Tuesday, October 29, 2013

திருநாள் ஏதும் உண்டோ ?

திருநாள் ஏதும் உண்டோ  ?- தீபத்
திருநாள் எங்கும் உண்டோ ?
வருடம் ஒருநாள் ஆயினும் -திருநாள்
ஒருநாள் இரவே ஆயினும்                          (திருநாள் )

சிறியவர் பெரியவர் பேதமும்- செல்வம்
உடையவர் வறியவர் பேதமும்
துளியது இன்றி மகிழ்வினில் _அனைவரும்
திளைத்திடும் மகிழ்வைப் பெருக்கிடும்    (திருநாள் )

உறவினை எல்லாம்  கூட்டியே _ இனிக்கும்
விருந்தினில் அன்பைக் காட்டியே
துயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்
மகிழ்வினை ஆறாய்க் கூட்டிடும்               (திருநாள் )

இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
குறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான
நெருப்பினை நம்முள் விதைத்திடும்       (திருநாள் )

37 comments:

  1. மிகச் சிறந்த ஓர் தீபாவளிக் கவிதை!

    ReplyDelete
  2. //அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
    குறிப்பினை நமக்கு உணர்த்திடும் // மிகப் பிடித்தது ரமணி ஐயா! அருமையான திருநாள் கவிதை! நன்றி!
    த.ம.3

    ReplyDelete
  3. எல்லோரும் கொண்டாடும் சந்தோஷ திரு நாள்...!

    ReplyDelete
  4. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சந்தோஷத்திருநாள். மகிழ்வளிக்கும் நல்ல கவிதை. பாராட்டுக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
    அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
    குறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான
    நெருப்பினை நம்முள் விதைத்திடும் //
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்லா கவிதை எழுதுகிரீர்கள்!
    [[இருளெனும் மடமை ஒழியவே]]-இது ஒழிந்தால் நன்று!
    என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்.
    நன்றி!

    ReplyDelete

  8. வணக்கம்!

    ஞான நெருப்பினை ஏற்றும் திருநாளைக்
    காணக் கவிபடைத்தீா் கற்கண்டாய்! - வான
    விரிவாக வாய்த்திடும் மின்னறிவால் தோன்றும்
    சரியாக வாழ்வு தழைத்து.

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. //இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
    அறிவொளிச் சுடரை ஏற்றெனும்...//

    மிக அற்புதமான சிந்தனைச் சிறப்பான கவி ஐயா!

    மன இருள் அகல ஒளியேற்றிட எல்லாம் அமையும்..

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா

    மனதை விட்டு நீங்காத அழகான தீபாவளிக்கவிதை கவிதையின் மொழிநடை மிக மிக அழகு வாழ்த்துக்கள்...ஐயா

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. தீபாவளிப் பாடல் அருமை அனைத்து வரிகளும் அருமை. பாடி மகிழலாம்

    ReplyDelete
  12. எந்த ஒரு திருநாளாயினும் உறவுகள் கூடுவதுதான் சிறப்பு.

    ReplyDelete
  13. தீபாவளி வாழ்த்தும் அருமை

    ReplyDelete
  14. நல்ல கவிதை. பாராட்டுக்கள். எனது இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள்.
    tha.ma 13

    ReplyDelete
  15. மிகவும் அருமை ஐயா...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. அருமையான நடையில் அமைந்த கவிதை ஐயா...
    மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  17. அழகான கவிதை ஐயா...
    சுற்றி வரும்
    தீப ஒளிச் சுடரே..
    எமைச் சுற்றியுள்ள
    மடமைகளை போக்கிடு..
    ஆங்கே
    தூய எண்ணங்கள் கொடுக்க
    நல்லொளி
    பாய்த்துவிடு..

    ReplyDelete
  18. உங்கள் கவிதை தீபாவளி கவிதை தனை
    நான் பாடி இருக்கிறேன். மிகவும் அழகா எழுதி உள்ளீர்கள்.


    சற்று நேரத்தில் யூ ட்யூபில் போடுகிறேன். கேளுங்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  19. இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
    அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
    குறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான
    நெருப்பினை நம்முள் விதைத்திடும்

    தீபாவளித்திருநாள் திகழ்ட்டும் ..!

    ReplyDelete
  20. sury Siva sir

    கல்லை ஏற்கெனவே ஒருமுறை
    சிற்பமாக்கி எனக்கு பெருமை
    சேர்த்தீர்கள்,
    இந்தப் பாடலும் யோகம் செய்திருப்பதை
    நினைக்க பெருமையாக உள்ளது
    மிக்க நன்றி

    ReplyDelete
  21. ஏறத்தாழ ஒரே அலைவரிசையில்........... ?....!

    ReplyDelete
  22. உறவினை எல்லாம் கூட்டியே _ இனிக்கும்
    விருந்தினில் அன்பைக் காட்டியே
    துயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்
    மகிழ்வினை ஆறாய்க் கூட்டிடும்

    மனம் மகிழ வைத்த சிறப்பான கவிதை வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா மேலும் சிறப்பாகத் தொடரட்டும் நாடும் வீடும் நல்லொளிபெறவே !

    ReplyDelete
  23. திருநாள் கொண்டாடப்படுவதன் உண்மையான விளக்கங்களை அழகுறச் சொன்னீர்கள் ரமணி சார். பாராட்டுகள்.

    ReplyDelete
  24. கவிதைக்கு பாராட்டு! உங்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
    குறிப்பினை நமக்கு உணர்த்திடும்
    >>
    இப்படி ஒரு அர்த்தம் இருக்கா!? இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்ப்பா!

    ReplyDelete
  26. கவிதை அருமை. தீபத் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
    அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
    குறிப்பினை நமக்கு உணர்த்திடும் ...."

    உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும்
    தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  28. தீப ஒளி எங்கும் பரவட்டும்! அருமையான தீபாவளி கவிதை! நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  29. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.இருளகற்றி ஒளி பரப்பும் நாள்தான்,

    ReplyDelete
  30. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  31. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    குதூகலமாய்க் கொண்டாடுங்கள்.

    ReplyDelete
  32. ஒளிமயமான தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  33. உறவினை எல்லாம் கூட்டியே _ இனிக்கும்
    விருந்தினில் அன்பைக் காட்டியே
    துயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்
    மகிழ்வினை ஆறாய்க் கூட்டிடும்

    இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
    அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
    குறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான
    நெருப்பினை நம்முள் விதைத்திடும்

    ஆழமான நல்ல கருதுக்கள் நன்றாக ரசித்தேன். இனிமையான எண்ணங்கள்.
    பகிர்வுக்கு நன்றி.......!

    உங்களுக்கும் இல்லத்தாருக்கும் என் இனிய
    தீபாவளி நல் வாழ்த்துக்கள் ........!

    ReplyDelete
  34. தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.


    ReplyDelete

  35. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete