Saturday, October 31, 2015

"ஊற்று "வலையுல எழுத்தாளர்கள் மன்றம்





Displaying Untitlednm-1 copy.jpg

மிகக் கனத்த மழைக்குப் பின்
மீண்டும் ஒரு பெரும் கனத்த மழைக்கு
அவ்வளவாக வாய்ப்பில்லை

அதைப் போல உலக அளவில் வலைப்பதிவர்கள்
சார்பாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிக்குப் பின்
கவிஞர் ரூபன் அவர்களின்
தனிப்பட்ட முயற்சியால் துவக்கப்பட்ட
 "ஊற்று  "
வலையுல எழுத்தாளர்கள் மன்றத்தின்  
சார்பாக நடத்தப்பட்ட
தீபாவளிப் பண்டிகைக்கான பரிசுப் போட்டியில்
இத்தனைக் கவிஞர்கள்
கலந்து கொள்வார்கள்,
இத்தனை அற்புதமான கவிதைகள் வரும்
என நாங்கள் நிச்சயம் எதிர்பர்க்கவில்லை

கலந்து கொண்ட கவிஞர்கள் அனைவருக்கும்
எங்கள் மன்றத்தின்  சார்பாக மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

கவிதைகள் நடுவர் குழுவின்
பரிசீலனையில் உள்ளன
இன்னும் சில தினங்களில் போட்டி
முடிவுகள் வெளியாகும் என்பதை
நடுவர்களின் சார்பாகத் தெரிவித்துக் கொள்வதில்
பெரும் மகிழ்வு கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...



15 comments:

  1. ஆஹா...வரவுசெலவு கணக்கில் இருந்ததால நான் கலந்துக்க முடியல...அனைவருக்கும் வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்/

    ReplyDelete
  3. தங்கள் உள்ளம் திறந்து
    "ஊற்று "வலையுல எழுத்தாளர்கள் மன்றம்
    தீபாவளிப் பண்டிகைக்கான பரிசுப் போட்டியில்
    அற்புதமான கவிதைகள் வந்திருப்பதை வெளியிட்டமை
    போட்டியில் பங்கெடுத்த
    எல்லோருக்கும் மகிழ்வைத் தரும்!
    தங்கள் வழிகாட்டலுடன்
    "ஊற்று "வலையுல எழுத்தாளர்கள் மன்றம்
    சிறப்பாகச் செயலாற்ற - என்றும்
    நாம் ஒத்துழைப்போம்!

    ReplyDelete
  4. மகிழ்ச்சி ஐயா. ரூபன் அவர்களுக்கு நன்றி. ஊற்று மன்றத்திற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. கலந்துகொண்ட கவிஞர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மன்றத் துவக்கத்திற்கும், மன்றம் மென்மேலும் சாதனை புரியவும் வாழ்த்துக்கள்.
    வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html

    ReplyDelete
  7. ஊற்றெடுக்கும் உன்னத கவிதைகள்
    ஊற்று வலையுலா எழுத்தாளர் மன்றத்திற்கு
    அரும்புகழ் சேர்க்கும்.
    அறிய பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  8. போட்டிகளில் கலந்து கொள்ளவே தயக்கம் அதுவும் கவிதை என்றால் எனக்குக் காத தூரம் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  10. கலந்து கொள்ள முயன்றும் படைப்பு ஊற்றெடுக்கவில்லை சில அசந்தர்ப்பங்களால்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. போட்டி முடிவைக் காண ஆவலுடன்....
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  12. வாழ்த்துகள் நண்பரே! போட்டி முடிவுகளைக் காண ஆவல்...

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா

    ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்தின் சிரேஸ்ட ஆலோசராக தாங்கள் இருப்பதை நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் ஊற்று மேலும் வளர எல்லோரின் உத்துழைப்பு அவசியம்
    உண்மைதான் ஐயா பெரு வாரியாக கவிஞர்கள் பங்கு பற்றுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. வந்த கவிதைகள் ஒவ்வொன்றும் அற்புதமாக உள்ளது... பதிவாக வெளியிட்டமைக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete