Wednesday, June 24, 2015

சர்வாதிகாரி- மிகக் குறைந்த அதிகாரத்தில்

பகலும் இரவும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பகலில் இரவில்
எதைச் செய்வது என்பது மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

பருவமும் காலமும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பருவத்திற்கும் காலத்திற்கும்
தகுந்தார்ப்போல நம்மை
தகவமைத்துக் கொள்ளும்
அதிகாரம் மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

ஆயுளும் முடிவும்
நம் கட்டுப்பாட்டில் நிச்சயம் இல்லை
ஆயுள் முடிவதற்குள்
எதைச் செய்து முடிப்பது என்பதை
முடிவு செய்யும்
அதிகாரம் மட்டுமே
நம் வசம் உள்ளது

வார்த்தைகளும் அதற்கான
அர்த்தங்களும் நம் கட்டுப்பாடில் இல்லை
அதனை முழுமையாகப் புரிந்து
மிகச் சிறந்த படைப்பைத் தருவது மட்டுமே
நம் அதிகாரத்தில் இருப்பதைப் போலவும்....

18 comments:

  1. அவைகளாவது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதே!

    :)))

    மழை விட்டும் தூவானம் விடவில்லையா!

    ReplyDelete
  2. //மிகச் சிறந்த படைப்பைத் தருவது மட்டுமே
    நம் அதிகாரத்தில் இருப்பதைப் போலவும்....//

    இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இதுவும் நம் அதிகாரத்தில் ஏதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

    மிகச் சிறந்த படைப்பைத் தருவது நம் திரு. ரமணி சார் போன்ற சில திறமைசாலிகளால் மட்டுமே இயலக்கூடியது.

    இதில் நம் அதிகாரமாவது வெங்காயமாவது. :)



    ReplyDelete
  3. குறள் 336

    அதிகாரம் : நிலையாமை...!

    நன்றி ஐயா...

    ReplyDelete
  4. நம்மிடம் இருப்பதைக் கொண்டு
    நிறைவாய் பணியாற்றுவோம்
    அருமை ஐயா
    தம +1
    நன்றி

    ReplyDelete
  5. ஆயுளும் முடிவும்
    நம் கட்டுப்பாட்டில் நிச்சயம் இல்லை
    ஆயுள் முடிவதற்குள்
    எதைச் செய்து முடிப்பது என்பதை
    முடிவு செய்யும்
    அதிகாரம் மட்டுமே
    நம் வசம் உள்ளது
    உண்மையான வரிகள்,
    தங்கள் வழி தனி வழி,
    அருமை, வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  6. சிந்திக்க வைத்த பகிர்வு ...

    ReplyDelete
  7. சிந்தனையை தூண்டும் சிறப்பான பதிவு! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. கட்டுப்பாட்டில் இருப்பது எதுவோ அதைச் செவ்வனே செய்தல் வேண்டும்.அருமை.தம7

    ReplyDelete
  9. சீரிய விஷயம் சொல்லும் பகிர்வு. நன்றி.

    ReplyDelete

  10. ஸ்ரீராம். said..//

    .மழை விட்டும் தூவானம் விடவில்லையா!//

    நான் டியூப் லைட் என்பதை
    இந்தப் பின்னூட்டம் உறுதி செய்தது

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் ..//

    தங்கள் மேலான வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்ற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன் said...
    குறள் 336

    அதிகாரம் : நிலையாமை..//.

    சுருக்கமான ஆயினும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கரந்தை ஜெயக்குமார் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்ற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. mageswari balachandran said.//

    ..உண்மையான வரிகள்,
    தங்கள் வழி தனி வழி,
    அருமை, வாழ்த்துக்கள்.


    தங்கள் மேலான வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்ற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. சசி கலா //

    தங்கள் மேலான வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்ற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. ‘தளிர்’ சுரேஷ் //

    தங்கள் மேலான வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்ற்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  17. சென்னை பித்தன் said..//
    .
    கட்டுப்பாட்டில் இருப்பது எதுவோ அதைச் செவ்வனே செய்தல் வேண்டும்.//

    தங்கள் மேலான வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்ற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. வெங்கட் நாகராஜ் said...//

    சீரிய விஷயம் சொல்லும் பகிர்வு//

    தங்கள் மேலான வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்ற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete