Saturday, July 28, 2012

ஆண்டவன் பிரச்சனை

இருக்கிறது என்பதுவும் பிரச்சனையில்லை
இல்லையென்பதுவும் பிரச்சனையில்லை
இருக்கிறது என்ச் சொல்லிப் பிழைப்பதுவும்
இல்லையெனச் சொல்லிப் பிழைப்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

நம்புவதும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்பாததும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்புபவன் நம்பாதவனை முட்டாள் என்பதுவும்
நம்பாதவன் நம்புபவனை முட்டாள் என்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

கோவில் சன்னதி பக்தி முதலான
நம்பிக்கைகள் கூட பிரச்சனையில்லை
நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்கவேண்டியவனே
சன்னதிக்குள் லீலைபுரிவதே பிரச்சனை

பகுத்தறிவு மூட நம்பிக்கை ஒழிப்பு முதலான
பிரச்சாரங்கள் கூட பிரச்சனையில்லை
பிரச்சாரம் செய்பவனே த்ன் வீட்டிற்கு அது
பொருந்தாது என்பதுதான் பிரச்சனை

போற்றிப் புகழ்ந்தால் அள்ளி வழங்கவோ
தூற்றித் திரிந்தால் தீமை புரியவோ
ஆண்டவன் மனிதன் இல்லை
அவன் கதிரவனைப் போல் பொதுவானவன்

நோயுள்ளவனை நடுங்கச் செய்தும்
பலசாலியை மகிழச் செய்தும்  போகும்
தென்றல் இரண்டாக இல்லை
அதுவும்  நிலவைப் போல் பொதுவானதே

மொத்தத்தில்
பிரச்சனைகள் எதுவும்
ஆண்டவனால் சிறிதும் இல்லை
சித்தத்தில்
இதனைக் கொண்டால் இங்கே
இத்தனை பிரச்சனை இல்லை

66 comments:

  1. //இருக்கிறது என்ச் சொல்லிப் பிழைப்பதுவும்
    இல்லையெனச் சொல்லிப் பிழைப்பதுவும்தான்
    இப்போது இங்கே பிரச்சனை//

    மிக அருமையாக சொன்னீங்கே

    //நம்புபவன் நம்பாதவனை முட்டாள் என்பதுவும்
    நம்பாதவன் நம்புபவனை முட்டாள் என்பதுவும்தான்
    இப்போது இங்கே பிரச்சனை//

    இப்படி சொல்லும் அனைவரும் முட்டாள்கள்

    ReplyDelete
  2. எவரும் மறுக்க இயலாத உண்மை. அழுத்தமாய் மனதில் பதிந்தது உங்களின் எழுத்தில். அருமை ஐயா... (3)

    ReplyDelete
  3. சபாஷ் மிக அருமையாக நெத்திபொட்டில் அறைந்தார் போல தெளிவாக சொன்னீர்கள்

    ReplyDelete
  4. நல்லதொரு கருத்தை நயமாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. நன்றாக கூறினீர்கள் (TM 6)

    ReplyDelete
  6. //மொத்தத்தில்
    பிரச்சனைகள் எதுவும்
    ஆண்டவனால் சிறிதும் இல்லை//
    சிந்திக்க வைத்த கருத்துக்கள்
    த,ம. 7

    ReplyDelete
  7. பகுத்தறிவு மூட நம்பிக்கை ஒழிப்பு முதலான
    பிரச்சாரங்கள் கூட பிரச்சனையில்லை
    பிரச்சாரம் செய்பவனே தன் வீட்டிற்கு அது
    பொருந்தாது என்பதுதான் பிரச்சனை....super..

    ReplyDelete
  8. மொத்தத்தில்
    பிரச்சனைகள் எதுவும்
    ஆண்டவனால் சிறிதும் இல்லை
    சித்தத்தில்
    இதனைக் கொண்டால் இங்கே
    இத்தனை பிரச்சனை இல்லை
    ஆமா ரொம்ப சரிதான்

    ReplyDelete
  9. மொத்தத்தில்
    பிரச்சனைகள் எதுவும்
    ஆண்டவனால் சிறிதும் இல்லை
    சித்தத்தில்
    இதனைக் கொண்டால் இங்கே
    இத்தனை பிரச்சனை இல்லை//

    ஆம், உண்மைதான் சிந்தித்து நடந்தால் பிரச்சினை ஏதும் இல்லை.

    ReplyDelete
  10. சிறப்பான கருத்துக்கள் கொண்ட சிறப்பு கவிதை!

    இன்று என் தளத்தில் பூனையும் எலியும் பாப்பாமலர்! http;//thalirssb.blogspot.in

    ReplyDelete
  11. பிரச்சனைகள் எதுவும்
    ஆண்டவனால் சிறிதும் இல்லை
    சித்தத்தில்
    இதனைக் கொண்டால் இங்கே
    இத்தனை பிரச்சனை இல்லை

    முத்தான முத்தாய்ப்பான சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. கருத்துள்ள கவிதைக்கு நன்றி சார் ! (த.ம. 9)

    ReplyDelete
  13. // பகுத்தறிவு மூட நம்பிக்கை ஒழிப்பு முதலான
    பிரச்சாரங்கள் கூட பிரச்சனையில்லை
    பிரச்சாரம் செய்பவனே த்ன் வீட்டிற்கு அது
    பொருந்தாது என்பதுதான் பிரச்சனை //

    மிகச் சரியாக சொன்னீர்கள் !!!

    ReplyDelete
  14. இல்லாத கடவுளால் என்றுமே பிரச்சனை இல்லை ..
    இல்லாதவை பொல்லாதவைகளை கடவுளாக்கிவிடத் துடித்துடும் மானுடர்களே மானுடத்துக்கு பிரச்சனை !

    ReplyDelete
  15. நம்புவதும் ஒன்றும் பிரச்சனையில்லை
    நம்பாததும் ஒன்றும் பிரச்சனையில்லை
    நம்புபவன் நம்பாதவனை முட்டாள் என்பதுவும்
    நம்பாதவன் நம்புபவனை முட்டாள் என்பதுவும்தான்
    இப்போது இங்கே பிரச்சனை

    அருமை!...ஆணி அடித்ததுபோல் வேறு பேச்சுக்கே
    இடம் இல்லை .அவரவர் அவரவர் வேலைகளை
    செய்வதிலும் பிறர் நம்பிக்கையை சிதறட்டிக்க
    முயற்சிக்காமலும் இருந்தாலே எந்தப் பிரச்சனையும்
    இல்லை.அருமையான தலைப்பு சூடான பதில்
    மனதைக் கவர்ந்து நிக்குறது கவிதை .தொடர
    வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  16. mmm!

    mikka nantrAaka ullathu!

    ReplyDelete
  17. ஆழமாகவும்
    அழகாகவும் சொன்னீர்கள் நன்று.

    ReplyDelete
  18. // மொத்தத்தில் பிரச்சனைகள் எதுவும் ஆண்டவனால் சிறிதும் இல்லை //

    உண்மைதான். ஆண்டவனால் படைக்கப் பட்டவர்களால்தான் பிரச்சினை. பேசாமல் ஆண்டவனே நேரில் வந்து விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும். ஏனெனில் ஒரு பக்கம் கவிஞர் ரமணி இன்னொரு பக்கம் பழனி.கந்தசாமி என்று ஆண்டவனை ” வலை “ போட்டு தேடுகின்றனர்.

    ReplyDelete
  19. //மொத்தத்தில்
    பிரச்சனைகள் எதுவும்
    ஆண்டவனால் சிறிதும் இல்லை
    சித்தத்தில்
    இதனைக் கொண்டால் இங்கே
    இத்தனை பிரச்சனை இல்லை//

    உங்க வலைப்பூவின் பெயரை விடையாகக் கொண்ட இந்த வரிகள் மிகவும் கவர்ந்தன. அருமை.

    ReplyDelete
  20. ஆண்டவன் தான் கல்லாவோ, அருவமாவோ இருக்கிறானே!

    ஆண்டவனால் பிரச்சனை இல்லை..ஆதிக்கவாதிகளால் தான்!

    ReplyDelete
  21. எந்த ஒரு செய்தியையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டால்
    நல்லதே விளையும்...
    ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு தனக்கு என்று வரும்போது அதை
    தவறவிடுதலில் தான் குழப்பம் அதிகம்..

    அருமையா சொன்னீங்க நண்பரே..

    ReplyDelete
  22. "சித்தத்தில்
    இதனைக் கொண்டால்...." சரியாகச்சொன்னீர்கள்.

    ReplyDelete
  23. நம்புவதும் ஒன்றும் பிரச்சனையில்லை
    நம்பாததும் ஒன்றும் பிரச்சனையில்லை
    நம்புபவன் நம்பாதவனை முட்டாள் என்பதுவும்
    நம்பாதவன் நம்புபவனை முட்டாள் என்பதுவும்தான்
    இப்போது இங்கே பிரச்சனை//

    உன் சித்தத்தில் இதனை கொண்டால் உலகம் வாழுமடா நிலைகெட்ட மனிதா....! அருமை அருமை...!

    ReplyDelete
  24. இருப்பவை,இல்லாமைக்கு இடையில் நாம் தான் குழம்பிக்கொண்டிருக்கிறோம்.வாழ்த்துக்கள் ஐயா!அருமை.

    ReplyDelete
  25. அவரவர் நம்பிக்கை அவரவருக்குப் பெரிய விஷயம்.அதை மறுக்க அடுத்தவர்க்கு உரிமையில்லை.நல்ல கருத்துச் சொன்னீர்கள் ஐயா !

    ReplyDelete
  26. பிரச்சனையே இங்க இல்லையே......
    பொதுவாக புரிந்துணர்வு இன்ன்மையென்பதே பிரச்சனையாக வெளிப்படுகிறது புரிந்து கொண்டால் எல்லாம் ஒK சார்..... 17

    ReplyDelete
  27. வழக்கம் போலவே அழகான வரிகள். அசத்தலான கவிதை. தொடருங்கள்.

    ReplyDelete
  28. ஹைதர் அலி //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. பால கணேஷ் //

    .
    எவரும் மறுக்க இயலாத உண்மை. அழுத்தமாய் மனதில் பதிந்தது உங்களின் எழுத்தில். அருமை //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. மனசாட்சி™ //

    சபாஷ் மிக அருமையாக நெத்திபொட்டில் அறைந்தார் போல தெளிவாக சொன்னீர்கள்//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. கோவி //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. ஸ்ரீராம். //

    நல்லதொரு கருத்தை நயமாகச் சொல்லியுள்ளீர்கள்.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. வரலாற்று சுவடுகள் //

    நன்றாக கூறினீர்கள்//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. T.N.MURALIDHARAN //

    சிந்திக்க வைத்த கருத்துக்கள் //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. வல்லத்தான் //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. Lakshmi //

    ஆமா ரொம்ப சரிதான்/

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. கோமதி அரசு //

    /ஆம், உண்மைதான் சிந்தித்து நடந்தால் பிரச்சினை ஏதும் இல்லை.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. s suresh //


    ..சிறப்பான கருத்துக்கள் கொண்ட சிறப்பு கவிதை!//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. இராஜராஜேஸ்வரி //

    முத்தான முத்தாய்ப்பான சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்கள்..//


    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. இக்பால் செல்வன் //

    மிகச் சரியாக சொன்னீர்கள் !!!//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. திண்டுக்கல் தனபாலன் //

    கருத்துள்ள கவிதைக்கு நன்றி சார் //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. அம்பாளடியாள் //

    .அருமையான தலைப்பு சூடான பதில்
    மனதைக் கவர்ந்து நிக்குறது கவிதை .தொடர
    வாழ்த்துக்கள் ஐயா //.

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. Seeni //

    mikka nantrAaka ullathu//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. முனைவர்.இரா.குணசீலன் //

    ஆழமாகவும்
    அழகாகவும் சொன்னீர்கள் //

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. தி.தமிழ் இளங்கோ//

    உண்மைதான். ஆண்டவனால் படைக்கப் பட்டவர்களால்தான் பிரச்சினை. பேசாமல் ஆண்டவனே நேரில் வந்து விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும். ஏனெனில் ஒரு பக்கம் கவிஞர் ரமணி இன்னொரு பக்கம் பழனி.கந்தசாமி என்று ஆண்டவனை ” வலை “ போட்டு தேடுகின்றனர்

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. அமைதிச்சாரல் //...

    உங்க வலைப்பூவின் பெயரை விடையாகக் கொண்ட இந்த வரிகள் மிகவும் கவர்ந்தன. அருமை.//


    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. ரமேஷ் வெங்கடபதி //

    ஆண்டவனால் பிரச்சனை இல்லை..ஆதிக்கவாதிகளால் தான்//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. மகேந்திரன் //

    அருமையா சொன்னீங்க நண்பரே..//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. மாதேவி //

    "சித்தத்தில்
    இதனைக் கொண்டால்...." சரியாகச்சொன்னீர்கள்.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. MANO நாஞ்சில் மனோ //

    உன் சித்தத்தில் இதனை கொண்டால் உலகம் வாழுமடா நிலைகெட்ட மனிதா....! அருமை அருமை...!//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. Athisaya //

    இருப்பவை,இல்லாமைக்கு இடையில் நாம் தான் குழம்பிக்கொண்டிருக்கிறோம்.வாழ்த்துக்கள் ஐயா!அருமை.//

    தங்கள் உடன்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. அருமையாக சொல்லி உள்ளீர்...

    ReplyDelete
  53. எனக்கு எந்தப் பிரட்சனையும் இல்லைங்க.
    வெளிச்சம் வேண்டுமானால் விளக்கைப் போடுகிறேன்.
    வேண்டாம் என்றால் அணைத்துவிடுகிறேன்.

    அவ்வளவு தாங்க.
    அருமையான பதிவுக்கு மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

    ReplyDelete
  54. ஹேமா //

    அவரவர் நம்பிக்கை அவரவருக்குப் பெரிய விஷயம்.அதை மறுக்க அடுத்தவர்க்கு உரிமையில்லை.நல்ல கருத்துச் சொன்னீர்கள் ஐயா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. சிட்டுக்குருவி //

    பிரச்சனையே இங்க இல்லையே......
    பொதுவாக புரிந்துணர்வு இன்ன்மையென்பதே பிரச்சனையாக வெளிப்படுகிறது புரிந்து கொண்டால் எல்லாம் ஒK //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. vanathy //

    வழக்கம் போலவே அழகான வரிகள். அசத்தலான கவிதை. தொடருங்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. ///மொத்தத்தில்
    பிரச்சனைகள் எதுவும்
    ஆண்டவனால் சிறிதும் இல்லை///

    சரியாய்ச் சொன்னீர்கள். அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கவேண்டும் என்று உணரும்/உணரமறுக்கும் மனிதனின் ஆறாம் அறிவால் தான் பிரச்சனைகள். மனிதனே இல்லாத விலங்குகள் உலகில், அன்றாட உணவுப்பிரச்சனையைத் தவிர வேறு பிரச்சனையே இருக்காது.

    ReplyDelete
  58. சங்கவி //

    அருமையாக சொல்லி உள்ளீர்..//.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டிப்போகும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. AROUNA SELVAME //

    எனக்கு எந்தப் பிரட்சனையும் இல்லைங்க.
    வெளிச்சம் வேண்டுமானால் விளக்கைப் போடுகிறேன்.
    வேண்டாம் என்றால் அணைத்துவிடுகிறேன்
    .அவ்வளவு தாங்க.
    அருமையான பதிவுக்கு மிக்க நன்றிங்க ரமணி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. நித்திலன் //.

    சரியாய்ச் சொன்னீர்கள். அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கவேண்டும் என்று உணரும்/உணரமறுக்கும் மனிதனின் ஆறாம் அறிவால் தான் பிரச்சனைகள். மனிதனே இல்லாத விலங்குகள் உலகில், அன்றாட உணவுப்பிரச்சனையைத் தவிர வேறு பிரச்சனையே இருக்காது.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. நமக்கு பிரச்ச்சனை வந்தா ஆண்டவனை போய் பார்க்குறோம். ஆண்டவனுக்கு ஒரு பிரச்சனைன்னா?!

    ReplyDelete
  62. ராஜி //

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. இனிய கருத்து சொல்லும் நற்கவிதை...

    த.ம. 18

    ReplyDelete
  64. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனவெங்கட் நாகராஜ் மார்ந்த நன்றி

    ReplyDelete
  65. இங்கு பிரச்சனை எல்லாம் நம் எண்ணங்களாலும் செயல்களாலுமே! அருமையான பகிர்வு சார்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete