Sunday, November 13, 2011

இவர்கள் அவர்கள் தலைவர்கள்

அவர்கள் மீது இவர்கள் எப்போதும்
முழுக் கவனமாய் இருக்கும்படி
தலைவர்கள் இவர்களை
தூண்டியபடி இருக்கிறார்கள்

எப்போது தினமும் எழுகிறார்கள் ?
அவர்களது உணவுப் பட்டியல் என்ன?
எவரிடம் பயிற்சி பெறுகிறார்கள் ?
எந்த மைதானத்தில் பயிற்சி பெறுகிறார்கள் ?
அவர்களை ஊக்குவிப்போர் யார் யார் ?

இப்படி அவர்களது பலங்களை மட்டுமல்ல
பலவீனங்களைக் கூட
மிக நீளமாய் பட்டியலிட்டு வைக்கவும்
நாள்தோறும் பயிற்சி அளிக்கிறார்கள்

காலம் நேரம் மறந்து
தனது கடமைகளையும் மறந்து
இப்படி அவர்களுக்காக இவர்கள்
செலவழிக்கிற நேரங்களில்
ஆறில் ஒரு பங்கை மட்டும்
இவர்கள் இவர்களுக்காக மட்டுமே
செலவழிக்கத் துவங்கினால்
இவர்கள்தான் நிச்சயம் வெற்றியாளர்கள்

அந்த ஒரு விஷயம் மட்டும்
 இவர்கள் புரிந்து கொள்ளாதபடி
 தலைவர்கள் மிகக் கவனமாய் செயல்படுகிறார்கள்

எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே

89 comments:

  1. எப்போதும் போல
    தலைவர்கள் தலைவர்களாகவும்
    அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
    தலைமுறை தலைமுறையாகவே

    //////

    நாட்டு நடப்பு!!!

    நல்ல கவிதை!

    ReplyDelete
  2. //அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்//

    அருமை. நல்ல கவிதை.

    ReplyDelete
  3. ////எப்போதும் போல
    தலைவர்கள் தலைவர்களாகவும்
    அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
    தலைமுறை தலைமுறையாகவே
    ////

    அருமையான யதார்ந்தமான வரிகள்

    ReplyDelete
  4. இவர்களில் ஒருவன்.. என்றைக்கும் :)

    ReplyDelete
  5. இவர்கள், இவர்களாகவே இருக்கட்டும்,

    இந்த இவர்கள், அவர்களைப் புரிந்து கொள்ள நேரம் ஆகிறது. புரிந்த பின் 'அட' போட வைக்கிறது கவிதை..

    ReplyDelete
  6. இன்றைய என் மழலைகள் பதிவு வந்ததும் பார்க்க வும்/ தொடர் பதிவில் எழுத உங்களுகு அங்கு அழைப்பு இருக்கிறது நன்றி திரு ரமணீ

    ReplyDelete
  7. யார் யாராக இருந்து யாருக்கென்ன லாபம். நாம் நாமாக இருப்போம். நல்லதை நினைப்போம். நல்லதே செய்வோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. முதலாளித்துவத்தின் ரகசியத்தை இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள் சார். இவர்களுக்கு இது புரிய வைக்க முயற்சித்தால் எவர்களாகவும் நாம் இல்லாமல் போய்விடுவோம். பகிர்விற்கு நன்றி சார்.

    ReplyDelete
  9. நல்ல மனதுடையவர்கள் விசுவாசம் என்ற பெயரில் உழைத்து, அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்...அருமையான பதிவு

    ReplyDelete
  10. // எப்போதும் போல
    தலைவர்கள் தலைவர்களாகவும்
    அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
    தலைமுறை தலைமுறையாகவே//

    மிகமிகத் தெளிவாக இன்றைய
    தலைவர்களையும் தொண்டர்களின் அவல
    நிலையையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல
    எடுத்துக் காட்டியுள்ளீர்!

    பராட்டுக்கள்!

    த ம ஓ 5

    புலவர் ச‍ஆ இராமாநுசம்

    ReplyDelete
  11. //எப்போதும் போல
    தலைவர்கள் தலைவர்களாகவும்
    அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
    தலைமுறை தலைமுறையாகவே//

    நல்ல வரிகள்....

    மிகவும் நல்ல கவிதை....

    ReplyDelete
  12. பலரின் யோக்யதைகளை சொன்னது கவிதை.

    ReplyDelete
  13. சிந்தனைகளின் அருமையான பகிர்வு!!

    ReplyDelete
  14. பத்து முறை படித்தேன் புரிந்து கொள்வதற்கு..
    புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன்...
    ஆனால் உறுதியாக சொல்ல முடியவில்லை..
    நீங்கள் சொல்ல வந்தது என்ன என்று தெரியவில்லை..
    ஆனால் நான் புரிந்து கொண்டதற்கு சரியாக இருந்தது..
    ஆகையால் சூப்பர்

    ReplyDelete
  15. //எப்போதும் போல
    தலைவர்கள் தலைவர்களாகவும்
    அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
    தலைமுறை தலைமுறையாகவே//

    ஆஹா.. புட்டுப் புட்டு வெச்சிட்டீங்க :-))

    ReplyDelete
  16. பதிவு அருமை..
    கடைசி வரிகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. தமிழ்மணம்: 9

    ஆஹா! தங்கள் கவிதையை இவர்களோ அல்லது அவர்களோ படித்துப்பார்த்து விட்டால் என்ன ஆவது?
    எனக்கென்னவோ பயமாக உள்ளது, சார்!

    ReplyDelete
  18. பலவீனங்களை பட்டியலிடுவது நல்ல பழக்கம் அல்லவா?
    please visit my my new blog http://www.blossom111111.blogspot.com

    ReplyDelete
  19. தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  20. ராமலக்ஷ்மி //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  21. K.s.s.Rajh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  22. வேடந்தாங்கல் - கருன் *! //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  23. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  24. சாகம்பரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  25. தென்காசித் தமிழ்ப் பைங்கிளி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  26. லவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்அழகான பின்னூடத்திற்கும் மனமார்ந்த நனறி

    ReplyDelete
  27. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  28. தமிழ் உதயம் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  29. மனோ சாமிநாதன் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  30. suryajeeva //

    எப்போதும் நான் சொன்னதைவிட
    படிப்பவர்கள் புரிந்து கொண்டதுதான்
    சரியாய் இருந்திருக்கிறது இந்தப் பதிவும்
    விதிவிலக்கல்ல
    தங்கள் பின்னூட்டம் மிகச் சரி
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. அமைதிச்சாரல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  32. இந்திரா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  33. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  34. அந்த ஒரு விஷயம் மட்டும்
    இவர்கள் புரிந்து கொள்ளாதபடி
    தலைவர்கள் மிகக் கவனமாய் செயல்படுகிறார்கள்//

    அதுதானே குரு அவர்களின் பலமும் கூட....!!!

    ReplyDelete
  35. MANO நாஞ்சில் மனோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  36. ஆம் அவரவர் அவரவர் பாணியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே
    த.ம 11

    ReplyDelete
  37. அன்பான திரு ரமணி....மழலைகள் உலகம் மகத்தானது தொடர்பதிவில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டுமென விரும்பி என் பதிவில் அழைத்திருக்கிறேன் http://shylajan.blogspot.com/2011/11/blog-post.html
    அவ்சியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    ReplyDelete
  38. M.R //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  39. ///அந்த ஒரு விஷயம் மட்டும்
    இவர்கள் புரிந்து கொள்ளாதபடி///

    இவர்கள் புரிந்து கொண்டாலோ இல்லை அறிந்து கொண்டாலோ அவர்களின் சாம்ராஜ்யமே சரிந்து விடுமே .
    அருமையான கவிதை

    ReplyDelete
  40. angelin //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  41. நல்ல சொல்லாக்கம்.இப்ப்ழுது கொஞ்சசம் மாறியிருக்கிற சார்.இந்த தலைமுறை பேப்பர் வாசிக்கிறார்கள்,தொலைக்காட்சி பார்க்கிறார்கள்,புத்தகம் படிக்கிறார்கள்.அதெல்லாம் இல்லாமலிருந்த காலத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த்தது நிறையவே நடந்தது.இப்பொழுது கொஞ்சம் குறைந்திருக்கிறது.தேவலாம்.அந்த தேவலாம்களை நாம் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

    ReplyDelete
  42. விமலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  43. நாட்டு நடப்பை யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  44. சென்னை பித்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  45. அவர்கள் எப்போதுமே அவர்களாகவே.இவர்களில் யாராவது ஒருவன்....பார்க்கலாம் !

    ReplyDelete
  46. தொண்டர்கள் மெழுகுவர்த்திசுடர்களைப்போல. காலங்காலமாய் எரிந்துகொண்டேயிருக்கிறார்கள். தலைவர்கள் அவர்கள் வெளிச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த அவலம் இங்கே மட்டிலுமே. தொண்டன் ஒருபோதும் தலைவனாவதில்லை. தலைவன் ஒருபோதும் மனிதனாவதில்லை.

    ReplyDelete
  47. மிகத் தெளிவாக தலைவர்களையும் தொண்டர்களின் அவல நிலையையும் யதார்த்தமாகச காட்டியுள்ளீர்கள்...

    குழந்தைகள் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  48. ஹ ர ணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  49. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  50. ரெவெரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  51. தலைவனின் உண்மைநிலையை தொண்டன் புரிந்துகொண்டால் தலைவன் தலைவனாக இருக்கமுடியாது.நல்ல சிந்தனை.

    ReplyDelete
  52. எப்போதும் போல
    தலைவர்கள் தலைவர்களாகவும்
    அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
    தலைமுறை தலைமுறையாகவே

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா .
    இவர்களில் யாராவது ஒருவரேனும்
    மாறும் சூழல் அதிகமா இல்லை என்றுதான்
    பதில் வரும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
    எனக்கு இந்த இலக்கியத் தேனீ விருது
    கிடைத்தது இதை இணைக்கும் விதம்
    தெரியாதலால் இணைக்கவில்லை
    முடிந்தால் அதனை இணைக்கும் வழியை
    என் கருத்துரையில் அறியத் தருவீர்களா?..
    தமிழ் மணமும் .

    ReplyDelete
  53. எல்லோரையும் மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள்.
    எத்தனை தலைமுறை ஆனாலும் மாறப்போவதில்லை . இப்போது இலவசம், ஓட்டுக்குப் பணம் என்று , அடிக்கும் கொள்ளையில் பங்கு கொடுக்கவும் ஆரம்பித்து விட்டனர். எவன் வாயைத் திறந்து கேட்பான் ?

    மிக அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  54. விச்சு //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  55. அம்பாளடியாள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி
    எனக்கும் தெரியாதுதான் என் மகள் விடுமுறையில்
    வந்திருந்தபோது அமைத்துக் கொடுத்து போனாள்
    முதல் வாரம் மீண்டும் வருவாள் அபோது தங்களுக்கு
    விரிவாக இ.மெயில் அனுப்பச் சொல்கிறேன்
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  56. சிவகுமாரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  57. FOOD //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  58. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  59. ஆழ்ந்து சிந்தித்ததில் விளைந்த அருமையான கவிதை!

    ReplyDelete
  60. ஸாதிகா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  61. அண்ணே நச்சுன்னு இருக்கு விஷயம் நன்றி!

    ReplyDelete
  62. தலைவனாகும் தகுதி
    தொண்டர்களைப்
    பெறு(க்கு)வதிலும்
    தக்கவைத்தலிலும்
    இருக்கின்றது!

    தலைவனின் தகுதி
    தொண்டர்களின் தகுதியிலிருந்தே
    பிறக்கிறது!

    ReplyDelete
  63. விக்கியுலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  64. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  65. ஆளுமை மிக்க
    ஒரு போர்த்தளைவனை காண்பது எப்போது??
    பதவியை ஆளும்
    அவர்களும் இவர்களும்
    தான் எங்கள் தலைவர்களா???
    எத்தனை வலுவுள்ள எண்ணங்களை
    எவ்வளவு எளிமையாக சொல்லிவிட்டீர்கள்
    அருமை நண்பரே..

    ReplyDelete
  66. மகேந்திரன் //
    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  67. எப்போதும் போல
    தலைவர்கள் தலைவர்களாகவும்
    அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
    தலைமுறை தலைமுறையாகவே
    >>
    நாட்டு நடப்பை வெளிச்சம் போட்டு காட்டும் வரிகள்.

    ReplyDelete
  68. அருமையான வரிகள்.

    ReplyDelete
  69. நாளுக்கு நாள் மேருகேரிவரும் உங்களின் இடுகை குறிப்பாக சமூக சிந்தனை கலைமட்டுமே கருத்துக் களமாக சிறப்பான ஆக்கங்களாகமலர்கிறது பாராட்டுகளும் நன்றிகளும்

    ReplyDelete
  70. //எப்போதும் போல
    தலைவர்கள் தலைவர்களாகவும்
    அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
    தலைமுறை தலைமுறையாகவே //

    The reality

    ReplyDelete
  71. ராஜி //
    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  72. கோவை2தில்லி
    //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  73. போளூர் தயாநிதி //

    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  74. Madhavan Srinivasagopalan //

    தங்கள் வரவுக்கும்அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  75. எப்போதும் போல
    தலைவர்கள் தலைவர்களாகவும்
    அவர்கள் அவர்களாகவும்
    இவர்கள் இவர்களாகவும்
    தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
    தலைமுறை தலைமுறையாகவே

    ஆண்டாண்டு காலமாய் வண்டியிழுத்துக்கொண்டிருக்கிறது
    கொம்பை மறந்த மாடு

    என்று எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது அன்பரே

    ReplyDelete
  76. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் வரவுக்கும்
    அழகான பின்னூடத்திற்கும்
    மனமார்ந்த நனறி

    ReplyDelete
  77. யானைக்கு தன் பலம் எப்பொழுதும் தெரிவதில்லை சகோ! பாகனின் அங்குசம் போன்றே... இந்த தலைவர்களின் செல்வாக்கும், அதிகாரமும், குறுக்கு புத்தியும் இவர்களின் மூளையை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.. ஒரு அற்புதமான வாழ்வை சில அற்ப சந்தோசங்களுக்காக இந்த எடுபுடிகள் வாழ்வின் உன்னதத்தை நினைக்க மறந்துவிடுகின்றனர்.. இல்லையேல் மறுத்துவிடுகின்றனர்... நாம் அந்த வரிசையில் இல்லாமல் விலகி இருப்போம்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  78. மாய உலகம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  79. துரைடேனியல் //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. மிகச் சரியான முறையில் முறையில்லாதவற்றைப் பற்றிப் பேசி சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள். தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் அவலத்தை சாடிய விதம் அருமை ரமணி சார்.

    ReplyDelete
  81. கீதாm //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  82. //காலம் நேரம் மறந்து
    தனது கடமைகளையும் மறந்து
    இப்படி அவர்களுக்காக இவர்கள்
    செலவழிக்கிற நேரங்களில்
    ஆறில் ஒரு பங்கை மட்டும்
    இவர்கள் இவர்களுக்காக மட்டுமே
    செலவழிக்கத் துவங்கினால்
    இவர்கள்தான் நிச்சயம் வெற்றியாளர்கள்//

    உண்மை தான் சார் ...
    இதை ஏனோ பல நேரங்களின் யாருக்கும் புரிவதில்லை

    ReplyDelete
  83. jayaram thinagarapandian

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  84. Madhavan Srinivasagopalan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  85. முனைவர்.இரா.குணசீலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete