Monday, January 30, 2017

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பெடுக்கும் வல்லமை....

தவறாது நித்தமும்
தீமைக்கு எதிரான
அணியினில் ஒரு துளியாய்
போராட்டத்தில் ஒரு குரலாய்
இலக்கியத்தில் ஒரு வரியாய்
ஏதும் முடியவில்லையெனில்
குறைந்த பட்சம்
அதற்கு எதிராக
ஒரு முகச்சுழிப்பை
பதிவு செய்தபடி
 நாம் தினமும்  கடந்து போவதால்

தவறாது நித்தமும்
சரியானவைகளுக்கு ஆதரவான
அணியினில் ஒரு துரும்பாய்
இயக்கத்தில் சிறு அலையாய்
பதிவுகளில் ஒரு எழுத்தாய்
குறைந்த பட்சம்
அதற்கு ஆதரவாய்
ஒரு சிறு புன்னகையை
பதிவு செய்தபடி
நாம் தினமும்  கடந்து போவதால்

ஒவ்வொரு நாளும்
திரு நாளைப் போல
மகிழ்வூட்டிப் போவதோடு

ஒவ்வொரு நொடியையும்
அர்த்தப்படுத்தியும்
அழகுப்படுத்தியும் போவதோடு

மிக நேர்த்தியாய்....
பாரதியின் கூற்றினைப் போல

ஒவ்வொரு நாளும்
புதிதாய் பிறப்பெடுக்கும்
வல்லமையும் தந்து போகிறது

உங்களைப் போலவே
எனக்கும் 

7 comments:

  1. ஒவ்வொரு நாளும் புதிதாய்.....

    நல்லதொரு கவிதை. நன்றி.

    ReplyDelete
  2. இதே உற்சாகம் தொடரட்டும் ஐயா...

    ReplyDelete
  3. அருமையான கவிதை

    ReplyDelete
  4. /அதற்கு எதிராக
    ஒரு முகச்சுழிப்பை
    பதிவு செய்தபடி
    நாம் தினமும் கடந்து போவதால்/ செய்கிறோமா

    ReplyDelete
  5. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....அருமையான தன்னம்பிக்கைக்கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete