Friday, November 20, 2015

வெற்று உரலை வேதனையுடன் இடித்தபடி....

கண்டதும்
கண்களை இமைக்கவிடாது
சுண்டி இழுக்கும்படியாய்
ஒரு அருமையான தலைப்பும்..

ஆரம்பமே
அமர்க்களமாய் இருக்கிறதே என
எண்ண வைக்கும்  படியாய்
சுவாரஸ்யமான பல்லவியும்

கருவிட்டு விலகாது
சங்கிலிக் கண்ணியாய்த்
தொடர்ந்து மயக்கும்
அசத்தலான சரணங்களும்

மூன்றையும்
மிக நேர்த்தியாய் இணைத்து
அட டா என தலையாட்டவைக்கும்
அருமையான முடிவும்

மிகச் சரியாய் அமைந்தால்
ஒரு கவிதை எழுதி விடலாம் என
அனுதினமும் காத்திருக்கிறேன்

உங்களைப் போலவே நானும்..
வெற்று உரலை வேதனையுடன் இடித்தபடி....

7 comments:

  1. =====================================================================

    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    ===========================================================================

    அமையும் ஒரு நாள் அப்படி ஒரு படைப்பு. ஆனால் அனைத்துப் படைப்புகளுமே அடுத்துபடைக்கப்படும் படைப்பே உயர்ந்த படைப்பாய் இருக்கும் என்று எண்ணவே தோன்றும்!

    தம +1


    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    அற்புதமான கருத்து... நாங்கள்தான் ஐயா தங்களின் கவிதைகளை படித்த வண்ணம் இருக்கோம்... எப்போது பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.. இறுதியில் சொல்லி முடித்த விதம் நன்று த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சிலவற்றில் திருப்தி கூடாது ஐயா...

    ReplyDelete
  4. அருமையான கவிதை!
    த ம 5

    ReplyDelete
  5. போதும் எனும் மனம்... சாத்தியமா?
    அனைத்திலும் முழுமை எனும் எதிர்பார்ப்பும் அப்படித்தானே!?

    ReplyDelete
  6. அருமை. அருமை. பல சமயங்களில் இன்னும் இன்னும் என தேடிக்கொண்டே தான் இருக்கிறோம்.....

    ReplyDelete