Wednesday, October 12, 2016

வேறு எதை எதையோ நொந்தபடி....

கொத்தனாரை
தோட்ட வேலை செய்யவும்
தோட்டக்காரனை
வீடு கட்டவும்
விட்டக் கதையாய்

சர்வரை
சமையல் வேலை செய்யவும்
சமையல்காரரை
நின்று பரிமாற
வைத்தக் கதையாய்

அரசனை
ஆலோசனை வழங்கச் செய்தும்
மந்திரியை
பெரும் போருக்கு
அனுப்பும் முறையாய்

எல்லாவற்றையும்
மாற்றி மாற்றிச் செய்து
மாற்றம் இல்லையென
நொந்துச் சாகிறோம்

ஆப்பசைத்து
மாட்டிக் கொண்ட குரங்கு
நுனி அமர்ந்து
முன்னால் வெட்டிய முட்டாள்
கதைகளைச் சொல்லியபடி..

இவைகளிரண்டுமாய்
அனைத்து விஷயத்திலும்
நாம்தான் இருக்கிறோம் என்பதை
இயல்பாய் மறந்தபடி
 வேறு எதை எதையோ நொந்தபடி.

13 comments:

  1. உண்மைதான் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. //ஆப்பசைத்து மாட்டிக் கொண்ட குரங்கு, நுனி அமர்ந்து முன்னால் வெட்டிய முட்டாள் கதைகளைச் சொல்லியபடி..

    இவைகளிரண்டுமாய் அனைத்து விஷயத்திலும்
    நாம்தான் இருக்கிறோம் என்பதை இயல்பாய் மறந்தபடி//

    அருமையான உதாரணங்களுடன் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    வேறு எதை எதையோ நொந்தபடி .... நானும் படித்து ரஸித்தேன்.

    பாராட்டுகள் ... பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. உண்மையை எளிமையாய் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
  4. அமெரிக்காவில் இருந்தாலும் தமிழக நிலமையை அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள் போல

    ReplyDelete
  5. எளிய வார்த்திகளில்தான்
    எவ்வளவு பெரிய உண்மை
    அருமை ஐயா
    தம +1

    ReplyDelete
  6. நடைமுறை உண்மைகளை சவுக்கால் அடித்து சொன்னீர்கள் கவிஞரே....
    த.ம.3

    ReplyDelete
  7. பந்தி சாப்பிட வந்தவனை பரிமாறச்சொன்ன கதையாய் என்பார்கள்,,,/

    ReplyDelete
  8. இதனை இதனால் இவன்முடிக்கும்... குறள் நினைவுக்கு வருகிறது..

    ReplyDelete
  9. we do nt correct ourselves
    we only blame others ji

    ReplyDelete
  10. அருமையான வரிகள்
    சிறந்த பதிவு

    ReplyDelete