உணவுக்கான மூலப் பொருட்களில்
சுவையையும் மணத்தையும்
இயற்கை மிக நேர்த்தியாகச்
சேர்த்து வைத்திருக்க
அதனை மிகச் சரியாகச் சேர்மானம்
செய்தலதை மட்டுமே செய்தவன்
சமையல் சக்கரவர்த்தியாகிப் போகிறான்
அடுப்படியில்
வெக்கையிலும் புழுக்கத்திலும்
வெந்தபடி நளபாகம் செய்தவன்
வெறுமனே இருக்க
அதனை பணிவாகத்
தருதலைச் செய்வபவன் தான்
அன்பளிப்புப் பெற்றுப் போகிறான்
காட்டை மேட்டைத்
தன் கடின உழைப்பால்
நிலமாக்கித் தோட்டமாக்கி
உலகுக்கு உயிரளிப்பவன்
வறுமையில் வெந்து சாக
இடையில் இருப்பவனே
கொள்ளை லாபம் கொள்கிறான்
குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு சிறு நிகழ்விலும் உயர்விலும்
தன்னை முற்றாக இணைத்துக் கொண்டவள்
துணைவியாய் மட்டுமே
அங்கீகரிக்கப் பட்டிருக்க
பொருளீட்டிக் கொடுத்தலை மட்டுமே செய்தவன்
குடும்பத் தலைவனாகிப் போகிறான்
வார்த்தைகளுக்கான
அர்த்தங்களும் உணர்வுகளும்
மிக நேர்த்தியாய் ஏற்கெனவே
நிர்மானம் செய்யப்பட்டிருக்க
அதனைக் கோர்வையாய்
அடுக்கிக் கொடுத்தலை மட்டுமே செய்பவன்
"படைப்பாளி "யாகிப் போகிறான்
சுவையையும் மணத்தையும்
இயற்கை மிக நேர்த்தியாகச்
சேர்த்து வைத்திருக்க
அதனை மிகச் சரியாகச் சேர்மானம்
செய்தலதை மட்டுமே செய்தவன்
சமையல் சக்கரவர்த்தியாகிப் போகிறான்
அடுப்படியில்
வெக்கையிலும் புழுக்கத்திலும்
வெந்தபடி நளபாகம் செய்தவன்
வெறுமனே இருக்க
அதனை பணிவாகத்
தருதலைச் செய்வபவன் தான்
அன்பளிப்புப் பெற்றுப் போகிறான்
காட்டை மேட்டைத்
தன் கடின உழைப்பால்
நிலமாக்கித் தோட்டமாக்கி
உலகுக்கு உயிரளிப்பவன்
வறுமையில் வெந்து சாக
இடையில் இருப்பவனே
கொள்ளை லாபம் கொள்கிறான்
குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு சிறு நிகழ்விலும் உயர்விலும்
தன்னை முற்றாக இணைத்துக் கொண்டவள்
துணைவியாய் மட்டுமே
அங்கீகரிக்கப் பட்டிருக்க
பொருளீட்டிக் கொடுத்தலை மட்டுமே செய்தவன்
குடும்பத் தலைவனாகிப் போகிறான்
வார்த்தைகளுக்கான
அர்த்தங்களும் உணர்வுகளும்
மிக நேர்த்தியாய் ஏற்கெனவே
நிர்மானம் செய்யப்பட்டிருக்க
அதனைக் கோர்வையாய்
அடுக்கிக் கொடுத்தலை மட்டுமே செய்பவன்
"படைப்பாளி "யாகிப் போகிறான்
எல்லாவற்றிலும் ஈட்டலும்,இழத்துலுமாக சென்று கொண்டிருக்கிற வாழ்க்கையில் இது ஒருநளபாகமாகவே. மனம் ஈடுபட்டு ச்செய்கிற எதுஒன்றும் சிறக்கும் என்பதே மெய்ப்பிக்கப்பட்ட நிகழ்வாய் இங்கு/நன்றி வணக்கம்.
ReplyDeleteமற்றபடி தலைப்பில் இட்டிருக்கிற கேள்விகுறி பொருத்தமானதாகவே/
ReplyDeleteஅதில் இம்புட்டு,அதில் இம்புட்டு என அஞ்சறைப்
ReplyDeleteபெட்டியில்
துழாவி எடுத்த அரசலவை அம்மியில்
வைத்து தட்டு அரைக்கையில் பரக்கிற தேங்காய்ச்சில்லை வலது கையால் பிடித்திழுத்து திருமபுவும் அம்மிக்கல்லி அதட்டி அமர வைத்துஅதன் தலையில் தட்டி அரைதெடுத்து தனது கைமணத்துடன் தன் உணர்வையும் சேர்த்திட்டு சமையலில் சுவை சேர்கிற அந்த தாயாகட்டும்,வேர்வை வரிகளையே தனது உடலின் அடையாளங்களாய் பதித்துக்கொண்டு தன்னை அடையாளப்படுத்டுகிற உழைப்பின் மக்களாகட்டும்,தன் குடும்பம் சிறக்க தன்னையே தியாக்கிக்கொண்டு கரைகிற நமது குடுமத்தலைவிகளாகட்டும்,உணரவை கலந்து உருட்டிப்பிசைந்து உயிரோட்டமாய் ஒரு படைப்பை உலவவிடுகிற படைப்பாளியாகட்டும் உங்களது பதிவில் தெரிகிறார்கள் வெளிச்சம் பட்டு.வாழ்த்துக்களும் நன்றியுமாக/
உலகம் முழுவதும் இந்த நியதிதான் நடைபெறுகிறது. படகோட்டி படத்தில் ஒரு பாடல்.....
ReplyDeleteகொடுத்ததெல்லாம் கொடுத்தான்
.............................
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
- பாடல்: வாலி (படம்: படகோட்டி)
படைப்பாளி -- சிந்திக்கவைக்கிறான் தன் மூலத்தை !!
ReplyDeleteபடைப்பாளி...
ReplyDeleteநல்ல கவிதை.
த.ம. 3
சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை...
ReplyDeleteநன்றி..
tm4
படைப்பாளி குறித்த ஆழமான தேடல் அருமை அன்பரே.
ReplyDeleteபடைப்பாளிக்கு அழகான விளக்கம் தந்த பகிர்வு ஐயா.
ReplyDelete
ReplyDeleteஉள்ளதை உள்ளபடி சொல்லிச்செல்லும் கவிதை ரசிக்க வைக்கிறது. ஏனென்றால் அதில் உண்மை இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ஆழமான சிந்தனை.... (6)
ReplyDeleteபடைப்பாளி - சிந்தனையைத் தூண்டும் பதிவு அய்யா, நன்றி
ReplyDeleteபடைப்பாளி அருமை அதை தந்த படைப்பாளியான உங்களுக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteவிமலன் //
ReplyDeleteமிக மிக அருமையாக
பதிவின் உட்கருத்தறிந்து விரிவாக பின்னுட்டமிட்டு
உற்சாகமூடியமைக்கு மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
ReplyDeleteஅனைத்து பின்னூட்டங்களுக்கும்
மிகச் சரியான பாடலை தேர்ந்தெடுத்து இணைத்து
பின்னூட்டத்திற்கு சிறப்பு சேர்ப்பதற்கு
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
ReplyDeleteபடைப்பாளி -- சிந்திக்கவைக்கிறான் தன் மூலத்தை !!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
ReplyDeleteபடைப்பாளி...
நல்ல கவிதை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
ReplyDeleteசிந்திக்க வைக்கும் நல்ல கவிதை../
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteபடைப்பாளி குறித்த ஆழமான தேடல் அருமை அன்பரே.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தனிமரம் //
ReplyDeleteபடைப்பாளிக்கு அழகான விளக்கம் தந்த பகிர்வு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
ReplyDeleteஉள்ளதை உள்ளபடி சொல்லிச்செல்லும் கவிதை ரசிக்க வைக்கிறது. ஏனென்றால் அதில் உண்மை இருக்கிறது. வாழ்த்துக்கள்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வார்த்தைகளுக்கான
ReplyDeleteஅர்த்தங்களும் உணர்வுகளும்
மிக நேர்த்தியாய் ஏற்கெனவே
நிர்மானம் செய்யப்பட்டிருக்க
அதனைக் கோர்வையாய்
அடுக்கிக் கொடுத்தலை மட்டுமே செய்பவன்
"படைப்பாளி "யாகிப் போகிறான்
உண்மையிலும் உண்மைதான்
உண்மைதான் சந்தர்ப்பத்திர்கேற்ப செயல்படுபவன். சாமார்த்தியசாலியாகி விடுகிறான்.
ReplyDeleteத.ம. 7
ReplyDeleteNice Poem. SUPER!
ReplyDeleteஉடனே பின்னூட்டமிட முடியாமல் போன பல கவிதைகளில் இது ஒன்று. இறையைத் தவிர "படைப்பு" எங்குமே ஆராதிக்கப் படுவதில்லை என்ற என் நீண்ட நாள் சந்தேகம் இன்னும் வலுக்கிறது.
ReplyDeleteஅருமை சார்....
ReplyDeletenanri nanri nanri ...
ReplyDeletehttp://tamilyaz.blogspot.com/2012/10/take-off.html
ஆஹா.. ரொம்பக் கரெக்டா சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteசிட்டுக்குருவி //
ReplyDeleteஆழமான சிந்தனை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கரந்தை ஜெயக்குமார் //
ReplyDeleteபடைப்பாளி - சிந்தனையைத் தூண்டும் பதிவு அய்யா, நன்றி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
ReplyDeleteபடைப்பாளி அருமை அதை தந்த படைப்பாளியான உங்களுக்கு பாராட்டுக்கள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
ReplyDeleteஉண்மையிலும் உண்மைதான் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
துரைடேனியல் //.
ReplyDeleteNice Poem. SUPER!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி