Friday, March 3, 2017

தாமிரபரணித் தண்ணீரும் நீதிபதிகளின் தீர்ப்பும்...

"இந்த வழக்குத் தொடர்ந்துள்ளவர்
குளிர்பான நிறுவனத்தில் 3ஆண்டுகளாகப்
பணியாற்றியுள்ளார்.அவர் நியாயமாக
நடந்து கொள்ளாததால் பணியில் இருந்து
விடுவிக்கப் பட்டுள்ளார்
இதனால் குளிர்பான நிறுவனத்திற்கு
எதிராகச் செயல்படுகிறார்

குளிர்பான நிறுவனத்திற்கும்
தனக்குமான தனிப்பட்டப் பிரச்சனையை
தீர்க்க பொது நலன் மனுத்தாக்கல் செய்துள்ளார்

தனிப்பட்ட நலன்களுக்காக
பொது நலவழக்குத் தொடர்வதை
ஏற்க முடியாது

எனவே இரண்டு மனுக்களும் தள்ளுபடி
செய்யப்படுகின்றன "
என நீதிபதிகள் உத்திரவில் கூறியுள்ளனர்

பொது நல வழக்கு என்பது வழக்கைப் பதிவு
செய்வோர் குறித்துத்தான்
விஷயம் குறித்து இல்லை என்பதுவும்

தாமிரபரணித் தண்ணீர் குறித்த
வழக்கு என்பது பொது நலன் குறித்த
வழக்கு இல்லை என்பதைப் படிக்கப் படிக்க
நீதியின் மீதும் நீதிமன்றத்தின் மீதும்
எனக்கு அளவிட முடியாத மதிப்பும்
மரியாதையும் பீறிட்டு எழுவதை ஏனோ
என்னால் தடுக்க முடியவில்லை

உங்களுக்கும் அப்படித்தானே 

8 comments:

  1. குமாரசாமி கணக்கு போல மற்றொரு அற்புதத் தீர்ப்பு. முடிவை முதலில் எடுத்து விட்டு காரணத்தை பிறகு யோசித்ததைப் போல உள்ளது!

    ReplyDelete
  2. தாமிரபரணித் தண்ணீர் குறித்த வழக்கு என்பது பொது நலன் குறித்த வழக்கு இல்லை என்பதைப் படிக்கப் படிக்க பத்திக்கொண்டு வருகிறது.

    ReplyDelete
  3. பொது நலம் என்பதற்கான அர்த்தம் சுயநலம் என்று மாறி நீண்டகாலமாகி விட்டது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது

    ReplyDelete
  4. I feel even the lawyer's PIL is a fraud , he might have been employed for the sake of it for 3 years, and then sacked , he goes to file the PIL - to be investigated .

    ReplyDelete
  5. தண்ணீர் தானே எடுத்துக்கோ எனும் தாராள மனசுதான் கா'ரணம்'கோவ்.

    ReplyDelete
  6. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் பற்றிப் பேசினாலேயே நீதிமன்ற அவமதிப்பு என்று கூறினாலும் கூறலாம்

    ReplyDelete
  7. நீதி பற்ற்இ நான் என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே என்று எழுதி இருந்ததைப் படித்தீர்களா

    ReplyDelete