Sunday, March 31, 2013

உள்ளும் புறமும் (2 )


அந்தப் புதிய குடியிருப்புப் பகுதியில்
இடம்  வாங்கும்போதே என் இடத்திற்கும்
கிழக்கே மூன்ற பர்லாங்க் தூரத்தில் இருக்கும்
பிரதான சாலைக்கும்இடையில் இருக்கும்
அந்த முள் காட்டில் சாராயம் விற்கிறார்கள்
எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆயினும் அந்தப் பக்கம் அதிகம் வரவேண்டி
இல்லாதபடிவேறு பாதைகள் இருந்ததால்
அது குறித்து நான்அதிகம் விசாரித்துத்
 தொலைக்கவில்லை

வீடு கட்டி குடியேறிய ஒரு வாரத்தில் என் வண்டியைப்
பராமரிப்புக்கு விட வேண்டியிருந்ததால் அன்று மாலை
அலுவலகம் விட்டு பஸ்ஸிலேயே வீடு வர வேண்டி
இருந்தது.பிரதான சாலையில் உள்ள ஸ்டாப்புக்கு
டிக்கெட் எடுத்துவிட்டு ஸ்டாப் வந்தவுடன் இறங்கத்
துவங்குகையில் கண்டக்டர்குட்டி பாண்டிச்சேரி
-யெல்லாம்இறங்கு என குரல் கொடுத்ததும்
 பஸ்ஸில் இருந்தமொத்த ஆண்கள் கூட்டமும்
 இறங்கத் துவங்கியது.

இறங்கியவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக
முள் காட்டுக்குள் அவசரம் அவசரமாக நடையைக்
கட்டினார்கள்.நானும்  அந்த ஸ்டாப்பிலேயே
நின்று இருபுறமும் வருகிற பஸ்ஸைக் கவனிக்கத்
துவங்கினேன்.வருகிற பஸ்ஸில் எல்லாம்
அதிகமாக ஆண்கள்கூட்டமும்  இருப்பதும்
அவர்கள் அனைவரும் இறங்கிமுள்காட்டுக்குள்
 பறப்பதும்  வயிற்றைக் கலக்கவும் துவங்கியது
கொஞ்சம் அவசரப்பட்டுஇந்த ஏரியாவில்
வீடு கட்டிவிட்டோமோ எனப் பயமும்
 தோன்ற ஆரம்பித்துவிட்டது

முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்கிற
பழமொழிப்படி இனி யோசித்துப் பயனில்லை இங்கு
என்னதான் நடக்கிறது எனப் பார்ப்போம் என
நானும் அந்த முள்காட்டு ஒத்தையடிப்பாதையில் போய்
உள்ளே பார்க்க அதிர்ந்து போனேன்.

உள்ளே கிராமத்தில் குட்டி திரு விழாவுக்கு
கடைகள் போட்டது போல  ஒரு இருபது முப்பதுக்கு
குறையாமல் பந்தல் போட்டு கடைபோட்டிருந்தார்கள்.
ஒவ்வொரு கடைக்கு முன்னும் குறைந்த பட்சம்
இருபது முப்பது பேருக்குக் குறையாமல்
குடித்துக் கொண்டும் கையில் கொண்டு வந்திருந்த
 திண்பண்டங்களைக்கொறித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அது மது விலக்கு அமலில் இருந்த காலம்.
பக்கத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்
போலீஸ் ஸ்டேஸனும் இருக்கிறது.இந்த நிலையில்
இப்படி ஒரு மிகப் பெரிய அளவில்
 கள்ளச் சாராய வியாபாரம் நடப்பதை என்னால்
 ஜீரணிக்கவே முடியவில்லை
கூறு கெட்டவ்ர்கள் சூழ இருக்கிற இடத்தில் கூட
நிம்மதியாய் வாழ்ந்து விட முடியும்.இத்தனை
குடிகாரக் கூட்டம் தினம் புழங்குகிற ஏரியாவில்
பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக
வீடு கட்டிக் கொண்டது எத்தனை பெரிய முட்டாள்தனம்
என எண்ணியபடி வீடு  நோக்கி நடக்கத் துவங்கினேன்
மனம் மிகச் சஞ்சலப்பட்டுப் போனது

போகிற வழியில் சாலைக்கு நடுவில்
ஒரு இந்தியத் தலைவரின் சிலையும்
அதை ஒட்டிஒரு தெரு விளக்கும் உண்டு.
அதைத் தாண்டினால்வீடு வரை ஒரே இருள்தான்.
எனவே சிறிது நேரம் அந்த சிலையின் அடியில்
உள்ள  திட்டில் அமர்ந்து போகலாம்
என எண்ணி அந்தத் திட்டை நோக்கி நடந்தேன்

திடுமென்று " அங்கே யாரப்பா  அது "'
எனக் கத்தியபடி கையில் ஒரு
வேல் கம்புடன் ஒரு கை ஓசை சங்கிலி முருகன் மாதிரி
கருப்புப் போர்வையைப் போர்த்தியபடை மீசையை
ஏற்றிவிட்டபடி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்

(தொடரும் )

49 comments:

  1. கதை மிக அருமையாக, படிப்பவருக்கும் ஒருவித ‘கிக்’ ஏற்றும் விதமாகச்செல்கிறது. பாராட்டுக்கள்.

    தொடரட்டும் .... படிக்க மிகுந்த ஆவலுடன் ...... vgk

    ReplyDelete
  2. அடுத்து என்ன? சுவாரசியம் தொற்றிக் கொண்டு விட்டது.

    ReplyDelete
  3. அட எங்க ஊர் பக்கமும் இப்படி ஒரு குட்டி பாண்டிசேரி இருந்தது! ஒருவேளை அதுதான் நீங்க சொல்ற ஊரோ? சுவாரஸ்யமான பதிவு! நன்றி!

    ReplyDelete
  4. கதை நல்ல விறு விறுப்பாய் இருக்கிறது.
    அடுத்து என்ன என்று அறிய ஆவல்.

    ReplyDelete
  5. சீக்கிரம் அடுத்த பகுதியைப்போடுங்க.அத்துடன் மதுவிலக்கு அமலில் இருந்த பொழுது கட்டிய வீடென்றால் ஆச்சு பல பல வருடங்கள்

    //இந்த ஏரியாவில்
    வீடு கட்டிவிட்டோமோ எனப் பயமும்
    தோன்ற ஆரம்பித்துவிட்டது
    // அந்த சமயம் இருந்த சூழலும் இப்போதைய சூழலும் எப்படி உள்ளது?அதையும் இறுதியில் சொல்லிவிடுங்கள்.:)

    ReplyDelete
  6. நல்லாதான் போயிகிட்டு இருக்கு....

    ReplyDelete
  7. அடுத்தது என்ன...? காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  8. Vanakkam Sir...

    Interesting story... waiting for next episode.

    ReplyDelete
  9. காட்ட வேண்டிய இடத்தில் காட்டாத / காட்ட முடியாத அதிகாரத்தை காட்டக் கூடாத இடத்தில் நிலைநாட்ட வீரமுடன் வருகிறாரோ..! ம்...ஹூம்!

    ReplyDelete
  10. அடுத்த பகுதி உடன் தருக! காண ஆவல்

    ReplyDelete
  11. பல நேரங்களில் இப்படித்தான், பார்த்துப்பார்த்து, யோசித்து யோசித்து வீடு கட்டிய பின் இந்த மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் வரும்!

    ப‌ட‌ப‌ட‌க்கிற‌ மாதிரி எழுதியிருக்கிறீர்க‌ள்!!

    மேலே தொட‌ருங்க‌ள்...

    ReplyDelete
  12. கொஞம் கொஞ்சமாக காசு சேர்த்து ஒரு சொந்தவீடு கட்டும் போது எவ்வளவு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டி இருக்கு இல்லியா.அதை நன்றாக சொல்லிப்போகும் கதை நல்லா இருக்கு

    ReplyDelete
  13. என்ன சார் இப்படி காத்திருக்க வைத்துவிட்டீர்கள்! நன்றி! தொடருங்கள்!

    ReplyDelete
  14. வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று சும்மாவா சொன்னார்கள்.
    சரி, சங்கிலி முருகன் வந்த பிறகு என்ன ஆச்சு .....
    அறிய ஆவல்.

    ReplyDelete
  15. தொடர் கதை எழுத சரியானவர் தான் நீங்கள்!

    ReplyDelete
  16. விறுவிறுப்பாகச் செல்கிறது அய்யா. தொடருங்கள்.அடுத்தத் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்

    ReplyDelete
  17. நல்ல கதைக்கான ஆரம்பம்.யதர்த்தங்கள் சுடுகிறது.

    ReplyDelete
  18. ம்ம்ம்....சொல்லுங்கள்...

    ReplyDelete
  19. விறு விறுப்பா தொடரும்னு போட்டுவிட்டீர்களே..

    ReplyDelete
  20. முள் காடு ரகசியம் தெரிந்து விட்டது. இப்போ இது யார் ? விறுவிறுப்பாக செல்கிறது. வீடு வாங்க நினைப்பவர்களுக்கும், கட்ட நினைப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் தங்கள் தகவல்கள்.

    ReplyDelete
  21. நல்ல சஸ்பென்ஸ்!
    அடுத்த பதிவைப் படிக்கிறேன்.

    ReplyDelete
  22. வை.கோபாலகிருஷ்ணன் //


    தங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. T.N.MURALIDHARAN //

    அடுத்து என்ன? சுவாரசியம் தொற்றிக் கொண்டு விட்டது./

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. s suresh //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. கோமதி அரசு ..
    .
    கதை நல்ல விறு விறுப்பாய் இருக்கிறது.
    அடுத்து என்ன என்று அறிய ஆவல்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. மாதேவி //

    அட......அப்புறம்.//
    .
    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி




    ReplyDelete
  27. ஸாதிகா //
    .
    சீக்கிரம் அடுத்த பகுதியைப்போடுங்க.அத்துடன் மதுவிலக்கு அமலில் இருந்த பொழுது கட்டிய வீடென்றால் ஆச்சு பல பல வருடங்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  28. கவிதை வீதி... // சௌந்தர் // //
    .
    நல்லாதான் போயிகிட்டு இருக்கு....//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  29. அச்சச்சோ அடுத்து என்ன ஆச்சி இவர்களைப்போல நான் காத்திருக்க வேண்டியதில்லை இதோ உடனே அடுத்த பதிவிற்கு செல்கிறேன்.

    ReplyDelete
  30. Sasi Kala //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  31. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. Madhavan Srinivasagopalan said...
    Vanakkam Sir...

    Interesting story... waiting for next episode.//
    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. ஸ்ரீராம். //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  34. புலவர் இராமாநுசம் //

    அடுத்த பகுதி உடன் தருக! காண ஆவல்/

    /தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. வேடந்தாங்கல் -.

    தொடர் அருமை..///

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. மனோ சாமிநாதன் //

    ப‌ட‌ப‌ட‌க்கிற‌ மாதிரி எழுதியிருக்கிறீர்க‌ள்!!
    மேலே தொட‌ருங்க‌ள்...//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. பூந்தளிர் ]]

    கொஞம் கொஞ்சமாக காசு சேர்த்து ஒரு சொந்தவீடு கட்டும் போது எவ்வளவு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டி இருக்கு இல்லியா.அதை நன்றாக சொல்லிப்போகும் கதை நல்லா இருக்கு//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. Seshadri e.s. //

    என்ன சார் இப்படி காத்திருக்க வைத்துவிட்டீர்கள்! நன்றி! தொடருங்கள்!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. rajalakshmi paramasivam //

    வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று சும்மாவா சொன்னார்கள்.
    சரி, சங்கிலி முருகன் வந்த பிறகு என்ன ஆச்சு .....
    அறிய ஆவல்.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. நிலாமகள் //

    தொடர் கதை எழுத சரியானவர் தான் நீங்கள்!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. கரந்தை ஜெயக்குமார் //

    விறுவிறுப்பாகச் செல்கிறது அய்யா. தொடருங்கள்.அடுத்தத் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்/

    /தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. விமலன் //

    நல்ல கதைக்கான ஆரம்பம்.யதர்த்தங்கள் சுடுகிறது

    ///தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    .

    ReplyDelete
  43. அகிலா s//

    ம்ம்ம்....சொல்லுங்கள்...///

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. உஷா அன்பரசு //

    விறு விறுப்பா தொடரும்னு போட்டுவிட்டீர்களே.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    .

    ReplyDelete
  45. கோவை2தில்லி //

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  46. Ranjani Narayanan //

    நல்ல சஸ்பென்ஸ்!
    அடுத்த பதிவைப் படிக்கிறேன்./

    /தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. Sasi Kala //

    அச்சச்சோ அடுத்து என்ன ஆச்சி இவர்களைப்போல நான் காத்திருக்க வேண்டியதில்லை இதோ உடனே அடுத்த பதிவிற்கு செல்கிறேன்/

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    .

    ReplyDelete