Wednesday, June 8, 2011

புதிய விதிகள்

பள்ளம் உண்டு மேடும் உண்டு சாலையிலே
பார்த்து மெல்லப்  போகும் நல்ல காளைகளே
இன்பம் உண்டு துன்பம் உண்டு வாழ்வினிலே
ஒன்றாய் உணரும் உள்ளம் வேண்டும் உயர்ந்திடவே

வளர்ச்சி கொண்டு தேய்வு கொள்ளா நிலவுமில்லை
வாடை கொண்டு கோடை இல்லா வருடமில்லை
மலர்ச்சி கொண்டு வாடல் இல்லா மலருமில்லை
மனதில் இதனை ஏற்றுக்கொண்டால் துயரமில்லை

தடையை நொறுக்கித் தாண்டிச் செல்லும் நதியைப்போலே
தரையைப் பிளந்து தழைத்து நிமிரும் செடியைப்போலே
இரவை முடிக்க கிழக்கே தோன்றும் கதிரைப்போலே
தடைகள் நொறுக்கி துணிவாய் எழுவோம் மேலே மேலே

மேலே மேலே இன்னும் மேலேதொடர்ந்து செல்வோம்
வானம் கூட எல்லை இல்லை மீறிச் செல்வோம்
வீழ எழுவோம் தாழ உயர்வோம் சோம்பித் திரியோம்
நாமும் வாழ்ந்து உலகும் வாழ விதிகள் செய்வோம்

(கடந்த ஆண்டு ஒரு பள்ளி ஆண்டுவிழாவுக்காக
சிறுவர்களுக்காக  நான எழுதிக் கொடுத்த பாடல்)

24 comments:

  1. எல்லோருக்கும் அற்புதமா கவிதை எழுதுறீங்க சார்! நல்ல கருத்தாழமிக்க கவிதை. ;-))

    ReplyDelete
  2. மிகவும் அருமையான தன்னம்பிக்கை
    ஊட்டிடும் பாடல்.

    நான் மிகவும் ரசித்த வரிகள்:

    //தடையை நொறுக்கித் தாண்டிச் செல்லும் நதியைப்போலே
    தரையைப் பிளந்து தழைத்து நிமிரும் செடியைப்போலே//

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    தொடருங்கள்
    அன்புடன் vgk

    ReplyDelete
  3. குட்டி பிள்ளைகள் மட்டுமல்ல.. அனைவரும் விரும்பும் எளிமையான நம்பிக்கையூட்டும் பாடல்! :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  4. வளர்ச்சி கொண்டு தேய்வு கொள்ளா நிலவுமில்லை
    வாடை கொண்டு கோடை இல்லா வருடமில்லை
    மலர்ச்சி கொண்டு வாடல் இல்லா மலருமில்லை
    மனதில் இதனை ஏற்றுக்கொண்டால் துயரமில்லை

    உன்னதமான கருத்துக்களை பிள்ளை தமிழில் எளிய நடையில் தந்துள்ள விதம் அருமை , இது இன்றைய கால இளைஞர்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது இன்னும் சிறப்பு

    ReplyDelete
  5. ///வளர்ச்சி கொண்டு தேய்வு கொள்ளா நிலவுமில்லை
    வாடை கொண்டு கோடை இல்லா வருடமில்லை
    மலர்ச்சி கொண்டு வாடல் இல்லா மலருமில்லை
    மனதில் இதனை ஏற்றுக்கொண்டால் துயரமில்லை///இந்த வரிகளுக்கு ஒரு சல்யூட் ஐயா ...

    ReplyDelete
  6. தன்னம்பிக்கை ஊட்டும் சிறந்த கவிதை

    ReplyDelete
  7. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நம்பிக்கை தரும் தரமான வரிகள் உங்கள் கவிதை முழுக்க தெரிகிறது

    எனது ப்லோக்கேரிலும் இப்படி ஒரு கவிதை பிரசுரித்துள்ளேன்

    http://kavikilavan.blogspot.com/2011/04/blog-post.html

    ReplyDelete
  9. இளஞ்சிறார்களுக்கு, உற்சாகமூட்டும், தன்னம்பிக்கை தரும் அழகு தமிழில் நல்ல வரிகள்,எல்லோருக்கும் தேவையானதுதான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. பள்ளி மாணாக்கர்களுக்கு மட்டமல்ல, எல்லோருக்கும் நம்பிக்கை ஊட்டும் பாடல். நல்ல பாடலை எங்களுக்கும் பகிர்ந்து நம்பிக்கைக் கீற்றினை காட்டிய உங்களுக்கு நன்றி. தொடருங்கள்....

    ReplyDelete
  11. அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வளர்ச்சி கொண்டு தேய்வு கொள்ளா நிலவுமில்லை
    வாடை கொண்டு கோடை இல்லா வருடமில்லை
    மலர்ச்சி கொண்டு வாடல் இல்லா மலருமில்லை
    மனதில் இதனை ஏற்றுக்கொண்டால் துயரமில்லை

    படிக்கும் போதே நிலவாய், மலராய் மனம் மலர்கிறது.

    ReplyDelete
  13. வானம் கூட எல்லை இல்லை மீறிச் செல்வோம்
    வீழ எழுவோம் தாழ உயர்வோம் சோம்பித் திரியோம்
    நாமும் வாழ்ந்து உலகும் வாழ விதிகள் செய்வோம்

    தன்னம்பிக்கைத் தத்துவம் உரைத்த வரிகளுக்குப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை ஐயா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நல்ல கவிதை. வெண்பா இலக்கணம் நிறையவே பொருந்தி வருகிறது - தேமா, புளிமா.... போன்றவை. பள்ளிப்பாடலாக தகுதியுள்ள பாட்டு.

    ReplyDelete
  15. அருமையான வரிகள் வழக்கம் போல.நீங்கள் ஆசிரியரா

    ReplyDelete
  16. உணர்வூட்டும் வரிகள் அருமை sir. . .

    ReplyDelete
  17. மேலே மேலே இன்னும் மேலேதொடர்ந்து செல்வோம்
    வானம் கூட எல்லை இல்லை மீறிச் செல்வோம்
    வீழ எழுவோம் தாழ உயர்வோம் சோம்பித் திரியோம்
    நாமும் வாழ்ந்து உலகும் வாழ விதிகள் செய்வோம்//

    தடைக் கற்கள் ஒவ்வொன்றும் தான் வாழ்வின் வெற்றிக்கான படிக் கற்கள் என்பதனை உங்களின் கவிதை அற்புதமாகச் சொல்லுகிறது சகோ.

    நம்பிக்கையோடு, தோல்வியை ஆற்றுப்படுத்தி முன்னேற வேண்டும் எனும் உணர்வினையும் உங்களின் கவிதை தருகிறது.

    ReplyDelete
  18. அருமையாக உள்ளது. குழந்தைகள் இலக்கியம் குறித்து நாம் கவனத்தில் கெர்ள்வதில்லை என்கிற கவலை எனக்குண்டு. உங்கள் பாடல் அந்த நம்பிக்கையை எனக்குள் விதைக்கிறது. நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  19. சிறுவர்களுக்கான பாடல் என்று சொன்ன வரிகளில் எங்களுக்கான அன்பு அறிவுரைகளும் இருப்பதை அழகாய் உணர முடிகிறது ரமணி சார்.

    துவண்டு சோர்ந்துவிடாதே....
    அடுத்த அடி இன்னும் உறுதியோடு எடுத்து வை....
    வெற்றி நிச்சயம் என்று தன்னம்பிக்கையுடன் உரைத்த வரிகள் சார்...

    அன்பு வாழ்த்துக்கள் அருமையான கவிதைக்கு....

    ReplyDelete
  20. மிக அருமையான பாடல் ரமணி உடனே பாட வேண்டும் போலுள்ளது

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  21. சிறுவர்களுக்கு புரியும் வகையில் எளிய மொழியில் --- வீரியமான அழகுக் கவிதை.

    ReplyDelete
  22. ஒவ்வொரு வரியும் உன்னதமே-அதை
    உணர்ந்தது ஐயா என் மனமே
    செவ்விய கவிதைத் தருகின்றீர்-பலர்
    செப்பிட புகழைப் பெறுகின்றீர்
    கவ்விட நெஞ்சை சொல்லழகே-உம்
    கவிதையில் காணல் நல்லழகே
    இவ்விடம் என்னை தூண்டியதே-உடன
    எழுதி விட்டேன் ஈண்டுமதே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. தன்னம்பிக்கை ஊட்டும் அழகான பாடல்..

    ReplyDelete
  24. சீறிவந்த அலையொன்றை
    கைகளில் தாங்க முயல
    அனைத்தும் வழிந்துபோய்
    ஒரே ஒரு துளி மட்டும்
    உள்ளங்கையில் தங்கி நின்றது
    // super!!!

    //கடந்த ஆண்டு ஒரு பள்ளி ஆண்டுவிழாவுக்காக
    சிறுவர்களுக்காக நான எழுதிக் கொடுத்த பாடல்//
    நானும் ஆபத்திற்கு உங்களிடம் கவிதை கேட்கலாம் போலிருக்கே.

    ReplyDelete