Friday, March 10, 2017

"ஒரு பாமரப் பதிவரின் " அமெரிக்கப் பயணம் "

கடந்த பத்து நாட்களாக தேவையில்லாமல்
அலைவதில்லை
(தேவைக்காக அலைவதே அதிகம்
அதைத் தவிர்க்க இயலவில்லை )

அளவோடு சாப்பிட்டுக் கொள்கிறோம்

முழு உடல் பரிசோதனைச் செய்து கொண்டு
குறைபாடு உள்ளதற்கு மருந்து மாத்திரை
எடுத்துக் கொள்கிறோம்

மிக முக்கியமான தகவல்களை
நாட்குறிப்பில் குறித்துக் கொள்கிறோம்

சென்றமுறை போல அவ்வளவு
பதட்டமும் குழப்பமும் இல்லையென்றாலும்
கூட கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது

மொத்தம் 31மணி நேரப் பயணம்
மலைப்பை ஏற்படுத்துகிறது

வருகிற 13 இல் மீண்டும் மனைவியுடன்
அமெரிக்கா (நியூஜெர்ஸி ) செல்கிறோம்

சென்ற முறை பதட்டத்திலேயே
மிகச் சரியாக இரசித்துப் பார்க்க முடியாததை
இம்முறை பதட்டமின்றி பார்த்து இரசிக்க
உத்தேசித்துள்ளோம்

அவசியமெனில் "ஒரு பாமரப் பதிவரின் "
அமெரிக்கப் பயணம் என ஒரு கட்டுரைத் தொகுப்பு
எழுதலாம் என்கிற எண்ணமும் இருக்கிறது

சென்றமுறை எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு
அடிக்கடி ஞாபகமூட்டிப் போகிறது

அமைப்பு எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை

பார்ப்போம்.....

13 comments:

  1. இனிய பயணத்துக்கு வாழ்த்துகள். இராய. செல்லப்பா ஸார் இப்போது அங்குதான் இருக்கிறார்.

    ReplyDelete
  2. பயணம் பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியத்தோடும்
    அமைய வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  3. மறக்காமல் எனது மின் அஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள். நான் உங்களுக்காத்தான் காத்திருக்கிறேன். - இராய செல்லப்பா chellappay@gmail.com

    ReplyDelete
  4. நிச்சயமாக.வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  5. பயணம் இனிதே அமைய வாழ்த்துகள். கட்டுரையை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  6. பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.... பயணக் கட்டுரைக்கான காத்திருப்புடன் நானும்...

    ReplyDelete
  7. அட! அடுத்து மீண்டும் அமெரிக்கப் பயணம்!! வாழ்த்துகள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்! உங்கள் கட்டுரைக்க்குக் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  8. பயணமும் அனுபவங்களும் மிக இனிமையாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. நியூஜெர்சி கொஞ்சம் இந்திய வாழ்க்கைச் சூழலில் இருக்கும் எனக் கேள்வி. அதோடு அங்கே இருந்து பக்கத்தில் இருக்கும் நியூயார்க், வாஷிங்டன் போன்ற ஊர்களைச் சுற்றிப் பார்க்கச் செல்ல முடியும். நாங்கள் இருப்பது ஹூஸ்டனில்! இங்கிருந்து குறைந்தது எட்டுமணி நேரப் பயணம் செய்து அங்கெல்லாம் வரணும்! :)

    ReplyDelete
  10. நாங்கள் இதோடு நான்காம் முறையாக வந்திருக்கோம் என்றாலும் அலுப்புத் தான் வருகிறது. :) ஓரளவு பழக்கம் இருந்தும் கூட மனம் ஒட்டவில்லை.

    ReplyDelete

  11. வாழ்த்துகள்! உங்கள் கட்டுரைக்க்குக் காத்திருக்கிறென்

    மாலி

    ReplyDelete