Monday, October 5, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 14 )

பெண் :
வெத்தலைப் பாக்கு வச்சு உன்னை
அழைச்சாங்களா-இல்லை
வீடு வந்து  உனக்குத் தாக்கல்
சொன்னாங்களா

எதுக்கு நீயும் புதுகை  போக
இப்படித் துடிக்கிறே-கேள்வி
கேட்டா மட்டும் என்னை எதுக்கு
இப்படி முறைக்கிறே

ஆண் :
காசு கொடுத்து கட்சி கூட்டும்
 கூட்டமில்லடி -இது
தலைவனாக நடிகன் கூட்டும்
கூட்டமில்லடி

காசு போட்டு நாம நடத்தும்
 நல்ல கூட்டமே-இதில
கலந்துக் காம நாம இருந்தா
நமக்கும் நட்டமே

செய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு
 குழப்பும் பேப்பரும்-தினமும்
தொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு
 பரப்பும் டி. வியும்

நல்ல வழியை நம்மை விட்டு
மறைக்கப் பார்ப்பதை-தினமும்
சொல்லிச் செல்லும் உறுதி இங்கே
யாருக்கி ருக்குது ?

இரத்தச் சூடு இருக்கும் வரையில்
கும்மாளம் போட்டு-பணத்தை
கறுப்பு வெள்ளை யென்று கணக்கில்
 மறைச்சுச் சேத்து

அரசுச் சின்ன மிரட்டல் போட
மக்களைப் பார்க்கும்-நடிகரின்
முகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு
 யாருக்கி ருக்குது ?

விதியைச் சொல்லி மதியை மாற்றி
 பிழைக்கும் மனிதரை-அதையே
மாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்
தெளிந்த எத்தரை

சரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு
மடக்கும் தைரியம்-இங்கு
பதிவர் தவிர உலகில் வேறு
யாருக்கி ருக்குது ?

ஆண்கள் பெண்கள்  பாகு பாடு
ஏதும் இன்றியே-மயக்கும்
ஜாதி மதங்கள் பிரிக்க முடியா
 தனித்த வழியிலே

ஆண்டு மூன்றைக் க் கடக்கும் பதிவர்
அமைப்புப் போலவே
நல்ல அமைப்பு உலகில் வேறு
எங்கு இருக்குது ?

பெண்:
சொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க
இனிக்குது மச்சான்-இன்னும்
சொல்லச் சொன்னா நூறு சொல்வே
புரியுது மச்சான்

சட்டு புட்டுனு கிளம்பி நீயும்
போய்வா மச்சான் -சரியா
 பத்து பதிவு போட   விஷயம்
தேத்திவா மச்சான்

11 comments:

ப.கந்தசாமி said...

//பத்து பதிவு போட விஷயம்
தேத்திவா மச்சான்//

விஷயம் இங்க இருக்கு?

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

அப்படிப் போடுங்க...!

DD

G.M Balasubramaniam said...

பதிவர்களைப் பற்றிய பெருமை தெரிகிறது வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

தமிழ்மணத்தில் என் பதிவுக்கு
better blogging /milestone blogging
என இருக்கு
அப்ப்டியானா என்ன ? தெரிந்தவர்கள் விளக்குங்களேன்

தருமி said...

நம்ம எல்லோரும் இவ்வளவு நல்லவர்களா...? ஆஹா ... மகிழ்ச்சி.

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் கவிஞரே விடயம் இருக்கு.... ஆம்
தமிழ் மணம் 3

சென்னை பித்தன் said...

போற வரைக்கும் மட்டுமல்ல,போய் வந்தபின்னும் பதிவுக்குக் கைகொடுக்கும் பதிவர் திருவிழா! உண்மை

கரந்தை ஜெயக்குமார் said...

சட்டு புட்டுனு கிளம்பி நீயும்
போய்வா மச்சான் -சரியா
பத்து பதிவு போட விஷயம்
தேத்திவா மச்சான்

ஆகா அருமை
தம +1

Geetha said...

பெருமையா இருக்கு எல்லாரும் இவ்விழாவைப்பற்ரி எழுதும் போது அதிலும் உங்கள் பாணியே தனிதான்..

Thulasidharan V Thillaiakathu said...

அட ! அருமையா சொல்லியிருக்கீங்க! பதிவர்கள் பற்றியெல்லாம்...உங்கள் வழி தனி வழி...

ezhil said...

பாட்டாவே பாடிட்டீங்களா... அருமையா இருக்குங்க..

Post a Comment