Saturday, December 3, 2016

பெரும் புயல் போற்றுதும்....பெரும் புயல் போற்றுதும்...

முன்பெல்லாம்
மழைக்காலங்களில் தவறாது
மழை பொழிந்தது
அதனால்
புயல் மழை என்பது
வில்லனைப் போலத் தெரிந்தது
தந்தியைப் போல
பயமுறுத்துவதாய் இருந்தது

இப்போதெல்லாம்
மழைக்காலத்தில் தவறியும்
மழை பொழிவதில்லை
அதனால்
புயல்மழை ஒன்றே
வரம் போலப் படுகிறது
இப்படிச் சிறப்புக்
கவிதையும் பெறுகிறது

என்ன செய்வது
முன்பு
மாமழைப் போற்றுதும்
மாமழைப் போற்றுதும்
எனக் கவி புனைந்த நாம்

இனி
பெரும் புயல் போற்றுதும்
பெரும் புயல் போற்றுதும்
எனப்பாடி மகிழ்வோம்

சூழலைக் கெடுத்தேனும்
சுகம் காணத் துடிக்கும் நமக்கு
வேறு ஏது வழி ?
இது தானே கதி

13 comments:

  1. பெரும் புயல் போற்றுவோம்
    பெரும் புயல் போற்றுவோம்
    உண்மை
    உண்மை
    தம +1

    ReplyDelete
  2. இந்த வருடம் மழை பொய்த்து, புயலை போற்ற வைத்து விட்டது....

    சென்ற வருட பெருமழை நினைவுக்கு வருகிறது...

    த.ம. +1

    ReplyDelete
  3. காலத்தின் கோலம் கவிதையில் அருமை.

    ReplyDelete
  4. நல்ல கருத்து

    ReplyDelete
  5. நல்ல கருத்து

    ReplyDelete
  6. உண்மைதான். இயற்கையைப் போற்ற மறந்ததின் விளைவை அனுபவிக்கிறோம்.

    ReplyDelete
  7. உண்மை !மழையை மறந்து விதியென வாழ்கிறோம்

    ReplyDelete
  8. சரியாகச் சொன்னீர் நண்பரே!

    ReplyDelete
  9. கவிதையும் அதிலுள்ள ஆதங்கமும் நியாயமே.

    ReplyDelete
  10. புயலில் அவதிப்பட்டவர் விரும்பாதார் மழை பொய்க்க நல்லோர் இல்லை என்பதே காரணமோ

    ReplyDelete
  11. சூழலைக் கெடுத்தேனும்
    சுகம் காணத் துடிக்கும் நமக்கு
    வேறு ஏது வழி ?
    இது தானே கதி// உண்மை! அருமையான வரிகள்!!

    ReplyDelete