Monday, December 28, 2015

நாம் தான் தலையில் அடித்துக் கொள்ளணும்


விஜயகாந்த் துப்பிட்டார் என்று பொங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நிச்சயம் பொதுமக்கள் ஆதரவு துளி கூட கிடைக்காது...
காசுக்காகவும், தங்கள் சேனல் விளம்பரத்திற்காகவும் தான் இவர்கள் கேள்வி கேட்கின்றனர். அதுவும் கேள்வி என்ற பெயரில் இடம், பொருள், ஏவல் தெரியாமல் சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்டு அதில் டிஆர்பி ரேட்டை ஏற்றி குளிர்காய்கின்றனர்....
இவர்களை த்துதூ என்று தூக்கி அடிச்ச கேப்டனை அனைவரும் பாரட்டத்தான் செய்கின்றனர்...
(இன்றைய டீக்கடை அனுபவமே மேற்கொண்ட பதிவு)
Raja Roja யாகவராயினும் நாகாக்க !!!! எதை வேணும்னாலும் கேட்கிறவன்..பிறரை கோபப்படுத்தி உள்ளுர சுகம் காணும் விளம்பரம் தேடும் பத்ரிகைகாரன் மீது துப்பலாம்


Nellai Solomon T அது தப்பாகவே இருக்கலாம்..ஆனாலும் தில்லான மனிதன்....



உண்மையை எழுதத் துப்பில்லாத பத்திரிக்கையாளர்களைத் துப்பியதில் ஒரு குற்றமும் இல்லை என்பதே என் கருத்து.


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இதுவரை ஆறுதல் கூறாத ஜெயலலிதாவை கண்டிக்க துப்பில்லாத பத்திரிக்கைகளை காறி துப்பிட்டாரு கேப்டன்...!
#100%உண்மை

எதற்குத் துப்பினார் என
யோசிப்பது  வேறு

துப்புவது  அநாகரீகம் என
யோசிப்பது வேறு

அநாகரீகச் செயல்களுக்கும்
அட்டூழியங்களுக்கும்
காரணம்  தேடினால் நிச்சயம்
ஒன்று இருக்கவே செய்யும்

நடு ரோட்டில்
மலம் கழித்தலைக் கூட
பாவம் அவசரமாக வந்து விட்டது
எனச் சொல்லி முடிக்கலாம்தானே ?

கொலைக்கும் கற்பழிப்புக்கும் கூட
சமூகம் காரணம் என
விளக்கம் அளிக்க முடியும் தானே ?

கேப்டனாக " நடித்து "
அந்தப் பெயரைப் பெற்றவர்

அநாகரீகமாக தொடர்ந்து "நடந்து "
"காட்டான்( ர் )  " என
நிச்சயம் அடைமொழி பெறும் காலம்
நிச்சயம் அதிகத் தூரமில்லை

அப்படி அடைமொழி பெறுவதைக் கூட
தகுதியாக அவர் கருதலாம்

இப்படியான தலைவர்கள்
தமிழகத்திற்கு வாய்த்ததற்கும் 

அவரகளின் அநாகரிக  செயல்களுக்கும் 
சுற்றி வளைத்து 
வக்காலத்து வாங்க
ஆட்கள் இருப்பதற்கும் 


நாம் தான் தலையில் அடித்துக் கொள்ளணும் 

8 comments:

  1. வணக்கம்
    ஐயா
    சில அரசியல் வாதிகள் தங்களை காட்டிக்கொள்ள எடுக்கும் ஆயுதம் இது... உரையாடலை பதிவாக பதிவிட்டமைக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தலைவனாக இருப்பவனுக்கு பொறுமை தேவை எந்த நேரத்திலும் அது இல்லாமல் பொது இடத்தில் அநாகரிகமாக செயல்படும் எவனும் தலைவனாக இருக்க முடியாது அப்படி இருக்கும் ஒருவனை தலைவனாக மக்கள் அல்லது ஒரு இயக்கம் தலைவனாக ஏற்றுக் கொள்ளும் என்றால் அந்த மக்கள் அல்லது அநாகரிக கூட்டமாகவே இருக்கும் அதில் எந்தவித மாற்று கருத்துக்கும் இடமே இல்லை

    ReplyDelete
  3. அநாகரீகமாக சொன்னதால், அதன் உண்மை சுடவில்லை! ஊடகங்களுக்கு வியாபாரம் தவிர வேறெந்த தர்மமும் இல்லை. வெள்ளம் அளித்த விழிப்புணர்வை நசுக்கும் வகையில் அந்தப் பாடலுக்கு முக்யத்துவம் கொடுப்பது யார்? இதே ஊடகங்கள் தானே? அவர்கள் செய்ய வேண்டிய வேலையை எங்கே செய்கிறார்கள்? எந்த செய்தி பரபரப்பை தருமோ, விற்பனையை தருமோ, அதை மட்டும்தானே தருகிறார்கள்?

    நாடெல்லாம் பரபரப்பை ஏற்படுத்திய 2G விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த ஊடகமாவது இப்போது இந்த விசாரணையை தொடர்கிறதா? எல்லா மக்களும் மறந்தவுடன் ஓரிரண்டு அப்பாவிகள் தண்டிக்கப் பட்டு மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள். bofars, சவப்பெட்டி ஊழல், சர்க்காரியா, சொத்துக் குவிப்பு, மணல் கொள்ளை, நிலக்கரி சுரங்க ஏலம், இரும்பு சுரங்க விவகாரங்கள் (கர்நாடகம்), போபால் வாயுக் கசிவு என்று எத்தனையோ பார்த்துவிட்டோம். யார் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்? இவற்றின் உண்மைகளை மக்களுக்கு தெரியப் படுத்தும் கடமை எந்த ஊடகத்துக்குமே இல்லையா? அப்புறம் என்ன, ஐந்தாவது தூண் என்ற பெருமை?

    துப்பியிருக்கக் கூடாது. நாக்கைப் பிடுங்கிக்கொள்ளுமாறு கேள்வி கேட்டிருக்கவேண்டும்!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. பந்து அவர்களே

    எப்போதும் நான் விரும்பி எதிர்பார்க்கும்
    பின்னூட்டங்களில் தங்கள் பின்னூட்டமும் ஒன்று
    அது எப்போதும் ஒரு நல்ல விமர்சனப் பின்னூட்டமாகவும்
    நான் போகும் பதிவு வழி சரிதானா என என்னை
    உணரச் செய்யும் பதிவாகவும் இருக்கும்

    இறுதி வரிகள் மிக மிக அருமை

    ஆயினும் முன்னதாக சொல்லிப் போன விரிவான
    வேதனை வரிகள் அவ்வரிகளின் பொருளை
    கொஞ்சம் நீர்த்துப் போகத்தான் செய்கிறது

    ReplyDelete
  6. வேதனைதான்..எத்தனையோ பணித்திட்டங்கள் இருக்க அதை எல்லாம் முன்னிலைப்படுத்தி நாட்டைத் தழைத்தோங்கச் செய்வதை விட பரபரப்பிற்காக இயங்கும் நமது ஊடகங்கள்...என்ன சொல்ல என்று தெரியவில்லை...பீப் போய் ராஜா ராஜா போய் இப்போதி விஜயகாந்த் என்று...கடந்து கொண்டுதான் போகின்றார்கள்..எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணாமல்..

    ReplyDelete
  7. நல்ல ஊடகங்கள் நடுநிலைதவறாதவை ஒன்றிரண்டு இல்லாமலில்லை.அரசியல்சார்புடன்அரைவேக்காடுகளைக்கொண்ட ஊடகங்களே கண்டிக்கவும்ஒதுக்கவும்படவேண்டும்

    ReplyDelete
  8. துப்பியதில் தப்பே இல்லை...
    துப்ப தவறி இருந்தால்தான் தப்பு..

    ReplyDelete