Wednesday, January 25, 2017

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

நிராயுதபாணியான
மிக மோசமான எதிரியையும்
இன்று போய் நாளை வா எனச் சொல்லிய
அவதாரப் புருஷர்களும்...

பகைவனுக்கருள்வாய் என
ஆண்டவனை வேண்டும்
பரந்து விரிந்த மனம் படைத்த கவிஞர்களும்...

வாடிய பயிரைக் கண்டு  வாடிய
கருணை மிக்க
அருளாளர்களும்

யாது ஊரே யாவரும் கேளிர்
எனும்  சொற்றோடர்  மூலம்
நம்மினத்தின்
விரிந்த மனப்பாங்கை
வெளிச்சமிட்டுக் காட்டியவர்களும் 

நமது நாட்டில்தான் சாத்தியம் எனும்
அளவு கடந்த
பெருமிதத்தோடு...

இந்த நாட்டில் குடிமகனாய் இருத்தலே
பெரும் பாக்கியம்  எனும்
அதீதச் செருக்கோடு

அனைவருக்கும் இனிய குடியரசு தின
நல்வாழ்த்துக்கள்

(இன்னும் நமக்கேயான பெருமிதங்களைப்
பின்னூட்டத்தில் தொடரலாமே )

8 comments:

KILLERGEE Devakottai said...

கவிஞர் முன்மொழிந்ததை வழிமொழிகிறேன்
த.ம.1

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த வருடம் மனம் முழுக்க சந்தோசம்...

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் வாழ்த்துகள் ஜி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனித மனங்களை நல்வழிப்படுத்த வேண்டி தொன்மையான வேதங்கள், சாஸ்திரங்கள், வான சாஸ்திரங்கள், இதிகாச புராணங்கள் என்பவை யாவும் உலகுக்குக் கிடைத்ததும், மிகச்சிறப்பானக் குருகுலக் கல்வி முறைகள் கடைபிடிக்கப்பட்டதும், அவ்வப்போது நல்வழி காட்ட அநேக மஹான்கள் தோன்றியதும், நம் புண்ணிய பூமியான பாரதத்தில் மட்டுமே என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின
நல்வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

எனது இனிய குடியரசுதின வாழ்த்துகள். கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

வரிகள் சரியே!!! தங்களுக்கும் எங்கள் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

நமக்கேயான பெருமிதங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்றாகிறதோ

Yarlpavanan said...

இனிய இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துகள்.

Post a Comment