Tuesday, December 23, 2014

"பிஸாசைப் "பார்த்தேன்- விமர்சனம் போலவும்

தீவீர எம்.ஜிஆர் ரசிகன் என்றால்
கொஞ்சம் மட்டமாகவும் சிவாஜி ரசிகன் என்றால்
கொஞ்சம் உயர்வாகவும் பார்க்கப் பட்ட அந்தக்
காலத்திலேயே நான் தீவீர எம்.ஜி,ஆர் ரசிகன்

போலீஸ் கெடுபிடி அடிதடி இத்தனையயும் மீறி
முதல் நாள்  முதல் ஷோ எப்படியும்
பார்த்துவிடுவேன்.

எப்படித்தான் சுதாரிப்பாக இருந்தாலும்
கூட்ட இடிபாடுகளில் சிக்கியதில் கவுண்டர் அருகில்
ஏற்படும் அதீதத் தள்ளுமுள்ளில் தோள்பட்டை
இடுப்பில் எப்படியும் ஊமைக் காயம் ஏற்பட்டுவிடும்

அதனால் ஏற்படும் வலி இரண்டு மூன்று நாள்
நிச்சயமிருக்கும் என்றாலும் தெரு மற்றும்
நண்பர்கள் வட்டத்தில் "டேய் இவன் இந்தப்
படம் பார்த்துபுட்டாண்டா " என்கிற அந்தப்
பெருமைப் பேச்சைக் கேட்பதிலும் அந்தப்
படத்தின் கதையைக் கேட்பதற்காக ஒரு சிறு குழு
என்னையே சுற்றுக் கொண்டிருப்பதிலும், உள்ள
அந்த அற்புதச் சுகம் அனுபவித்தவர்களுக்குத் தான்
மிகச் சரியாகத் தெரியும்

இப்படிப்பட்ட குணாதியம் மிக்க நான்
வெகு நாட்களுக்குப்பின் அதிக எதிர்பார்ப்பில்
(போஸ்டர் மற்றும் ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்
தந்த திருப்தியில் தூண்டப்பட்டு )
முதல் நாள் முதல் ஷோ எவ்வித சிரமமுமின்றி
"பிஸாசு " சினிமாவைப் பார்த்தேன்

என்னைப் போலவே ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்
ஏற்படுத்தியிருந்த பாதிப்பினாலோ கொஞ்சம்
ஜனரஞ்சகம் தாண்டிய சினிமா பார்க்கவேண்டும்
என்கிற எதிர்பார்ப்பினாலோ நானே எதிர்பார்க்காதபடி
இளைஞர் கூட்டம் அதிகம் இருந்தது
(ஜோடி இளைஞர்கள் இல்லை )

முதலில் ஒரு டைட் குளோஸப்பில் துவங்கிய
படம் இடைவேளைவரை மிக நேர்த்தியாய்
செதுக்கப் பட்டச் சிற்பம்போல் சின்னச் சின்னக் காட்சி
அமைப்புகளின் மூலமும் அற்புதமான இசை
மற்றும் காமிராவின் அதி உன்னதப் பதிவுகளின்
மூலமும் நம்மை ஒரு வித்தியாசமான அற்புதமான
படத்தைப் பார்க்கின்ற ஒரு திருப்தியை ஏற்படுத்திப்
போகிறது

இடையில் வருகிற சிலச் சில எதிர்பாராத்
திருப்பங்களும் நமக்கு உற்சாகம் கொடுத்துப் போகிறது

எந்த ஒரு படம் இடைவேளையில் நம்மை
அதிக உச்சத்திலும் அதிக எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தி
படம் முடிகையில் ஒரு திருப்தியை
ஏற்படுத்திப் போகிறதோ அதுவே ஒரு
வெற்றிப்படமாகவும் ஒரு நிறைவைத் தருகிற
படமாகவும் இருக்கும்

இப்படத்தில் முதல் பாதி மிகச் சரியாக அமைந்த அளவு
பின் பாதி நம் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை

காரணம் பேய் பிஸாசு எனில் ஒரு இருளின் திரட்டு
அல்லது ஒளி உருவம் என நாம் கொண்டிருக்கிற
நம்பிக்கைக்கைக்கு மாறாக ஒரு உருவமாகவே காட்டப்
படுவதாலா ?

பேயும் ஆண்டவனும் சுயமாக நேரடியாக இயங்க
முடியாது ஏதோ ஒன்றில் ஏறியோ அல்லது அதன்
உதவியுடந்தான் நன்மையோ
தீமையோ செய்ய இயலும் என நாம் கொண்டிருக்கிற
 ஒரு அபிப்பிராயத்துக்கு எதிராக
பிஸாசே தன் உடலைத் தானே தூக்கி எரிக்கும்
நம்ப முடியாத காட்சி அமைப்பாலா ?

மிகச் சரியாகத் தெரியவில்லை

ஆயினும்
நன்மை செய்யும் பேய் பிஸாசு மற்றும்
தீமை செய்யும்பிஸாசு இவைகளைப்
பற்றியேப் பார்த்தும்
காமம் கொள்ளும் பிஸாசு பழி வாங்கும் பிஸாசு
எனப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு
காதல் உணர்வில் வரும் பிஸாசுக் கதை ஒரு
வித்தியாசமான அனுபவம்தான்

கண்ட குப்பைகளைப் பார்ப்பதற்கு ஒரு
வித்தியாசமானமிக நேர்த்தியாக எடுக்கப் பட்ட
 இப்படத்தைஅவசியம் பார்த்து வைக்கலாம்

மிஷ்கின் அவர்களே ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்
ஏற்படுத்தியிருந்த அருமையான பாதிப்பில்
மற்றும் பிஸாசின் மேல் அனைவருக்குமிருக்கும்
ஒரு சுவாரஸ்யத்தில் விளம்பர யுக்தியில்
இந்தப் படத்திற்கு ஓபெனிங் காட்சியில்
கூட்டம்  இருந்தது

இந்தப் படம் அடுத்த படத்திற்கு அதைச் செய்வது
சந்தேகமே...

19 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    படம் பார்த்தது போல ஒரு உணர்வு இரசித்து மிக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.... சில நேரங்களில் பாகம் 2 வரலாம்..ஐயா...தாங்கள் சொன்னது போல இருக்காது... இது உண்மைதான்..த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாத்யாரின் படம் என்றால் அடித்துப் பிடித்து ஓடி டிக்கெட் வாங்கிப் பார்த்த என் மாணவப் பருவத்தை மீண்டும் நினைவூட்டி விட்டீர்கள். பிசாசு நான் இன்னும் பார்க்கவில்லை. பாத்துடறேன். ‘காதல் பிசாசே’ன்னு ஒரு பாட்டை இந்தப் படம் வரும்னு எதிர்பார்த்துதான் போட்ருப்பாங்களோ...? மைல்டா ஒரு டவுட்டு...!

    ReplyDelete
  3. அந்தக்கால எம்ஜிஆர் படம் பார்த்த அனுபவங்களைச் சொல்லப் போகிறீர்கள் என்று ஆவலோடு படித்தேன். உங்களை பிசாசு பிடித்துக் கொள்ள, அந்த பக்கம் தாவி விட்டீர்கள். பரவாயில்லை, அடுத்த வாரம் உங்களுக்கு “எம்ஜிஆர் வாரம்”. உங்கள் நினைவலைகளை தொடருங்கள்.
    த.ம.3

    ReplyDelete
  4. ஒ!! அப்போ படம் கொஞ்சம் டல் தானோ???

    ReplyDelete
  5. ///பிஸாசே தன் உடலைத் தானே தூக்கி எரிக்கும்
    நம்ப முடியாத காட்சி அமைப்பாலா ?///
    ஐயா பிசாசுவைப் பார்த்தவர் யாரும் கிடையாது
    இருக்கின்றதா இல்லையா என்பதும் தெரியாது
    எனக்கு அந்தக் காட்சி பிடித்திருந்தது ஐயா,
    அந்தக் காட்சி என்பதைவிட , அந்தக் காட்சியின் நோக்கம் பிடித்திருந்தது.
    படம் முழுவதுமே ரசித்துப் பார்த்தேன்

    ReplyDelete
  6. நோக்கம் என்பது பாடியை
    புதைக்காமலோ அல்லது எரிக்காமலோ
    வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற
    சுற்றுப் புறச் சூழல் குறித்த விழைப்புணர்சியால்தான்
    என நினைக்கிறேன்.சரியா ?

    ReplyDelete
  7. திண்டுக்கல் தனபாலன் said.//
    ..
    பிசாசு ஓடும்...

    பிசாசு ஓடாது
    மறையும்
    ஆனாலும் அசலுக்குமேல் லாபம் கொடுக்கும்

    ReplyDelete
  8. பிசாசின் மேல் நம்பிக்கை இல்லாததால் பார்க்கணும்னு தோணலே :)
    த ம 6

    ReplyDelete
  9. பாருங்கள்
    பிசாசின் மேல்
    பரிவு வர வாய்ப்பிருக்கிறது

    ReplyDelete
  10. ***கண்ட குப்பைகளைப் பார்ப்பதற்கு ஒரு
    வித்தியாசமானமிக நேர்த்தியாக எடுக்கப் பட்ட
    இப்படத்தைஅவசியம் பார்த்து வைக்கலாம்.***

    ஒரு சில நடிகர்கள் உங்கள் மனதை ரொம்பத்தான் பாதித்து இருக்காங்க!

    உங்களுக்கு குப்பையாக தோன்றுவதை இன்னொருவர் ரசிக்கலாம். நீங்க முதல் காட்சி பார்த்த படங்களையும் சேர்த்துத்தான் சொல்லுறேன். இதெல்லாம் உங்களுக்கு நான் விளக்கணுமா என்ன???

    அதேபோல் நீங்க ரசித்துப் பார்த்த படங்கள் மற்றவருக்கு குப்பையாக இருக்கலாம்.

    ஆக "குப்பை" என்பது தனிப்பட்ட நபரைப்பொறுத்தது.

    பிசாஸு நல்லாயிருக்கு, பாருங்கள்னு நீங்க சொல்லி முடிச்சு இருக்கலாம். ஒரு சில நடிகர்கள் மேல் உங்களுக்கு உள்ள அளவுக்குமீறிய வெறுப்பை தொடர்ந்து ஒவ்வொரு பதிவிலும் காட்ட வேண்டியதில்லைனு எனக்குத் தோணுது.

    People easily identify bloggers' taste and whom they HATE easily too.

    ReplyDelete
  11. Tamil maNam -1 ! Sorry I dont like the way you show your hatred everywhere on some people! That's the best I could do!

    ReplyDelete

  12. வருண் said..//.
    Tamil maNam -1 ! Sorry I dont like the way you show your hatred everywhere on some people! That's the best I could do!
    மனம் திறந்த வெளிப்படையான கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. பேயும் பிசாசு நம் கற்பிதங்கள்தானே சார்/

    ReplyDelete
  14. நல்ல விமர்சனம்

    ReplyDelete
  15. ஏன் 'பிஸாசு' என்று எழுதுகிறீர்கள்?

    ReplyDelete
  16. நல்ல விமர்சனம்...சார்! பார்க்கலாம் என்றிருக்கின்றோம்,..இதுவரை ஒரு வித்தியாசமான படம் என்றே கேள்விப்பட்டோம்....ம்ம்ம்

    ReplyDelete