Friday, September 2, 2016

ரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )

                        காட்சி (7  ) தொடர்ச்சி

ரஜினி:
( தன் பெட்டியிலிருந்து ஃபைல் ஒன்றை
எடுக்கத் தாணு முயற்சிக்க அதைச் சட்டெனத்
தடுத்து.. )

தாணு சார்.. ஃபுல் டிடைல்ஸ் எனக்கு வேண்டாம்
அதையெல்லாம் நீங்க பாத்துக்கங்க
எனக்கு எப்படிச் செய்யலாம்கிறதை ரேண்டமா
சொன்னாப் போதும்....

தாணு
(ஃபைலை மூடி வைத்துவிட்டு...)

சார் சூட்டிங் ஆரம்பிச்ச உடனே காஸிப் மாதிரி
படம் குறித்த செய்திகளை நாமே நாம் நினைக்கிறபடி
தொடர்ந்து பி.ஆர். ஓக்கள் மூலம்
பத்திரிக்கைகளுக்குக் கசியவிட்டுத்
தொடர்ந்துப் படம் பத்தினச் செய்தி
லைவ்ல இருக்கிறமாதிரிச் செய்யறோம்

இசை வெளியீட்டு விழாவை இதுவரை யாரும்
செய்யாத மாதிரி பிரமாண்டமா வெளி நாட்டில
வைச்சே செய்யறோம்

இதுவெல்லாம் எல்லாம் செய்யற மாதிரிதான்

ஆனா அடுத்து படம் வெளியாக இருக்கிற
ஒரு மாசத்துல நாம இதுவரை யாரும் செய்யாத
சில வித்தியாசமான விஷயங்களை உங்க
சூப்பர் ஸ்டார் பிராண்ட் வேல்யூவை வைச்சு
நம்ம படத்தோட மார்க்கெட் வேல்யூவை
இதுவரைத் தமிழ்ப் படம் எதுவும் போகாத
உச்சத்துக்குக் கொண்டு போறோம்...

(தாணு உற்சாகமாகப் பேசப் பேசப் ரஜினியும்
ரஞ்சித்தும் மிக ஆவலாய் முன் சரிந்து
கவனிக்கத் துவங்குகிறார்கள்...)

சாருக்குத்தேத் தெரியுமே
முன்னையெல்லாம் படம் ரிலீஸ் ஆன உடனே
டிஸ்டிபூட்டருக்குப் போனப் போட்டு
படத்தைப் பத்தி மவுத் டாக்
எப்படி இருக்குன்னு கேப்போம்

நாம் என்னதான் லட்சம் லட்சமா செல்வழிச்சு
வீள்ம்பரம் செஞ்சாலும் வாய் வழியா பரவுற
வெளம்பரம் மாதிரி வராது

அதைமாதிரி இப்ப முக நூலும் வலத்தளமும்
ஆகிப்போச்சு.அதுல படஎதிர்பார்ப்பைப்  தூக்கியும்
தாக்கியும் நாமே சில பதிவுக்கு ஏற்பாடு பண்றோம்

கிராமத்து வைக்கப் படப்புல ஒரு ஓரம்
பத்த வைச்சா காத்தே மத்ததை பாத்துக்கிரும் மாதிரி
நம்ம துவக்கி வைச்சாப் போதும்
மத்ததை அதுல உள்ளவங்கப் பாத்துப்பாங்க

அடுத்து அஞ்சு ஆறு வெளி நாட்டுல ரசிகர்கள்
ஆரவாரமா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறாப்பல
ஏற்பாடு செஞ்சிருவோம்.பனியன்,விளமபரம்
அது இது எல்லாம் அந்த ஏஜென்ஸியே
பாத்திக்கிடுவாங்க

அதேமாதிரி, மெடிகல் டூரிஸம் போல
 வெளி ஸ்டேட்ல இருந்து பஸ்
,ஸ்டார் ஹோட்டல் பேக்கேஜோட
நம்ம படம் பார்க்க நாலஞ்சு பஸ் ஏற்பாடு பண்றோம்

முன்னயெல்லாம் லீவு நாளாப் பாத்து
படம் ரிலீஸ் பண்ணுவோம்
இப்ப நம்ம பட ரிலீஸுக்கே லீவு விடற மாதிரி
நமக்குத் தெரிஞ்சரெண்டு மூணு கம்பெனி
மூலமா ஏற்பாடு பண்றோம்

முன்பு படம் ரிலீஸுன்னா பலூன் பற்க்க விடுவோம்,
பெரிய பெரிய போஸ்டர் அடிப்போம்
இப்ப நம்ம பட விளம்பரத்தையே ஒரு விமானத்திலேயே
வரைஞ்சுப் பறக்க விடறோம்

இன்னும் இப்படி வித்தியாசமா ரெண்டு மூணூ இருக்கு

அதையெல்லாம் அந்த ஏஜென்ஸி மூலமே செஞ்சு
அந்த பட ரிலீஸ் வாரத்திலே எங்கேயும் நம்ம
படத்தைத் தவிர வேற பேச்சே இல்லாத மாதிரி செஞ்சு
என்ன விலைக் கொடுத்தாவது முதல் இரண்டு நாள்ல
படத்தைப் பார்த்தாகணும்கிற வெறியை உண்டாக்குறோம்

மிக முக்கியமா பட டிக்கெட் கூடுதலா விக்கிறது
தொடர்பா பிரச்சனை அரசின் மூலமா வராம இருக்க
இதுக்கு முன்ன பண்ணின மாதிரி
அரசுக்கு நெருக்கமானவங்க மூலமாகவே
ரிலீஸுக்கும் ஏற்பாடு பண்றோம்

(தொடர்ந்து பேசிய தாணு ,சற்று நிறுத்தி
 ரஜினி அவர்களின் கருத்தறிய முகம் பார்க்கிறார்)

ரஜினி
(மெல்ல புன்முறுவல் பூத்தபடி )
வெரி நைஸ் ..வெரி நைஸ்...
நான் எதிர்பார்த்தத்துக்கு மேலே
ரொம்ப அருமையா ஒர்க் பண்ணி இருக்கீங்க
தாணு சார்.. ரொம்ப தாங்க்ஸ்.ரொம்ப  தாங்க்ஸ்

(பின் இரஞ்சித் பக்கம் திரும்பி)

தாணு சார் நிச்சயம் அதிக எதிர்பார்ப்பை  ஏற்படுத்திடுவாரு
அப்படி எதிர்பார்ப்போட வர்றவங்க
 ஏமாறாம சந்தோஷமா ரசிக்கிறமாதிரி
படம் பிடிக்கிறமாதிரி
நாமதான் பண்ணனும் பண்ணீடலாமா ரஞ்சித்..

(எனச் சொல்லியபடி கைகுலுக்க ரஞ்சித்தை
நோக்கித்  தன் கையை நீட்டுகிறார்)

ரஞ்சித்
(ரஜ்னி அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டபடி
உறுதியளிக்கும் தொனியில்...)

செஞ்சிடலாம் சார்..நிச்சயமா செஞ்சிடலாம் சார்

(தொடரும் )

8 comments:

  1. இது கற்பனை அல்ல உண்மை. மிக நன்று

    ReplyDelete
  2. அநேகமாக உண்மைக்கு மிக அருகில் சென்றுவிட்டீர்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  3. ம்ம்... இப்படித்தான் திட்டமிட்டு இருப்பார்களோ!

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. என்ன.. தாணுவும் ரஜினியும் தங்கள் வேலையை திறம்பட செய்துவிட்டார்கள். ரஞ்சித் தான்..

    ReplyDelete
  5. முதன்முதலாய் நிஜத்தின் கற்பனை

    ReplyDelete
  6. உண்மையைச் சொல்லும் கற்பனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கூறி இருக்கும் சில உத்திகள் ஏற்கனவே பயன் படுத்தியதுதானே

    ReplyDelete
  8. பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

    இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் காங்நேச்டின் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
    அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
    நன்றி வாழ்க வளர்க
    உங்களது EMAIL ID பகிரவும் .
    மேலும் விவரங்களுக்கு

    Our Office Address
    Data In
    No.28,Ullavan Complex,
    Kulakarai Street,
    Namakkal.
    M.PraveenKumar MCA,
    Managing Director.
    Mobile : +91 9942673938
    Our Websites:
    amazontamil
    amazontamil

    ReplyDelete