இப்பொதெல்லாம் பதிவர்கள் பதிவுலகு விட்டு
அதிகம் முக நூல் பக்கம் முகத்தைத் திருப்பியிருப்பதன்
காரணம் ஏன் தெரிகிறதா ?
மூன்றரை கோடியென்பது கொஞ்சம் மலைக்க
வைக்கத்தான் செய்யும் இல்லையா ?
இருப்பினும் விடாப்பிடியாக சிலர்
பதிவுலகில் தொடர்வதற்கு சில வலுவான
காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன
இது குறித்து பதிவர்கள் விரிவான பதிவுகள்
எழுதலாமே ?
(மிகக் குறிப்பாக தமிழ் மணத்தில் முதல் இருபதில்
தொடர்ந்து நிலைத்திருக்கிற முன்னணிப் பதிவர்கள் )
இது முக நூலின் பலம் அல்ல பலவீனம் என்றுதான் சொல்ல வேண்டும்
ReplyDeleteநான் வழி மொழிகிறேன்..
DeleteAvargal Unmaigal //
ReplyDeleteஅதிகம் பேரைப் போய்ச் சேருவது
பலவீனமா? பலமா?
இதில் காட்டப்படும் பார்வையாளர் எண்ணிக்கை தவறானது...
ReplyDelete
ReplyDeleteகார்த்திக் சரவணன் //
அது எப்படி ? கணினிதானே கணக்கிடும்
இல்லையா ?
கவிஞர் அவர்களுக்கு நன்றி! கூட்டத்தில் ‘கோவிந்தா’ போடுவதற்கும் (ஃபேஸ்புக்) , தனித்தன்மையோடு இருப்பதற்கும் (வலைப்பதிவு) நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. நண்பர் புதுக்கோட்டை செல்வகுமார் ( நான் ஒன்று சொல்வேன்) அவர்களது பதிவினில் நான் எழுதிய பின்னூட்டம் இது.
ReplyDelete// ஃபேஸ்புக் என்பது ஒரு வரப்பிரசாதம். மேலை நாட்டவர் இதை ஒரு சமூக நலனுக்காகவே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம்நாட்டில் தவறான அணுகுமுறையிலேயே நேரத்தை வீணடிக்கும் ஒன்றாகவே பலருடைய கணக்குகள் இயங்குகின்றன; இதனாலேயே நான் இன்னும் ஃபேஸ்புக்கில் முழுமையாக இணைத்துக் கொள்ளவில்லை //
நானும் நண்பர் தமிழ் இளங்கோ அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். பேஸ்புக்கில் தனித்தன்மை இல்லை. அதிலும் நம்மைப்போல விரிவான பதிவு எழுதுபவர்களுக்கு அது ஏற்ற இடமே இல்லை. அது சினிமாவில் வரும் குத்துப் பாடல் போல அப்போதைக்கு ஹிட் அடித்து, பின்னர் காணாமல் போய்விடும். பிளாக் கொஞ்சம் மெலோடி டைப் கூடுதலாக கொஞ்ச காலம் நிலைத்து நிற்கும்.
ReplyDeleteத ம 3
இரண்டு தளங்களும் வெவ்வேறானவை.முகநூல் பதிவுகள் செய்ய சிறந்த ஞானமோ எழுத்தாற்றலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.புகைப்படத்தை பதிவேற்றவோ,வாழ்த்துக்கள் சொல்லவோ,பிறர் கருத்துக்களை பகிரவோ தெரிந்திருந்தால் போதுமானது.சாதாரணர்களும் பங்கேற்க முடியும் என்பதே அதன் பலம். அதன் இன்னொரு சிறப்பு கைபேசியில் எளிதில் கையாள முடியும் என்பது . முகநூல் பதிவிட சிறப்புத் திறன் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் வந்து போகக் கூடிய பூங்கா முகநூல்.வலைப் பூக்களோ எழுத்தாற்றலை மையப் படுத்தி உள்ளது.அறிவியல் கருத்துக்கள்,சிறப்பான கட்டுரைகள் படைப்புகள் போன்றவற்றிற்கு வலைப்பூவே சிறந்தது.ஒரு பொருள் சார்ந்து தேடி அறிவது முகநூலில் கடினம். எந்தக் காலத்திற்கும் ஏற்ற பதிவாக இருந்தாலும் பத்து நாட்கள் முன்பு எழுதிய பதிவிற்கு லைக் போட்டதாக முகநூல் சரித்திரம் இல்லை.நாம் (படித்தாலும் படிக்காவிட்டாலும்) தொடர்ந்து லைக் போடாவிட்டால் நம் பக்கம் யாரும் திரும்பிக் கூட பார்க்கக் கூட மாட்டார்கள். முகநூல் பேருந்தில் செல்லும்போது சாலையோர விளம்பரத்தை ரசித்து அடுத்த சில நிமிடங்களில் அது மறந்து போக வேறொன்று இடம் பிடிப்பது போன்றது.வலைப்பூக்கள் பல நாட்களுக்குப் பிறகு கூட படிப்பவர்கள் உண்டு.
ReplyDeleteஆர்வம் காரணமாக தொடர்ந்து எழுதிக் குவித்து விட்டு அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல் ஏற்படும் ஒரு மந்த நிலையே வலைப் பதிவர்கள் முகநூலுக்கு வரக் காரணம். காலையில் எழுந்து ஒரு காலை வணக்கம் போட்டு விட்டு முக நூலை உயிர்ப்போடு வைத்து கொள்ளலாம். வலைப்பூ எழுத கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிந்தனைச்சோம்பல் முகநூல் பக்கம் வலைப் பதிவர்களையும் ஈர்க்கிறது. முகநூல் ஜனரஞ்சகமானது.வலைப்பூ கொஞ்ச தேர்ந்த வாசகர்களுக்கானது. தரவுகள் சுட்டிக் காட்ட ஏற்றது.வலைபூக்களுக்கேன்று தனி வாசகர் வட்டம் உண்டு. நம் முகநூல் பதிவை அதிகம் படித்துள்ளனர் என்பதை விட பார்த்துள்ளனர் என்றே பெருமை கொள்ள முடியும்
இரண்டுமே நல்லவை அல்லாதவை நிறைந்த என்பது பொதுவானது.
இத்துடன் சேர்த்து இன்னும் என் வலைப் பதிவில் எழுத முயற்சிக்ககிறேன்
முகநூலில் நன்றாக எழுதுவோர் உண்டு. ஆனால் மிகக்குறைவு.
ReplyDeleteஇந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் முகநூல் பதிவுகள், பதிவுகளே அல்ல. வெறும் கேலி, கிண்டல், கூப்பாடு. சும்மா கவனத்தைக் கவர முயற்சிக்கும் அபத்த நாடகங்கள். நாலுபேர் `பார்க்க` வேண்டும். கைத்தட்டவேண்டும்-இது ஒன்றே லட்சியம் முகநூல் பதிவர்களுக்கு. அவர்களிடகிருந்து ஆழமான கருத்துக்கள், பதிவுகளை எதிர்பார்ப்பது அசட்டுத்தனம்.
வலைப்பதிவுகள் அப்படியல்ல. எழுதுவதற்கு விஷய ஞானம், எழுத்துத் திறன் கொஞ்சமாவது தேவை. Stuff-இல்லாவிட்டால் இங்கே வண்டி ஓட்ட முடியாது;ரொம்ப நாளைக்கு ஓடாது- சரக்கே இல்லாமல் வரும் காலி வண்டிகள் இங்கும் உள்ளன என்பதும் உண்மைதான் எனினும்.
-ஏகாந்தன்
எனக்கு வலைப் பதிவுதான் பிடிக்கும்! இருந்தாலும் முகநூலிலும் எழுதுகிறேன் அங்கும் வெட்டித் தனமா எதையும் எழுதுவதில்லை!முகநூலிலும் என் பதிவை படிப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் விரும்புகிறார்கள்! ஆனால் ஏனோ வலைப் பதிவில் எழுதுபவர் நாளுக்கு நாள் குறைந்து வருவது கண்கூடு அது மட்டுமல்ல வரும் ஒரு சிலரும் நல்ல பதிவுகள் கூட படிப்பதில்லை படித்தால் மறு மொழியோ மார்கோ போட்டு ஊக்கப் படுத்துவதில்லை மேலும் தமிழ்மணமோ சரியாக செயல்படுவதில்லை! என்னைப் பொறுத்தவரை எனக்கு இன்றைய சூழ்நிலையில் முகநூலே மேலாகப் படுகிறது
ReplyDeleteமுகநூலில் சற்று சுருக்கமாகவும், வலைப்பூவில் விரிவாகவும் பகிர்ந்துவருகிறேன். பகிர்வதற்கு முகநூலைவிட வலைப்பூவையே நான் சிறந்ததாகக் கருதுகிறேன்.
ReplyDelete///அதிகம் பேரைப் போய்ச் சேருவது
ReplyDeleteபலவீனமா? பலமா? ///
உங்கள் வலைத்தளம் அதிக பேரால் பார்க்கபடவில்லை என நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் தவறு பேஸ்புக்கில் கிடைக்கும் லைக்ஸ் எல்லாம் பதிவை படித்த பின் போடுகிறார்கள் என நினைக்கிறீர்களா?
இதுபற்றி சொல்லவேண்டும் என்றால் மிகப் பெரிய பதிவாகத்தான் இட வேண்டும்
கார்த்திக் சரவணன் சொல்வது போல இதில் காட்டப்படும் பார்வையாளர் எண்ணிக்கை தவறானது...
அது எப்படி ? கணினிதானே கணக்கிடும்
இல்லையா ? என்றால் இல்லை அது எல்லாம் மார்க்கெட்டிங்க்கா செய்யபடும் மாஜிக் வேலைகள் அதுமட்டுமல்ல அது எல்லோரையும் பேஸ்புக்கில் தக்க வைக்கவும் மேலும் பல ஆட்களை இழுத்து வரவும் செய்யப்ப்டும் பம்மாத்து வேலைகள்
பதிவோடு பின்னூட்டங்களும் சிறப்பாக இருந்தன. வலைத்தளம் பழையன கழிதலும் புதியன புகுதலும் மாதிரியே சிறப்பாக எழுதுபவர்கள் வந்து பின் நேரம்,உழைப்பு,குடும்பம் இன்னும் பல காரணங்களால் வெளியேறியவர்கள் அதிகம். முன்பு குறிப்பாக ஒரு பதிவின் சாரத்தை ஒட்டியோ எதிர்த்தோ பின்னூட்டத்தில் தங்கள் கருத்தை சொன்னவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். பின்னூட்டங்கள் குறைய குறைய நிறைய பேர் காணமலும் போனார்கள். பலர் காணாமலே போனார்கள். சிலர் முகநூல்,ட்விட்டரில் நிலை கொண்டிருப்பதாக தெரிகிறது.
ReplyDeleteசெய்திகள் அறிய,அந்த கணத்தில் தோன்றும் கருத்துக்களை பதிவு செய்யவே நேரம் போகிறது. இதில் சென்னையிலிருந்து திருச்சிக்கும்,மதுரைக்கும் தினச்சவாரி மாதிரி முகநூலுக்கும்,ட்விட்டருக்கும் போவதற்கு ஆவதில்லை.
முகநூல் நண்பர்கள் குழுவுக்கான தனி தளம் மற்றும் வியாபாரம் கருதியும் உபயோகிப்பது.
ட்விட்டர் ஒற்றை வரியில் சொல்லும் திறம் கொண்டவர்களுக்கானது. மேலும் வாகன பயணித்திலேயே ஒரு தட்டு தட்டி விட்டு போய் விடக்கூடியது.
தமிழ் வலைத்தளங்களை இன்னும் தமிழ்மணமே இன்னும் உயிர்ப்போடு பாதுகாத்து வருகிறது
இந்த பதிவின் சாரமாக இன்னுமொரு பதிவை காண நேர்ந்தது.
ReplyDeletehttp://classroom2007.blogspot.com/2015/12/face-book.html
நல்ல சரக்கு - ட்விட்டர் மொழியில் சொல்லனும்ன்னா!
இந்த பதிவின் நீளம் கருதி எத்தனை பேர் முழுவதுமாக வாசித்திருப்பார்கள் என தெரியவில்லை.
நீதி: முகநூல் நுனிப்புல் மேய்பவர்கள்.
எளிமை முக நூலின் சிறப்பு
ReplyDeleteகவிஞருக்கு வணக்கம்
ReplyDeleteமுகநூல் என்பது வாடகை வீடு மாதிரி, வலைப்பூ என்பது சொந்த வீடு மாதிரி
வாடகை வீடு நமது மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை, சொந்த வீடு நமது இதயத்துடன் இறுதிவரை நினைவில் நிற்கும்.
நான் முகநூலை எனது வலைப்பூவை வெளியிடுவதற்கும், எனது வலைப்பூவை முன்பு ஒரு திருடர் காப்பி எடுத்து அவரது முகநூலில் சொந்தக்கருத்து போல வெளியிட்டதை நான் கண்டித்த பிறகு எடுத்து விட்டார் அவரை உளவு பார்க்கவும் மட்டுமே உபயோகப்படுத்துகிறேன் காலை வணக்கத்திற்கு எல்லாம் லைக் போடும் வேலையில் எனக்கு நாட்டமில்லை.
நண்பர் திரு. முரளிதரன் அவர்களின் கருத்துடன் ஒத்துப்போகின்றேன் மேலும் பதிவர்கள் மத்திலும் பிரிவுகள் இருக்கின்றது நாம் அனைவரும் மனதாலும் ஒன்று பட்டால் வலைப்பூவை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும்.
தமிழ் மண ரேங்க் பட்டியல் பகலில் ஒரு மாதிரியும், நள்ளிரவில் வேறு மாதிரியாகவும் காட்டுகிறது இது எப்படியென்று எனக்கு விளங்கவில்லை.
இன்னும் எழுதத்தான் நினைக்கிறேன்...........
தமிழ் மணம் 6
எதையும் அளவோடு பயன் படுத்திக்கொண்டால் அனைத்தும் பயன் தரும் ஒன்று தான்.
ReplyDeleteகடந்த வெள்ளத்தின் போது பேஸ்புக்கில்மூலம் செயல் பாடுகள், தொடர்பாடல்கள் நடந்தது போல் வலைப்பூவில் முடியாது எனினும்... வலைப்பூ என்பது நாம் ஆளுகை செய்வது.பேஸ்புக் என்பது நம்மை ஆளும் ஒன்றாய் மாறிக்கொண்டிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. நான் பேஸ்புக்கை இன்பாக்ஸில் நட்புக்கள், உறவுகள் நலம் விசாரிக்க முடிவதால் போன் கட்டணம் மிகுதியாகின்றது என்பதனாலும் இலவசமாக என் ஈவண்ட்ஸ் ஹோட்டலுக்குரிய விளம்பரத்துக்காக தான் அதிகம் பயன் படுத்துகின்றேன்.
அரட்டை, சிரட்டைகளுக்கு நேரமும் கிடைப்பதில்லை,ஆர்வமும் இல்லை,
நண்பர் முரளிதரனும் மதுரைத்தமிழனும் தெளிவாக விளக்கிவிட்டார்கள்! வலைப்பூ படித்து கருத்திடுபவர்கள் அதிகம், முகநூலில் படிக்காமலே லைக் செய்பவர்கள் அதிகம்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமுகநூல்பற்றிய விளக்கத்தை எழுதியமைக்கு நன்றி ஐயா.முகநூல் உருவாகியதில் இருந்து நேற்றை மழைக்கு முளைத்த காளன் போன்று பலர் தேன்றிவிட்டார்கள் யார் உண்மையான படைப்பாளி என்பதை இனம் காணமுடியாது. வலைப்பூ என்பது ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம்
பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் அவ்வப்போது முகநூல் பக்கமும் வருகிறேன் முகநூல் என்னை ஈர்ப்பதில்லை. நான் இடும் ஸ்டேடஸ் எத்தனைபேர் கண்களுக்குத் தெரிகிற்து. அதுபோல் முகநூலில் படிக்க நண்பர்கள் எழுதும் ஸ்டேடஸ் மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறேன் ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் என்பதுநம்பும்படியாக இல்லையே
ReplyDeleteஎன் முகநூல் பற்றிய கணிப்பை நான் எப்படித்தெரிந்து கொள்வது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉங்கள் முகனூலினுள் சென்று http://mobiquiz.asia/2015/ans1.php?fbid இந்த லிங்கை கிளிக் செய்து செல்லுங்கள். லாகின் செய்து காத்திருங்கள். முடிவு வரும். அதன் பின் அதை உங்கள் பக்கம் ஷேர் செய்ய விரும்பினால் செய்யலாம்
ReplyDeleteஉடனுக்கு உடன் செய்திகளை படிப்பதற்கு முகநூல் சிறந்தது என நான் கருதுகிறேன். ஆனால் படைப்பாளிகள் வலைப்பூவில் பதிவு செய்வதால் பாதுகாப்பாகவும் சீராக ஒழுங்கு படத்தவும் கூகுலில் தேடுவதற்கு இலகுவாகவும் இருக்கும்.
ReplyDeleteமுக நூல் ஒரு நண்பர்கள் கூடுமிடம். அதில் அரட்டை உண்டு, சில செய்திகள் உண்டு. இதிலெல்லாம் பெரிய விஷயங்கள் எடுபடாது. ஒரு விஷேச வீடு போல எல்லாம் இருக்கும். முடிந்தால் எட்டிப் பார்த்துவிட்டு வரலாம். பேரிடர் சமயங்களில் உதவலாம். சிந்தனையளர்களுக்கு அங்கே வேலையில்லை.ஆனாலும் ரொம்ப அபிமான கருவி.
ReplyDeleteவலைப்பதிவு இலக்கிய அந்தஸ்து கொண்டது. நல்லப் பல விஷயங்கள் பகிரப்படுகிறது. இந்த லைக் போடுவது மாதிரி சம்பிரதாயங்களுக்கு இடமில்லை.
எது யாருக்குப் பிடிக்கிறதோ அங்கேயே அவர்கள் இருப்பார்கள்.
வெங்கட் அவர்களுடைய கருத்துடன் ஒத்து போகிறேன்.
ReplyDeleteஒருமுறை முகநூலில் பதிந்த அடுத்த நொடி நண்பர்களிடம் இருந்து லைக் வந்தது. அதெப்படி கன நேரத்தில் படிக்க இயலும். முகநூலில் இருந்து முற்றிலும் வெளிவந்துவிட்டேன்.
வலைத்தளத்திற்கே எங்கள் ஆதரவு. முகநூல் பல நன்மைகள் செய்தாலும். இங்கு இளங்கோ ஐயா, முரளிதரன், மதுரைத்தமிழன், கார்த்திக் சரவணன், வெங்கட், கில்லர்ஜி கருத்துகளே எங்கள் கருத்தும்.
ReplyDelete