Monday, October 20, 2014

மதுரை-தெப்பக்குளம்-வரும் ஞாயிறு

மனம்திறந்து மிகமுயன்று-வரும்
இடர்களைப் புறம்தள்ளி
கனமானப் பதிவுகளைத்-தினம்
தந்தவர்கள் எல்லோரும்
இனம்நாடி வருகின்ற-மிக
இனிதான ஒருநாளே
மணமிக்க மதுரையது- காணும்-
மகிழ்வானப் பெரும்நாளே

பெண்ணிங்கு ஆணுக்கு-எதிலும்
பின்தங்கி இல்லையென்று
பொன்னெழுத்தால் சாதிக்கிற-வலையுலகப்
பெண்டிர்கள் எல்லோரும்
வந்திருந்து சந்திப்பிற்கு-குன்றா
வளம்சேர்க்கும் ஒருநாளே
வண்டியூர் தெப்பமதன்-கிழக்கே
நிகழ்வாகும் திருநாளே

சிந்தித்துச் சிந்தித்து-நாளும்
சிறப்பானப் பதிவுகளைத்
தந்தவர்கள் எல்லோரும்-மனதில்
நிறைந்தவர்கள் எல்லோரும்
எந்தநாள் அந்தநாள்-என
எதிர்பார்த்த ஒருநாளே
இந்தவார ஞாயிரன்று-வருகிற
பதிவர்கள் திருநாளே

சென்னைவலைப் பதிவர்கள்-மிகச்
சிறப்பாகச் செய்ததனை
எண்ணாளும் மனதினிலே-ஒரு
இலக்காகக் கொண்டுயிங்கு
பம்பரம்போல் சுழல்கின்றார்-இளைய
பதிவர்கள் பத்துப்பேர்
சொன்னபடி வந்திடுவீர்-நிகழ்வினை
சிறப்படையச் செய்திடுவீர்

வாழ்த்துக்களுடன்........

21 comments:

  1. பதிவர் சந்திப்பு சிறக்கட்டும்.

    ReplyDelete
  2. ஆவலுடன் காத்திருக்கிறேன். மதுரையில் சந்திப்போம்

    ReplyDelete
  3. சிறந்த முறையில் நடைபெற்று முடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் வெற்றிபெறவும் அனைவருக்கும் மிகப் பயனுள்ளதாக அமையவும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. உங்கள் பதிவு உற்சாகம் அளிக்கிறது ஐயா....
    மிக்க நன்றி.....

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக அமைய இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. பதிவர் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  9. கண்டிப்பாக வந்து விடுகிறோம்/

    ReplyDelete
  10. வந்தோரை வரவேற்க காத்திருக்கிறேன் !
    த ம 5

    ReplyDelete
  11. கவிஞருக்கு நன்றி! விழாக் கால மகிழ்ச்சி தருணங்கள்! எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
    Tha.ma.6

    ReplyDelete
  12. எனக்கு மதுரையில் அவ்வளவு பழக்கம் இல்லை. எனவே நான் திருச்சியிலிருந்து வரும்போது, மதுரையில் எந்த பஸ்நிலையம் சென்று, எந்த எண் பஸ்ஸில், விழா நடக்கும் அரங்கம் வர வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  13. மதுரையில் சந்திப்போம் ஐயா
    குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. பதிவர் சந்திப்பு சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள். சென்ற சந்திப்பின் போது உங்களைச் சந்தித்து மகிழ்ந்தது இன்றும் நினைவில்......

    இம்முறை கலந்து கொள்ள முடியாத சூழல்....

    ReplyDelete
  15. பெண்ணிங்கு ஆணுக்கு-எதிலும்
    பின்தங்கி இல்லையென்று
    பொன்னெழுத்தால் சாதிக்கிற-வலையுலகப்
    பெண்டிர்கள் எல்லோரும் // வழிமொழிகிறேன் !

    ReplyDelete
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. வில சிறக்க வாழ்த்துக்கள் ...!
    தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
  19. கடந்த மாதம் தான் பிரிய மனமில்லாமல் மதுரையை விட்டு இடம் பெயந்தேன். பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  20. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete