Thursday, December 3, 2015

அணிலாய்....


நான் சார்ந்திருக்கிற அரிமா இயக்கத்தில் எனது
வட்டாரத்தில் உள்ள வில்லாபுரம் புது நகர் லியோ
சங்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் முதல் தவணையாக
நல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட
நிவாரணப்பொருட்களை இன்று சென்னைக்கு
அனுப்பி வைக்கிறார்கள். இந்த மகத்தான பணியை
ஆர்வமுடன் செய்கிற அனைவரும் மாணவர்கள் என்பது
கவனிக்கத் தக்கது.

இன்று வில்லாபுரம் அரிமா சங்கத்தின் சார்பாக
பொது மக்களிடம் இருந்து நிவாரணப்பொருட்களை
சேகரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்

இது நாளை சென்னைக்கு அனுப்பி வைக்க
முடிவாகி உள்ளது.

வாழ்த்துக்களுடன்......




12 comments:

  1. சென்னை மக்களின் துயரத்தினை துடைக்க தங்களால் இயனற உதவிகளைச் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்....

    ReplyDelete
  2. தோண்டும் தோழமையும் அரிமாவின் இரண்டு கண்கள் உரிய நேரத்தில் செய்யும் உதவி சால சிறந்தது தொடரட்டும் உங்கள் அரிமா பணி அரிமா வாழ்த்துகளுடன்

    ReplyDelete
  3. மற்றவர்க்கு உதவ முன்வரும் இந்த இளைஞர்கள்
    செய்யும் சிறு உதவியும் அதைப்பெறும் மக்களின் பார்வையில் தெய்வ தரிசனமாகவே இருக்கும். வாழ்த்துவோம். நாங்களும் இயன்றதை அனுப்புவோம்.

    ஒரு முக்கிய வேண்டுதல்...

    இப்படி சேகரிக்கும் பொருட்களை யாரிடம் தருவது அது பத்திரமாக போய் சேருமா? என்ற கேள்விகள் நிச்சயம் வரும்.

    பொருட்களை பொருத்தவரை
    'இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம்' சேர்பித்தால் அது உரியவர்களுக்கு போய் சேரும் என்பது உத்தரவாதமானது.

    ReplyDelete
  4. அன்பே சிவம் said.../

    பொருட்களை பொருத்தவரை
    'இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம்' சேர்பித்தால் அது உரியவர்களுக்கு போய் சேரும் என்பது உத்தரவாதமானது. ///நல்ல கருத்து கருத்துக்கு மிக்க நன்றி
    எங்கள் அமைப்பும் ஒரு உலகாளாவிய அமைப்புதான்
    எங்கும் எப்போதும் எந்தப் பகுதியிலும்
    தேவையான உதவிகளை மிகக் நேர்த்தியாக முறையாகச்
    செய்யும்படி பயிற்றுவிக்கப்பட்ட நண்பர்கள்
    இருப்பதால்தான் இந்தப் பணியியினைச் செய்ய முடிகிறது

    வரவுக்கும் அருமையான வழிகாட்டும் கருத்துரைக்கும்
    மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  5. அனைத்து நல்உள்ளங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

    ReplyDelete
  6. மனிதநேயம் கொண்டுள்ள, தங்களுக்கும் தங்களின் குழுவினருக்கும் எங்களின் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    இந்த எழுச்சிமிக்க சேவைகள் தான் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு, இந்தநேர உடனடித் தேவைகளாகும்.

    அணிலாய் சுறுசுறுப்புடன் பணியாற்றும் தொண்டுள்ளங்கள் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

    ReplyDelete
  7. உரிய நேரத்தில் செய்யப்படும் உதவி.
    வாழ்த்துக்கள் இளைய தலைமுறைகளுக்கும்.

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா

    தாங்கள் செய்யும் உதவிக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா துன்பத்தில் இருக்கும் மக்கள் இயல்பு வாழ்வுக்கு வர இறைவனை பிராத்திக்கிறேன்.த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள். சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
    பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

    ReplyDelete
  10. நல்ல கரிசனம் அய்யா! மனித நேயத்திற்கு பாராட்டுகள்!

    ReplyDelete
  11. நல்ல சேவை! அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் பணிவான சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

    ReplyDelete
  12. மழை பெய்யட்டும் என்று வாழ்த்த அச்சமாக இருக்கிறது.

    ReplyDelete