Sunday, October 11, 2015

புதுகைப் பதிவர் விழா ( 1)






தலைவர் உள்ளிட்ட இந்த அறிஞர் சபைக்கு
எனது பணிவான வணக்கம்

இந்த இனிய விழாவில் தனது
முற்றத்து நிலா என்னும்
கவிதை நூலுக்கு வாழத்துரை  வழங்கப் பணித்த
நன்பர் கவிஞர்ரூபன்  அவர்களுக்கும்
அவர் வேண்டுகோளுக்கிணங்கி எனக்கு
வாய்ப்புக் கொடுத்தவிழாக் குழுவினருக்கு
எனது நன்றியையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு
எனது சிற்றுரையைத் துவங்குகிறேன்

நான் எழுதிய பதிவுகளில் கவிதை குறித்தான
பதிவுகள் கொஞ்சம் அதிகமே இருக்கும்

மிகக் குறிப்பாக ஒரு கவிதையில் கவிதை என்பது
உணர்வு கடத்தி எனக் குறிப்பிட்டிருப்பேன்

ஒருவர் தன்னைப் பாதித்த விஷயத்தைச்
சொல்வார் எனிலோ
அருமையாக விளக்குவார் எனிலோ
,அல்லது மிகத் தத்ரூபமாக
புரிந்து கொள்ளும்படியாக
எழுதிச் செல்வார் எனிலோ
அது கவிதை ஆவதில்லை

மாறாக தன்னைப் பாதித்த விஷயத்தை
தான்பாதித்தபடி  படிப்போரும்  பாதிப்பினைப்
படிப்பதன் மூலமே உணரும்படிச்
சொல்லிச் செல்லும் எதுவோ அதுவே கவிதையாக
இருக்க முடியும்

அந்த வகையில் ரூபனின் கவிதைகள் அனைத்தும்
நிச்சயமாக  அவர் அனுபவித்த பாதிப்பினை
நம்மையும் உணரச் செய்து போகும் என்பது
நீங்கள் ஒருமுறைப் படித்துப்பார்த்தாலே புரியும்


மற்றொரு கவிதையில் கவிதை என்பது
ஒட்டக் காய்ச்சிய உரை நடை
எனக் குறிப்பிட்டிருப்பேன்

எப்படி கோவா செய்ய பாலைக் காய்ச்சுகையில்
நீர்த்தன்மை முற்றாக இல்லாதபடியும்
இதற்கு மேல் காய்ச்சினால் பதம் முறிந்து போகும்
என்கிற ஒரு நிறைவான நிலையில்
நிறுத்தக் கற்றுக் கொண்டிருக்கிறோமோ

அதைப் போலவே தேவையற்ற
நீர்த்த சொற்களைஎவ்வளவுகெவ்வளவு முற்றிலுமாக வெளியேற்றுகிறோமோஅந்த வகையிலும்
இதிலிருந்து ஒரு சொல்லை எடுத்தாலும்
கவிதையின் பொருள் மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளாமல்போகும் என்கிற நிலையிலும்
சொற்களை பயன்படுத்துதலே
கவிதைக்கும் அழகு,கவிஞருக்கும் அழகு

அந்த வகையில் மட்டும் கவிஞ்ர் ரூபன் அவர்கள்
சொற்சிக்கனத்தைக் கையாளப் பழகினார் ஆயின்
மிகச் சிறந்த கவிஞராக பரிமளிப்பார் என்பதை
உறுதியாக கூறி...

கால அவகாசம் கருதி விரிவான நூல் அறிமுகம் செய்ய
இயலாத நிலையில் கவிஞர் ரூபன் அவர்களின்
கவிதைகள் கவிதை வானில் நிச்சயம் ஒரு
என்றும் ஒளி குன்றா நட்சத்திரமாய்
காலம் கடந்தும் ஒளிரும்
எனபதே  ரூபன் கவிதைகள் குறித்தான
எனது மதிப்பீடுஎனப் பதிவு செய்து வாய்ப்பிற்கு
மீண்டும் ஒருமுறை
நன்றி கூறி விடைபெறுகிறேன்

நன்றி வணக்கம்


( புதுகைப் பதிவர் விழாவில்  ரூபனின்
கவிதை  நூலுக்கான  என் வாழ்த்துரை )

17 comments:

  1. நேரில் பார்த்தும் பதிவில் படித்தும் ரசித்தேன் :)

    ReplyDelete
  2. வணக்கம் கவிஞரே தங்களை நேரலையில் கண்டேன் மேலே தாங்கள் வெளியிட்ட புகைப்படத்தை தங்களுக்கு முன்பாகவே அதாவது தாங்கள் புதுக்கோட்டையில் இருக்கும் பொழுதே வெளியிட்டு விட்டேன் எனது தளத்தில் நேரமிருந்தால் வந்து காண அழைக்கிறேன்
    நண்பர் ரூபனுக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. மிக்க நன்றி கில்லர்ஜி
    தங்கள் பதிவிலிருந்து அந்த
    மூன்றாவது படத்தை எடுத்து
    பதிவில் இணைத்துவிட்டேன்
    அதில்தான் முழுமையான
    விழா மண்டபப் பார்வை கிடைக்கிறது

    ReplyDelete
  4. Bagawanjee KA //

    உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மிக நன்றி

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    எனது ஜன்னல் ஓரத்து நிலா என்னும் கவிதைப்புத்தகத்துக்கு வழங்கிய வாழ்த்துரையை நிகழ்வில் சொல்லியமைக்கு முதலில் பாராட்டுக்கள்ஐயா.

    தங்களின் வழி காட்டல் ஆலோசனைக்கள் நிச்சயம் அடுத்த படியை தாண்ட உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... சிறப்பாக வாழ்த்துரை வழங்கிய தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா. த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமை. ரூபனுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. கண்டேன் கவிஞரையும் கவிதையின் பாராட்டையும்.

    ReplyDelete
  8. நண்பர் ரமணிக்கு, உங்கள் கம்ப்யூட்டர் கடிகாரத்தின் நேரத்தைச் சரி செய்யவேண்டும் என் நினைக்கிறேன். முற்பகல் பிற்பகல் குறியீடு சரியாக இல்லை. 12 மணி நேரம் தள்ளி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கும், நடுவர் குழுவில் பொறுப்போடு பணியாற்றிமைக்கும் நன்றி அய்யா.
    விழாவைப்பற்றிய மொத்த் மதிப்பீட்டையும் தங்கள் பாணியில் பதிவு செய்ய வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. விழா முழுவதும் காண இயலவில்லை. மதியம் சுமார் மூன்று மணி அளவில் திருச்சிக்கு மீண்டும் ப்யணப் பட்டோம் உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. விழாவுக்கு வர இயலவில்லை! சிறப்பாக இருக்கிறது வாழ்த்துரை! நன்றி!

    ReplyDelete
  13. மேடையில் பேசியதை எழுத்தில் கொணர்ந்து ஆவணமாக்கிய கவிஞருக்கு நன்றி.

    ReplyDelete
  14. பொருத்தமான உரை. விழாவில் தங்கள் சந்தித்ததில் அளவிலா ஆனந்தம் அடைந்தேன்

    ReplyDelete
  15. தங்கள் உரை நன்று! உங்களோடு பல செயஃதிகளை உரையாட எண்ணினேன் இயலாமல் போனது!

    ReplyDelete
  16. பதிவர் சந்திப்பிற்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாகத்தான் வலைப்பதிவுகளில் உலா வருகிறேன். மற்றவர் பதிவு பின்னுட்டங்களில் நாகரிகத்துடன் பின்னூட்டமிடும் இந்த வெள்ளைச் சட்டை மனிதர் யாரென்று யோசித்திருக்கிறேன். அட இந்த பதிவ படிச்ச பிறகுதான் ஓ உங்களை முதல்நாள் இரவே சந்தித்தேனேன்னு நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete