Saturday, June 18, 2011

தோளில் ஆட்டைப் போட்டு...

ஞாபகமிருக்கா...
முதலில் பசி
நம் குடலில் உடலில்தான் இருந்தது
நமது பணிச் சூழல் காரணமாக அதை
நேரத்திற்குள்ளும்
 காலத்திற்குள்ளும் இணைத்தோம்
இப்போது நம் பசியை
கடிகாரம்  தீர்மானம் செய்து கொண்டிருக்கிறது

நினைவிருக்கா...
முதலில் நமது திருமணத்தை
பருவமும் சக்தியும்தான்
தீர்மானம் செய்து கொண்டிருந்தது
அதனை நாம்
வசதி வாய்ப்புகளோடு
இணைத்துவிட்டதால்
திருமணங்கள் இப்போது
பருவம் கடந்தும்
சக்தி இழந்த பின்னும்தான்
சாதாரண்மாக நடந்து கொண்டிருக்கிறது

யோசித்துப் பார்த்ததுண்டா...
முன்பெல்லாம் சந்தோஷத்தை
உடல் பலத்தோடும்
மன நலத்தோடும்
இணைத்து வைத்துருந்தோம்
காலப் போக்கில் அதனை
சௌகரியங்களோடும்
கேளிக்கைகளோடும்
இணைத்துப் பழகிவிட்டதால்
இப்போது சந்தோஷத்தை
வெளியிலிருந்து எதிர்பார்த்து
வீட்டு வாசலில் தவமிருக்கிறோம்

நெனைச்சுப்பார்த்துண்டா..
நம் முன்னோர்கள் எல்லாம்
அவர்களது வாழ்வை
அந்த அந்த நாளோடும் பொழுதோடும்
இணைத்து வைத்திருந்து
வாழ் நாளெல்லாம்
உயிர்ப்போடு வாழ்ந்து மகிழ்ந்தார்கள்
நாம் தான் இன்றை
நேற்றொடும் நாளையோடும்
குத்தகைக்கு விட்டு விட்டு
வாழ் நாளெல்லாம்
சவமாக வாழ்ந்து சாகிறோம்

புராண காலத்துஅரக்கன் கூட
ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி
தன் உயிரை ஒளித்து வைத்தது கூட
அக்கிரமங்கள் செய்தாலும்
 சந்தோஷமாக  வாழ வேண்டித்தான்
நாம் தான்
உயிர்போன்ற அனைத்தையும்
நம்மை விட்டு
வேறெங்கோ விட்டுவிட்டு
ஆழமாக  புதைத்துவிட்டு
கடலுக்குள் வாழ்ந்துகொண்டே
 கடல்தேடி அலையும்
முட்டாள் மீன்போல
வாழ்வுக்குள் சுகம் தேடி
நாயாக அலைகிறோம்
வாழ் நாளெல்லாம் அலைகிறோம்

34 comments:

  1. கடலுக்குள் வாழ்ந்துகொண்டே
    கடல்தேடி அலையும்
    முட்டாள் மீன்போல
    வாழ்வுக்குள் சுகம் தேடி
    நாயாக அலைகிறோம்
    வாழ் நாளெல்லாம் அலைகிறோம்//
    especially True words.

    ReplyDelete
  2. அருமையான உண்மையான கவிதை

    ReplyDelete
  3. ஆஹா, மிகவும் யதார்த்தமான, மறுக்கவே முடியாத, அப்படியே அப்பட்டமான உண்மைகளை எடுத்துரைக்கும் இந்தக்கவிதை வெகு அருமையாக உள்ளது, சார்.

    //இப்போது நம் பசியை கடிகாரம் தீர்மானம் செய்து கொண்டிருக்கிறது//

    பசியை மட்டுமா, அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. நிற்க நேரம் இல்லை யாருக்கும். காலில் சக்கரம் கட்டியல்லவா பறக்கிறார்கள்!

    நல்ல பதிவு. நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.





    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. """நெனைச்சுப்பார்த்துண்டா..
    நம் முன்னோர்கள் எல்லாம்
    அவர்களது வாழ்வை
    அந்த அந்த நாளோடும் பொழுதோடும்
    இணைத்து வைத்திருந்து
    வாழ் நாளெல்லாம்
    உயிர்ப்போடு வாழ்ந்து மகிழ்ந்தார்கள்
    நாம் தான் இன்றை
    நேற்றொடும் நாளையோடும்
    குத்தகைக்கு விட்டு விட்டு
    வாழ் நாளெல்லாம்
    சவமாக வாழ்ந்து சாகிறோம்"""


    நேற்றைய சோகங்களிலும்
    நாளைய கனவுகளிலும்
    இன்றைய நிஜத்தை
    இழக்கிறோம் என்று சொன்ன
    உங்களின் வியாபித்த
    கருத்து ஞானத்தை
    கொண்ட கவிதை
    மனதை தெளிவாக்கியது
    என்றால் அது மிகையல்ல
    ரமணி சார்

    ReplyDelete
  5. வாழ்க்கை பற்றி மாறுப்பட்ட கவிதை. நன்றாக உள்ளது.

    ReplyDelete
  6. இப்போது சந்தோஷத்தை
    வெளியிலிருந்து எதிர்பார்த்து
    வீட்டு வாசலில் தவமிருக்கிறோம். . .கூட்டுக் குடும்பங்கள் தனிக் குடித்தனம் என்றான பின்பும், சந்தோஷங்களை நாம் வெளியில் தான் தேடுகின்றோம். . .அருமை sir. . .

    ReplyDelete
  7. நாய் பேயாக எங்கெங்கோ அலைகின்றோம்... சரிதான்.. ;-))

    ReplyDelete
  8. முகத்தில் அறையும் உண்மை.

    ReplyDelete
  9. நெனைச்சுப்பார்த்துண்டா..
    நம் முன்னோர்கள் எல்லாம்
    அவர்களது வாழ்வை
    அந்த அந்த நாளோடும் பொழுதோடும்
    இணைத்து வைத்திருந்து
    வாழ் நாளெல்லாம்
    உயிர்ப்போடு வாழ்ந்து மகிழ்ந்தார்கள்///

    பொறாமையா இருக்கு குரூ அவர்களை நினைச்சால்......

    ReplyDelete
  10. புராண காலத்துஅரக்கன் கூட
    ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி
    தன் உயிரை ஒளித்து வைத்தது கூட
    அக்கிரமங்கள் செய்தாலும்
    சந்தோஷமாக வாழ வேண்டித்தான்////

    திகார் நோக்கி உள்குத்து இருக்கோ ஹி ஹி ஹி ஹி.....

    ReplyDelete
  11. கடல்தேடி அலையும்
    முட்டாள் மீன்போல
    வாழ்வுக்குள் சுகம் தேடி
    நாயாக அலைகிறோம்
    வாழ் நாளெல்லாம் அலைகிறோம்///

    அப்பிடியே முகத்துல சப்பு சப்புன்னு அறைஞ்ச மாதிரியே இருக்கு குரு....!!!

    ReplyDelete
  12. அழகான வரிகள்.. ரொம்ப நேரம் உள்நோக்கி பார்க்கவைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  13. நிகழ்வுகள் அதற்கு சம்பந்தமில்லாத காரணங்களால் நிர்ணயிக்கப் படுகிறது.நேற்றென்பது திரிந்து போன பால். நாளை என்பது மதில்மேல் பூனை. இன்றென்பது கையில் வீணை. மீட்டி மகிழாமல் நம் செயல்களை எதெதற்கோ குத்தகைக்கு விட்டு, வாழ் நாளை வீணாக்குகிறோம்.அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. நெனைச்சுப்பார்த்துண்டா..
    நம் முன்னோர்கள் எல்லாம்
    அவர்களது வாழ்வை
    அந்த அந்த நாளோடும் பொழுதோடும்
    இணைத்து வைத்திருந்து
    வாழ் நாளெல்லாம்
    உயிர்ப்போடு வாழ்ந்து மகிழ்ந்தார்கள்
    நாம் தான் இன்றை
    நேற்றொடும் நாளையோடும்
    குத்தகைக்கு விட்டு விட்டு
    வாழ் நாளெல்லாம்
    சவமாக வாழ்ந்து சாகிறோம்

    என்ன யதார்த்தம்.

    ReplyDelete
  15. காலம் நம்மை மாற்றிவிட்டதோ, நாம் தான் காலத்தை மாற்றிவிட்டோமோ. ?தொலைத்தோமா. ? தொலைந்தோமா. . ?

    ReplyDelete
  16. வாழ்நாளெல்லாம்
    உயிர்ப்போடு வாழ்ந்து மகிழ்ந்தார்கள்
    நாம் தான் வாழ்நாளெல்லாம்
    சவமாக வாழ்ந்து சாகிறோம்.
    அருமையான வரிகள்.

    ReplyDelete
  17. அற்பதம். இதைவிட வேறு எதுவும் சொல்லமுடியவில்லை. அந்த அளவிற்கு ஆராய்ந்து படைத்திருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வாழ்வியலை அழகாய் படம் பிடித்து காட்டி உள்ளது இந்த கவிதை.

    ReplyDelete
  19. யதார்த்தமாய் வாழ்வியல் பாடத்தினை அழகாய் சொல்லியது உங்கள் கவிதை.... எல்லாவற்றையும் நமக்குள்ளே வைத்துக் கொண்டு இல்லை இல்லை, இன்னும் வேண்டும் எனத் தேடித் தேடி தொலைந்து கொண்டு இருக்கிறோம்.....

    ReplyDelete
  20. //கேளிக்கைகளோடும்
    இணைத்துப் பழகிவிட்டதால்
    இப்போது சந்தோஷத்தை
    வெளியிலிருந்து எதிர்பார்த்து
    வீட்டு வாசலில் தவமிருக்கிறோம்//அற்பதம். இதைவிட வேறு எதுவும் சொல்லமுடியவில்லை.

    ReplyDelete
  21. வாழ்வின் நிதர்சனத்தை நன்றாக தேடி உணர்ந்து , உணர வைத்த கவிதையாக அமைந்துள்ளது!
    நன்றி! என் வலைப்பூவில் தங்களின் மேலான வருகைக்கும்!

    ReplyDelete
  22. அழுகை வருகிறது ஒவ்வொரு வரி படிக்கும்போதும்...
    சரியான வார்த்தை இது...
    பசிக்கும்போது சாப்பிட்ட காலம் போய் ஆபிசில் வேலை வேலை என்று செய்துக்கொண்டு இருப்பேன், தண்ணி குடிக்க கூட டைம் இருக்காது. பசி வயிற்றை கிள்ளும் ஆனால் சாப்பிட நேரம்???

    இப்படி உழைப்பது எதனால்? சுவர் இருந்தால் தானே சித்திரம்? ஆனால் அதை என்றாவது நாம் யோசிக்கிறோமா? சந்தோஷத்தை தேடி அலைகிறோம். வீட்டில் அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடும் நேரம் அன்றைய நிகழ்வுகளை எல்லோரும் ஒன்றாய் பேசி சிரித்து மகிழ்ந்த நாட்கள் எல்லாம் யோசிக்க வைக்கிறது...

    எதையோ தேடி அலைந்து இன்னமும் நாட்களின் பின்னே ஓடிக்கொண்டு இருக்கிறோம்....

    மனதை அசைத்த வரிகள் எளிய நடையில் ரமணி சார்.

    அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
  23. இன்றைய வாழ்வு வியாபாரமாகி அவலப்படுகிறது.பாசம் பிடிப்பு எல்லாமே தூரத்தான் !

    ReplyDelete
  24. நினைத்தேன் எழுத வரவில்லை-இதற்கு
    நிகராய் ஒன்றும் வரவில்லை
    அனைத்தும் விலகிப் போயினவே-ஏதும்
    அறியா நிலைதான் ஆயினவே
    பனையின் அளவாய் எழுந்தீரே-இப்
    பாடலில் கருத்தைப் பொழிந்தீரே
    தினையின் மாவும் கவிதேனும்-உண்ண
    தெவிட்டா நிலைக்கு இதுமானும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. ஆழ்ந்த ஆய்வு வரிகள் போன்றது...அருமையாக உள்ளது. உதாரணம் கூறுவதானால் கவிமுழுதும் எழுதவேண்டும்.சுருக்கமாக...வாழ்த்துகள்.
    www.kovaikkavi.wordpress.com
    Vetha.Elangathilakam.
    Denmark.

    ReplyDelete
  26. சாட்டையடி சார்

    ReplyDelete
  27. என்னவொரு தீர்க்கமான கவிதையும் அழகான வார்த்தைகளும்.

    தலைப்பும் மிகப் பொருத்தம்.

    ReplyDelete
  28. //நினைவிருக்கா...
    முதலில் நமது திருமணத்தை
    பருவமும் சக்தியும்தான்
    தீர்மானம் செய்து கொண்டிருந்தது//மனதை அசைத்த வரிகள்

    ReplyDelete
  29. "வாழ் நாளெல்லாம்
    சவமாக வாழ்ந்து சாகிறோம்"
    மிகவும் பிடித்த வரிகள்.
    உயிர்ப்பான கவிதை ரமணி சார்.

    ReplyDelete
  30. ஸ்ரவாணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete