Tuesday, June 30, 2015

மீண்டும் ஒரு அலசல்

மெல்லக் கீறிப் போகிறேன்

கவனிக்கப்படாமல் போய்விடாதபடி
கொஞ்சம் அழுத்தமாகவும்..

எரிச்சலடையாமல் இருக்கும்படி
கொஞ்சம் மெதுவாகவும்..

அளவு மீறினாலோ,குறைந்தாலோ
கவனம் மாறிவிடச் சாத்தியம்
மிக அதிகம் என்பதால்..

கொஞ்சம் வெளிச்சம் காட்டிப் போகிறேன்

முழுவதும் சரியாகத் தெரியும்படி
அதிகம் இல்லாமலும்

கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும்படி
கொஞ்சம் குறைவாகவும்..

அளவு கூடினாலோ குறைந்தாலோ
கவனம் குவிக்கப்படாது போய்விடச்
சாத்தியம் உண்டு என்பதால்..

வித்தியாசமாகச் சொல்லிப் போகிறேன்

விட்டு விலகி ஓடிவிடாதபடி
கவிதையாகவும் இல்லாதபடி

பிரசங்கம் என உணராதபடி
அறிவுரையாகவும் இல்லாதபடி

இரண்டின் சேர்மானமும்
மிகச் சரியாக இல்லையெனில்
ஒதுக்கிவிடவே வாய்ப்பு அதிகம் என்பதால்...

தொடர்ந்து சொல்லிப் போகிறேன்

சொல்வது  ஏதேனும் பயனுள்ளதாக
இருக்கவேண்டும் என்னும் கருத்தில்
மாற்றம் கொள்ளாதபடி..

முன்ணனி மற்றும் ,தரப்பட்டியல் என்னும்
அள்வீடுகளின் மாயச் சங்கிலியில்
பிணைத்துக் கொள்ளாதபடி..

உங்கள் ஆதரவுடன்
நூறு நாடுகளுக்கு மேல் மூன்று இலட்சம்
பார்வைப் பதிவுகளைப்  பெற்றபடி

தொடர்ந்து சோராது
நான்கு ஆண்டுக்கு முன்பு இருந்த
ஆர்வமும் வேகமும் சிறிதும் குறையாதபடி..

28 comments:

  1. பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வோம். கேட்பவர்களுக்கு நல்ல நேரம் இருந்தால் செவி புகட்டும்!

    :))))))

    ReplyDelete
  2. பல லட்சங்கள் ஆனாலும் சரி... தங்களின் லட்சியத்திற்கு வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  3. ஆர்வமும் வேகமும் சிறிதும் குறையாமல் இது தானே முக்கியம். வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  4. Your felicity with WORDS is amazing; you are a true wordsmith..

    ReplyDelete
  5. சொல்வது ஏதேனும் பயனுள்ளதாக
    இருக்கவேண்டும் என்னும் கருத்தில்
    மாற்றம் கொள்ளாதபடி..//

    அது தானே ஐயா முக்கியம்...நன்றி தம +1

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஐயா! உங்கள் பாணியே தனி! அது எப்போதும் வாசகர்களை கவர்ந்து இழுத்துக்கொள்ளும்! மேலும் பல சாதனைகள் தொடரட்டும்! நன்றி!

    ReplyDelete
  7. நான்காண்டுகளுக்கும் மெலாக மூன்று லட்சத்துக்கும் மேல் பார்வை பதித்தவர்களுள் நானும் ஒருவனாக...... மகிழ்ச்சியே.!

    ReplyDelete
  8. தொடரட்டும் உங்கள் பா(ப)ணி!
    நமக்கு அடையாளம் நம் எழுத்துகள்தான்! தர வரிசை அல்ல!
    தம7

    ReplyDelete
  9. G.M Balasubramaniam said...//
    நான்காண்டுகளுக்கும் மெலாக மூன்று லட்சத்துக்கும் மேல் பார்வை பதித்தவர்களுள் நானும் ஒருவனாக


    தொடர்ந்து சோராது
    நான்கு ஆண்டுக்கு முன்பு இருந்த
    ஆர்வமும் வேகமும் சிறிதும் குறையாதபடி//

    இதுவும்தான்

    ReplyDelete
  10. தங்கள் எழுத்துகளில் தாங்கள் எப்போதுமே தனித்தன்மை வாய்ந்தவர்தான் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.

    இது தமிழ் வலையுலகறிந்த உண்மையும் ஆகும்.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். :)

    ReplyDelete
  11. V Mawley said...
    Your felicity with WORDS is amazing; you are a true wordsmith..//

    நான் இதுவரை பெற்ற பாராட்டுரைகளில்
    இதுவே மிக உயர்ந்த பாராட்டாக இருக்கும் என
    நினைக்கிறேன்
    மிக்க நன்றி

    ReplyDelete
  12. ஸ்ரீராம். said...//
    பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வோம். கேட்பவர்களுக்கு நல்ல நேரம் இருந்தால் செவி புகட்டும்!//

    உங்கள் அடியொற்றி எனவும் சொல்லலாம்

    ReplyDelete
  13. திண்டுக்கல் தனபாலன் said...//
    பல லட்சங்கள் ஆனாலும் சரி... தங்களின் லட்சியத்திற்கு வாழ்த்துகள்//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. சசி கலா said...//
    ஆர்வமும் வேகமும் சிறிதும் குறையாமல் இது தானே முக்கியம். வாழ்த்துக்கள்//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. R.Umayal Gayathri ..//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ‘தளிர்’ சுரேஷ் said...
    வாழ்த்துக்கள் ஐயா! உங்கள் பாணியே தனி! அது எப்போதும் வாசகர்களை கவர்ந்து இழுத்துக்கொள்ளும்! மேலும் பல சாதனைகள் தொடரட்டும்! நன்றி!//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சென்னை பித்தன் said...
    தொடரட்டும் உங்கள் பா(ப)ணி!
    நமக்கு அடையாளம் நம் எழுத்துகள்தான்! தர வரிசை அல்ல!//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தங்கள் எழுத்துகளில் தாங்கள் எப்போதுமே தனித்தன்மை வாய்ந்தவர்தான் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.

    இது தமிழ் வலையுலகறிந்த உண்மையும் ஆகும்.
    மனம் நிறைந்த பாராட்டுகள்//

    தங்கள் வரவுக்கும் தொடர்ந்து
    உற்சாகமூட்டும் பின்னூட்டமிட்டு
    என்னை இயக்கும் தங்க்களுக்கு என்
    மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துக்களும்

    ReplyDelete
  19. மேலும் பல லட்சங்கள் பெற வாழ்த்துக்கள்!
    த ம 8

    ReplyDelete
  20. S.P. Senthil Kumar said...//
    மேலும் பல லட்சங்கள் பெற வாழ்த்துக்கள்!//தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வணக்கம்,
    எங்கள் மனதிலும் என்றும் நிறைந்தபடி,
    நாங்களும் விரும்பியபடி,
    எம் வாழ்த்துக்கள் உம்மை வந்து சேர்ந்தபடி
    தாங்கள் தொடனும் இன்னும் பலபடி
    என்றும் எங்கள் வாழ்த்துக்கள்
    நன்றி.

    ReplyDelete
  22. mageswari balachandran //.

    அருமையாய் வித்தியாசமாய்
    பதிவின் பாணியிலேயே சொல்லிய
    பின்னூட்டம் அதிகம் மனம் கவர்ந்தது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. மேலும் மேலும் வளர்க! வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. புலவர் இராமாநுசம் said..//.
    மேலும் மேலும் வளர்க! வாழ்த்துகள்!
    தங்கள் வரவுக்கும் தொடர்ந்து
    உற்சாகமூட்டும் பின்னூட்டமிட்டு
    என்னை இயக்கும் தங்களுக்கு என்
    மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துக்களும்

    ReplyDelete
  25. வணக்கம்
    ஐயா

    படித்த போது மகிழ்ச்சியடைந்தேன் ஐயா. இதை்போல வேகம் தொடரட்டும் ஐயா வாழ்த்துக்கள் த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  26. ரூபன் said...

    படித்த போது மகிழ்ச்சியடைந்தேன் ஐயா. இதை்போல வேகம் தொடரட்டும் ஐயா வாழ்த்துக்கள்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. சொல்வது ஏதேனும் பயனுள்ளதாக
    இருக்கவேண்டும் என்னும் கருத்தில்
    மாற்றம் கொள்ளாதபடி..

    முன்ணனி மற்றும் ,தரப்பட்டியல் என்னும்
    அள்வீடுகளின் மாயச் சங்கிலியில்
    பிணைத்துக் கொள்ளாதபடி..

    உங்கள் ஆதரவுடன்
    நூறு நாடுகளுக்கு மேல் மூன்று இலட்சம்
    பார்வைப் பதிவுகளைப் பெற்றபடி/

    ஆம் நண்பரே! னீங்கள் மேலும் மேலும் எழுதி பல லட்சங்களைப் பெற்று நிலைத்திருக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete