Monday, December 28, 2015

அநாகரீகத்தை அநாகரிகமாகவே சந்தித்தல் ...

பல்லைக் கடிப்பது...

நாக்கைத் துருத்துவது...

தூ எனத்  துப்புவது ...

பொது வெளியில்  பொறுப்பு மிக்க
பதவிகளில்  இருப்பவரையே  அடிப்பது

இது சிறுபிள்ளைத் தனமா  ?

கிறுக்குத் தனமா ?

எதில்  சேர்ப்பது இதை ?

பொது வழியில் தன்னைக்
கட்டுப்படுத்திக் கொள்ளும்
அடிப்படைத் தன்மை கூட
இல்லாதவர்கள் ...

 பொறுப்பு  மிக்க
பதவியில் அமர்ந்தால்
மாற்றுக் கருத்துடையோரை
எப்படி எதிர்கொள்வார்கள் .. ?

திட்டியா
அடித்தா
 அல்லது
ஆள்  வைத்து உதைத்தா ?

மண்டியிட வைத்து இரசிக்கும் குரூரம்
ஒருவகை அநாகரீகமெனில்

அநாகரீகச் செய்கைகளும்
 ஒருவகை குரூரமே


அநாகரீகத்தை
அநாகரிகமாகவே  சந்தித்தல்
நிச்சயம் நாகரீகமில்லை

எப்படிப் புரியவைப்பது இதை ?

எப்படிச் சகித்துக் கொள்வது இதை ?




8 comments:

  1. திரைப்படத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் நினைவுக்கு வருகிறார்

    ReplyDelete
  2. தமிழகத்தில் ஜெயலலிதா கலைஞருக்கு மாற்று தேவைதான் ஆனால் அதற்கு அநாகரிகமான ஆள்தான் தேவையா என்பதை கணக்கில் கொள்ளனும்

    ReplyDelete
  3. மீடியாக்கள் என்றாலே அவருக்கு ரொம்ப கடுப்பு குரு....ஆனாலும் அவர் செய்தது அநாகரீகம்தான்.

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா

    தாங்கள் சொல்வது உண்மைதான்..
    நேற்றுக்கூட நடந்த சம்பவம் இரு அரசியல் வாதியால் இந்தியாவில்..த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மாற்று நல்ல மாற்றாகத் தெரியவில்லை.. இவர்கள் எவருமே இல்லாமல் தமிழகம் தழைக்க முடியாதா...

    ReplyDelete
  6. பொறுப்புள்ள இளைஞர்கள் முடிவெடுக்கவேண்டிய நேரமிது.எந்த அரசியல்கட்சியும்சரியில்லை

    ReplyDelete
  7. பொறுப்புள்ள இளைஞர்கள் முடிவெடுக்கவேண்டிய நேரமிது.எந்த அரசியல்கட்சியும்சரியில்லை

    ReplyDelete