Saturday, December 8, 2012

நிஜமும் நிழலும்


வனவாசம் முடிந்து திரும்பும் ஸ்ரீராமனுக்காக
மாலைக்குப் பின் முதன் முதலாய்
மீண்டும் பகலைக் கண்ட அயோத்தி
ஒலி ஒளி வெள்ளத்தில் தத்தளிக்க

ஒழிய இடமில்லா நிசப்தமும் இருளும்
ஒதுங்கியிருந்த அந்தப்புரத்துள்
புகைப் போல் மெல்லப் பரவி
திடப் பொருளாய் உருமாறத் துவங்க

தலைவிரி கோலமாய் இருளோடு இருளாக
இறுகிப் போய்க் கிடந்தாள்
இளமையை யும் அழகையும் உணர்வையும்
காலக் கரைசலில் கரையவிட்ட ஊர்மிளை

அடக்குமுறைக்குப் பயந்திருந்த அடிமையாய்
அதுவரை அடங்கிக் கிடந்த பணிப்பெண் மெல்ல

"மகாராணி அச்சமாய் இருக்கிறது
மன்னரை வரவேற்கும் விதமாய்
ஒரு சிறு அகல் விளக்காவது ஏற்ற
அடிமையை அனுமதிக்க வேண்டும்"எனப் பணிகிறாள்

மெல்லப் புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "என்கிறாள்

அரண்மனை வாயிலில்
ஸ்ரீ ராம ஜெய கோஷம்
விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது


48 comments:

  1. மெல்லப் புன்னகைத்த ஊர்மிளை
    "நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
    நிழலுக்கு எதற்கு ?
    அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "என்கிறாள்

    ஆமாம், உண்மைதான் அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். நன்றி.
    தம

    ReplyDelete
  2. நிஜமில்லாமல் நிழல் ஏது ஐயா...?
    நிஜத்திற்கு ஆராதனை செய்தால் அது நிழலுக்கும் தானே பொருந்தும்.
    சற்று குழப்பமான பதிவு.
    நான் யோசித்துவிட்டு வருகிறேன்....இரமணி ஐயா.

    ReplyDelete
  3. நிழலுக்கு எதற்கு ?
    அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "

    ReplyDelete
  4. அருணா செல்வம் //

    தனக்கு உண்மையான கணவனாக இல்லாது
    ஸ்ரீ ராமனுக்கு விசுவாசமான தம்பியாகவே
    இருந்த தனது கணவன் குறித்த வருத்தத்தை
    லெட்சுமணனின் மனைவி வெளிப்படுத்துவதாக
    சொல்லமுயன்றிருக்கிறேன்..தனித்து இயங்காத
    நிழலை வேறு உறவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடும்
    மனைவியால் முடியுமா என்ன ?
    தங்கள் வரவுக்கும் சிந்திக்கவைத்த பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. semmalai akash //

    ஆமாம், உண்மைதான் அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். நன்றி.//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. கவியாழி கண்ணதாசன் //

    நிழலுக்கு எதற்கு ?
    அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    புரிதலுடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  7. அய்யா!

    நீங்கள் அருணாவிற்கு கொடுத்த-
    விளக்கத்திற்கு பிறகுதான்-
    எனக்கும் புரிந்தது....

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. சீதையின் கஷ்டம் சொன்னவர்கள் ஊர்மிளையை மறந்தார்கள். கவனிக்காமல் விடப்பட்ட இன்னொரு கதாநாயகி.

    ReplyDelete
  9. ஊர்மிளையின் தியாகத்தையும் சோகத்தையும் யார் உணர்ந்தார்கள்.
    இராமாயண காவியத்தில் விளக்கொளி தந்தவள் ஊர்மிளை.
    ஒளியைக் கொடுத்துவிட்டதால் நிழலானாள்.அவளும். அருமையாக உணர்த்தி இருக்கிறீர்கள்.

    ReplyDelete

  10. வணக்கம்!

    சீா்மிசை கொண்ட கம்பன்
    செப்பிய விருத்த நுாலில்
    ஊா்மிளை என்ற பெண்ணை
    ஓரிரு அடியில் சொல்வான்!
    பார்மிசை காணும் வண்ணம்
    படைத்துள கவிதை கண்டேன்!
    போ்மிசை ஓங்கும் வண்ணம்
    பீடுடன் இராமன் காப்பான்!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane@yahoo.fr

    ReplyDelete
  11. ஸ்ரீராம். //

    சீதையின் கஷ்டம் சொன்னவர்கள் ஊர்மிளையை மறந்தார்கள். கவனிக்காமல் விடப்பட்ட இன்னொரு கதாநாயகி.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    புரிதலுடன் கூடிய அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. வல்லிசிம்ஹன் //

    ஒளியைக் கொடுத்துவிட்டதால் நிழலானாள்.அவளும். அருமையாக உணர்த்தி இருக்கிறீர்கள்//

    தங்கள் உடன் வரவுக்கும்
    புரிதலுடன் கூடிய அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  13. கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் //

    பார்மிசை காணும் வண்ணம்
    படைத்துள கவிதை கண்டேன்!
    போ்மிசை ஓங்கும் வண்ணம்
    பீடுடன் இராமன் காப்பான்!//தங்கள் ஆசியுடன் கூடிய
    கவிதைப் பின்னூட்டம் என் பாக்கியம்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  14. //"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
    நிழலுக்கு எதற்கு ?
    அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "//

    சரியாக தான் சொல்லியிருக்கிறார். அவரின் துன்பம் அவருக்கு...

    ReplyDelete
  15. யாராலும் கவனிக்கப் படாத ஊர்மிளையின் பார்வையில் யோசித்திருப்பது சிறப்பு. பாவம் அவள் என்ன தவறு செய்தாள்?
    "நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
    நிழலுக்கு எதற்கு ?
    பரிதாபம் அள்ளிக்கொண்டு போகிறது.

    ReplyDelete

  16. கோவை2தில்லி //

    சரியாக தான் சொல்லியிருக்கிறார். அவரின் துன்பம் அவருக்கு...//

    தங்கள் உடன் வரவுக்கும்
    புரிதலுடன் கூடிய அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. T.N.MURALIDHARAN //

    யாராலும் கவனிக்கப் படாத ஊர்மிளையின் பார்வையில் யோசித்திருப்பது சிறப்பு.//

    தங்கள் உடன் வரவுக்கும்
    புரிதலுடன் கூடிய அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. வித்தியாசமான புனைவு

    ReplyDelete
  19. மெல்லப் புன்னகைத்த ஊர்மிளை
    "நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
    நிழலுக்கு எதற்கு ?
    அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "என்கிறாள்//
    அற்புதம்! நன்றீ ஐயா!

    ReplyDelete

  20. ஒருவரும் நினைக்காத ஊர்மிளையயை ஊர் அறியச் செய்தீர்! எனக்கே மறந்து விட்டபெயரை நினைவு படுத்தினீர்! நன்றி!

    ReplyDelete
  21. சிலிர்க்க வைத்த சிந்தனை. ஒரு ராமனை ஆராதிக்க எத்தனை பேரை அனாதையாக்கியிருக்கிறோம்!!

    ReplyDelete
  22. தற்காலத்திலும் பல மனைவிமார் மனதினுள் இப்படி எண்ணங்கள் ஆழ்ந்து கிடக்கின்றன....அருமை!

    ReplyDelete
  23. வாரே வாஹ்..வாஹ்!

    அருமை..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. நிசப்தம்தான் உண்மையை உரக்கச் சொல்லி வைக்கும்.அழகான உண்மை !

    ReplyDelete
  25. மொத்தமாக மறந்துவிட்ட ஒரு பாத்திரம் ஊர்மிளையுடையது....

    அவரைப் பற்றிய கவிதை நன்று.

    ReplyDelete
  26. சிறு கவிதையில் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.வித்தியாசமான புனைவு.வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  27. அழ. பகீரதன் //
    .
    வித்தியாசமான புனைவு//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. பாடப் பெறாத தலைவிக்கு ஒரு அருமையான, உணர்வு பூர்வமான கவிதை!

    ReplyDelete
  29. Seshadri e.s. //

    அற்புதம்!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. புலவர் சா இராமாநுசம் //

    ஒருவரும் நினைக்காத ஊர்மிளையயை ஊர் அறியச் செய்தீர்! எனக்கே மறந்து விட்டபெயரை நினைவு படுத்தினீர்! நன்றி!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. அப்பாதுரை //

    சிலிர்க்க வைத்த சிந்தனை. ஒரு ராமனை ஆராதிக்க எத்தனை பேரை அனாதையாக்கியிருக்கிறோம்!!//

    தங்கள் உடன் வரவுக்கும்
    புரிதலுடன் கூடிய அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. koodal bala //

    தற்காலத்திலும் பல மனைவிமார் மனதினுள் இப்படி எண்ணங்கள் ஆழ்ந்து கிடக்கின்றன....அருமை!//

    தங்கள் பின்னூட்டத்தின் மூலம்
    வேறு ஒரு விசாலமான அர்த்தம்
    இருப்பது புரிய மகிழ்வு கொண்டேன்
    வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. ரமேஷ் வெங்கடபதி //

    வாரே வாஹ்..வாஹ்!
    அருமை..வாழ்த்துக்கள்!/

    /உற்சாகத்துடன் கூடிய தங்கள் பின்னூட்டம்
    அதிக சந்தோஷம் தருகிறது
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. ஹேமா //

    நிசப்தம்தான் உண்மையை உரக்கச் சொல்லி வைக்கும்.அழகான உண்மை !//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. வெங்கட் நாகராஜ் //
    .
    மொத்தமாக மறந்துவிட்ட ஒரு பாத்திரம் ஊர்மிளையுடையது....
    அவரைப் பற்றிய கவிதை நன்று//

    தங்கள் உடன் வரவுக்கும்
    புரிதலுடன் கூடிய அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    .

    ReplyDelete
  36. ஸாதிகா //
    .
    சிறு கவிதையில் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.வித்தியாசமான புனைவு.வாழ்த்துக்கள் சார்//

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. Ranjani Narayanan //

    பாடப் பெறாத தலைவிக்கு ஒரு அருமையான, உணர்வு பூர்வமான கவிதை!.

    .தங்கள் உடன் வரவுக்கும்
    புரிதலுடன் கூடிய அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  38. நல்லதொரு சிந்தனை! உண்மையில் ஊர்மிளை தான் இராமயணத்தில் பாராட்டப்படவேண்டியவள்! அவளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தங்கள் கவிதை மிகவும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete

  39. ராமாயணக் காவியத்தில் ராமனின் நிழலாய் இருந்ததால் லட்சுமணன் போற்றப் பட்டான். அவனை நிழல் என்பதால் அவன் மனைவி ஆதங்கப் படுகிறாள்.... ஹூம்....! ஒரு கதையில் எல்லோரையும் நாயகர்களாக்க முடியாதே. ராமன் இருக்குமிடம் அயோத்தி என்று சீதை கானகம் சென்றதுபோல் ஊர்மிளை செல்லவில்லையே. இருந்தாலும் வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  40. அருமை வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்

    ReplyDelete
  41. வித்தியாசமான சிந்தனைக் களம்!
    சிலரை வெளிச்சத்தில் ஆழ்த்துகிறது!.
    வாழ்த்துகள்!.

    ReplyDelete
  42. //"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
    நிழலுக்கு எதற்கு ?
    அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "//

    கிளாஸ்! படிச்சு கலங்கி போயிட்டேன். மனசுல இடி இறங்கின மாதிரி ஒரு உணர்வு.

    ReplyDelete
  43. s suresh //

    நல்லதொரு சிந்தனை! உண்மையில் ஊர்மிளை தான் இராமயணத்தில் பாராட்டப்படவேண்டியவள்! அவளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தங்கள் கவிதை மிகவும் சிறப்பு! நன்றி!//.

    தங்கள் உடன் வரவுக்கும்
    புரிதலுடன் கூடிய அருமையான
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  44. G.M Balasubramaniam //

    வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள்./

    /தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. Student Drawings //

    அருமை வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்//

    /தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. தோழன் மபா, தமிழன் வீதி //

    வித்தியாசமான சிந்தனைக் களம்!
    சிலரை வெளிச்சத்தில் ஆழ்த்துகிறது!.
    வாழ்த்துகள்!.../

    தங்கள் உடன் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி /

    ReplyDelete
  47. மீனாக்ஷி //

    கிளாஸ்! படிச்சு கலங்கி போயிட்டேன். மனசுல இடி இறங்கின மாதிரி ஒரு உணர்வு.//

    தங்கள் உணர்வு பூர்வமான பின்னூட்டம்
    அதிக உற்சாகமளிக்கிறது.
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete