காட்டுக்குள்
வேட்டையாடச் செல்பவர்கள்உல்லாசச் சுற்றுலா செல்பவர்கள்
முதலில் காடு குறித்த அறிவும்
மிருகங்களின் தடமறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
காட்டுக்கென பிரத்யேக உடைகளும்
கூடுமானவரையில் இரவுப் பயணம் தவிர்த்தலும்
மிக மிக அவசியம்
ஏனெனில்
மிருகங்கள் பசி ஒன்றையே
பிரதானமாகக் கொண்டவை
கலை கலாசாரம் பண்பாடு என்கிற
பாசாங்கெல்லாம் அவைகளுக்கில்லை
அதைப் போலவே
நாட்டுக்குள்ளும்
பணி நிமித்தம் செல்லும் பெண்களாயினும்
பள்ளி செல்லும் பிள்ளைகளாயினும்
ஏன் பச்சிளம் பெண் குழந்தைகளாயினும்
முதலில் காடாகிப்போன நாடு குறித்த அறிவும்
இரண்டு கால் மிருகங்களின் வெறியறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
ஒட்டுமொத்தமாய் மூடிய உடலுடனும்
கூடுமானவரையில் பகலில் பயணித்தலுமே
மிக மிக நல்லது
எனெனில்
பசியெடுத்தபுலியும் வெறி பிடித்தசிங்கமும்
பயமின்றி உல்லாசமாய் உலவித் திரிய
பாவப்பட்டஅணிகளும் பரிதாபக்குருவிகளும்
பதுங்கித் திரிகிற "புண்ணிய பூமியில் "
பெண்களுக்கான சுதந்திரமும் உரிமையும்
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?
இரவும் இருளும் தனிமையும்
ஆண்களின் ஆளுகைக்குட்டதாக்கிப் போன
தரங்கெட்ட பூமியில் பெண்களின் நிலை
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?
25 comments:
மிகவும் வரவேற்கத் தக்க கருத்து ஐயா ! காட்டில் உள்ள மிருகங்களைக்
கூட எளிதில் இனங்கண்டு தப்பி விடலாம் ஆனால் நாட்டிற்குள் உலாவும் இரண்டு கால்விலங்குகளிடம் இருந்து தப்பிக் கொள்வது தான் கடினம் .சிறப்பான நற் பகிர்வுக்கு பாராட்டுக்களும் தொடர வாழ்த்துக்களும் ஐயா .
சாத்தியமேயில்லை ஐயா... இன்றைக்கு மேலும் மேலும் ஒழுக்கம் தரங்கெட்டுக் கொண்டே வருகிறது உண்மை...
காட்டில் வாழும் மிருகங்கள் கூட பரவாயில்லை போலிருக்கு, ஏதேனும் ஒரு வழியில் விவேகமுடன் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த இரண்டு கால் மிருகங்களிடமிருந்து தப்பிப்பது தான் கொடுமையாக உள்ளது....:(((
த.ம +1
காட்டில் உள்ள விலங்குகளை பார்த்தால், எந்த மிருகத்தால் ஆபத்து வரும், எந்த மிருகத்தால் ஆபத்து வராது என்று எளிதில் அறிந்துவிடலாம், ஆனால் நாட்டில் உள்ள மிருகங்களின் எவை ஆபத்தானது, எவை ஆபத்து அற்றது என கண்டுபிடிப்பது கடினம்.
பெண்கள்தான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
த.ம.5
வணக்கம்
ஐயா.
சரியான கருத்தை சரியான சந்தர்ப்பத்தில் வைத்துள்ளீர்கள்..வரவேற்கிறேன் ஐயா..5அறிவு படைத்த விலங்குகளில் இருந்து தப்பித்தாலும் 6அறிவு படைத்த விலங்குகளில் இருந்து தப்பிக் முடியாது எல்லாவற்றுக்கும் காலந்தான் பதில் சொல்லவேண்டும்.
வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
த.ம6வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பெண்கள் படிக்க வேண்டிய கவிதை
அருமை சார்
பெண்கள் படித்து பாடமாகக் கொள்ளவேண்டிய பகிர்வு.
இரவும் இருளும் தனிமையும்
ஆண்களின் ஆளுகைக்குட்டதாக்கிப் போன
தரங்கெட்ட பூமியில் பெண்களின் நிலை
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?
ஆம் .ஆனால் மிருகங்கள் இஷ்டப்பட்ட போதெல்லாம் இச்சை தணித்து கொள்கின்றனவா என்ன ?
பெண்களும்,,குழந்தைகளும் தான் எப்ரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.
"பசியெடுத்தபுலியும் வெறி பிடித்தசிங்கமும்
பயமின்றி உல்லாசமாய் உலவித் திரிய
பாவப்பட்டஅணிகளும் பரிதாபக்குருவிகளும்
பதுங்கித் திரிகிற "புண்ணிய பூமியில் "
பெண்களுக்கான சுதந்திரமும் உரிமையும்
வேறெப்படி இருக்கச் சாத்தியம்?" என்ற
தங்கள் ஆய்வுக் கண்ணோட்டத்தை வரவேற்கிறேன்.
சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமோ என்னவோ... மனித இனத்தில் ஆண் இனம் மிருகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். அதனால் பெண்கள் பெண்களாக இல்லாமல் அவ்ர்களும் மிருகங்களாக மாறி திருப்பி தாக்கி அழிக்க கற்று கொள்ளதான் வேண்டும்.
நாட்டு நடப்பை கவிதை மூலம் நன்கு உணர்த்தி சொல்லும் பகிர்வு,பாராட்டுக்கள்
அப்போ.... பெண்கள் மட்டும் தான் மனிதர்கள்.
ஆண்கள் அனைவரும் மிருகங்கள் ஆகிவிட்டார்களா...? ம்ம்ம்...
மதுரைத்தமிழன் ஏன் இப்படி தலைக்கீழாக யோசித்தார் என்பது புரிகிறது.
பெண்களைப் பலவீனர்களாகப் படைத்து விட்ட இயற்கையின் அநீதி!
அவற்றிடமிருந்தாவது தப்பித்துக்கொள்ள முடியும் போலும்..அவை பெரும்பாலும் கூட்டு சேர்வதில்லை
மனித நேயமற்ற மிருகங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கனும்.......
//பாதுகாப்புப் பயிற்சியும்
ஒட்டுமொத்தமாய் மூடிய உடலுடனும்
கூடுமானவரையில் பகலில் பயணித்தலுமே
மிக மிக நல்லது// உங்கள் கருத்தை மதிக்கும் அதே வேளையில் இது பலன் தரும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை ஐயா..இரண்டு வயது குழந்தைகளும், 90 வயது மூதாட்டியும் பாதிக்கப்பட்டிருக்கின்றனரே..
பகலும் இரவும் வேட்டையாடத் துடிக்கும் மிருகங்களுக்கு வேறில்லை..உஷா சொல்வது போல கடுமையான தண்டனை ஒன்றே இந்நிலையை மாற்றும்...
இதை முன்பே படித்திருப்பதாக நினைவு. சரியா ரமணி சார்.? என் நினைவைச் சோதிக்கவே இது. மீதிக்கதை எதிர்நோக்கி.
அதைப் போலவே
நாட்டுக்குள்ளும்
பணி நிமித்தம் செல்லும் பெண்களாயினும்
பள்ளி செல்லும் பிள்ளைகளாயினும்
ஏன் பச்சிளம் பெண் குழந்தைகளாயினும்
முதலில் காடாகிப்போன நாடு குறித்த அறிவும்
இரண்டு கால் மிருகங்களின் வெறியறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
ஒட்டுமொத்தமாய் மூடிய உடலுடனும்
கூடுமானவரையில் பகலில் பயணித்தலுமே
மிக மிக நல்லது
காட்டு விலங்குகல் மேல்தான்.....மனிதர் தான் அதுவும் ஆண்கள்தான் மிருகங்களாக் மாறி வருகின்றனர் என்பதை அழகாகச் சுருக்கமாகவும் சொல்ல முடியும் என்பதை உணர்த்தி உள்ளீர்கள்!
அதுவும் அந்தக் கடைசி வரிகள் நெற்றிப் பொட்டில் பொளேர் என்று அறைகின்றன!
நல்லதொரு பகிர்வு!
த.ம.
சமயத்திற்கேற்ற சிறந்த விழிப்புணர்வு கருத்து கொண்ட பதிவு! கவனத்தில் கொள்வார்களா என்பதே என் ஐயம்! நன்றிஐயா!
நாட்டில் உலவும் மிருகங்கள்.....
சரியாகச் சொன்னீர்கள்....
த.ம. +1
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்.
Post a Comment