Saturday, December 10, 2016

கவியாகிப் போகிறது உணர்வு...

குவளை நீரில்
பால் கலக்க
மெல்ல மெல்ல
நிறம் மாறிப் போகிறது நீர்
பாலாகிப் போகிறது நீர்

இருளில்
ஒளிகலக்க
மெல்ல மெல்ல
ஒளியாகிப் போகிறது இருள்
பகலாகிப் போகிறது இரவு

மண்ணுக்குள்
விதை கலக்க
மெல்ல மெல்ல
நிலை மாறிப் போகிறது விதை
பயிராகிப் போகிறது விதை

உணர்வுக்குள்
சிந்தனை கலக்க
மெல்ல மெல்ல
கனமாகிப் போகிறது உணர்வு
கவியாகிப் போகிறது உணர்வு

4 comments:

  1. வணக்கம்
    ஐயா

    மிக அருமையான வரிகள் இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உண்மைதான் ஐயா
    உணர்வுகளைக் கலப்படமாகாமல் காப்போம்
    தம சுற்றிக்கொண்டே இருக்கிறது ஐயா

    ReplyDelete
  3. ’கலக்க’ .. ’கலக்க’ .. ’கலக்க’ .. ’கலக்க’
    என்ற கலக்கலான சொல்லுடன் கூடிய கலக்கல் ஆன ஆக்கம்.

    பாராட்டுகள், வாழ்த்துகள். !

    ReplyDelete