Thursday, September 15, 2011

எங்கு தமிழ் எதில் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்

சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர்ப்  பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர்ப்  பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது

விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்

எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  
அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

116 comments:

  1. எங்கும் தமிழ் எதிலும் தமிழ். ஹா ஹா

    ReplyDelete
  2. விரைவாகக் குழம்புகிறவனே
    விரைவாகவும் தெளிவடைவான் ///

    ஹா..ஹா.. உண்மை...

    ReplyDelete
  3. விரைவாகக் குழம்புகிறவனே
    விரைவாகவும் தெளிவடைவான்//
    இது சரியா ரமணி சார், எனக்கென்னவோ குழம்புபவர்கள் குட்டையை குழப்பி கூட இருப்பவர்களையும் குழப்புவது போல் அல்லவா தெரிகிறது.

    ReplyDelete
  4. அடாடா... அப்படியா விஷயம்..
    நல்லாத்தான் யோசிச்சு கேட்டீங்க, கேள்விய..

    ReplyDelete
  5. இந்த அவலத்தை மிக அழகாக மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்...
    மிக எளிமையாக கவிதையை அமைத்ததற்கு எனது பாராட்டுக்கள்...

    --
    அன்பின்
    ப. ஜெயசீலன்.

    ReplyDelete
  6. Lakshmi //
    முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. வேடந்தாங்கல் - கருன் *! .

    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை அதுதான். நடைமுறைத் தமிழ் வளர்வது ஒரு கனவாகவே உள்ளது.

    ReplyDelete
  9. நாய்க்குட்டி மனசு //.

    தாமதமாகக் குழம்புகிறவன் எப்போதும் தாமதமாகவே முடிவு எடுப்பான்
    அல்லது முடிவெடுக்காமலே போய்விடுவான் (டுப் லைட் இனம்)
    என்வேதான் இப்படிச் சொன்னேன்
    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. கமல் மாதிரி அவரை தெளிவா குழப்பாமல் குழப்பி விட்டிட்டீங்களே குரு, ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  11. Madhavan Srinivasagopalan //

    சைக்கிளை மிதிவண்டி என எளிதாகபெயர் மாற்றிவிடலாம்
    சைக்கிளை பிரித்துப் பொருளாகப் பார்த்தால்
    தமிழ் காணாமல் போய்விடும்
    நம்முடைய கண்டுபிடிப்பாக எந்தப் பொருள் இருந்தாலும்
    நம் மொழியில் பெயர் இருக்கும் இட்லி தோசைமாதிரி
    இல்லையெனில் இந்த அவஸ்தைதான்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. ம்ம்ம் அப்போ தமிழ் இந்த லட்சனத்துலதான் இருக்கு போல....

    ReplyDelete
  13. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. ஜெயசீலன் //

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. சாகம்பரி //

    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. சில விடயங்களை தமிழில் மொழி பெயர்த்தால் சுத்த தமிழனுக்கு புரியாது )))

    ReplyDelete
  17. MANO நாஞ்சில் மனோ//

    கமல் போல குழப்ப கொஞ்சம் சரக்கும்
    தெளிவும் இருக்கணும்
    அது என்னிடம் இல்லாததால்தான் கொஞ்சமலேசாகக் குழப்பி இருக்கிறேன்
    முதலில் இதுபோல அரைகுறையாகக் குழப்பி
    பின் ஓரளவு விசு அளவு குழப்ப்பப் பழகி
    அப்புறம் அல்லவா கமலஹாஸனை நெருங்க முடியும்
    அது என்ன அவ்வளவு ஈசியா ?
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனம் கவர்ந்த பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. கந்தசாமி. //

    மிகச் சரியான கருத்து
    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. தூய தமிழில் பேசுவது கடினம்தான். செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் நேரிடுகிறது. ஆனால் எழுதும் தமிழைக்கூட பலர் கொலை செய்கிறார்களே. அதையாவது திருத்த முன்வரவேண்டும்.

    கவிதையின் கருத்து சுரீர் என்கிறது.

    ReplyDelete
  20. உண்மை வரிகள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. நன்றாகத் தான் கேள்வி கேட்டீர்கள். :)))))

    ReplyDelete
  22. //எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
    நிச்சயமாக நம்மைப் போலவே
    அவனுக்கும் சில நாளில் புரியக் கூடும்//

    நகைசுவையாக இருந்தாலும் தமிழைப்பற்றி யோசிக்க வைக்கிறது,உங்களுடைய கேள்வி.
    நன்றாக இருக்கிறது பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. //விரைவாகக் குழம்புகிறவனே
    விரைவாகவும் தெளிவடைவான்//

    அசத்தல் :-))))

    எவ்ளோதான் தமிழ்ப் படுத்தினாலும், சில விஷயங்கள் மாறாதுன்னு அழகா சொல்லிட்டீங்க :-)

    ReplyDelete
  24. கீதா//

    மிகச் சரியான கருத்து
    உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. ஹா ஹா... நல்லாத்தான் அவரு பல்பூ 
    வாங்கீட்டாரு.......  ஆனாலும் அந்த நன்பர் மேல் எனக்கு ஒரு வித அன்பு வருகின்றது.
    இப்படியானவர்கள் இருப்பதால்தான் இன்னும் இருக்கும் கொஞ்ச தமிழும் அழியாமல் இருக்கோ... 

    நீங்களும் விடா கண்டன் போல நல்லாத்தான் கேட்டு இருக்கீங்க.. ஹீஹீ

    ஒரு வித்தியாசமான ஆதங்கம் மிக்க
    பதிவு.. அசத்திட்டீங்க பாஸ்  ^_^

    ReplyDelete
  26. பாவம் உங்கள் நண்பர் :)

    இனி, உங்களிடம் கட்டாயம் தூயதமிழில் பேசமாட்டார்.

    ReplyDelete
  27. கோவை2தில்லி

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. ஆயிஷா .

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. அமைதிச்சாரல்//

    மிகச் சரியான கருத்து
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. துஷ்யந்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. சுந்தரா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. நாம் தமிழென்று பேசுகின்ற மொழியிலே எத்தனை வேற்றுமொழிகள் கலந்திருக்கின்றன என்பது எமக்கே தெரியாது. ஏன் அருணகிரிநாதர் கூட மணிப்பிரவாளநடையில் பாடல் பாடியிருக்கின்றார். இயல்பாக எதுவும் வரவேண்டும் தெண்டித்துச் செலுத்தினால் இப்படித்தான் நடக்கும் என்பதை இயல்பாக எடுது;துக்காட்டியிருக்கின்றீர்கள். இதுவே வாழ்வியல் இலக்கியம் ரமணி அவர்களே! வாழ்ந்து கொண்டிருக்கும் போது நடைபெறும் சம்பவங்கள் எதிர்காலத்தில் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பதிவில் இடப்படும். அக்காலம் இருந்து இன்றுவரை மொழிவெறி கொண்டமையால்த்தானோ வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஒப்பாக தொழில்நுட்பத்துறையில் முன்னிலையில் நிற்க முடியவில்லை. மொழிப்பற்று அவசியம். அது வெறியாக மாறக்கூடாது. அற்புதமாக சம்பவம் மூலம் சங்கதி விளக்கியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்

    ReplyDelete
  34. அழகாக சொல்லியிருக்கீங்க உண்மைதான் ஊறிப் போயாச்சு ,சட்டென்று மாற சிரமம் தான் .

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    தமிழ் மணம் 11

    ReplyDelete
  35. தூய தமிழில் பேசலாம் தான். பேச்சு/மொழி என்பதே பிறருக்கு அதுவும் பெரும்பாலானவர்களுக்கு புரியக்கூடியதாக இருக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். அழகாகவே அதை சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
    தமிழ்மணம் 11 vgk

    ReplyDelete
  36. இயல்பாக முடிந்தவரை தமிழ் பேச முயலுதல் நல்லது தான். தமிழில் இல்லாத சொற்களை கட்டாயம் தமிழ்படுத் வேண்டுமென்றில்லை அப்படியே பிற மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளலாமே...

    ReplyDelete
  37. சந்திரகௌரி //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. வை.கோபாலகிருஷ்ணன் //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. M.R //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. கலாநேசன் //

    மிகச் சரியான கருத்து
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. பேச்சு வழக்குத் தமிழ் முழுமையான தமிழாக மாறுவது இனி கடினமே.அதற்கு நாம் சங்க காலம்தான் செல்ல வேண்டும்.ஏனெனில் நாம் உபயோகிக்கும் தமிழ்ப் பதம் கூட நம் குழந்தைகள் உபயோகிப்பதில்லை.அவர்களுக்கு நாம் உபயோகிக்கும் சில பதங்களின் அர்த்தம் கூட புரிவதில்லை.
    எடுத்துக்காட்டாக ஒன்று:

    என் மாமனார் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது 'உட்பட' என்ற வார்த்தையை கூறினார்.என் மகள் 'உட்பட" என்றால் என்ன அர்த்தம் என்று என்னிடம் கேட்டாள்.நான் 'including' என்று கூறியதும் புரிந்து கொண்டாள்.அடுத்த தலைமுறை
    தமிழ்ப் பதத்திற்கு ஆங்கில அர்த்தம் சொன்னால் புரிந்து கொள்ளும் கேவலமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' அற்று தலைப்புக்கேற்றார் போல் 'எங்கு தமிழ் எதில் தமிழ்' நிலைதான்.நிலை உணர்த்தும் சரியான பதிவே.எனினும் தீர்வு வருமா என்பது கேள்வியே.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  42. raji //

    தமிழ்ப் பதத்திற்கு ஆங்கில அர்த்தம் சொன்னால் புரிந்து கொள்ளும் கேவலமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது ......

    மிகச் சரியான கருத்து
    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அருமையான பதிவு வாழ்த்துக்கள் ரமணி சார்

    ReplyDelete
  45. மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை.


    மனித உயிர் கொல்லும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுங்கள்.இல்லையெனில் உடனே உங்கள் இருவர் இல்லத்தையும் கூடன்குளத்துக்கு மாற்றுங்கள்.


    Take steps to close Koodankulam Nuclear Power Plant immediately to avoid another Chernobyl disaster.

    இதை வாசிக்கும் அனைவரும் கீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்...(Just Cut and paste the above)


    http://pmindia.gov.in/feedback.htm
    cmcell@tn.gov.in

    ReplyDelete
  46. எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
    நிச்சயமாக நம்மைப் போலவே
    அவனுக்கும் சில நாளில் புரியக் கூடும்


    அருமை ஐயா.

    ReplyDelete
  47. எங்கும் எதிலும் தமிழ்... நல்ல கேள்வி கேட்டு அவரைக் குழப்பி விட்டீங்களே....

    என் தமிழ் ஆசிரியர் நினைவுக்கு வந்தார்.... அது பற்றி என் பதிவில் எழுதுகிறேன்..... :)

    தமிழ்மணம் 14

    ReplyDelete
  48. விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
    ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
    விரைவாகக் குழம்புகிறவனே
    விரைவாகவும் தெளிவடைவான்
    எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
    நிச்சயமாக நம்மைப் போலவே
    அவனுக்கும் சில நாளில் புரியக் கூடும்

    அருமையாக உணர்த்தப்பட விடயம் ஆனாலும்
    எங்கும் தமிழ் வாழவாழ்த்தி பகிர்வுக்கு நன்றி கூறி
    விடைபெறுகின்றேன் வாருங்கள் ஐயா என் தளத்திற்கும் .......

    ReplyDelete
  49. கொம்பை மறந்த மாடுகள் போல
    தாய்மொழியை மறந்தான் தமிழ்ன்!!

    அழகாக அதனைக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள் அன்பரே..

    ReplyDelete
  50. நான் மனம் திறந்து எழுதிய கவிதை.

    127 உயிர்களின் கேள்விகளாக.

    நேரம் கிடைக்கும் போது வாருங்கள் அன்பரே.

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

    ReplyDelete
  51. ராக்கெட் ராஜா//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. அதிகம் தனித்தமிழில் உரையாடினாலும் குழம்பிப்போய் விடுவார்கள் உங்கள் ஆர்வம் தமிழ் செழிக்கனும் என்பதே வாழ்த்துக்கள் ரமனி சார்!

    ReplyDelete
  53. Reverie //
    ரெவரி அருமையான காரியம் செய்துள்ளீர்கள்
    உடன் அனுப்பிவிட்டேன்
    பதிவர்கள் அனைவரின் சார்பாக மிக்க நன்றி

    ReplyDelete
  54. Rathnavel //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. அம்பாளடியாள்.

    அருமையாக உணர்த்தப்பட விடயம் ஆனாலும்
    எங்கும் தமிழ் வாழவாழ்த்தி...

    மிகச் சரியான கருத்து
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. முனைவர்.இரா.குணசீலன் //

    அருமையான உவமை
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    (கரும்பு தின்னக் கூலியா
    நானெல்லாம் தங்கள் பதிவு எப்போது வரும் என
    வழிமேல் விழிவைத்து காத்திருப்பவன்)

    ReplyDelete
  58. Nesan //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. பிறநாட்டுப் பொருட்களுக்கு, அதன் இயல்பு பெயரையே உபயோகித்துக் கொள்ளலாமே! கட்டுமரத்தை ஆங்கிலேயர்கள் கெட்டமரன் என்று அகராதிப் படுத்தியுள்ளனரே அது போல!

    ReplyDelete
  60. பாவம் உங்கள் நண்பர் குழம்பி போனார்

    இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    ReplyDelete
  61. தமிழின் இன்றைய நிலையதனையும்,
    எம் தமிழ் உறவுகளால் அனைத்துப் பொருட்களுக்கும் தூய தமிழ்ச் சொற்கள் அறிமுகப்படுத்தப்படாத காரணத்தினால் மொழிக்கலப்பு இன்றியமையாத ஒன்றாக வந்து கொள்கிறது என்பதனையும் இக் கவிதை செப்பி நிற்கிறது.

    ReplyDelete
  62. இன்றைய யதார்த்த வாழ்க்கையை அருமையாகக் காட்டியிருக்கிறீர்கள்! வடமொழி கலவாத, பிற‌ மொழிகளின் தாக்கம் இலாத தமிழ் என்பது இனி கிடைக்கப்போவதில்லை! இருக்கும் கொஞ்சம் தமிழாவது கொலையுண்டு போகாமலிருந்தால் சரி என்ற அளவில்தான் நம்மை ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டும்!!

    ReplyDelete
  63. உண்மைதானையா.. சில பெயர்களை தமிழில் சொல்லும்போது குழம்பித்தான் போவோமையா.. முன்னர் ஊருக்கு போயிருந்தபோது பேக்கறி வெதுப்பகமாய் மாறி இருந்தபோது கொஞ்சம் குழம்பிப்போனேன்.. ஆனால் அதுவும் அழகுதானையா.. 

    ReplyDelete
  64. இன்றைக்கு காலையே உங்க வரிகளை படிச்சிட்டேன் ரமணி சார்....

    ஆனால் பரிட்சை எழுத உட்கார்ந்து ஒன்னும் தெரியாம முழிப்பது போல தான் என் நிலை....

    தமிழ் எல்லோரையும் போல அத்தனை அக்ஷர சுத்தமாக வராது எனக்கு.... அதே போல் இலக்கணத்திலும் இலக்கியத்திலும் நீங்களும் சரி ( கணபதி சதுர்த்திக்கு நீங்க எழுதி அசத்தியதை நினைவு கூறுகிறேன், பின்னூட்டமிட்ட அனைவருமே நீங்கள் உள்பட உட்பட ஜாம்பவான்கள் ராஜி உட்பட அப்டின்னு எழுதி இருந்ததை படிச்சேன்.... அதனால திருத்திக்கொள்கிறேன் உட்பட.... இத்தனை ஜாம்பவான்களுக்கு நடுவில் ஜூனூன் தமிழில் பேசும் படைப்புகள் தரும் நான் பின்னூட்டமிடும் தகுதி கூட இல்லை என்பதையும் அறிவேன் ரமணி சார்....

    ஆனாலும் ஒரு உந்துதல்..... மனசுல இருப்பதை எல்லாம் கொட்டிவிட துடிக்கும் ஆவல்.... படித்ததை எப்படி கிரஹித்துக்கொண்டேன் என்றாவது சொல்லிவிடலாமே என்ற ஆதங்கம்.... சொல்லலாமா தவறாகுமோ என்ற பயம்....

    இத்தனையும் ஏன் எனக்கு ஏற்படுகிறது... தமிழ் எனக்கு தகராறு என்பதால்தான்... வரிகளை படித்தபோதே கடைக்காரன் நிலையில் என்னை வெச்சு நினைத்து பார்த்தேன்...மௌன விரதம் இருந்திருக்கேன் ஒரு நாள் முழுக்க... உபவாசமும் முழுக்க... ஆனால் ஒரு நாள் முழுக்க தமிழல்லாது வேறு மொழி பேசக்கூடாது என்று இருந்தது இல்லை...


    ஏன்னா நீங்க சொன்னது போலவே சைக்கிளை தமிழ் படுத்திவிடலாம்... ஆனால் சைக்கிளுக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் உதிரி பாகங்கள்? அதுக்கு சரியான தமிழ் பெயர் கஷ்டம் தான்....

    ReplyDelete
  65. எல்லாமே சரி படுத்தலாம்...முயற்சிக்கலாம்... ஆனால் அதிகம் சிரமங்கள் இருக்கும் ஆரம்பத்துல....

    குழந்தை கையை பிடிச்சு அ ஆ எழுத வைச்சப்ப ஏற்பட்ட சிரமங்கள் போல....

    இன்னொரு நண்பர் எழுதி இருந்தார் இட்லி தோசை போன்று இருந்தால் எளிதா இருக்கும் என்று.... உண்மையே தமிழுடன் நிறைய ஆங்கிலம் கலந்து பேசும்படியான நிலை தான் இப்ப எங்கு பார்த்தாலும்...

    தமிழ் ரொம்ப பிடிக்கும்....ழ ள ல இப்படி சரியா ப்ரனொன்ஸ் பண்ண பிடிக்கும்....

    ReplyDelete
  66. சங்கர் மிதிவண்டி நிலையம் செய்தது தப்பில்லை ஆனால் நீங்க சொன்னது போல... முடி தலையில இருந்து முழுதும் எடுத்தா தானே அழகு? ஒன்னு தலை நிறைய முடி இருக்கலாம்.. இல்ல அழகா எடுத்துரலாம்...அதை விட்டுட்டு பாதி முடி தலைல அங்கங்க அப்டி விட்டா நல்லாருக்குமா? தமிழின் நிலை இப்ப அப்படி தான் இருக்கு... வேறு வழி இல்லாம நமக்கே தெரியாம நாம இப்படி தான் பேசிட்டு இருக்கோம்..

    ஆனா பண்டை காலத்துல அப்படி இல்லையே.. தமிழ்னா தித்திக்கும் தேனே தான் தமிழ்..... ஆனால் அப்ப இப்ப இருக்கும் நிறைய ஹைடெக் விஷயங்கள் அப்ப இல்லையே... இப்ப தானே டெக்னாலஜி கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டு இருக்கு.... பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலை தான்... அப்படியும் அங்கங்க்கு ஆராய்ச்சியும் நடக்கிறது....

    முடிந்தவரை தமிழை தமிழாகவே பேசி பழகுவது தான் இதற்கு ஒரே வழி.... பட்லர் இங்கிலீஷ் பேசி பேசி அப்புறம் அழகா க்ராமடிக்கலா பேச வந்துடுமே அது போல.....

    ரமணி சார் உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே உங்க படைப்புகளின் மூலக்கரு சட்டுனு எங்காவது ஈசியா கிடைச்சிடுதே அது தான்...

    நாங்களும் தெனாலிராமன்கள் தான் என்ற கவிதை வரிகள் அதன் தாக்கம் இன்னமும் குறையாமல் இருக்கு எனக்குள்..... நான் நினைச்சேன் எங்கோ ஏதோ ஒரு பெற்றோர் பிள்ளையிடம் இப்படி நடந்துக்கொண்டதை தான் நீங்க கவிதை எழுத கிடைத்த மூலப்பொருள் அப்டின்னு... ஆனால் படிச்சப்பின் தான் தெரிஞ்சுது கோபாலக்ருஷ்ணன் சாரின் ஒரு வரி தான் உங்க இந்த கவிதை உருவாக காரணம் என்பதை நீங்களே சொல்லி அறிந்தபோது இன்னும் பெருமையாக உணர்ந்தேன்.... சின்ன விஷயம் தானேன்னு அப்டியே விட்டுடாம...

    ஒரு துளி போதுமே உங்களுக்கு அதை அழகிய கவிதையாகவோ இல்லை அருமையான கட்டுரையாகவோ மிளிரச்செய்ய....

    ReplyDelete
  67. தமிழை பெருமைப்படுத்த நீங்க எடுத்துக்கிட்ட முயற்சி நான் கண்டிப்பா செயல்படுத்த முனைவேன்... நான் வேலை செய்யும் இடத்தில் முடிந்தவரை தமிழ் ஆட்களிடம் தமிழிலேயே தான் பேசுவேன்..... அவர்கள் மொழியிலேயே பேசும்போது அவர்கள் கண்ணில் தெரியும் குட்டி பிரகாசம் எனக்கு மனநிறைவாக இருக்கும்....

    ஆனால் தூய தமிழ் பேச முடிவது சிரமம் ஏன்னா.....பேச்சுக்கும் எழுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.... நாங்கள் அங்கே சென்றோம்.. நாங்க அங்க போனோம்... அந்த காலத்தில் தூய தமிழ்லயே தான் பேசி வாழ்க்கையை நடத்தி இருந்திருக்காங்க.... இப்பவும் முயல்வோமே...

    நல்லாவே சங்கரை கேட்டு இருக்கீங்க என்னப்பா சரியா எல்லாமே சொல்லிட்டே ஆனா மெயின் திங் அதாம்பா தமிழ் எங்கே? நச் ஐயா....தமிழ் பேச எல்லாருக்குமே இஷ்டம் தான்... ஆனால் நிறைய விஷயங்கள் தமிழ்படுத்த முனையவில்லை என்றே நினைக்கிறேன்.. ஆனால் எதுவுமே நம்மில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்பதில் அதிக நம்பிக்கை இருக்கிறது... தொடங்குவோம்... தொடர்வோம்.....

    உங்க படைப்புகள் ஒவ்வொன்றிலும் எளிய நடையுடன் கூடிய மெல்லிய கருத்து மின்னுவது தான் சிறப்பு ரமணி சார்.....

    இந்த வரிகள் குட்டிகுட்டியான வைரச்சிதறல்கள்.... எளியநடை யாருமே எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் சிறப்பான படைப்பு ரமணி சார்...



    ஒரு குட்டி விஷயம் நினைவுக்கு வந்தது...
    நான் சின்ன பிள்ளையில் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது கணக்கு வகுப்பில் சர்க்குலர் வந்தது... அதை அவங்க படிச்சாங்க... எவ்ரிபடி ஷுட் ஸ்பீக் இன் இங்க்லீஷ் இன் இங்க்லீஷ் பீரியட் அண்ட் டமில் இன் டமில் பீரியட்.. அப்ப முந்திரிக்கொட்டை ஒன்னு எழுந்து மேம் மேத்ஸ் இன் மேத்ஸ் பீரியட்.... ஒரு செகண்ட் பிண்ட்ராப் சைலன்ஸ் க்ளாஸ்ல....

    அதன்பின் அந்த பிள்ளையை கூப்பிட்டு முதுகுல சாத்து சாத்துன்னு சாத்தினாங்க.. அதாம்பா பட்டாசு வெடிச்சாங்க.... அப்டி என்ன தப்பா கேட்டுட்டேன்னு நினைச்சுட்டே போய்ருச்சு... அதே பிள்ளை கொஞ்சம் பெரிசாகி பெரிய கிளாஸ் வந்தப்ப பாட்டு போட்டில பாட ஸ்டேஜ் ஏறினப்ப ஜட்ஜ் மூணு பேர் அதில் ஒன்று அந்த பொண்ணுக்கு பாட்டு கத்துக்கொடுத்த டீச்சரே இன்னொன்னு யாரோ இன்னொன்னு அந்த ரங்கமணி மேத்ஸ் டீச்சர்.. உதற ஆரம்பிச்சிட்டுது.... என்ன பண்ணுவா??? எப்பவும் எல்லாரும் பாட்டை செலக்ட் பண்ணும்போது இவ மட்டும் பாரதியார் பாட்டில் கூட வித்தியாசமானபாட்டு எடுத்து பாடும்போது கரெக்டா இவளுடைய சின்ன வயசு பேச்சை சரியா நினைவு வெச்சு பக்கத்துல சொல்லிட்டாங்க.... அவ்ளோ தான் டென்ஷன் இன்னும் அதிகமாச்சு... ஆனால் ரங்கமணி மேம் மனசுல வெச்சுக்கலை... திறமைக்கே முதலிடம்... முதல் பரிசும் அதே வாயாடி மங்கம்மாக்கே கிடைத்தது... யாருப்பா அது... இதோ இந்த பதிவை எழுதிக்கிட்டு இருக்கே அதுவே தான்....

    அசத்தலா ஒரு படைப்பு கொடுத்துட்டு அமைதியா நீங்க இருப்பதை என்னால் உணரவும் முடிகிறது ரமணி சார்.....தமிழ்ல கூடியவரை பதிவு இருக்க முயற்சி செய்தேன்... ஆனா முடியலை :(

    அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் ரமணி சார் இந்த அருமையான படைப்புக்கு... அடுத்த படைப்பு என்னவா இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன்.....

    ReplyDelete
  68. ///அவனுக்கும் சில நாளில் புரியக் கூடும்///

    ஐயா அவருக்கு புரியுதோ இல்லையோ எனக்கு ஒன்றும் மட்டும் நல்ல புரிந்தது உங்களிடம் பேசும் போது ரொம்ப ஜாக்கிரைதையா பேச வேண்டுமென்று. பதிவுலகில் நீங்கள் ஒரு நக்கீரன் ஐயா.

    வழக்கம் போல உங்கள் பதிவை லேட்டாக வந்து படித்து ரசித்தேன். லேட்டாக வந்து படிப்பதன் காரணம் உங்கள் பதிவும் அதற்கு வரும் பின்னுட்டங்களும் அதிலும் மஞ்சு சுபாஷினி எழுதும் பின்னுட்டமும் அருமை அவர்து பின்னுட்டம் உங்கள் பதிவுடன் வரும் இலவச குட்டி பதிவு so 2 in 1 போல அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  69. ரம்மி //.

    தங்கள் மேலான வருகைக்கும்
    சரியான கருத்தை முன்வைத்த பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  70. வைரை சதிஷ்//

    என் பதிவிற்கு தங்கள் முதல் வருகைக்கும்
    முத்தான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  71. நிரூபன் //.

    தங்கள் மேலான வருகைக்கும் சிந்தனையை
    தூண்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  72. மனோ சாமிநாதன் //
    தங்கள் மேலான வருகைக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  73. காட்டான் //

    தங்கள் மேலான வருகைக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. Avargal Unmaigal //

    தங்கள் மேலான வருகைக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  75. மஞ்சுபாஷிணி //

    Avargal Unmaigal said....//
    வழக்கம் போல உங்கள் பதிவை லேட்டாக வந்து படித்து ரசித்தேன். லேட்டாக வந்து படிப்பதன் காரணம் உங்கள் பதிவும் அதற்கு வரும் பின்னுட்டங்களும் அதிலும் மஞ்சு சுபாஷினி எழுதும் பின்னுட்டமும் அருமை அவர்து பின்னுட்டம் உங்கள் பதிவுடன் வரும் இலவச குட்டி பதிவு so 2 in 1 போல அருமையாக இருக்கிறது.

    என் பதிவுக்கு தங்கள் பின்னூட்டமே
    அதிகம் பெருமையை சேர்க்கிறது
    நான் எழுதுகிற கரு குறித்து நீங்கள்
    தொடர் சிந்தனையாக கொடுக்கிற
    பின்னூட்டத்தைப் படித்து நிறைய பேர்
    பாராட்டி எழுதுகிறார்கள்.நன்றி

    ReplyDelete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
  77. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது எல்லா நேரத்திற்கும் பொருந்தாதுதான்.கீதா குழம்பியகம் என்பதைனை பார்த்து குழம்பி நிற்கின்றேன்.சரோஜா அடுமனை என்பதினை கண்டு சற்று யோசித்து நிறிகின்றேன்.இதுதான் யதார்த்தம்.

    ReplyDelete
  78. எப்படி சார் எப்படி..?இப்படி அருமை அருமையான கருவை கையிலெடுத்து இப்படி கவிதையை சர சரவென்று தொடுக்கின்றீர்கள்.வியந்து நிற்கின்றேன்.

    ReplyDelete
  79. ஸாதிகா //


    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. பிரமாதம்! வித்தியாசமாக நிறைய எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  81. அப்பாதுரை //
    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  82. இருந்தாலும் அவர் தன்னாள் இயன்ற அளவு தமிழ் பாவிக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

    உங்கள் கவிக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  83. தேடிப்பிடித்து பேசத்தேவைஇல்லை!இயல்புத்தமிழ் பேசினாலே போதும் என இயல்பாக உணர்த்தியுள்ளீர்கள்!நன்றி!

    ReplyDelete
  84. கவி அழகன் //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  85. கோகுல்//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  86. உங்கள் அடுத்த பதிவைக் காண வந்தேன் .விரைந்து
    தொடர வாழ்த்துக்கள் ஐயா ...........

    ReplyDelete
  87. அம்பாளடியாள்//

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  88. enna sir ippadi pannitinga. ethukkum unga friend kitta usara irunga.

    "டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
    ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
    சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
    பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்



    naalaike avr vanhthu. iluvai mattai, sankili,
    kappuk kambi, surul kambi,valai kundu, thulai
    mithikkum kattainu solli ungalai oru vali akki viduvar.

    ippadi sontha selavila suniyam vaichu kittingaley. ok ok.

    thangalin pala pinnuttangalai padiththen. nalla theliva alaka eluthukinrirkal. time kidaikkum pothu elllam ungalin pathivukal padikkinren. nanri

    ReplyDelete
  89. பித்தனின் வாக்கு//

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  90. தமிழ் வாழவேண்டும்...........போகிற போக்கில் அது நடக்குமா ? விழிப் பூட்டலுக்கு நன்றி

    ReplyDelete
  91. நிலாமதி //

    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  92. நல்ல பதிவு. பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளுக்கு பழக்கமாகி விட்டோம். தமிழில் முயன்று சொன்னாலும் டக்கென ஆபத்பாந்தவனா வருவது ஆங்கிலம் தான்.

    ReplyDelete
  93. vanathy //


    தங்கள் வரவுக்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  94. இப்போதுதான் உங்கள் தளத்துக்கு முதல்முறை வருகிறேன் .உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி .அருமையாக எழுதுகிறீர்கள்

    ReplyDelete
  95. kobiraj //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  96. உங்களின் பதிவு சிலரை மிகவும் பாதிக்கிறதாக உணர்கிறேன். நீங்கள் என்னமோ எதார்த்தமாக எழுதிவிடுகிறீர்கள். மக்கள் மனத்தின் மென்மையான பகுதியில் செல்லமாக ஒரு தட்டு விழுந்துவிடுகிறது.

    மடிக் கணினி, அலைபேசி இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.

    ஒலிநாதம் உதைப்பதாகப் படுகிறது. Lap என்பது மடியாகாது. மடிஎன்று சொல்லும் பொழுது ஒர் அன்பான நெருக்கம் உணரப்படும்.

    அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா....

    Mobile- அலைவதாகாது.

    அலையும் நெஞ்சை அவனிடம் சொன்னேன்
    அழைத்து வந்தான் என்னிடம் உன்னை.....

    ஒன்று சரியான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையென்றால் ஆங்கிலச் சொல்லை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் கருத்து எதுவாயினும் அதிக மக்களின் கருத்தே வென்று தமிழும் வெல்லும்.

    ReplyDelete
  97. VENKAT //

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  98. மேற்கோள் காட்டி நீங்க சொன்னபின் தான் அவர்கள் உண்மைகள் சொன்னதையே அறிந்தேன் ரமணி சார்...

    உங்கள் பண்பை வியக்கிறேன்... உங்கள் பதிவில் மற்றொருவரை பாராட்டினால் அதை கூட பாராட்டுக்குரியவருக்கு போய் சேரவேண்டும் என்ற உங்கள் பண்பு போற்றக்கூடியது ரமணி சார்....

    உங்களுக்கும் அவர்கள் உண்மைகள் சகோவுக்கும் என் அன்பு நன்றிகள்....

    படைப்புகள் தான் என்னை எழுதவைப்பதே....
    சர்விகல் ஸ்பாண்டிலைஸ் இருப்பதால் என் வலது கை சிறிது நேரம் வேலை செய்யும் அதிகம் எழுதும்போது உயிர்போகும் வலி.... ஆனாலும் மனம் நிறைகிறது படைப்புகளை படித்து அதை நான் எழுதும்போது.....இரண்டு நாளாக வலி கழுத்துல இருந்து தொடங்கி இருக்கு.... அதுக்கெல்லாம் அசருகிற ஆளா நான்..

    மீண்டும் அன்பு நன்றிகள் ரமணி சார்...

    ReplyDelete
  99. மஞ்சுபாஷிணி //.

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  100. தமிழ்ப் படுத்துகிறேன் என்று படுத்தாமல் இருந்தாமல் சரி.. மொழி மீதான ஆர்வமும் வெறியும் இரு துருவங்கள். இங்கு கிளர்ச்சியூட்டவே முனைகிறார்கள்.. பல வீடுகளில் தமிழ் வாசிப்பு அறவே தொலைந்து விட்டது.. போராட்டம் செய்பவர் வீட்டுப் பிள்ளைகளோ பிற மொழி தேர்ச்சி பெற்று வெவ்வேறு முன்னேற்றங்களுடன்.. தமிழும், பிற மொழித் தேர்ச்சியும் ஒன்றுக்கொன்று எதிரிகள் அல்ல.. நல்ல பதிவு,

    ReplyDelete
  101. ரிஷபன் //
    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  102. தமிழுக்கான பின்னூட்டங்கள் தமிழைக் காட்டிலும் மலைக்க வைக்கிறது.
    வெல்க தமிழ்!

    ReplyDelete
  103. Murugeswari Rajavel //

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  104. புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைப் புறந்தள்ளி விட்டு மொழியைத் திணித்தால் அது குழப்பத்திற்கே இட்டுச் செல்லும் என்பதை எளிய நடையில் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ரமணி அவர்களே. நல்ல கவிதை. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  105. ShankarG //


    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  106. வெதுப்பகம் , பனியகம் என்ற பெயர்களைப்
    பார்க்கும் போது ஏனோ நடைமுறைத் தமிழ் அங்கே கொல்லப்படுவதாகத்
    தோன்றுகிறது. ஆனாலும் உங்கள் நண்பனை ரொம்பவும்
    தெளிவாகக் குழப்பி விட்டீர்கள் ...எங்களையும் தான் . ஹா ஹா !

    ReplyDelete
  107. ஸ்ரவாணி //

    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  108. எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
    நிச்சயமாக நம்மைப் போலவே
    அவனுக்கும் சில நாளில் புரியக் கூடும்//
    Forgive me for not giving my comments in Tamil...
    Short and crisp story mixed with the flavour of sense of humour essenced with thought provoking question..

    ReplyDelete
  109. My Dear Ramani Sir,

    வணக்கம். மேலே பின்னூட்டமிட்டுள்ள திருமதி. பத்மா சுரேஷ் அவர்கள், தற்சமயம் திருச்சியில் வசித்து வரும், எங்களின் மிக நெருங்கிய உறவினர் ஆவார். 

    சுமார் 8-9 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வெளியிட்டுள்ள இந்தப்பதிவுக்கு, இன்றைக்கும் ஓர் பின்னூட்டம் வந்துள்ளது என்பதே தங்களின் படைப்புக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். பாராட்டுகள். வாழ்த்துகள். 

    இந்தக் குறிப்பிட்ட தங்களின் படைப்பினை சிலாகித்து, பலரிடமும் நான் கூறி வருவதால் மேலும் சில பின்னூட்டங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை.சேவித்துக்கொள்கிறேன்.

      Delete