Friday, August 11, 2017

நம்பிக்கையுடன் எழுதிக்கொண்டிருப்போம்...

நம்
இளமைப் பருவத்தில்
தீமைகள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவைகள் எல்லாம் எங்கோ
மிக மறைவாய்க்
கண்ணுக்குத் தெரியாதபடி..
கைகளுக்கு எட்டாதபடி
மிக மிக முயன்றால் மட்டுமே
அபூர்வமாய்க்  கிட்டும்படி...

இப்போது
நல்லவைகள் இருக்கிறபடி...

நம்
இளமைப் பருவத்தில்
தீயவர்கள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவர்கள் எல்லாம்
மிக ஒதுங்கியபடி
அனைவருக்கும் தெரியாதபடி
அன்றாடவாழ்வில் தட்டுப்படாதபடி
அளவை மீறுகையில் மட்டும்
இருப்புத் தெரியும்படி

இப்போது
நல்லவர்கள் உள்ளபடி

என்ன செய்வது ?

கள்குடித்தக் குரங்கதுப்
பாறையில் நின்றபடித்
தன் முட்டைவைத்து
விளயாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறப்
பெட்டைகளாய்...

நாகரீகக் காலம்
நுகர்வுக்கலாச்சாரத்தில்
இளமையைவைத்து
விளையாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறோம்
ஊமைகளாய்..

என்ன செய்யலாம் ?

மழையில்லை என
புலம்பிய படியும்
அழுதபடியும்
இருத்தலை விடுத்து
நமபிக்கையுடன்
உழுதுக் கொண்டிருக்கும்
புஞ்சை விவசாயியாய்

மாற்றும் வழியதுத்
தெரியவில்லையெனப்
புரியவில்லையெனச்
சும்மா இருத்தலைவிடுத்து
நம்பிக்கையுடன்
எழுதிக்கொண்டிருப்போம்
பதிவர்களாய்..கவிஞர்களாய்

13 comments:

  1. நாம் எழுதுவோம்....ஏதேனும் கொஞ்சமேனும் ஒரு சிறு தாக்கம், விழிப்புணர்வு ஏற்படாதா என்ற ஒரு நம்பிக்கையில் நல்லதே எழுதி விதைப்போம்...மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்

    அருமை!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மாற்றம் வரும் என்பதில் மாற்றமில்லை என்பது இதற்கும் பொருந்தும் :)

    ReplyDelete
  4. புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  5. எல்லோரும் சேர்ந்து கூவினா பொழுது விடியும்
    அனுபவம்

    ReplyDelete
  6. இயன்றவரை எழுதி வைப்போம் மாற்றம் என்றாவது வரும் என்ற நம்பிக்கையில்...

    ReplyDelete
  7. நம்பிக்கையுடன் எழுதுவோம்.... நல்ல கருத்து ஜி. நன்றி.

    ReplyDelete
  8. நல்லவை அதிகமானல் அல்லவை மறையும்.
    நல்லதை பகிர்வோம் நம்பிக்கையுடன்.

    ReplyDelete
  9. நாம் மறைந்தாலும் நம் எழுத்து மறையாது/

    ReplyDelete
  10. நம்பிக்கையோடு??? வரைவை!!!!! த ம 6

    ReplyDelete
  11. எதை எழுதுவதுநமக்குத் தோன்றுவதையா அல்லது வாசிப்பவர்களுக்குப் பிடிக்கும் விஷயங்களையா எழுத்தில் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டுமா

    ReplyDelete