Saturday, February 26, 2011

பிரசவ சங்கல்பம்

தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை...

கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது
ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களைக்  கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்
கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்

'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகிக்  கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்

இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்

அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்குப்  பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை

'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன...

கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

24 comments:

  1. முத்தைக் கொண்டு
    கடற் பரப்பைக் கூட
    அளந்து அறியக் கூடும்
    படைப்பைக் கொண்டு
    படைப்பாளியை அறியக் கூடுமோ?
    உண்மையிலும் உணமையே.

    ReplyDelete
  2. //நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
    கவிதையாக்கி அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
    சொல்லி போன சம்பந்தி
    கவிஞனின் வீட்டுப் பக்கம்
    இன்று வரை வரவே இல்லை//

    அடடடா இதெல்லாம் வேற நடக்குதா....

    ReplyDelete
  3. //கவிஞனைத் தேடினால்
    கவிதைகள் நீர்த்துப் போகும்
    கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
    'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்//

    அசத்தல் அசத்தல்....

    ReplyDelete
  4. //ஆனாலும் என்ன
    கவிஞனை பாதிக்கும்
    நிகழ்வுகளும் உணர்வுகளும்
    தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
    கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன//

    உண்மை உண்மை உண்மை...
    டச்சிங் டச்சிங்....

    ReplyDelete
  5. படைப்பாளிகள் பலர் படும் அவஸ்தையை பக்குவமாய்ச் சொல்லிவிட்டீர்கள். எல்லார் வீட்டிலும் இது போலத் தான் போலிருக்கு என்பதில் ஒரு சின்ன ஆறுதல். அருமையான படைப்பும் பதிவும். பாராட்டுக்கள்.

    மிகவும் ரஸித்த வரிகள்:

    //
    இளைஞர்களை கொள்ளை கொண்ட
    'இழந்த காதலை'
    இயற்றிய அவனே
    மறந்து போன நிலையில்
    கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
    யார் அந்த அழகு சுந்தரி
    இப்பொது கூட விலகி கொள்கிறேன்
    இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
    கண் கசக்கிப் போனாள்
    இந்தப் பிரச்சனை ஒயவே
    ஆறு மாதங்கள் ஆகிப்போனது //

    ReplyDelete
  6. இந்தக் குழப்பம் எழுதுபவர்களுக்கு நடுவிலேயே இருப்பது இன்னும் வேடிக்கை.

    நல்ல பகிர்வு ரமணி சார்.

    ReplyDelete
  7. அண்ணா...மீள்பதிவா...?? படைப்பாளிகளின் பிரச்சனைகளை அழகா வடிச்சிருக்கிங்க...

    ReplyDelete
  8. //கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
    கவிதைகள் நீர்த்துப் போகும்
    கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
    'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்//

    exactly!!

    truthful lines

    ReplyDelete
  9. வணக்கம் ரமணி சார், யாரை கலாய்கிறீங்கன்னு தெரியல.. எல்லாம் நிஜங்கள்.. நன்றி.

    ReplyDelete
  10. கவிஞன் தன் வாழ்வின் உண்மைகளில் வெளிக்கொணரும் பொழுது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது

    ReplyDelete
  11. அழகான, அர்த்தம் நிறைந்த வரிகள். வித்யாசமா கவிதை எழுதும் உங்கள் திறன் கண்டு வியந்தேன்.

    ReplyDelete
  12. படைப்பாளிகளுக்கு நிகழ்வுகளும், உணர்வுகளுமே முக்கியம் தன் சொந்த காழ்ப்புக்களும், கசப்புக்களும் அல்ல.தன் வீட்டில் நடந்தாலும், பக்கத்துவீட்டில் நடந்தாலும்,பகக்த்து நாட்டில் நடந்தாலும் உணர்ந்ததை, உருகியதை, உணர்ச்சிவசப்பட்டதை வார்த்தையாய் வடித்து விடத்துடிப்பான். இதில் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்து விலகிவிடும். நல்ல பதிவு.

    ReplyDelete
  13. எழுதுபவனின் உணர்வுகள் எழுத்தில் பிரதிபலித்தே தீரும். உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ளபங்கு விகிதாச்சாரம் வேண்டுமானால் மாறலாம். எழுதுவது எல்லாமே உண்மையாய் இருக்க வேண்டியதில்லை. உண்மைகள் எல்லாம் எழுத்தில் வரவேண்டியும் இல்லை. மனசில் பட்டதை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள்

    ReplyDelete
  14. கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
    'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்//
    தங்கவரிகளாகத் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  15. ஒரு கவிஞனின் வலியை இதைவிட அழகாகச் சொல்ல இயலாது. வாழ்த்தி வணங்குகிறேன்.

    ReplyDelete
  16. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பிரசவம்....அழகான குழந்தை !

    ReplyDelete
  17. ///கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
    கவிதைகள் நீர்த்துப் போகும்//

    யாரோ ஒருவராக நாமும் வாழ்ந்து பார்க்கும் வசதி கவிதைகளில் தானே கிடைக்கிறது.

    ReplyDelete
  18. உங்களுக்கு விருது கொடுத்திருக்கோம்..
    நேரமிருப்பின் இந்த பதிவை பார்க்க வாங்க...
    http://bharathbharathi.blogspot.com/2011/02/blog-post_28.html.

    ReplyDelete
  19. கருத்துக்களை கருவாக்கி
    கற்பனை போலுருக் கொடுத்து
    கவிஞ்னன் மனதை-கவியிலே
    களமிறக்கியிருக்கும் விதம்
    அழகு அழகு....

    ReplyDelete
  20. உண்மை வரிகள் அருமை

    ReplyDelete
  21. கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
    கவிதைகள் நீர்த்துப் போகும்
    கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
    'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்


    .....ஆழமான வரிகள்... சொல்ல வேண்டிய கருத்துக்களை, சரளமாக கவிதையின் மூலம் சொல்ல தனி திறமை வேண்டும். அது உங்களுக்கு வரமாய் அமைந்து உள்ளது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. அருமையான கவிதை

    படைப்புகள் எல்லாவற்றையும் படைப்பாளியுடன் சம்பந்தப்படுத்தும் தர்மசங்கடத்தை அழகா சொல்லிட்டீங்க..

    ReplyDelete