Tuesday, September 20, 2016

தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....

அதிக அனுபவச் சேர்க்கையும்
அதீத வாசிப்பின் தாக்கமும்
இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்
எதையும் எழுதிவிடலாம் என்னும்
நம்பிக்கை இருந்த போதினும்..

.எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும்
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு

எத்தனைத் திறத்துடன்
செய்யப்பட்ட்டபோதும்
பயனற்ற செயல்கள்
விழலுக்கு இறைக்கும் நீரென்ற
கொள்கையினை  சிரமேற்கொண்டு

மிகச் சரியாகச்  சொன்னால்
கருவுறவே அல்லாது கொள்ளுகிற
உடல் சேர்க்கைக் கூட
காமக் களியாட்டமே என
வெறுத்தொதுக்கும் உறுதிகொண்டு

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது எனும்
மந்திரச் சொல்லினை
வேதமாய் மனதில் கொண்டு

எழுதாது இருந்து
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
மனம் துணிந்து உளரவிடும் 
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே  சரண் நாங்களே 

21 comments:

  1. அன்னவர்க்கே சரண் நாங்களுமே!

    ReplyDelete
  2. எளிதில் வசப்படும் வார்த்தைகள் தங்களுடையது
    தங்களின் எழுத்துக்களைப் படிப்பதால்
    ஏற்படும் மகிழ்ச்சி எங்களுடையது
    நன்றி ஐயா
    ம +1

    ReplyDelete
  3. எதை எதையோ சொல்லியுள்ளீர்கள்.

    எப்படி எப்படியோ சொல்லியுள்ளீர்கள்.

    யார் யாருக்காகவோ சொல்லியுள்ளீர்கள்.

    ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாக உணர முடிகிறது.

    மொத்தத்தில் முதிர்ந்த எழுத்தாளரும், முதிர்ந்த வாசகருமாக, வலையுலகில் தாங்கள் மட்டுமே எங்கள் கண்களுக்குத் தெரிகிறீர்கள்.

    உங்கள் எழுத்துக்களுக்கே சரண் நாங்களும். :)

    ReplyDelete
  4. என்னதான் எழுதினாலும் எப்படித்தான் எழுதினாலும் வாசகர்களிடம் அதுவும் தாயுள்ளம் கொண்ட வாசகர்களிடம் சேர்ந்து விடும் என்னும் நம்பிக்கையே எழுத வைக்கிறது

    ReplyDelete
  5. ஸ்ரீராம். said...//

    அன்னவர்க்கே சரண் நாங்களுமே!
    ஓரெழுத்துதான் கூடுதல் என்றாலும்
    ஒருபக்கப் பின்னூட்டம் தருகிற நிறைவு
    வரவுவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கரந்தை ஜெயக்குமார் said...//

    தங்கள் உடன்
    வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...//

    எழுதுவதை குறைத்துக் கொண்டாலும் கூட
    எம்போன்றவர்களை உடன் படித்து
    உற்சாகமூட்டும் தங்களை
    இந்தப் பதிவைப் பதிவிடுகையில்
    நினைத்துக் கொண்டேன் எனச் சொல்லிக்
    கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. G.M Balasubramaniam //

    சேர்ந்துவிடும் என்பது சரிதான்
    ஆனாலும் அவர்கள் தொடர்ந்து
    தொடரவில்லையாயின் நம் எழுத்துச்
    சோர்ந்துவிடும் என்பதுவும் நிஜம்தானே ?

    ReplyDelete
  9. அருமையான விளக்கம் ஐயா தங்களின் எழுத்துக்கு நானும் சரண்.

    ReplyDelete
  10. வைசாலி செல்வம் //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. தனிமரம் //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வலிமையான வார்த்தைப் பின்னல்கள்..
    வசப்படுத்தும் சான்றாண்மை!
    எழுதாது இருப்பவர்க்கு மட்டுமில்லை
    'எதையும்' எழுதிக் குவிப்போர்க்கும்
    இக்கவிதை போதி மரம்!

    ReplyDelete
  13. அருமையான வாசகங்கள்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஜீவி //

    குறிப்பால் உணர்த்த முயன்ற
    இரகசியத்தின் மென்னியை பிடித்தது
    மனம் கார்ந்தது
    உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. ‘தளிர்’ சுரேஷ் said.//

    உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தொடர்ந்து எழுதுவோம்....

    நல்ல சிந்தனை....

    ReplyDelete
  17. வெங்கட் நாகராஜ் //

    உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. எம்மையும் உட்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து எழுதுவோம்...அவர்களின் ஆதர்வு இல்லைஎனில் சோர்வுதான்..எனவே சரண்!!

    ReplyDelete
  19. you are humble
    so your growth is certain

    ReplyDelete