Friday, December 13, 2013

வரம்வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

29 comments:

ஸ்ரீராம். said...

குறைவில்லாமல் தொடரட்டும்.

ஸாதிகா said...

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை
//aahaa...

அருணா செல்வம் said...

நீங்கள் செய்த தவத்தால் பல வரங்களைப்
பெற்று இருக்கிறீர்கள் இரமணி ஐயா.

வெங்கட் நாகராஜ் said...

குறையே இல்லாது கவிதைகள் தொடரட்டும்....

கலைவாணியின் அருள் தொடரட்டும்.....

த.ம. 5

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை//

கலைவாணியின் அருளும் தங்களின் முயற்சிகளும் தினமும் தொடரட்டும். படைப்புகள் நிறைவாக தினமும் மலரட்டும். வாழ்த்துகள்.

vimalanperali said...

குறைவில்லா படைப்புகள் கைவரபெற்ற பாகியசாலியாய்/வாழ்த்துக்கள்/

Seeni said...

nalla aazhamaana varikal..

மனோ சாமிநாதன் said...

கலைவாணியின் அருள் இருக்கையிலே நிச்சயம் எண்ண‌த்திலும் எழுத்திலும் கற்பனையிலும் குறைவேதும் இருக்காது என்பதில் ஐயமில்லை!

கவிதையை மிகவும் ரசித்தேன்!!

RajalakshmiParamasivam said...

உங்களுக்குக் கலைவாணியின் அருள் நிறையவே இருக்கிறது ரமணி சார். அது மென்மேலும் உங்களுக்குப் பெருகும் என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள்......

Anonymous said...

கொடுத்து வைத்தவர்.
பயணம் தொடர இனிய வாழ்த்து
வேதா. இலங்காதிலகம்.

Avargal Unmaigal said...

கலைவாணியின் அருளும் தங்களின் முயற்சிகளும் தினமும் தொடரட்டும் tha.ma 6

கரந்தை ஜெயக்குமார் said...

//வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்//
யாருக்குக் கிடைக்கும்
இதுபோன்ற
ஓர் மனம்
உண்மையிலேயே
கொடுத்துவைத்தவர்தான்
நன்றி ஐயா
த.ம.7

கவியாழி said...

பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை////நீங்கள் விஷயஞானம் உள்ளவர் எதையும் அழகாக தெளிவாகச் சொல்லுவதில் கெட்டிக்காரர் என்பதில் ஐயமில்லை

அ.பாண்டியன் said...

ஐயாவிற்கு வணக்கம்
க்லைவாணியின் அருள் இருக்க சகல கலைகளில் தங்களோடு குடியிருக்கும். தங்களின் இலக்கியங்கள் உலகிற்கு மிகச் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பது கொண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா. பகிர்வுக்கு நன்றி..

ADHI VENKAT said...

கலைவாணியின் அருள் என்றும் உங்களிடம் உண்டு.. தொடரட்டும்..
த.ம.9

Iniya said...

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

நாவுக்கரசியவள் நாவிலே குடியிருக்க
நற்றவம் ஏன் நவின்றிடும் நாளும்.

நன்றி வாழ்த்துக்கள்...!

தி.தமிழ் இளங்கோ said...

அருள் புரிவாள் கலைவாணி எப்போதும் உங்களுக்கே!

Anonymous said...

வணக்கம்
ஐயா

கவிச்சக்கர வர்த்தியே.
கவிதையின் வரிகள் வைரவரிகள் உர்ணவு மிக்க வரிகள்.. மிக அருமையாக உள்ளது. உங்களுக்கு கலைவாணி எப்போதும் துணை.. வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

த.ம. 11வது வாக்கு.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கீதமஞ்சரி said...

\\போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை\\

சிறப்பான சிந்தனை. எல்லோருக்கும் இந்தப் பக்குவம் வந்துவிட்டால் வாழ்க்கை சிறக்கும். கவிநயமும் வாழ்க்கைச் சூத்திரமும் ஒருங்கே இணைந்து மனந்தொட்ட கவிதை. பாராட்டுகள் ரமணி சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

கலைவாணி அருள் என்றும் உண்டு ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

நிறைவான பகிர்வுகள்..!

உஷா அன்பரசு said...

வரம் வேண்டா தவம் செய்வதால் நிச்சயம் கலைவாணி அருள் குறைவில்லாமல் கிடைக்கும்..!
த.ம-13

Unknown said...

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

பக்குவப்பட்ட மனம் என்பதை வரிகளும்
அதில் வரும் வார்த்தைகளும் அறிவிக்கின்றன!

இளமதி said...

ஆற்றல் மிகவே அருமைக் கவிஞரே!
போற்றிடப் பாரும் புகழ்!

எமக்கும் வாணியின் வரம் வாய்த்தமையால்தான்
வலையுலகில் உங்களை நாம் கண்டது.
உங்கள் உள்ளத்து உணர்வோடு உவந்தளித்த கவிதை மிக அருமை ஐயா!

வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

/வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை/ தொடர வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வரம் வேண்டா தவம் தொடரட்டும் ஐயா.
//என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை//
எவ்வளவு பெரிய விஷயத்தை எளிமையாக சொல்லி விட்டீர்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 16

கே. பி. ஜனா... said...

சார், எந்த வரியைக் குறிப்பிட்டு பாராட்டுவதென்று தெரியவில்லை. ஆஹா! ஒவ்வொரு கருத்தும் அதி அற்புதம்! ...

Post a Comment