Thursday, October 8, 2015

அரிமா லியோ சங்கத் துவக்க விழா

324 பி 3 அரிமா மாவட்டத்தின் சார்பில் 
நான் வட்டாரத்தலைவராக பொறுப்பில்  இருக்கிற 
மதுரைவில்லாபுரம் புது நகர் அரிமா சங்கத்தின் சார்பில்
கடந்த மாதம் அரிமா இயக்கத்தின் துணை அமைப்பாக
இருக்கிற லியோ சங்கத்தைத் துவக்கினோம்

அதன் தொடர்ச்சியாக என் பொறுப்பில் இருக்கிற
மற்றொரு சிறந்த சங்கமான மதுரை டிலைட்
சங்கத்தின் சார்பில் அதன் தலைவராக இருக்கிற
லயன் எம்.ஜி உமா அவர்களின் சீரிய முயற்சியால்
மற்றுமொரு லியோ சங்கத்தை திருமங்கலம்
பாய்ஸ் டவுனில் நேற்றுத் துவக்கினோம்( 8/10/2015 )


சிறு வயது முதலே தலைமைப் பண்புப் பயிற்சியும்
பொதுவாழ்வில் அனுபவமும்,கிடைக்கிற வாய்ப்புக்களை
மிகச் சரியாக பொது நல நோக்கத்திற்காக பயன்படுத்திக்
கொள்ளுகிற ஆற்றலையும் கற்றுக் கொள்வதற்காகத்தான்
இந்தப் பயிற்சி என்பதை  முன்னாள் ஆளுநர் பெருந்தகை
பாண்டியராஜன் எம்.ஜே ஃப் அவர்களும்
மண்டலத் தலைவர் ஏ மோஹன் எம் ஜே ஃப் அவர்களும்
மிக மிக அருமையாக பயிற்சிக் கொடுத்தார்கள்

திரு நகர் பெஸ்ட் அரிமா சங்க்கத்தின் தலைவர்
டாக்டர் சுப்ரமணியம் அவர்கள் ஒரு சிறந்த 
விளக்கவுரை ஆற்றியதோடு யோகா குறித்த
ஒரு செயல் விளக்கப் பயிற்சியும் கொடுத்தது
நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்புச் சேர்த்தது

இந்த அருமையான விழாவிற்கு மதுரை திரு நகர் பெஸ்ட் 
அரிமா சங்கமும் திருமங்கலம் சுப்ரீம் சங்கமும்
மதுரை டிலைட் சங்கமும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச்
செய்திருந்தார்கள்

அதற்கான சில புகைப்படக் காட்சிகள்
தாங்கள் கண்டு மகிழ்வதற்காக....

...


9 comments:

  1. அரிமா,லியோ..சங்கம் சிறப்பாக செயல் பட வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  2. சங்கம் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்!

    காட்சிகள் மனம் தொட்டதையா!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    த ம 2

    ReplyDelete
  3. மேலும் சிறக்கட்டும்...

    வாழ்த்துகள் ரமணிஜி!

    ReplyDelete
  4. மேலும் வளரட்டும்....
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  5. வாழ்த்துகள் இரமணி!

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    தங்களின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.. த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. தங்கள் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. தங்கள் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்

    ReplyDelete