Sunday, June 8, 2014

நகைச்சுவை-சிறு அலசல் ( 3 )

நகைச்சுவை துணுக்குகளில்
சட்டென சிறிதும் யோசிக்காமல் சிரிக்கவைப்பவைகளும்
இருக்கின்றன். கொஞ்சம் யோசித்துப் பின்
அதிகமாகச் சிரிக்கச் செய்பவைகளும் இருக்கின்றன

கலைவாணரிடம் ஒருவர்
தனக்கு தலை சுற்றுவதாகச் சொல்வார்
அதற்குக் கலைவாணர்
"அப்போ உன் முதுகு தெரியுமே " என்பார்

மிகச் சரியான வார்த்தை படம் முதலியவை
மறந்து போனாலும் கூட தலைச் சுற்றுதல்
குறித்தான எந்த பேச்சு வரும்போதும் இந்த
நகைச்சுவை நினைவு வந்து போவதைத்
தவிர்க்க இயலவில்லை

ஒரு சமயம்  என நண்பன் ஒரு நகைச்சுவை
துணுக்கைச் சொன்னான்.முதலில் புரியவில்லை
சிறிது இடைவெளிவிட்டு அவன்
புதிருக்கான விடையைச் சொன்னதும்
அந்த ஜோக்கை இது வரை மறக்க முடியவில்லை

ஒருவர் தன் நண்பனிடன் ஒரு விடுகதை போடுகிறார்

"மதுரையிலிருந்து சென்னைக்கு 450 கிலோ மீட்டர்

எனக்கு அல்வா என்றால் ரொம்பப் பிடிக்கும்

என் வயதென்ன ? "

சற்று யோசித்த நண்பர்  "முப்பத்தாறு "என்கிறார்

அதிர்ச்சியான நண்பன் மிகச் சரி
எப்படி மிகச் சரியாகக் கண்டுபிடித்தாய் " என்கிறான்

இவன் சொல்கிறான் " இதில் கஷ்டமே இல்லை
எங்கள் வீட்டுப் பக்கத்தில் ஒ ரு அரை லூசு இருக்கிறான்
அவனுக்கு வயது சரியாகப் பதினெட்டு "என்கிறான்

இதுபோல் நீங்கள் ரசித்த நகைச்சுவைத் துணுக்குகள்
ஏதும் இருப்பின் பகிர்ந்து மகிழ்விக்கலாமே 

22 comments:

Avargal Unmaigal said...

நேற்று யாரோ என் வீட்டு கதவை தட்டினாங்க
யார் என்று கேட்டேன்?
போலிஸ்காரங்க என்று சொன்னார்கள்?
என்ன வேண்டும் என்று கேட்டேன்?
உன் கூட பேச வேண்டுமென்று சொன்னார்கள்?
எத்தனை பேர் என்று கேட்டேன்
2 பேர் என்று சொன்னார்கள்
அப்ப நீங்க 2 பேர் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பின் பக்க கதவை திறந்து ஒடிவிட்டேன்

Avargal Unmaigal said...

பல்லு நாக்குகிட்ட நான் கொஞ்சம் அதிகமா அழுத்திட்டேனா உன் நாக்கு துண்டா போயிடும் தெரியுமா என்று சொல்லுச்சாம் அதற்கு நாக்கு சொன்னதாம் நான் ஒரே ஒரு வார்த்தை தப்பா பேசிட்டா 32 பல்லும் உடைஞ்சு கிழே விழுந்துடும் என்று சொல்லுச்சாம்

bandhu said...

உலகத்துல மூணு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு வகை ஒன்று இரண்டு எண்ணத் தெரிந்தவர்கள்.. இன்னொரு வகை எண்ணத் தெரியாதவர்கள். :-)

Yarlpavanan said...

சிறந்த நகைச்சுவைப் பதிவு

visit http://ypvn.0hna.com/

ஸ்ரீராம். said...

ஹா...ஹா.. தேன்மழை நாகேஷ் -சோ நகைச்சுவை நினைத்து நினைத்து ரசிக்கத்தக்கது.

kingraj said...

லூசு நகைச்சுவை மிக அருமை ஐயா.....தொடர்ந்து சிரிப்புமழை பொழியுங்கள்.

Avargal Unmaigal &.bandhu.அவர்களின்.பதிலுரை நகைச்சுவைகளும் சிரிப்பு....

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

சிரிப்புமழை பற்றிய தொடர்பதிவை மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்
மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸாதிகா said...

ரசித்தேன்..!

கரந்தை ஜெயக்குமார் said...

கலைவாணர் கலைவாணர்தான்
தம 1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கலைவாணர் சிரிப்பு பற்றி முன்னர் கேட்டிருக்கிறேன். இருப்பினும் தங்களது எழுத்துக்களில் படிக்கும்போது மேலும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

Unknown said...

நகச்சுவை! இரசித்தேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா...ஹா.. ஹா...ஹா..

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு:).

Pandiaraj Jebarathinam said...

தொடர்ந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைங்க..

ஹா.ஹா.ஹா.ஹா.....

ப.கந்தசாமி said...

எனக்கு வயசு 72. நான் எந்த வகை லூசு?

துளசி கோபால் said...

:-)))))))))))))))))))))))))))))))))

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல நகைச்சுவை ரசித்து சிரித்தேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

T.M 6

சிகரம் பாரதி said...

அருமை. த.ம7. நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com

மகிழ்நிறை said...

அரைலூசு ஜோக் சூப்பர், கட்டுரையும் தான்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா...ஹா.. ஹா...ஹா.. ஹா...ஹா..

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் பதிவில் சொன்ன நகைச்சுவையும், பின்னூட்டங்களின் சுவையும் மிக அருமை. ரசித்தேன்.

Post a Comment