Friday, August 7, 2015

மரபும் வசனகவிதையும்

எதுகை எடக்கு செய்கிறதென்றோ
மோனை முகம் தூக்குறதென்றோ
நாங்கள் வசன கவிதையின்
வாசல் போய் நிற்கவில்லை

திடப்பொருளை நிறுத்தலும்
திரவத்தை முகத்தலுமே சரியாதல் போல

யுத்தக் களத்தில்
தூரமே
ஆயு தத்தை முடிவு செய்தல் போல

பயணத்தின்
தூரமே
வாகனத்தை முடிவு செய்தல் போல

கவிதையின்
சாரமே
அதன் வடிவத்தை முடிவு செய்து கொள்கிறது
 
இதமாக
பதமாக
மனம் தொட எனில்
மரபும்

சரியாக
நேடியாக
அறிவைச் சீண்ட எனில்
வசன கவிதையுமே
மிகச் சரியாகப் பொருந்துகிறது

கலந்துரையாடுவதற்கும்
தர்க்கம் செய்வதற்குமான
வேறுபாடு தெரிந்தவர்களுக்கு

இதற்கும் மேலான விளக்கம்
நிச்சயம் அதிகபிரசங்கித்தனம் தானே

12 comments:

  1. நன்று சொன்னீர் இரமணி!

    ReplyDelete
  2. அருமை கவிஞரே
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  3. சரியாக
    வணக்கம்,
    நேடியாக
    அறிவைச் சீண்ட எனில்
    வசன கவிதையுமே
    மிகச் சரியாகப் பொருந்துகிறது
    எனக்கு இது தான் சரியெனப்படுகிறது,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  4. தெளிவான விளக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  5. அறிவைச் சீண்டவா கவிதைகள்/

    ReplyDelete
  6. நல்ல விளக்கம்.....

    த.ம. +1

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா

    சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அருமையான விளக்கம்! நன்றி!

    ReplyDelete
  9. நீங்கள் காட்டிய உதாரணங்களும் சிந்தைக்கு தெளிவைத் தருவதாய் இருந்தது.

    ReplyDelete
  10. விளக்கம் அருமை! உதாரணங்கள் உட்பட...

    ReplyDelete