Friday, October 14, 2016

விடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

இந்தியர்கள் அனைவருக்கும்
ஆகஸ்ட் பதினைந்து ஒரு
விடியல் நாளெனில்

இளைஞர்கள் அனைவருக்கும்
அக்டோபர் பதினைந்தை ஒரு
எழுச்சி நாளாக்கிப் போனவரே

இந்தியாவின் கடைக் கோடியில்
ஒரு சாமானியனாய்ப் பிறந்து
இந்தியா முழுமைக்கும்
ஒரு ஆதர்ஷ நாயகானாய் உயர்ந்தவரே

அலங்காரமிக்க அதிகாரமிக்கப்
ஒரு பதவியை
முதன் முதலாய்
மக்களுக்கான பதவியாக்கியவரே

வல்லமையுள்ளோருக்கானது
என்றான  ஜனாதிபதி மாளிகையை
சாமானியர்களும்  மிக இயல்பாய்
நமக்கானது என உணரச் செய்தவரே

ஓயாத உழைப்பின் மூலம்
சாமானியனும்
உச்சத்தைத் தொட முடியும் என
நிரூபித்துக் காட்டியவரே

பதவியால் அல்ல
செய்வதற்கரிய செயல்களால்
தலைநகரையே ஒரு சிற்றூருக்கு
மாற்றிக் காட்டியவரே

உங்கள் பிறந்த நாள்
இளைஞர்களுக்கான
எழுச்சி நாள் மட்டுமல்ல

இந்தியர்கள் அனைவரும்
2020 என்னும் இலட்சியத்தை
எண்ணச் செய்யும் நாள்

இந் நாளை
நீங்கள் அவதரித்த நாளாக மட்டுமல்ல
உலகத் தலைமைக்கு
இந்தியாவைத்
தயார்ப்படுத்தும் நாளாகக் கொள்கிறோம்

விடாது தொடரும் உங்கள் நினைவு
நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

வாழ்த்துக்களுடன்....

11 comments:

  1. உண்மை இது அவருக்கான நாள் மட்டுமல்ல நம் அனைவருக்குமானது.

    ReplyDelete
  2. மாமனிதர் கலாம் அவர்களை எப்போதுமே நாம் நினைக்’கலாம்’ .... பெருமைப்பட்டு மகிழலாம்.

    ’விடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது’ என்ற தலைப்பும் படைப்பும் மிகவும் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நாம் தலைவர்களை நினைவு கொள்ள அவர்களின் செயல்களைத் தொடங்கவேண்டும் தொடர வேண்டும்

    ReplyDelete
  4. சிறப்பான நாளில் சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  5. அற்புதமான மனிதருக்கு அற்புதமான கவிதார்ப்பணம்

    ReplyDelete
  6. மகத்தான மனிதருக்கு ஒரு சிறப்பான நினைவஞ்சலி - உங்கள் கவிதை மூலம்.....

    மறக்க முடியாத மாமனிதர்.

    ReplyDelete
  7. மாமனிதருக்கு ஓர் அருமையான கவிதாஞ்சலி

    ReplyDelete
  8. சிந்திக்க வைக்கும்
    அருமையான பதிவு

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரரே

    நலமா? சிறப்பான பதிவு.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. நல்லவர்களை நாடு மறக்காது. பதிவுக்கு மிக்க நன்றி

    ReplyDelete