Tuesday, August 22, 2017

உங்கள் போதையைத் தெளிய வைத்து விடுகிறோம்

போதையில்  
குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து
வெளிச்சூட்டை ஆராய்பவர்கள்
நிச்சயம்
உண்மை நிலையறிய வாய்ப்பே இல்லை

பதவிச் சுகத்தில்
சுய நலமாய்ச் சிந்திப்போருக்கும்
மக்கள் மனமறிய
நிச்சயம்
துளியும் வாய்ப்பே இல்லை

தயாரிப்பாளரும்
நடிகரும் இயக்குநரும்
தம் படம் குறித்துப் கொள்ளும் பெருமிதம்

உண்மையா கற்பனையா என்பதை
படம் வெளியானால்
மிகச் சரியாக
ஒரு நடைபாதை வாசிக் கூடத்
தெளிவாய்ப் புரிய வைத்துவிடுவான்

யாருக்குச் சொந்தம்
யார் உண்மையானவர்கள் என்பதை
நீங்களே பேசி பேசி
ஏன் எங்களுக்குள்
கூடுதல் வெறுப்பையேற்றுகிறீர்கள்

தில் இருந்தால்
வெளியே வாருங்கள்
நாங்கள் மிக எளிதாய்
உங்களுக்குப் புரிய வைத்து விடுகிறோம்

உங்கள் போதையையும்
மிக எளிதாய்த்
தெளிய வைத்து விடுகிறோம்

12 comments:

  1. தில் இருந்தால் வெளியே வாருங்கள்.... :(

    அரசியல் - ஆதங்கப்படுவதை விட வேறு வழியில்லை இப்போதைக்கு!

    த.ம. +1

    ReplyDelete
  2. தில் இருந்தால் வாங்க நல்ல தில்லுதான்

    ReplyDelete
  3. ம்க்கும் தமிழனின் மறதிதான் உலகறிஞ்சதாச்சே

    ReplyDelete
  4. தில் இருக்கிறது. ஆனால் அது
    எ'தில்' என்பது தான் மக்களின் மன'தில்' உள்ள தி(கி)ல் நிறைந்த கேள்வி.?

    ReplyDelete
  5. தெளிய வைப்பார்களா? நம்புவோம்...

    ReplyDelete
  6. உங்கள் போதையையும்
    மிக எளிதாய்த்
    தெளிய வைத்து விடுகிறோம்


    நகைச்சுவை எண்ணங்கள் சில...
    http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html

    ReplyDelete
  7. தில் இல்லாத நிலையில் தான் இப்போதைய ஆளும்/எதிர் கட்சியினர்! அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete
  8. உண்மை
    உண்மை
    வெறியே வரட்டும்
    புரிய வைப்போம்
    தம +1

    ReplyDelete
  9. தூங்குகிறவனை எழுப்பலாம் தூங்கும் மாதிரிநடிப்பவனை ...?

    ReplyDelete