Thursday, December 29, 2016

அந்த மகத்தான தலைவிக்கு ......

இன்று எல்லாம்
சுகமாய்முடிந்தது
என மகிழ்வு கொள்ளாதீர்கள்

இன்று நடந்தது
ஒரு அழிவின் துவக்கம்

அணைகிற விளக்கின்
அதீத வெளிச்சம்

முடிகிற மூச்சுக்கு
முன் எழும்
ஒரு நீண்ட பெருமூச்சு

பெற்ற குழந்தையைப்
பலி கொடுத்து
வரம் பெற முயலும்
கொடூரப் பெற்றோராய்.

கண்களை விற்று
ஓவியம் பெறும்
கூறுகெட்ட இரசிகனாய்..

மக்களின் தொண்டனின்  மன நிலைக்கு
முற்றிலும் மாறாய்
நீங்கள் எடுத்த முடிவு...

"தனக்குள் வந்த நோய்
தன்னோடு போகட்டும்
அது கட்சிக்குள் பரவ  வேண்டாம் " என

இறுதி வரை இருந்த
அந்த மகத்தானத்  தலைவிக்கு
நீங்கள் செய்தத்   துரோகம்

துரோகங்கள் வெல்வது
அதிசயமே இல்லை
அதற்குச் சரித்திரச் சான்றுகள்
மிக மிக அதிகம்

ஆயினும்
அது நிலைத்ததில்லை என்பதற்கு
சரித்திரச் சான்றுகள்
இன்னும் மிக அதிகம்

எப்படியோ பதவியைத்
தக்க வைத்துக் கொண்டதாக
நீங்கள் நினைத்திருக்க

எங்களுக்கோ நீங்கள்
அதைப்   பலிபீடத்தில்
வைத்துவிட்டதாகவே தெரிகிறது

பார்ப்போம்....

12 comments:

  1. ஆம். மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை பற்றி சற்றும்கவலைப்படாமல் பணம் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டவர்கள் தங்கள் நிலைகளை ஸ்திரப்படுத்திக் கொண்டதாய் நினைத்துக் கொள்கிறார்கள். பரிதாபப்பட முடியவில்லை. பழிதீர்க்கும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள் மக்கள்.

    ReplyDelete
  2. பணம் பத்தும் செய்யும்... பதினொன்றை மக்கள் செய்வார்கள் விரைவில்...

    ReplyDelete
  3. காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  4. தமிழகத்தின் நிலை :(

    ReplyDelete
  5. காலம் ஒருநாள் மாறும் .....
    கவலைகள் யாவும் தீரும் ....

    வந்ததை எண்ணி ___________ :(
    வருவதை எண்ணி __________ :)

    ReplyDelete
  6. ஆம்.

    காலம் பதில் சொல்லும் நேரம் வெகுதூரமில்லை...

    ReplyDelete
  7. தலைப்புதான் என்னவோ போல் இருக்கு. அவர் கோடு போட்டார் இவர்கள் ரோடு போடுவார்கள்

    ReplyDelete
  8. கோடிக்கணக்கானமக்கள்தொண்டர்கள்உள்ளகிடக்கையைஅப்படியேப்ரதிபலிக்கும்வரிகள்.நன்றி.வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  9. தியாக செம்மல், அமைதியின் மாரு உருவம், நாடாளும் சிங்கம் எங்கள் புரட்சி தோழி சின்ன அம்மா சசிகலா அவர்களை ....நாங்கள் ஒரு குவாட்டர் + ஒரு பிரியாணி + 2000 ரூபாய் (புது நோட்டு தான்) வாங்கிக்கொண்டு நிரந்தர முதல்வர்-ஆக்க போகிறோம் .. ஏன் நாங்க வருங்கால பிரதமர் .. மன்னிக்கவும் .. வருங்கால நிரந்தர பிரதமர் ஆகுவோம்

    ReplyDelete
  10. Ravi sir

    மிகச் சரி. முதல்வர் சசிகலா மேடம்
    ஆனால் பிரதமர் பதவி
    நடராஜன் அவர்களுக்குத்தான்

    ReplyDelete
  11. பலர் மனத்தில் இருப்பதை உடைத்துச் சொல்லிவிட்டீர்கள் அய்யா. உண்மைதான்.
    சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம்.
    பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்.
    எல்லாரையும் எல்லாக்காலத்திலும்
    ஏமாற்ற முடியாது. விரைவில் விளங்கும்.
    தங்களின் காலத்திற்கேற்ற கருத்துக்கு எனது பாராட்டுகளும், நன்றியும்.

    ReplyDelete
  12. என்ன தான் நடக்கிறது....

    நல்லதோர் பகிர்வு.

    ReplyDelete