் சொல்கிறேன் )

கரந்தை ஜெயக்குமார் said...

பண்டிகை என்றாலே
பலருக்கும்
வரவு எட்டணா
செலவு பத்தனணா
கணக்குதான்.
அருமை ஐயா
நன்றி

Avargal Unmaigal said...

போதை இல்லாவிட்டால் வாழ்வில் சுவை இல்லை... உங்கள் பதிவையும் சேர்த்துதான். உங்கள் பதிவை படிப்பதே ஒரு போதைதான் tha.ma 9

இராஜராஜேஸ்வரி said...

போதையும் திருவிழாவும் தரும் செய்திகள் அர்த்தமுள்ளவை..!

Seeni said...

unmaithaanga ayyaaa...

Yarlpavanan said...

"இனியேனும்
குடிப்பதை அடியோடு நிறுத்தனும்
குடித்தாலும் அளவோடு குடிக்கணும் என
நாள்பட்ட குடிகாரன் எடுக்கும்
அன்றாடத் தீர்மானம் போலவே" என்ற அடிகள்
நன்றாகவே நெஞ்சைச் சுட்டுகிறது...
உலகம் உருள்கிறது...
திருவிழாக்களும் வந்து போகிறது...
ஆனால்,
நம்மாளுகள் இன்னும் மாறவில்லையே!

vanathy said...

குடி குடியைக் கெடுக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

இது செலவாளிகளுக்கும் பொருந்தும், ம்ஹும் ஆசை யாரை விட்டது குரு ?

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய தலைப்புச் செய்தி - தீபாவளியின் டாஸ்மாக் விற்பனை அமோகம்.... இலக்கை தாண்டியது விற்பனை! :(((((

என்ன கஷ்டம்டா சாமி....

த.ம. 10

Unknown said...

மக்கள் மகிழ்ந்திருக்கவே பண்டிகைகள்! அதுவும் இல்லை எனில் ...மனது வலிக்குமே!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கொழுப்பில் நல்ல கொழுப்பு ,கெட்ட கொழுப்பு
இருப்பதைப் போல ,நம்மைப் போன்று வலைப் பூ மேய்வர்களுக்கு இருப்பது நல்ல போதை !
மேடம் ஸ்ரவாணி இதை ஒப்புக் கொள்வாரா ? த.ம +1

கே. பி. ஜனா... said...

சரியான அறிவுரை அழகான வார்த்தைகளில்...

அருணா செல்வம் said...

நல்ல போதையான போதனை!
நன்றி இரமணி ஐயா.

மாதேவி said...

இதுதானே ஆட்டிப்படைக்கின்றது. நல்ல அறிவுரை.

”தளிர் சுரேஷ்” said...

ஒப்புமை அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!

இராய செல்லப்பா said...

பெங்களூர் போன்ற நகரங்களில் பார்த்திருக்கிறேன், பெண்களே தங்கள் வீட்டு ஃபிரிஜ்ஜில் மதுப்புட்டிகளை அடுக்கி வைத்திருப்பதை. காரணம், கணவர் வீட்டிலேயே இருந்து குடித்தால் அது கௌரவமாகவும் இருக்கும், எல்லை மீறாமலும் இருக்கும் என்பதாம். இது ஆரம்பம் மட்டுமே. நாளடைவில் அப்பெண்களும் சேர்ந்து குடிப்பதையும், அவர்களின் பிள்ளைகளும் அதில் பழம்தின்று கோட்டை போடுவதையும் பார்த்திருக்கிறேன். என்னே மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தின் சிக்கல்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

காரஞ்சன் சிந்தனைகள் said...

//அடுத்தமுறையேனும்
தேவையற்றதை தவிர்க்கணும்
செலவினை வரவிற்குள் அடக்கணும் எனும்
பிரசவ சங்கல்பமெடுக்கிறது//
அழகாகச் சொன்னீர்கள்! இரசித்தேன்! நன்றி ஐயா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தங்களின் வித்தியாசமான கவிதை சொல்லும் உத்தி ஆச்சர்யப் பட வைக்கிறது.

இளமதி said...

தீர்மானங்கள் பற்றி நல்ல தீர்க்கதரிசனமான கவிதை ஐயா!...

மிகவே ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

முனைவர் இரா.குணசீலன் said...

குடிகாரன் எடுக்கும் முடிவுபோலத்தான் இருக்கிறது நம் அரசின் நிலைப்பாடும்.

இந்த குடிகாரர்கள் தள்ளாடாமல்போனால் நம் அரசு தள்ளாடிப்போகும் என்பதை ஒப்புக்கொள்வதாகவே அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

அ.பாண்டியன் said...

உண்மை அய்யா.விழாக்கள் என்ற பெயரில் அதிக ஆடம்பரம், குடி என நடுத்தர குடும்பங்கள் கூட சிக்கிக் கொள்வது வேதனை தான். தீர்மானங்கள் அன்றைக்கே நடைமுறைக்கு வரும் நாள் நோக்கி நாமும் நடைபோடுவோம். தாமதமான வருகை. தளத்தில் இணைந்து விட்டேன் இனி தவறாமல் வருவேன். நன்றீங்க அய்யா..

இராஜராஜேஸ்வரி said...

சரக்கு விற்பனை அதிகரித்து
தங்க விற்பனை குறைந்தது ...!

இங்கே போக வேண்டியது அங்கே போனது காரணமா...

Iniya said...

விரலுக்கு ஏற்ற வீக்கம் தான் தேவை. வரவுக்கு ஏற்ற செலவு செய்யாமல், வீண் ஆடம்பரமும், பகட்டும் என்று வாழ்ந்தால் துன்பம் சூழ்ந்து கொள்ளும் என்பதை அழகாக கூறியிருகிரீர்கள்.

பகிர்வுக்கு நன்றி....! வாழ்த்துக்கள்....!

Post a Comment