Saturday, May 19, 2012

கரு நாகத்தின் பலவீனம் -3

ஒரு வழியாக பாம்பை அடிக்கக்கூடாது எனவும்
பாம்பாட்டியை அழைத்து பிடித்துப் போவது என
முடிவு செய்தவுடன் உடன் அதற்கான தகவலகளை
விசாரிக்கத் துவங்கினேன்

இப்போது என்றால் பாம்பு பிடிப்பவரின் செல் நம்பர்
 கூட டைரக்டரியிலேயே கிடைக்கிறது.முன்பெல்லாம்
அப்படி இல்லை.அவர்களைத் தேடி அவர்கள் இருக்கும்
கிராமத்திற்குத்தான் போகவேண்டும்

அதன்படி எனது நிர்வாகக் கட்டுப்பாட்டில்
 இருந்த ஒரு கிராமத்தில் பாம்பு பிடிக்கிறவர்கள்
அதிகம் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டு அங்கு போய்
விசாரிக்கத் துவங்கினேன்.

அங்கு போய் விசாரிக்கையில்தான் பாம்பு பிடித்து
அதன் தோலை உரித்து விற்று அதை
ஒரு தொழிலாக செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம்
அதிகாரிகள் அடிக்கடி வந்து பாம்பு பிடிக்கத்
தடை உள்ளதாகச் சொல்லி ரெய்ட் வந்து
பாம்புத் தோலை பறிமுதல் செய்து போவதோடு
அல்லாமல் கேஸும் பதிவு செய்வதால்
வெறுப்படைந்து  போய் பாம்பு பிடிக்கும் தொழிலையே
விட்டு விட்டு சித்தாள் வேலைக்கும்
 நிமிந்தாள் வேலைக்கும் போய்க்கொண்டிருப்பதாகச்
 சொன்னார்கள்

பின் அந்த கிராமத் தலைவரிடம் என் நிலைமையைச்
சொல்லி எப்படியாவது  கொஞ்சம் தெளிவான
ஒருவரை மட்டும்எனக்காக அனுப்பிவைக்கும்படி
கேட்டுக் கொள்ளஅவர் உடன் ஊருக்குள்
தகவல் சொல்லி ஒரு பெரியவரை அழைத்துவந்து
என் முன் நிறுத்தினார்

அவர் முழுக் கதையையும் கேட்டுவிட்டு
  "இதற்குப் போயா இத்தனை தூரம் வந்தீர்கள்
இப்படிச் செய்தால் போதுமே .அந்தக் கரு நாகம்
அத்தோடு மண்ணாகிப் போகுமே " என
நான் செய்ய வேண்டியதைச் சொல்ல
 எனக்கே ப்.பூ.. கரு நாகத்தின் பலம்அவ்வளவுதானா
எனப் பட்டது

பாக்கியராஜ் அவர்கள் டார்லிங் டார்லிங் படத்தில்
இறுதிக் காட்சியில் மனம் வெறுத்துப் போய்
தற்கொலை செய்து கொள்வதற்காக மலை உச்சிக்கு
விரைந்து கொண்டிருப்பார்..அவர் காதலி
அவரைத் தடுத்து நிறுத்த தொடர்ந்து
 கத்திக் கொண்டே வர இவர் அதனைக் கண்டு
கொள்ளாது மலை உச்சிக்கே வந்து நின்று
குதிக்கப் போகிற பாவனையில்
முகத்தில் ஒரு உணர்ச்சிக் குவியலைக் காட்டுவார்
அதில் அந்த மலையின் அதல பாதாளமே
அவர் முகத்தில் பிரதிபலிப்பதாகத் தெரியும்
நாமும் அதிர்ந்து போய் இருக்கையின் நுனிக்கே
வந்து விடுவோம்.அடுத்த காட்சியில்
மலைச் சரிவுக்கு பதிலாக அவருக்கு முன்னெ
அகலமான அழகான தார்ச் சாலையும் அதில்
காரும் பஸ்ஸும் போய்க்கொண்டிருக்கும்
நம்மையும் அறியாது நாமும் அவரின் காதலியோடு
சிரிக்கத் துவங்கிவிடுவோம்

அந்தப் பெரியவர் அந்த கரு நாகத்தைக்
கொல்வதற்குச் சொன்னவழியைக் கேட்டதும்
எனக்குள் ஏனோ இந்தக் காட்சிதான்
உடன் நினைவுக்கு வந்துபோனது

(தொடரும் )

66 comments:

  1. சார் அடுத்த பதிவு எப்ப?

    ReplyDelete
  2. ரமணி அண்ணா! அந்த பாம்புக்கு ஒரு நல்ல (!) பேரு வைக்கலாமே!
    ஆனா தயவுசெய்து அதை அடிச்சி மட்டும் கொன்னுடாதீங்க !
    இப்படி நீங்க நிறைய அனுபவ பதிவுகள் போடம்னுகறது என்னோட விருப்பம்..
    எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்..

    ReplyDelete
  3. Coboxolic Acid.. -- chemical keeps snakes away.. (not 100 % proved).. but read / heart it.

    Another option is 'Garlic'(keeping the snakes away) -- internet search got me this result.

    Ramani Sir, when will you bring us out of suspense..?

    ReplyDelete
  4. அடடா, பாம்பு சஸ்பென்ஸ் இன்றும் தொடர்கிறதே!

    என்னுடைய
    http://gopu1949.blogspot.com/2011/02/1-8.html

    ” ’எ லி’ ஸபத் டவர்ஸ் ” நகைச்சுவைக் கதையில் 8 பாகங்களில் எலியை ஓடவிட்டிருப்பேன். கடைசிவரை சஸ்பென்ஸ் நீடிக்கும்.

    அதுபோல இந்த தங்களின் மிக நீண்ட கருநாகமும் கடைசிவரை பிடிக்கப்படுமா இல்லையா என ஒரே த்ரில்லிங் ஆக உள்ளது.

    தொடரின் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. திரில்லிங் தொடர்கிறது ..!

    ReplyDelete
  6. இதுதான் திரில்லிங் என்பதா..
    அடுத்த பாகத்தில் முடிந்துவிடுமா..
    இல்லை பாம்பைப் போல ந்ந்ந்நீண்டுவிடுமா?

    ReplyDelete
  7. எமது நேரம் நள்ளிரவு 2.15 கு இப்பதிவைப் படிக்கிறேன்! இன்றும் அதே பரபரப்பு இருந்தது! ஆனால் நான் எதிர்பார்த்த பகுதி வரவில்லை ரமணி சார்! ஆமா கருநாகத்தின் பலவீனம் தான் என்ன?? அறிய ரொம்ப ஆவல்!!!

    ReplyDelete
  8. Zero to Infinity //

    சார் அடுத்த பதிவு எப்ப? //

    தங்கள் முதல் வரவுக்கு உற்சாகம் தரும் அருமையான
    பின்னூட்டத்திர்கும் மனமார்ந்த நன்றி
    இன்னும் இரண்டு நாளில் அடுத்த பதிவிருக்கும்
    கரு நாகத்தின் பலவீனமும் அதில் இருக்கும்

    ReplyDelete
  9. Lali //

    ஆனா தயவுசெய்து அதை அடிச்சி மட்டும் கொன்னுடாதீங்க !
    இப்படி நீங்க நிறைய அனுபவ பதிவுகள் போடம்னுகறது என்னோட விருப்பம்..
    எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்..//

    நிச்சயமாக
    தங்கள் அன்புக்கும் அருமையான
    ரசிக்கும்படியான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Madhavan Srinivasagopalan /

    Ramani Sir, when will you bring us out of suspense..?//

    தங்கள் வரவுக்கு உற்சாகம் தரும் அருமையான
    பின்னூட்டத்திர்கும் மனமார்ந்த நன்றி
    இன்னும் இரண்டு நாளில் அடுத்த பதிவிருக்கும்
    கரு நாகத்தின் பலவீனமும் அதில் இருக்கும்

    ReplyDelete
  12. அடடா... இதுவரைக்கும் பாம்பு படுத்தின பாடுதான் சஸ்பென்ஸா போயிட்டிருந்துச்சு. இப்ப அதோட பலவீனம் என்னங்கற கேள்வில வந்ததும் டாப் கியருக்குப் போயிடுச்சு ஆர்வம்? என்ன அது...? சீக்கிரம் சொல்லுங்க ரமணி ஸார்! (த.ம.4)

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் //

    தொடரின் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    பாராட்டுக்கள் //

    நிதானமாக ரசிக்கும்படியாக கதை சொல்லும் யுக்தியை
    தங்கள் கதைகளின் மூலம்தான் கற்றுக் கொண்டேன்
    எனது மானசீக குருவாக விளங்கிற தங்கள் பாராட்டு
    உண்மையில் எனக்கு அதிக தெம்பளிக்கிறது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள் //

    திரில்லிங் தொடர்கிறது ..!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. மாத்தியோசி - மணி .//
    .
    எமது நேரம் நள்ளிரவு 2.15 கு இப்பதிவைப் படிக்கிறேன்! இன்றும் அதே பரபரப்பு இருந்தது! !//

    !தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
    இன்னும் இரண்டு நாளில் அடுத்த பதிவிருக்கும்
    கரு நாகத்தின் பலவீனமும் அதில் இருக்கும்

    ReplyDelete
  16. What's that secret?? Waiting for your next post.

    ReplyDelete
  17. கணேஷ் //

    அடடா... இதுவரைக்கும் பாம்பு படுத்தின பாடுதான் சஸ்பென்ஸா போயிட்டிருந்துச்சு. இப்ப அதோட பலவீனம் என்னங்கற கேள்வில வந்ததும் டாப் கியருக்குப் போயிடுச்சு ஆர்வம்? என்ன அது...? சீக்கிரம் சொல்லுங்க ரமணி ஸார்!

    !தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப் போல
    சிறந்த எழுத்தாளாரான தாங்கள் நிச்சயம்
    இதனை யூகம் செய்திருப்பீர்கள்
    ஆயினும் ஒரு க்ளூ
    நிச்சயம் பாக்கியராஜ் சாரின் கதை சொல்லி இருக்கிறேனே
    அதைப் போலத்தான் கரு நாகத்தின் பலவீனமும் இருக்கும்

    ReplyDelete
  18. vanathy //

    What's that secret?? Waiting for your next post.//

    !தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. ரமணி சார் நீங்கள்தான் தமிழ் டிவி சிரியல்களுக்குகெல்லாம் கதை வசனம் எழுதுகிறவரா உண்மையை சொல்லிவிடுங்க... ஒரு வேளை இல்லையென்று சொன்னால் நிங்கள் இப்பவே எழுத தொடங்குங்கள் நல்ல எதிர்காலம் உண்டு.....


    இந்த பதிவு முடியும் நேரத்தில் தமிழ்நாட்டில் பவர்கட்டே இல்லாத நிலமை ஏற்பட்டாலும் அதியமில்லை சரிதானே சார்

    நன்றாக இருக்கிறது தொடருங்கள்....

    ReplyDelete
  20. போகிற போக்கைப் பார்த்தால் பாம்பு பிடிபடாது
    என்றே தோன்றுகிறது! பார்க்கலாம்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. Avargal Unmaigal //

    ரமணி சார் நீங்கள்தான் தமிழ் டிவி சிரியல்களுக்குகெல்லாம் கதை வசனம் எழுதுகிறவரா உண்மையை சொல்லிவிடுங்க... ஒரு வேளை இல்லையென்று சொன்னால் நிங்கள் இப்பவே எழுத தொடங்குங்கள் நல்ல எதிர்காலம் உண்டு....//

    இதனை பாராட்டுபோல எடுத்துக்கொள்வதா இல்லை

    ந்த "அணி "போல எடுத்துக் கொள்வதா எனத் தெரி
    யவில்லை
    தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. புலவர் சா இராமாநுசம் /
    /
    போகிற போக்கைப் பார்த்தால் பாம்பு பிடிபடாது
    என்றே தோன்றுகிறது! பார்க்கலாம்!//

    உங்களுக்கு பதிவின் போக்கு பிடிபட்டுவிட்டதோ
    எனத் தோன்றுகிறது
    தங்கள் வரவுக்கும் அருமையான பினூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. கரு நாகத்தின் பலம்அவ்வளவுதானா !

    அந்த அருமையான டெக்னிக் என்ன ???

    ReplyDelete
  24. இராஜராஜேஸ்வரி //
    .
    கரு நாகத்தின் பலம்அவ்வளவுதானா !
    அந்த அருமையான டெக்னிக் என்ன ???//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்மனமார்ந்த நன்றி
    தங்கள் பதிவின் அனுமனின் திரு உருவப் படங்களையும்அவரது மகிமைகளின் விளக்கமான பதிவினையும் படித்து மகிழ்ந்தேன்
    .இரண்டு மூன்று முறை முயன்றும்
    பின்னூட்ட்ப் பெட்டி திறக்க முடியவில்லை
    அருமையான பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. புதிர் மேல் புதிர் போடுகிறீர்களே முடியல சீக்கிரம் சொல்லுங்கோ

    ReplyDelete
  26. தொடருங்கள் ஓடி வருகிறோம் கூடவே.படிப்பதற்கு.

    ReplyDelete
  27. கருநாகத்தின் பலகீனம் என்ன அறிய பேராவல்.சீக்கிரம் அடித்த பதிவு பிளீஸ்..

    ReplyDelete
  28. அடுத்த பதிவு எப்போன்னு எதிர்பார்க்கவச்சுட்டீங்க.

    ReplyDelete
  29. நல்ல சுவாரசியமாக
    பயணிக்கிறது கதை
    சஸ்பென்ஸ் தான் ம்ம்ம் கதையின் உயிர்

    இப்படி எங்க தவிக்க வைக்கிறீங்க சார்
    கடைசி பாகத்தை சீக்கிராமா போடுங்க

    ReplyDelete
  30. பாம்பை மடியில் கட்டி வாழ்வது போல் என்பார்கள் .உங்கள் கதையில் அது புரிகின்றது . என்ன அந்த அபூர்வ இலகுவான தாக்குதல் முயற்சி என்று அறியும் ஆவலுடன் நான்

    ReplyDelete
  31. பாம்பு போலவே பாம்பை அடிக்கிற கதையும் நீளமாப் போகுது.ஆனா அடுத்து என்னன்னு ஆவலா இருக்கு !

    ReplyDelete
  32. பாம்பு கதை பரப்பரப்பா போகுது சார்...அடுத்தப் பதிவை சீக்கிரமேப் போடுங்க..

    ReplyDelete
  33. விறு விறுப்பு கூடிக்கொண்ட போகிறது.
    த,ம. 9

    ReplyDelete
  34. இன்னமும் முடியல்லயா இந்த மேட்டர்

    ReplyDelete
  35. பாம்பை வெச்சு 3 பதிவை தேத்திட்டீஙளே ஐயா?

    ReplyDelete
  36. சஸ்பென்ஸ் !!!!!!!!!!!!!!!!
    எவ்ளோ சஸ்பென்ஸ் என்றாலும் பரவாயில்லை
    ஆனா அதன் மேல் சிறு கீறலும் பட கூடாது :))))) ப்ளீஸ் அண்ணா .

    ReplyDelete
  37. அடடா... இன்றைக்கும் பாம்பு தப்பித்துவிட்டதா...?

    புலி அடிக்கும் என்பதைவிட
    கிலி அடிக்கும் என்பார்கள்.
    அந்தக்கதை போல் தான் இருக்கிறது.
    தொடருங்கள் ரமணி ஐயா... சுவாரசியமாக இருக்கிறது.

    ReplyDelete
  38. அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப?;-)))

    ReplyDelete
  39. உடனடியாக அடுட்த்த பாகம் போடுங்கள்

    ReplyDelete
  40. அளவுக்கு மீறிய சஸ்பென்ஸும் ஆர்வத்தைக் குறைக்கும்.

    ReplyDelete
  41. மனசாட்சி™ //
    .
    புதிர் மேல் புதிர் போடுகிறீர்களே முடியல சீக்கிரம் சொல்லுங்கோ //

    அடுத்த பதிவில் பாம்பின் கதையும்
    தொடரும் நிச்சயம் முடிந்துவிடும்
    தங்க்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. விமலன் //
    ..
    தொடருங்கள் ஓடி வருகிறோம் கூடவே.படிப்பதற்கு.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ஸாதிகா //
    ..
    கருநாகத்தின் பலகீனம் என்ன அறிய பேராவல்.சீக்கிரம் அடித்த பதிவு பிளீஸ்..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. Lakshmi //

    அடுத்த பதிவு எப்போன்னு எதிர்பார்க்கவச்சுட்டீங்க.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. செய்தாலி //

    நல்ல சுவாரசியமாக
    பயணிக்கிறது கதை
    சஸ்பென்ஸ் தான் ம்ம்ம் கதையின் உயிர் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. சந்திரகௌரி //
    ..
    பாம்பை மடியில் கட்டி வாழ்வது போல் என்பார்கள் .உங்கள் கதையில் அது புரிகின்றது . என்ன அந்த அபூர்வ இலகுவான தாக்குதல் முயற்சி என்று அறியும் ஆவலுடன் நான் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. ஹேமா //
    .
    பாம்பு போலவே பாம்பை அடிக்கிற கதையும் நீளமாப் போகுது.ஆனா அடுத்து என்னன்னு ஆவலா இருக்கு //

    !அடுத்த பதிவில் பாம்பின் கதையும்
    தொடரும் நிச்சயம் முடிந்துவிடும்
    தங்க்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. Manimaran //

    பாம்பு கதை பரப்பரப்பா போகுது சார்...அடுத்தப் பதிவை சீக்கிரமேப் போடுங்க..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. T.N.MURALIDHARAN //

    விறு விறுப்பு கூடிக்கொண்ட போகிறது.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. சிட்டுக்குருவி //
    .
    இன்னமும் முடியல்லயா இந்த மேட்டர் //

    !அடுத்த பதிவில் பாம்பின் கதையும்
    தொடரும் நிச்சயம் முடிந்துவிடும்
    தங்க்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. ராஜி //

    பாம்பை வெச்சு 3 பதிவை தேத்திட்டீஙளே ஐயா?/

    !அடுத்த பதிவில் பாம்பின் கதையும்
    தொடரும் நிச்சயம் முடிந்துவிடும்
    தங்க்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. angelin //

    சஸ்பென்ஸ் !!!!!!!!!!!!!!!!
    எவ்ளோ சஸ்பென்ஸ் என்றாலும் பரவாயில்லை
    ஆனா அதன் மேல் சிறு கீறலும் பட கூடாது :))))) ப்ளீஸ் அண்ணா //.

    நிச்சயமாக .....
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. AROUNA SELVAME

    புலி அடிக்கும் என்பதைவிட
    கிலி அடிக்கும் என்பார்கள்.
    அந்தக்கதை போல் தான் இருக்கிறது.
    தொடருங்கள் ரமணி ஐயா... சுவாரசியமாக இருக்கிறது.//

    அருமையான பழமொழியை அறியச் செய்தமைக்கும்.....
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. காட்டான் //.

    அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப? அடுத்த பதிவு எப்ப?;-)))//

    நான் ரசித்த அருமையான பின்னூட்டம்....
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. மௌனகுரு //

    உடனடியாக அடுட்த்த பாகம் போடுங்கள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. அமர பாரதி //

    அளவுக்கு மீறிய சஸ்பென்ஸும் ஆர்வத்தைக் குறைக்கும்.//

    புரிந்து கொண்டேன்
    தங்கள் கருத்துக்கும்..வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. சார்.. சீக்கிரம் கதையின் க்ளைமாக்ஸ் சை சொல்லுங்கள்..

    ReplyDelete
  58. sathish prabu //

    நிச்சயமாக .....
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த ந

    ReplyDelete
  59. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.படிக்கும்போதே நடுங்குகிறதே.ஒரு அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர்!காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  60. அடுத்தது எப்போது? அது என்ன? aaval....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  61. அண்ணே வெயிட்டிங் வெயிட்டிங்!

    ReplyDelete
  62. சென்னை பித்தன் //
    .
    அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர்!காத்திருக்கிறேன்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. kovaikkavi //

    அடுத்தது எப்போது? அது என்ன? aaval....//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. விக்கியுலகம் //

    அண்ணே வெயிட்டிங் வெயிட்டிங்!//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete